Untitled Document
November 2, 2026 [GMT]
தரையில் மோத போகிறோம்: விமானியின் கடைசி வார்த்தைகள்!
[Monday 2026-11-02 16:00]

அமெரிக்காவின் புளோரிடாவின் கிரீன் ஏக்ரஸில் குடியிருப்பு பகுதியில் Learjet 60 விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 9 பேர் உயிரிழந்தனர். விமான விபத்துக்கு சற்று நேரத்திற்கு முன்பாக விமானிக்கும் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கும் இடையே நடந்த இறுதி தகவல் தொடர்பு பரிமாற்ற ஆடியோ வெளியாகியுள்ளது. மோசமான வானிலை மற்றும் பனி காரணமாக விபத்து நிகழப்போவதாக விமானி கூறுகிறார், அதில் விமானம் வேகமாக கீழிறங்குவதாக குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவின் புளோரிடாவின் கிரீன் ஏக்ரஸில் குடியிருப்பு பகுதியில் Learjet 60 விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 9 பேர் உயிரிழந்தனர். விமான விபத்துக்கு சற்று நேரத்திற்கு முன்பாக விமானிக்கும் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கும் இடையே நடந்த இறுதி தகவல் தொடர்பு பரிமாற்ற ஆடியோ வெளியாகியுள்ளது. மோசமான வானிலை மற்றும் பனி காரணமாக விபத்து நிகழப்போவதாக விமானி கூறுகிறார், அதில் விமானம் வேகமாக கீழிறங்குவதாக குறிப்பிடுகிறார்.

  

குறித்த ஆடியோவில், நிமிடத்திற்கு 8000 அடி கீழே இறங்குகிறோம், மே டே மே டே 10,000 அடி கீழே இறங்குகிறோம் என பதற்றத்துடன் கூறுகிறார்.

தொடர்ந்து, நிமிடத்திற்கு 20,000 அடி வேகத்தில் கீழே சென்று கொண்டிருக்கிறோம், விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளாக போகிறது என தெரிவிக்கிறார்.

சில நிமிடங்களுக்கு முன்னர் பெண் பணியாளர் ஒருவர், கடவுளே! நமக்கு நேரமில்லை என அலறுகிறார்.

வான்வழி போக்குவரத்து கட்டுப்பாளர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லாமல் போனது.

முதலில் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை மற்றும் மழைப்பொழிவை எதிர்கொள்வதாகவும் சமாளிக்ககூடிய அளவில் இருப்பதாகவும் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததுடன் மேலும் 2000 அடி மேலே உயரத்தில் பறக்க அனுமதி கோரியுள்ளனர்.

அனுமதி கோரிய சிறிது நேரத்தில் 41,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது மிக வேகமாக கீழே இறங்க தொடங்கியது.

10,000 அடி என தொடங்கி 30,000 அடிக்கு மேலாக கீழிறங்கியது, தரையை நோக்கி வந்து கொண்டிருந்த போது வலதுபுறமாக விமானம் திரும்பியுள்ளது, இறுதி சிக்னல் விமானம் 8750 அடி உயரத்தில் இருந்த போது பதிவானது.

சில நொடிகளில் தீப்பிழம்பாக விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



கோடிக்கணக்கான ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டவர்களுக்கு மொபைலில் வந்த எச்சரிக்கை!
[Monday 2026-11-02 16:00]

கோடிக்கணக்கான ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டவர்களுக்கு அச்சுறுத்தும் வகையிலான போலி அவசர எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. ரஷ்யாவின் அவசர எச்சரிக்கை அமைப்பு ஹேக்கர்களின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது. கோடிக்கணக்கான ரஷ்யர்களுக்கு, அணு ஆயுத தாக்குதல் தொடர்பில் அவசர எச்சரிக்கை செய்திகள் வந்ததால் பெரும் பரபரப்பு உருவானது.



இங்கிலாந்தில் குடியேறிகள் காத்திருப்பு காலம் நீடிப்பு!
[Monday 2026-11-02 16:00]

இங்கிலாந்தில் குடியேறியவர்கள் நிரந்தர வதிவிட அனுமதியைப் பெறுவதற்கான காத்திருப்புக் காலத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான புதிய குடியேற்றக் கொள்கை மாற்றங்களை உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் அறிவிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள சில குடியேற்றப் பிரிவுகளுக்கான ஐந்து ஆண்டு காத்திருப்புக் காலத்தைப் பத்து ஆண்டுகளாக அதிகரிப்பது தொடர்பில் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.



அமெரிக்கா - கனடா வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தை!
[Monday 2026-11-02 16:00]

அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தக உறவுகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன் சுமுகமான மற்றும் பயனுள்ள உரையாடலை மேற்கொண்டதாக கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்ட பிரதமர் கார்னி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கைக்கான வரைவு குறித்து சமீபத்தில் இடம்பெற்ற ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகவே இந்த உரையாடல் அமைந்ததாகக் குறிப்பிட்டார்.



அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டோம்: ஈரான் சபாநாயகர் அதிரடி!
[Monday 2026-11-02 07:00]

அணுசக்தி திட்டத்தில் எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் என்று ஈரான் நாடாளுமன்ற துணை சபாநாயகர் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே மோதலானது தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், எத்தகைய சூழ்நிலையிலும் அல்லது எந்தவொரு அழுத்தத்திற்கு மத்தியிலும் ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தையானது நடத்தப்படாது என ஈரானின் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் அலி நிக்சாத்(Ali Nikzad)திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!
[Monday 2026-11-02 07:00]

ஜேர்மனியில் சிறுவர்கள் சேகரித்த ஹாலோவீன் மிட்டாய்களில் கூர்மையான ஊசிகள் மற்றும் திருகுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்காக சிறுவர்கள் சேகரித்த மீட்டாய்களுக்குள் கூர்மையான ஊசிகள் மற்றும் சிறிய திருகுகள் போன்ற ஆபத்தான உலோகப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜேர்மன் காவல்துறையினர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



மோட்டார் சைக்கிளை அணுக முயன்ற பொலிஸார்: பிரித்தானியாவில் 18 வயது இளைஞர் பலி!
[Monday 2026-11-02 07:00]

பிரித்தானியாவில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் கென்ட் மாகாணத்தில் உள்ள ஷீர்னஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை அணுக முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் 18 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். ஷெப்பி லீஷர் சென்டர் அருகே பீச் ஸ்ட்ரீட் மற்றும் ராயல் ரோடு பகுதியில் காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.



பிரித்தானியாவில் இடமொன்றை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக மாற்றிய புலம்பெயர்ந்தோர்!
[Sunday 2026-11-01 18:00]

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் வாகன நிறுத்துமிடத்தை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக மாற்றியுள்ளனர். பிரித்தானியாவில் வீடற்ற புலம்பெயர்ந்தோரும், போதைக்கு அடிமையானவர்களும் நகர மையத்தில் வாகன நிறுத்துமிடத்தை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக மாற்றியுள்ளனர். பெர்க்ஷயர் நகரத்தின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு நேர் கீழே அமைந்துள்ள ரீடிங்கின் சிவிக் பி வாகன நிறுத்துமிடத்தில், குறைந்தது பன்னிரண்டு ஆண்கள் தற்காலிக வீடுகளை அமைத்துள்ளனர்.



கனடாவில் கௌரவிக்கப்பட்ட 5 வயது இந்திய வம்சாவளி கணித மேதை!
[Sunday 2026-11-01 18:00]

கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் 2026 அக்டோபர் 29 அன்று, 5 வயது இந்திய வம்சாவளி சிறுவன் அர்ஜுன் விஷால் ப்ரஜாபதி தனது அபாரமான அறிவாற்றலுக்காக சிறப்பாக கௌரவிக்கப்பட்டார். அர்ஜுன், ஸ்டான்ஃபோர்ட்-பினேட் இன்டெலிஜென்ஸ் ஸ்கேல்ஸ் (SB5) மூலம் நடத்தப்பட்ட சோதனையில் IQ 141 மதிப்பெண் பெற்று, உலகளவில் 99.7 சதவீதம் உயர்ந்த அறிவாற்றல் கொண்டவர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.



"நெதன்யாகு வேண்டாம்" - யூத-அரபு கூட்டணிக்கு ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் வலியுறுத்தல்!
[Sunday 2026-11-01 18:00]

இஸ்ரேலில் யூத-அரபு கூட்டணியை வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக அரபு கட்சிகளுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இஸ்ரேலிய எதிர்க்கட்சியை வலியுறுத்தி, டெல் அவிவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். சனிக்கிழமை பேரணியில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், உண்மையான மாற்றத்திற்கான கடைசி வாய்ப்பு இதுவாக இருக்கலாம் என்றும், இஸ்ரேலின் நீண்டகாலப் பிரதமரான நெதன்யாகு ஒரு சிறந்த சூழ்ச்சிக்காரர் என்றும் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.



மொஜ்தபா கமேனியின் அதிர வைக்கும் எச்சரிக்கையால் அமெரிக்காவிற்கு காத்திருக்கும் சிக்கல்!
[Sunday 2026-11-01 18:00]

அமெரிக்கா, இஸ்ரேல் தரப்பிலிருந்து எந்த வகையான அச்சுறுத்தல்கள் வந்தாலும், புவியியல் எல்லைகளைக் கடந்து உடனடியாகப் பதிலடி கொடுக்கப்படும்’ என்று ஈரானின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி எச்சரித்துள்ளாா். ராணுவ அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவா், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சாத்தியமான இலக்குகளின் பட்டியலைப் புதுப்பிக்குமாறும் ராணுவத்தினரைக் கேட்டுக்கொண்டுள்ளாா்.



பிரித்தானியாவில் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட மர்ம ஆயுதங்கள்!
[Sunday 2026-11-01 07:00]

பெல்ஃபாஸ்ட் நகரில் நடந்த சோதனையை தொடர்ந்து வெடிபொருள் மற்றும் ஆயுத வழக்கில் 35 வயது நபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு பெல்ஃபாஸ்ட் பகுதியில் ஷான்கில் சாலை மற்றும் எட்வினா சாலை அமைந்துள்ள பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த அக்டோபர் 30 மற்றும் அக்டோபர் 31ம் திகதிகளில் இலக்கு வைக்கப்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பல பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டு விரிவான தடயவியல் ஆய்வுக்காக பொலிஸார் அனுப்பி வைத்தனர்.



ஜேர்மனியில் Gen Z இளைஞர்கள் போராட்டம்!
[Sunday 2026-11-01 07:00]

அரசியல் மாற்றம் மற்றும் பல்வேறு உரிமைகளை கோரி ஜென் ஜி(Gen Z) இளைஞர்கள் ஜேர்மன் நகரங்களில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஜேர்மனியின் அரசியலில் இளைஞர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க உறுதியளிக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான ஜென் ஜி(Gen Z) இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக திரண்ட மக்கள்!
[Sunday 2026-11-01 07:00]

பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட பாலஸ்தீன ஆக்சன் அமைப்புக்கு ஆதரவாக திரண்ட மக்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனின் நைன் எல்ம்ஸ் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே பாலஸ்தீன ஆக்சன்(Palestine Action) என்ற அமைப்பிற்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். இந்த பாலஸ்தீன ஆக்சன் அமைப்பானது பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.



உடலிலும் மனதிலும் வலி: மரண தண்டனை நிறைவேற்றும்போது உயிர் தப்பிய பெண்!
[Saturday 2026-10-31 16:00]

அமெரிக்காவில், மரண தண்டனை நிறைவேற்றும்போது உயிர் பிழைத்த கிறிஸ்டா பைக் என்னும் பெண், தான் கடுமையான வலியில் கண் விழித்ததாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், ஊசி மூலம் பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சியில் அவர் உயிரிழக்காமல் பிழைத்துக்கொண்ட விடயம் நினைவிருக்கலாம். இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட அனுபவம் மற்றும் தனது தற்போதைய நிலை குறித்து அந்தப் பெண் பகிர்ந்துகொண்டுள்ளார்.



இஸ்ரேலை ஆளப்போவது யார்? - ஓரம் கட்டப்பட்ட நெதன்யாகு!
[Saturday 2026-10-31 16:00]

இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில், ஆட்சி அமைக்க தேவையான 61 இடங்களை யாரும் பெறாததால், அரபு கட்சிகள் கிங் மேக்கராக உருவாகியுள்ளன. இஸ்ரேல் பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடிந்தநிலையில் 77.7 சதவீதமாக வாக்குப்பதிவு ஆகியுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த சாதனை என கூறப்படும் நிலையில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது. 99 சதவீத வாக்குப்பெட்டிகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட் டணி 54 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.



விடாப்பிடியாக சாதித்த ஜெலென்ஸ்கி: பேட்ரியாட் ஏவுகணை ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் ஒப்புதல்!
[Saturday 2026-10-31 16:00]

உக்ரைனுக்கான 2.1 பில்லியன் டொலர் மதிப்பிலான பேட்ரியாட் ஏவுகணை ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் ஒப்புதல் அளித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரேனின் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே பல வாரங்களாக நிலவி வந்த பதற்றத்திற்குப் பிறகு, அந்த நாட்டிற்கு 500 பேட்ரியாட் PAC-3 ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.



உலகளவில் வீடின்றி வாடும் 340 கோடி மக்கள்!
[Saturday 2026-10-31 16:00]

உலகளவில் சுமார் 340 கோடி மக்கள் பாதுகாப்பானதும், போதிய வசதிகளைக் கொண்டதுமான வீடுகள் இன்றி வாழ்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.



மெலனியா டிரம்பின் அமைதி முயற்சி: ஒலேஷ்கியிலிருந்து வெளியேறும் நூற்றுக்கணக்கான உக்ரைனியர்கள்!
[Saturday 2026-10-31 05:00]

அமெரிக்காவின் அமைதி முயற்சியின் ஒரு பகுதியாக ஓலேஷ்கியில் இருந்து நூற்றுக்கணக்கான உக்ரைனியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். உக்ரைன் உடனான போர் நடவடிக்கை தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து ஒலேஷ்கி(Oleshky) நகரம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்பின் முயற்சியால் உக்ரைன் - ரஷ்யா இடையே தற்காலிக மனிதநேய போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாகியுள்ளது.



ஈரான் அருகே பயணித்த வணிக கப்பல் மீது வீசப்பட்ட மர்ம பொருள்!
[Saturday 2026-10-31 05:00]

ஈரானின் கடலோர பகுதியில் அருகே பயணித்த கப்பல் மீது மர்ம பொருள் தாக்கியதாக பிரித்தானிய கடற்படை தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை ஈரானின் லாவான் தீவுக்கு தெற்கே சுமார் 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் பயணித்து கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றின் மீது மர்ம பொருள் தாக்கியதாக பிரித்தானிய கடற்படை வர்த்தக அமைப்பு (UKMTO) தகவல் தெரிவித்துள்ளது.



ஸ்பெயினில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்து: பதவி விலக அமைச்சர் மறுப்பு!
[Saturday 2026-10-31 05:00]

ஸ்பெயினில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்தை தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்ய போக்குவரத்து அமைச்சர் மறுத்துள்ளார். கடந்த புதன்கிழமை காலை டோலிடோ மாகாணத்தின் உர்தா பகுதிக்கு அருகே அரசுக்குச் சொந்தமான 'ரென்ஃபே' (Renfe) நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு ரயிலும், தனியார் ரயில் நிறுவனமான 'ஐரியோ' (Iryo)-விற்குச் சொந்தமான மற்றொரு ரயிலும் மோதிக் கொண்டு பெரும் விபத்து நிகழ்ந்தது.


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா