Untitled Document
October 24, 2026 [GMT]
பிரித்தானியாவைத் தாக்கிய ‘ஒஸ்டின்’ புயல்: இருளில் மூழ்கிய வீடுகள்!
[Friday 2026-10-23 16:00]

பிரித்தானியாவின் தென்மேற்குப் பகுதிகள் மற்றும் செனல் தீவுகளை ‘ஒஸ்டின்’ புயல் தாக்கியுள்ள நிலையில், கோர்ன்வோல் மற்றும் டெவோன் பகுதிகளில் சுமார் 7,000 வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. ‘ஒஸ்டின்’ புயல் காரணமாக மணித்தியாலத்திற்கு சுமார் 80 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், கோர்ன்வோல் மற்றும் டெவோன் பகுதிகளின் பல இடங்களுக்கு செம்மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தென்மேற்குப் பகுதிகள் மற்றும் செனல் தீவுகளை ‘ஒஸ்டின்’ புயல் தாக்கியுள்ள நிலையில், கோர்ன்வோல் மற்றும் டெவோன் பகுதிகளில் சுமார் 7,000 வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. ‘ஒஸ்டின்’ புயல் காரணமாக மணித்தியாலத்திற்கு சுமார் 80 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், கோர்ன்வோல் மற்றும் டெவோன் பகுதிகளின் பல இடங்களுக்கு செம்மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  

கேர்ன்சி மற்றும் ஜெர்சி தீவுகளுக்கு மிகக் கடுமையான வானிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஜெர்சியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புயலின் தாக்கத்தால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், மின்சாரக் கம்பிகளும் அறுந்து வீழ்ந்துள்ளன. இதனால், வீதிப் போக்குவரத்துக்குப் பெரும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதுடன், தொடருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறு டெவோன் பிராந்திய சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



மீண்டும் வன்முறை வெடிக்குமா? - நாடு முழுவதும் 70,000 பொலிஸார் குவிப்பு!
[Saturday 2026-10-24 07:00]

பிரான்ஸ் நாட்டில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்பு பணிகளுக்காக 70,000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு போராட்டங்கள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 70000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



பிரித்தானியாவில் அபராத ரசீதை பெண் அதிகாரி மீது வீசிய நபர்: ரூ.3 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!
[Saturday 2026-10-24 07:00]

பிரித்தானியாவில் காரில் ஒட்டப்பட்ட ரசீதை பெண் அதிகாரி மீது தூக்கி வீசிய நபருக்கு ரூ.3 லட்சம் வரை நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. பிரித்தானியாவில் 58 வயது ஸ்டீபன் லாங் என்ற நபர் தன்னுடைய காரை பார்க்கிங் இல்லாத பகுதியில் நிறுத்தியதை அடுத்து, பெண் அதிகாரி ஒருவர் அதற்கான அபராத ரசீதை ஸ்டீபன் லாங்கின் கார் கண்ணாடியில் ஓட்டியுள்ளார்.



கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்கள்: மேற்குக் கரை நகரை தரைமட்டமாக்க நெதன்யாகு உத்தரவு!
[Saturday 2026-10-24 07:00]

மேற்கு கரையில் பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான கட்டிடங்களை இஸ்ரேலிய ராணுவம் இடித்து தள்ளி வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரான் நகருக்கு அருகே உள்ள சோதனை சாவடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சண்டையில் 2 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காரில் வந்த இரண்டு பாலஸ்தீனத் தாக்குதல்தாரிகள் திடீரென சோதனை சாவடியை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளனர். இதையடுத்து பதிலுக்கு அங்கு பணியில் இருந்த இஸ்ரேலிய வீரர்களும் துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளனர்.



மேக்ரானுக்கு கடைசி வாய்ப்பு: கலவரங்களில் நஷ்டமடைந்த பெண் கூறும் செய்தி!
[Friday 2026-10-23 16:00]

மேக்ரானுக்கு நாட்டைக் காப்பாற்ற இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு உள்ளது என்கிறார் பிரான்ஸ் கலவரங்களில் நஷ்டமடைந்த பெண் ஒருவர். கடந்த வாரம் பிரான்சில் நடைபெற்ற கலவரங்களால் பெரும் சேதமும் இழப்பும் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் நாளை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது நிகழ்ந்த வன்முறையில் பொதுச்சொத்துகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.



டிரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி!
[Friday 2026-10-23 16:00]

அனைத்து குண்டுகளின் தந்தை' ஆயுதம் தயார் என அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. ஈரானின் எரிசக்தி கட்டமைப்பு மற்றும் நிலத்தடி அணுசக்தி தளங்களை குறிவைக்க, அமெரிக்காவின் மிகப்பெரிய அணுசக்தி அல்லாத வெடிகுண்டான ஜிபியு-43/பி எம்.ஓ.ஏ.பி. எனப்படும் 'அனைத்து வெடிகுண்டுகளின் தாய்' வெடிகுண்டை பயன்படுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அண்மையில் தெரிவித்தார்.



ஆல்பர்ட்டா வாக்கெடுப்பில் புலம்பெயர்ந்தோரை வருந்தச் செய்துள்ள விடயம்!
[Friday 2026-10-23 16:00]

ஒரு காலத்தில் புலம்பெயர் பணியாளர்களை வரவேற்ற ஆல்பர்ட்டா மாகாணம், இன்று அவர்களுடைய உரிமைகளை கட்டுப்படுத்த விரும்புகிறது! சமீபத்தில் ஆல்பர்ட்டா மாகாணத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு குறித்த செய்திகள் நினைவிருக்கலாம். அதாவது, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடனேயே இணைந்திருப்பதா, அல்லது தனியாக பிரிவது தொடர்பில் இன்னொரு வாக்கெடுப்பு நடத்தவேண்டுமா என்பது குறித்து வாக்கெடுப்பு ஒன்று நடைபெற்றது.



100 நாட்களாக முடக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி: CENTCOM வெளியிட்ட தகவல்!
[Friday 2026-10-23 07:00]

கடந்த 100 நாட்களாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க கடற்படையின் முற்றிகையை தொடர்ந்து கடந்த 100 நாட்களாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி முற்றிலுமாக முடக்கி இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு(CENTCOM) தகவல் தெரிவித்துள்ளது.



பிரான்சில் முதல் முறையாக மனிதரை பாதித்த ஷாமொண்டா வைரஸ்!
[Friday 2026-10-23 07:00]

பிரான்சில் முதல் முறையாக மனிதரை ஷாமொண்டா வைரஸ் பாதித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கால்நடைகளை மட்டுமே பாதித்து வந்த ஷாமொண்டா வைரஸ், முதல் முறையாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவரை பாதித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரான்சின் லியோன் நகரில் கடுமையான நோய் எதிர்ப்பு குறைபாடுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், கடந்த அக்டோபர் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.



பிரித்தானியாவை அடுத்தடுத்து தாக்கும் புயல்கள்!
[Friday 2026-10-23 07:00]

பிரித்தானியாவில் இந்த வார இறுதியில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து வீசக்கூடும் என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பலத்த வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை ஆஸ்டன் புயல்(Storm Austen) இந்த வார இறுதியில் தாக்கக்கூடும் என அறிவிப்பு வெளியான 48 மணி நேரத்தில் இரண்டாவது புயல் குறித்த அறிவிப்பும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை முதல் நாட்டின் வடக்கு பகுதிகளை இரண்டாவது புயலான போலோ(Storm Boelo) கடுமையாக தாக்கக்கூடும் என்று பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



பிரான்சை போல ஜேர்மனியிலும் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டம்!
[Thursday 2026-10-22 16:00]

பிரான்சைப் போல ஜேர்மனியிலும் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டங்களை நடத்த ஜேர்மன் இளைஞர்கள் திட்டமிட்டுவருகிறார்கள். ஜேர்மனியின், Gen Z regelt அல்லது Gen Z's Got It என்னும் இளைஞர் அமைப்பு, அக்டோபர் மாதம் 31ஆம் திகதி, ஜேர்மனியிலுள்ள 21 நகரங்களில், பிரம்மாண்ட பேரணிகளை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.



தேர்தலில் தலையிடும் கனடா: அமெரிக்கா குற்றச்சாட்டு!
[Thursday 2026-10-22 16:00]

கனேடிய அரசியல்வாதிகள், அமெரிக்கத் தேர்தல்களில் தலையிடுவதாக அமெரிக்க தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவில், நவம்பர் மாதம் 3ஆம் திகதி, நாடாளுமன்றத்தை யார் கட்டுப்படுத்துவது என்பதை முடிவு செய்யும் வகையிலான இடைக்காலத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில், அமெரிக்கத் தேர்தல்களில் தலையிட கனேடிய அரசியல்வாதிகள் திட்டமிடுவதாக கனடாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.



சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்: தூதரகத்தை விட்டு வெளியேறும் அமெரிக்கா!
[Thursday 2026-10-22 16:00]

சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று (21) மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலை தீவிரமாக உள்ளது என்றும், விமான நிலையத்திற்கு ஏற்பட்ட சேதம் மதிப்பிடப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.



ஈரானில் சமூக ஊடகக் கருத்தால் 23 வயது மாணவிக்கு மரண தண்டனை!
[Thursday 2026-10-22 16:00]

ஈரானில் சமூக ஊடகத்தில் நபிகள் நாயகம் தொடர்பாக அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் 23 வயது மாணவி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. நஜ்மா அமினி என அடையாளப்படுத்தப்படும் குறித்த மாணவி, சமூக ஊடகத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.



போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: உக்ரைன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா சம்மதம்!
[Thursday 2026-10-22 07:00]

போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கொள்கை அளவிலான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான இந்த தகவலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மூத்த ஆலோசகரான யூரி உஷாகோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.



பிரித்தானியாவில் பல இடங்களுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை!
[Thursday 2026-10-22 07:00]

ஆஸ்டென்(Storm Austen) என்று பெயரிடப்பட்ட புயலானது வெள்ளிக்கிழமை பிரித்தானியாவை நோக்கி வேகமாக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மற்றும் திடீர் பனிப்பொழிவுகள் போன்ற கடுமையான வானிலை மாற்றங்கள் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி வரை வேல்ஸ் மற்றும் தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.



பிரித்தானியாவில் குப்பை தொட்டியில் கிடந்த மனித உடல்: குற்றவாளிக்கு பொலிஸார் வலைவீச்சு!
[Thursday 2026-10-22 07:00]

பிரித்தானியாவின் ப்ளைமவுத் நகரில் குப்பை தொட்டியில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ளைமவுத் நகரில் உள்ள வெஸ்ட் ஹோ(West Hoe) பகுதியில் இன்று காலை 6.30 மணிக்கு நபர் ஒருவரின் கவலைக்கிடமான நிலை குறித்து அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால உதவிக்குழுவினர் மற்றும் காவல்துறையினர் குப்பை தொட்டியில் படுகாயங்களுடன் கிடந்த நபரை கண்டுபிடித்து முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர்.



கொடிய ரஷ்ய தாக்குதல்கள்: கருங்கடலில் படைக் குவிப்பை அதிகரிக்கும் நேட்டோ!
[Wednesday 2026-10-21 16:00]

வணிகக் கப்பல்கள் மீதான ரஷ்யத் தாக்குதல்கள் அண்மைக் காலமாக மிக மோசமாக தீவிரமடைந்துள்ள நிலையில், நேட்டோ அமைப்பு கருங்கடல் பகுதிக்குக் கூடுதல் இராணுவ பலத்தை அனுப்பி வருகிறது. உக்ரைனின் ரெனி துறைமுகத்தில் இருந்த மூன்று சரக்குக் கப்பல்கள் மீதும், ஒடெசாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த மேலும் இரண்டு சரக்குக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான, அந்நாட்டின் துறைமுகங்களிலிருந்து தானியங்கள் மற்றும் பிற விவசாயப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை ரஷ்யா குறிவைப்பது, இந்த மோதலை நேட்டோ அமைப்பின் எல்லைகள் வரை கொண்டு வந்துள்ளது.



பாரிஸ் நகரம் விரைவில் முஸ்லிம் நகரமாக மாறும்: டிரம்ப் எச்சரிக்கை!
[Wednesday 2026-10-21 16:00]

பிரான்ஸ் நாட்டில் தொடர்ச்சியாக அரங்கேறிவரும் வன்முறைகள் மற்றும் கட்டுப்பாடற்ற குடியேற்ற விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். பிரான்ஸ் முழுவதும் கடந்த சில நாட்களாக பொதுச்சொத்துக்கள் மீது வன்முறைகள் வெடித்துள்ளதுடன், சுமார் 2,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமையை கட்டுப்படுத்த முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.



பல் ஆடியதற்காக மருத்துவரை சுட்டுக்கொன்ற நபர்!
[Wednesday 2026-10-21 16:00]

பல் சிகிச்சைக்குப் பின்பும் பல் ஆடியதால், கோபத்தில் பல் மருத்துவரை சுட்டுக் கொன்றுள்ளார் ஒருவர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் எர்னெஸ்டோ (Ernesto Rascón, 30). எர்னெஸ்டோ, பல் சிகிச்சைக்காக மெக்சிகோவிலிருக்கும் Sonora என்னுமிடத்துக்குச் சென்றுள்ளார். மெக்சிகோவின் Sonora என்னுமிடத்தில் கிளினிக் வைத்துள்ள Dr. அமெத் (Dr Amed de Jesús Preciado Hernández, 42) என்பவரிடம் எர்னெஸ்டோ பல் சிகிச்சைக்காக சென்ற நிலையில், சிகிச்சைக்குப் பின்பும் அவரது பல் ஆடிக்கொண்டிருந்திருக்கிறது.



இனி பணம் என்பதே இருக்காதா? - உலகை ஆளப்போகும் செயற்கை நுண்ணறிவு!
[Wednesday 2026-10-21 16:00]

உலகில் அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், நிதி மற்றும் சட்ட அமைப்புகளில் அதன் ஆதிக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான யுவால் நோவா ஹராரி எச்சரித்துள்ளார். எதிர்காலத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் அதிகளவில் கிடைக்கும் சூழல் உருவாகும்போது, வழக்கமான பணத்தின் முக்கியத்துவம் குறையக்கூடும் என்ற தொழிலதிபர் எலான் மஸ்க்கின் கணிப்புக்கும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா