Untitled Document
May 20, 2026 [GMT]
சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு!
[Saturday 2026-05-16 18:00]

அவுஸ்திரேலியா சிட்னியில் தமிழின அழிப்பை பிரதிபலிக்கும் வகையில், நினைவின் வழியே இனத்தின் வரலாற்றை காக்கும் ஒரு சின்னமாக, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று சனிக்கிழமை (16) திறக்கப்பட்டது. இனப்படுகொலைக்கு இலக்கான தாயகத் தமிழ் மக்களின் நினைவாகவும், அவர்களின் நினைவு நாட்களில் மலர் தூவி வணக்கம் செலுத்துவதற்கும் சிட்னி நகரில் நிரந்தர 'தமிழர் நினைவுத் தூபி' ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா சிட்னியில் தமிழின அழிப்பை பிரதிபலிக்கும் வகையில், நினைவின் வழியே இனத்தின் வரலாற்றை காக்கும் ஒரு சின்னமாக, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இன்று சனிக்கிழமை (16) திறக்கப்பட்டது. இனப்படுகொலைக்கு இலக்கான தாயகத் தமிழ் மக்களின் நினைவாகவும், அவர்களின் நினைவு நாட்களில் மலர் தூவி வணக்கம் செலுத்துவதற்கும் சிட்னி நகரில் நிரந்தர 'தமிழர் நினைவுத் தூபி' ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

  

தமிழர் இன அழிப்பு நினைவுத் தூபி திறப்பு நிகழ்வு இன்று காலை 9.45 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் Cumberland நகர சபை முதல்வர் பங்கேற்று, நினைவுத் தூபியை திறந்துவைத்தார்.

சிட்னியில் உள்ள Pendle Hill Civic Park பொது இடத்தில், Cumberland நகர சபையின் ஆதரவுடன் இந்த நினைவுத் தூபி நிறுவப்பட்டுள்ளது. 'தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - சிட்னி' அமைப்பின் ஏற்பாட்டில் சிட்னியில் உள்ள அனைத்துத் தமிழர் அமைப்புகளின் ஒத்துழைப்போடும் இந்நினைவுத் தூபி நிறுவப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உருவாக்கப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, வெறும் கற்களாலும் சிலைகளாலும் ஆன ஒரு கட்டமைப்பு அல்ல. அது தமிழர் இனத்தின் துயர வரலாறு, போராட்ட நினைவு, இன அழிப்பு வேதனை மற்றும் நீதிக்கான தொடர்ச்சியான அழைப்பின் அடையாளமாக திகழ்கிறது.

உலகம் முழுவதும் பரவி வாழும் ஈழத் தமிழர்களுக்கு, முள்ளிவாய்க்கால் என்பது ஒரு புவியியல் இடம் மட்டுமல்ல. அது அழிக்கப்பட்ட ஈழ தமிழ் உறவுகளின் உயிர்களின் சாட்சியமும், மறக்க முடியாத வரலாற்றுக் காயமும் ஆகும்.

  
   Bookmark and Share Seithy.com



டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்!
[Wednesday 2026-05-20 07:00]

டெக்சாஸில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பத்தினர் தங்களது உடல்நலம் மற்றும் மனநலத்தை படிப்படியாக இழந்து வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கமான அதிகாரிகள் சந்திப்பிற்காக சென்ற தந்தை ஜெகதீஷ், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அதிகாரிகள் அங்கே தடுத்து டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள Dilley தடுப்புக்காவல் மையத்தில் அடைத்தனர். தற்போது கிட்டத்தட்ட 90 நாட்கள் Dilley தடுப்புக்காவல் மையத்தில் அடைக்கப்பட்டிருக்கும் இவர்கள், போதிய மருத்துவ வசதி இன்றி உடல் நலத்திலும், மனநலத்திலும் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.



ஆழ்கடல் குகையில் சிக்கிய இத்தாலியர்கள்: களமிறங்கிய பின்லாந்து நிபுணர்கள் குழு!
[Wednesday 2026-05-20 07:00]

மாலத்தீவில் ஆழ்கடல் குகையில் சிக்கிய இரண்டு இத்தாலியர்களின் உடலை பின்லாந்து நிபுணர்கள் குழு மீட்டெடுத்துள்ளது. மாலத்தீவின் வாவு அட்டோஸ்(Vaavu Atoll) பகுதியில் உள்ள ஆழ்கடலில் குகைகளில் கடந்த வியாழக்கிழமை 5 இத்தாலியர்கள்(பயிற்சியாளர் ஒருவர் உட்பட) ஆய்வு செய்ய சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிக் கொண்டனர். பயிற்சியாளர் உடல் மட்டும் குகை வெளியே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள நான்கு பேரின் உடலை மீட்கும் பணி கடந்த ஒருவார காலமாக நடைபெற்று வருகிறது.



அணு ஆயுதப் போர் பயிற்சியில் தீவிரம் காட்டும் ரஷ்யா!
[Wednesday 2026-05-20 07:00]

உக்ரைனுக்கு எதிரான போர் நடவடிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய தன்னுடைய அணு ஆயுத போர் பயிற்சியை தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தீவிரமடைந்து வரும் இந்த சூழ்நிலையில், உக்ரைனிய நகரங்களை குறிவைத்து செவ்வாய்க்கிழமை ரஷ்யா மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த தாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.



பிரித்தானியாவில் பணப்பிரச்சினை காரணமாக உணவை தியாகம் செய்யும் பயிற்சி செவிலியர்கள்!
[Tuesday 2026-05-19 16:00]

பிரித்தானியாவில், செவிலியர் பயிற்சி பெறும் மாணவ மாணவியர் பணப்பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும், பலர், உணவு முதலான அடிப்படைத் தேவைகளைக் கூட தியாகம் செய்வதாகவும் ஆய்வொன்று தெரிவிக்கிறது. மூன்றாம் நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர், இன்றும், பணிக்காகவும் படிப்புக்காகவும் பிரித்தானியா போன்ற நாடுகளுக்குச் செல்ல ஆர்வம் காட்டிவருகிறார்கள்.



பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்?
[Tuesday 2026-05-19 16:00]

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது, லேபர் கட்சியினர் ஆதரவு யாருக்கு அதிகம் என்பதை அறிந்துகொள்வதற்காக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வமைப்பான YouGov அமைப்பு, லேபர் கட்சி உறுப்பினர்களிடையே மேற்கொண்ட ஆய்வொன்றில், ஆன்டி பர்னாமுக்கே அதிக ஆதரவு உள்ளது தெரியவந்துள்ளது.



ஆட்டிப்படைக்கும் எபோலா வைரஸ்: அதிகரித்த பலி எண்ணிக்கை!
[Tuesday 2026-05-19 16:00]

ஆப்ரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு காங்கோ பகுதியில் அரியவகை எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த பாதிப்பால் இதுவரை 131 பேர் பலியான நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி, காங்கோ சுகாதாரத் துறை அமைச்சர் சாமுவேல் ரோஜர் கம்பா கூறுகையில், “513 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.



Meta நிறுவனத்தில் 8,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
[Tuesday 2026-05-19 16:00]

சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக Meta நிறுவனம் அறிவித்துள்ளது. Meta நிறுவன பணிநீக்க நடவடிக்கை, நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 10 சதவீதத்தினரை பாதிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. AI தொழில்நுட்ப முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கிலும், நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தும் முயற்சிகளின் அடிப்படையிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஈரான் எண்ணெய் மீதான தடைக்கு அமெரிக்கா தற்காலிக விலக்கு!
[Tuesday 2026-05-19 07:00]

மத்திய கிழக்கில், அமெரிக்கா-ஈரான் மோதலை முடிவுக்கு கொண்டு வர புதிய முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஈரான் சமீபத்தில் 14 அம்சங்களைக் கொண்ட சமாதான திட்டத்தை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. இந்த திட்டத்தை பாகிஸ்தான், அமெரிக்காவிடம் பகிர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணியில், அமெரிக்கா ஈரானின் எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக நீக்க ஒப்புக்கொண்டதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



ஹார்முஸ் நீரிணையை நிர்வகிக்க புதிய அமைப்பு!
[Tuesday 2026-05-19 07:00]

ஹார்முஸ் நீரிணையை நிர்வகிக்க ஈரான் புதிய அமைப்பை அறிவித்துள்ளது. ஈரான் அரசு, உலகின் முக்கியமான கடல்சந்திகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை நிர்வகிக்க “பெர்ஷியன் கல்ஃப் ஸ்ட்ரெய்ட் ஆத்தாரிட்டி (PGSA)” என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது. திங்கட்கிழமை (மே 18, 2026) அன்று ஈரானின் உச்ச பாதுகாப்பு குழு இந்த அறிவிப்பை வெளியிட்டது.



சவுதிக்கு 8000 வீரர்கள், 16 போர் விமானங்களை அனுப்பிய பாகிஸ்தான்!
[Tuesday 2026-05-19 07:00]

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், பாகிஸ்தான் அரசு 8,000 படையினரையும் 16 JF-17 போர் விமானங்களையும் சவுதி அரேபியாவுக்கு அனுப்பியுள்ளது. பாகிஸ்தான்-சவுதி நாடுகளுக்கு இடையேயான கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் படையினர், சவுதி அரேபியாவின் கிங் அப்துல்அசீஸ் விமான தளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.



சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பிய ஆவணம்: அம்பலப்பட்ட உண்மைகள்!
[Monday 2026-05-18 18:00]

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பதவியிறக்கம் குறித்த சர்ச்சையை, தூதரகத் தகவல் ஒன்று மீண்டும் கிளப்பியுள்ளது. அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாக, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு மையமாக இருந்த அசல் ஆவணத்தை, Drop Site என்ற புலனாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இம்ரான் கான் பதவியிறக்கப்பட்டதில் அமெரிக்காவின் பங்கு குறித்த கேள்விகளையும் மீண்டும் எழுப்பியுள்ளது.



ஐரோப்பிய நாடுடன் இணைந்து அணு ஆயுதப் பயிற்சியைத் தொடங்கிய ரஷ்யா!
[Monday 2026-05-18 18:00]

ரஷ்யாவும், பெலாரஸும் இணைந்து திங்களன்று கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தொடங்கின. உக்ரைனுக்கு எதிரான சண்டையில் தொடர்ந்து வரும் ரஷ்யா கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. ஐரோப்பிய நாடான பெலாரஸுடன் இணைந்து, தந்திரோபாய அணு ஆயுதங்களை போர்க்களத்தில் நிலைநிறுத்துவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள திங்களன்று ரஷ்யா இந்தப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.



கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தை தனியாக பிரிக்கும் விவகாரம்: சமீபத்திய தகவல்!
[Monday 2026-05-18 18:00]

கனடாவிடமிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தை பிரிக்கும் விடயம் தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், நீதிபதி ஒருவர் அந்த மனுவை நிராகரித்துவிட்டார். கனேடிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும். ஆனால், கனடாவுக்கு தாங்கள் தங்கள் வளம் மூலம் பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தும், பதிலுக்கு ஃபெடரல் அரசு தங்களை சரியாக கவனிப்பதில்லை, தங்கள் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் எடுபடவில்லை என்னும் கருத்து ஆல்பர்ட்டா மக்களிடையே நிலவிவருகிறது.



அமெரிக்காவில் நண்பர்களுடன் சென்ற இந்திய இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்!
[Monday 2026-05-18 18:00]

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் பெண் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தெலுங்கானா சேர்ந்த இளம்பெண் ஒருவர் அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த நிலையில், தனது நண்பர்களுடன் சிறியரக வேனில் பயணித்த சந்தர்ப்பத்தில் குறித்த வேன் பாரிய விபத்தில் சிக்கியுள்ளது.



எச்சரிக்கையை மீறி தைவான் செல்லும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்!
[Monday 2026-05-18 18:00]

சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவான் செல்லும் கனேடிய அரசியல்வாதி சீன தூதரகத்தின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் சாங் தைவானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தைவான் பயணங்களுக்குச் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், "கனடாவின் இறையாண்மையை நிலைநாட்டவே" தாம் இப்பயணத்தை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.



புதிய விண்வெளிப் போட்டியில் ஜேர்மனி முன்னிலை!
[Sunday 2026-05-17 07:00]

ஜேர்மனி, உலகளாவிய விண்வெளி போட்டியில் முன்னிலை வகிக்கத் தொடங்கியுள்ளது. உலக விண்வெளி சந்தை தற்போது 600 பில்லியன் டொலர் மதிப்பில் உள்ளது. 2040-ஆம் ஆண்டில் இது 2.32 டிரில்லியன் டொலராக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் பல தனியார் நிறுவனங்கள் ரொக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இசார் ஏரோஸ்பேஸ் (மியூனிக்), ராக்கெட் பேக்டரி ஆக்ஸ்பர்க், ஹைஇம்பல்ஸ் டெக்னாலஜிஸ் ஆகியவை ராக்கெட் சோதனையில் ஈடுபட்டுள்ளன.



ஸ்டார்மருக்கு மாற்றாக பிரதமராக போட்டியிடும் வெஸ் ஸ்ட்ரீட்டிங்!
[Sunday 2026-05-17 07:00]

பிரித்தானியாவின் முன்னாள் சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting), லேபர் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். கடந்த வாரம் அவர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தார். “ஸ்டார்மர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை” என்று கூறிய அவர், தற்போது அதிகாரப்பூர்வமாக தலைமைப் போட்டியில் நிற்பதாக அறிவித்துள்ளார்.



ஹார்முஸில் கப்பல்களுக்கு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தும் ஈரான்!
[Sunday 2026-05-17 07:00]

ஈரான், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் வணிகக் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது. ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை குழுத் தலைவர் எப்ராஹிம் அசீஸி, ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் வணிகக் கப்பல்களுக்கு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார். ஈரானுடன் ஒத்துழைக்கும் நாடுகளுக்கே அனுமதி வழங்கப்படும் என்றும் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



அவுஸ்திரேலியாவில் சுறா மீன் கடித்து 38 வயதுடைய நபர் உயிரிழப்பு!
[Sunday 2026-05-17 07:00]

அவுஸ்திரேலியாவில் சுறா மீன் தாக்கியதில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சனிக்கிழமை மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரபலமான ராட்னெஸ்ட் தீவு அருகே சுறா மீன் கடித்ததில் 38 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெர்த் நகரில் இருந்து கிட்டத்தட்ட 31 கிலோமீட்டர் மேற்கே அமைந்துள்ள ஹார்ஸ்ஷூ ரீஃப்(Horseshoe Reef) என்ற பகுதியில் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது.



250 பில்லியன் டொலர் இழப்பீடு தர வேண்டும்: ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு!
[Sunday 2026-05-17 07:00]

பெல்ஜிய நிதிக் குழுமம் சுமார் 250 பில்லியன் டொலர் இழப்பீடு செலுத்த வேண்டும் என்று ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கிய பின்னர், ரஷ்யாவின் பல்லாயிரக்கணக்கான கோடி யூரோ சர்வதேச கையிருப்பை ஐரோப்பிய ஒன்றியம் முடக்கியது. அதில் பெரும்பகுதி பரிவர்த்தனைகள் மற்றும் நிதி வைப்புக்களை கையாளும் பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட தீர்வு நிறுவனமான யூரோகிளியரில் வைக்கப்பட்டுள்ளது.


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா