Untitled Document
November 7, 2026 [GMT]
கனடாவில் புதிய குடிவரவுத் திட்டம்: 2 இலட்சம் பேருக்கு நிரந்தர வதிவிட வாய்ப்பு!
[Saturday 2026-11-07 17:00]

கனடாவில் ஏற்கனவே தற்காலிகக் குடியிருப்பு அந்தஸ்துடன் வசித்து வரும் தகுதியுடைய 2 இலட்சம் பேருக்கு 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர வதிவிட அந்தஸ்து வழங்குவதற்கான புதிய குடிவரவுத் திட்டத்தை கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதுடன், குடிவரவு விண்ணப்பங்களின் நிலுவையைக் குறைத்து, ஏற்கனவே கனடாவில் வாழ்ந்து வரும் திறமையான பணியாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கனடாவில் ஏற்கனவே தற்காலிகக் குடியிருப்பு அந்தஸ்துடன் வசித்து வரும் தகுதியுடைய 2 இலட்சம் பேருக்கு 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர வதிவிட அந்தஸ்து வழங்குவதற்கான புதிய குடிவரவுத் திட்டத்தை கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதுடன், குடிவரவு விண்ணப்பங்களின் நிலுவையைக் குறைத்து, ஏற்கனவே கனடாவில் வாழ்ந்து வரும் திறமையான பணியாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  

கனடாவின் 2026ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டம் மற்றும் 2027–2029ஆம் ஆண்டுகளுக்கான குடிவரவு மட்டத் திட்டம் ஆகியவற்றில் இந்த நடவடிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

கனேடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் (IRCC) தகவலின்படி, இந்தத் திட்டம் இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, தொழிலாளர் பிரிவின் கீழ் ஏற்கனவே கனடாவில் வசிக்கும் 1 இலட்சம் பேருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிரந்தர வதிவிட அந்தஸ்தைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இதற்காக மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் இணைந்து, அந்தந்தப் பகுதிகளின் தொழிலாளர் தேவைகளுக்குப் பங்களிக்கக்கூடிய தகுதியுடைய பணியாளர்கள் அடையாளம் காணப்படவுள்ளனர்.

மாகாண நியமனத் திட்டத்தின் (Provincial Nominee Program) கீழ் தகுதி பெறுவோரும் இதில் உள்ளடக்கப்படலாம். அத்துடன், அட்லாண்டிக் குடிவரவுத் திட்டம், புத்தொழில் நிறுவன விசா திட்டம், விவசாயம் மற்றும் உணவுத் துறை முன்னோடித் திட்டம் மற்றும் வீட்டுப் பராமரிப்புப் பணியாளர் திட்டங்கள் உள்ளிட்ட மத்திய அரசாங்கத்தின் குடிவரவுத் திட்டங்களின் கீழ் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள சிலரும் இதன்மூலம் பயனடையலாம்

மீதமுள்ள 1 இலட்சம் இடங்கள் மனிதாபிமான மற்றும் குடும்ப ஒன்றிணைப்பு அடிப்படையிலான விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்படவுள்ளன.

இதில், மனிதாபிமான மற்றும் கருணை அடிப்படையிலான விண்ணப்பதாரர்கள், உக்ரைன் மற்றும் ஹொங்கொங் தொடர்பான சில குடிவரவுத் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்தவர்கள், குடும்ப ஒன்றிணைப்புக்காக நீண்டகாலமாக நிரந்தர வதிவிடத்திற்காகக் காத்திருப்பவர்களும் அடங்குவர்.

  
   Bookmark and Share Seithy.com



191பேரை உயிரிழக்கத் தூண்டிய மத போதகருக்கு 200 ஆண்டுகள் சிறை!
[Saturday 2026-11-07 17:00]

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின் தலைவரான பால் மெக்கென்சி, 191 பேரின் கொலைக்காக வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) அன்று 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கபப்ட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. பட்டினி கிடந்து உயிரிழந்தோரில் 191 பேரில் 190 பேர் குழந்தைகள் ஆவர். மொம்பாசா உயர் நீதிமன்றத்தில், அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருபத்தி நான்கு பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.



மெலனியா ட்ரம்புக்கு உயரிய விருது வழங்கி கௌரவித்த உக்ரைன்!
[Saturday 2026-11-07 17:00]

ரஷ்யா - உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட உக்ரைனியக் குழந்தைகளை மீட்டதற்கும் மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்கும் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா ட்ரம்புக்கு உக்ரைன் அரசு உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.



கனடாவில் கரையொதுங்கிய அமெரிக்க ராணுவ பீப்பாய்!
[Saturday 2026-11-07 17:00]

கனடாவின் கியூபெக்கில், அமெரிக்க ராணுவ பீப்பாய் ஒன்று கரையொதுங்கியுள்ளது. சென்ற மாதம் 27ஆம் திகதி, கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள Île aux Canards என்னும் சிறு தீவில் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான பீப்பாய் ஒன்று கரையொதுங்கியுள்ளது. உடனடியாக, வெடிகுண்டு நிபுணர்கள், அபாயகரமான ரசாயனங்கள் முதலான விடயங்களைக் கையாளும் hazmat குழுவினர் மற்றும் ஹெலிகொப்டர்களுடன் பொலிசார் அந்த தீவுக்கு விரைந்துள்ளனர்.



மத்திய கிழக்கில் மீண்டும் பரபரப்பு: ஈரானின் கெஷ்ம் தீவு மீது ஏவுகணை தாக்குதல்!
[Saturday 2026-11-07 08:00]

கெஷ்ம் தீவில் இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிப்பதாக, ஈரானின் உத்தியோகப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனம் சனிக்கிழமை கூறியுள்ளது. குறித்த தாக்குதல் தொடர்பில் பாதிப்புகள் எதுவும் இதுவரை அதிகாரிகள் தரப்பில் இருந்து உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியதும், கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்று தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



தென் அமெரிக்க நாடொன்றின் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்த செனட் சபை!
[Saturday 2026-11-07 08:00]

பராகுவே அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு பெரிய வங்கி சரிந்ததன் காரணமாக, அந்நாட்டின் செனட் சபை வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி சாண்டியாகோ பென்னாவைப் பதவியிலிருந்து நீக்கியது. தென் அமெரிக்காவின் மிகவும் நிலையான ஜனாதிபதி பதவிகளில் ஒன்றிற்கு செனட் சபை முடிவுகட்டியுள்ளது. சபையில் இருந்த 44 செனட்டர்களும் ஒருமனதாக வாக்களித்து, பதவியில் முறைகேடாக நடந்துகொண்டதற்காக ஜனாதிபதி பென்யாவைப் பதவியிலிருந்து நீக்கினர்.



இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது: ட்ரம்ப் வெளிப்படை!
[Saturday 2026-11-07 08:00]

இஸ்ரேலும் மத்திய கிழக்கும் தப்பிப்பிழைத்ததற்குத் தான் தான் காரணம் என டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை பெருமை பேசியுள்ளார். தனக்கே உரிய தற்பெருமைப் பாணியில், ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தான் தடுத்திருக்காவிட்டால், இஸ்ரேலும் முழு மத்திய கிழக்கும் மொத்தமாக அழிந்திருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். ஈரான் மீது மீண்டும் ஒரு வலுவானத் தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்களின் மத்தியில் ட்ரம்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.



லாஸ் ஏஞ்செல்ஸ் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் பெண் நித்யா ராமன்!
[Friday 2026-11-06 16:00]

லாஸ் ஏஞ்செல்ஸ் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் பெண்ணான நித்யா ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய நகரமான லாஸ் ஏஞ்செல்ஸின் மேயர் தேர்தலில் தற்போதைய மேயர் கரேன் பாஸுக்கும், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த தமிழ் பெண்ணான நித்யா ராமனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.



இந்திய மருத்துவருக்கு பிரான்சின் உயரிய விருது!
[Friday 2026-11-06 16:00]

Dr டேவி ஷெட்டி என்னும் இந்திய மருத்துவருக்கு பிரான்ஸ் உயரிய விருதொன்றை வழங்கியுள்ளது. பிரபல இந்திய மருத்துவருக்கு பிரான்ஸ் உயரிய விருதொன்றை வழங்கி கௌரவித்துள்ளது. இந்தியாவின் பெங்களூருவில் இயங்கிவரும் நாராயணா ஹெல்த் என்னும் மருத்துவமனையின் நிறுவனரும் தலைவருமான Dr டேவி ஷெட்டி (Dr Devi Shetty) என்பவருக்கு, பிரான்சின் உயரிய விருதுகளில் ஒன்றான Chevalier de l' Ordre national du Merite என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது.



வெள்ளைமாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்பு!
[Friday 2026-11-06 16:00]

வெள்ளை மாளிகையில் இன்று நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்க உள்ளார். இந்து மதப்பண்டிகையான தீபாவளி உலகின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.



கனடாவில் அதிகரிக்கப்படும் தபால் முத்திரைக் கட்டணங்கள்: 2027 முதல் புதிய உயர்வு!
[Friday 2026-11-06 16:00]

வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை அனுப்புவதற்கான செலவு அதிகரிக்கவுள்ளது. கனடா தபால் சேவையின் நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் வகையில், தபால் முத்திரைகளின் கட்டணத்தை உயர்த்தக் கூட்டாட்சி வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.



தாமஸ் மெர்க்கலிடம் சிறார்கள் தொடர்பில் 7500 புகைப்படங்கள்: மீட்டெடுத்த அதிகாரிகள்!
[Friday 2026-11-06 07:00]

மேகன் மெர்க்கலின் தந்தையான தாமஸ் மெர்க்கலுக்குச் சொந்தமானவை எனக் கூறப்படும் பொருட்களிலிருந்து, சிறார்களின் 7,500 புகைப்படங்களை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். அவரது மகன் தாமஸ் ஜூனியர், இரண்டு வாரங்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்த ஏராளமான பொருட்களில் இவையும் அடங்கும். பிலிப்பைன்ஸ் உள்விவகாரச் செயலாளர் ஜுவானிட்டோ விக்டர் ரெமுல்லா, மோசமாக உருவகப்படுத்தப்பட்டுள்ள சில சிறார்கள் பத்து வயதுக்குட்பட்டவர்கள் என்று வெளிப்படுத்தினார்.



இஸ்ரேலில் புதிய அரசாங்கம்: ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என ஜனாதிபதி!
[Friday 2026-11-06 07:00]

புதிய அரசாங்கத்தை யார் அமைப்பார்கள் என்பது ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும். அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் தேர்தலுக்குப் பிந்தைய பேச்சுவார்த்தைகளை அடுத்து, புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்பதை ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பதாக இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று, அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை நெசெட் (நாடாளுமன்ற) உறுப்பினர் ஒருவரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஹெர்சாக் ஒரு காணொளிச் செய்தியில் தெரிவித்தார்.



கலிபோர்னியா வரலாற்றிலேயே மரணதண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய மாகாண ஆளுநர்!
[Friday 2026-11-06 07:00]

வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் 548 கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட கைதிகளின் தண்டனையை, பரோல் வாய்ப்பில்லாத ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கப்போவதாக ஆளுநர் கேவின் நியூசம் தெரிவித்துள்ளார். 2027 ஜனவரியில் பதவியிலிருந்து விலகவிருக்கும் நியூசம், மரண தண்டனைக்குத் தனக்கிருந்த தார்மீக எதிர்ப்பின் காரணமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார்.



சீனாவை அதிகமாக சார்ந்திருக்கும் பிரித்தானியா: ஆபத்தில் பாதுகாப்பு, AI, ஆற்றல் துறைகள்!
[Thursday 2026-11-05 16:00]

பாதுகாப்புத் துறை, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு தேவையான முக்கிய கனிம வளங்களுக்காக பிரித்தானியா சீனாவை 'அபாயகரமான அளவில்' சார்ந்துள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்ற விசாரணை அறிக்கை எச்சரித்துள்ளது. பிரித்தானியாவின் வணிகத் தேர்வுக்குழு (Business Select Committee) நடத்திய ஆய்வில், இராணுவ விமானங்கள், மின்சார வாகனங்கள், AI தரவுமையங்கள் மற்றும் காற்றாலை தொழில்நுட்பங்களுக்கு அவசியமான அரிய நிலக்கனிமங்கள் (Rare Earths) மற்றும் லித்தியம் போன்ற முக்கிய மூலப்பொருட்களின் விநியோகத்தில் சீனா ஆதிக்கம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



3 ஆண்டுகள் ஃப்ரீசரில் மறைத்து வைக்கப்பட்ட பெண்ணின் உடல்: பிரித்தானியாவில் அதிர்ச்சி!
[Thursday 2026-11-05 16:00]

பிரித்தானியாவில் நடந்துள்ள ஒரு அதிர்ச்சிகரமான கொலை வழக்கு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகள் ஃப்ரீசரில் மறைத்து வைக்கப்பட்ட பெண்ணின் உடல் 65 வயதான ஜார்ஜ் கார்டன் என்ற நபர், தண்னுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த தனது நெருங்கிய தோழி, டெலியா மெக்இனெர்னியை (64 வயது) கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவரது உடலை துண்டுகளாக வெட்டி, சுமார் மூன்று ஆண்டுகளாக ஒரு பெரிய உறைவிப்பானில் (freezer) மறைத்து வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



"அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகளால் பெரும் மகிழ்ச்சி" – டக் ஃபோர்ட் கருத்து!
[Thursday 2026-11-05 16:00]

அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, கனடாவின் ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரி விதிப்புக் கொள்கைகளால் ஒன்டாரியோவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தேர்தல் முடிவுகள் அவருக்கு விடுக்கப்பட்ட ஒரு வலுவான எச்சரிக்கையாக அமைந்திருப்பதாக ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.



பிரான்ஸில் இரத்த வங்கிகளைக் குறிவைத்து சைபர் தாக்குதல்!
[Thursday 2026-11-05 16:00]

பிரான்ஸில் பல இரத்த வங்கிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் மூலம், அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த இரத்தப் பொருட்கள் மற்றும் மாதிரிகளின் வெப்பநிலையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், பிரான்ஸ் அதிகாரிகள் தலையிட்டு, பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன்னரே குறித்த தாக்குதலைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



வெளிநாட்டில் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரித்தானியர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார்!
[Thursday 2026-11-05 07:00]

பிரித்தானியரான சுகாதாரப் பணியாளர் நாட்டுக்கு விமானம் மூலம் திருப்பி அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள பிரித்தானியர் ஒருவருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சைக்காக நாட்டிற்கு அழைத்து வரப்படுவார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர் ஒரு சுகாதாரப் பணியாளர் எனத் தெரியவருகிறது. அவர் மருத்துவ மீட்பு விமானம் மூலம் பிரித்தானியாவுக்குத் திரும்ப அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் அந்த விமானப் பயணம் எப்போது நடைபெறும் என்பது உறுதி செய்யப்படவில்லை.



ஐரோப்பா முழுவதும் குளிர்சாதனப்பெட்டிகள் மீதான சைபர் தாக்குதலுக்குப் பின்னால் ரஷ்யா!
[Thursday 2026-11-05 07:00]

ஐரோப்பா முழுவதும் குளிர்சாதனப்பெட்டிகள் மீதான சைபர் தாக்குதலுக்குப் பின்னால் ரஷ்ய ஹேக்கர்கள். ஐரோப்பா முழுவதும் குளிர்சாதனப் பெட்டிகளைச் செயலிழக்கச் செய்து, பல மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்திய ஹேக்கர்கள், ரஷ்யாவிலிருந்து செயல்படுவதாகத் தெரிகிறது என்று முன்னணி சைபர் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடவுச்சொற்களை 12345 இலிருந்து மாற்றாத நெட்வொர்க்குகளை மட்டுமே குறிவைத்த தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அதிகாரிகள் தரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.



சுவிட்சர்லாந்தை உலுக்கிய சம்பவம்: இத்தாலியர்களுக்கான மருத்துவச் செலவை ஏற்க ஒப்புதல்!
[Thursday 2026-11-05 07:00]

இத்தாலியர்களுக்கான மருத்துவச் செலவுகளை ஏற்க சுவிட்சர்லாந்து ஒப்புக்கொண்டுள்ளது. Crans-Montana தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இத்தாலியர்களின் மருத்துவச் செலவுகளைத் தாங்கள் ஏற்பதாக சுவிட்சர்லாந்து அரசு புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது. இத்தாலியர்களின் மருத்துவச் செலவை அந்த நாட்டிடம் இருந்து வசூலிக்க இருப்பதாக வெளியானத் தகவலை அடுத்து, இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அந்த முடிவை அவமானம் என்று குறிப்பிட்டிருந்ததை அடுத்தே, சுவிட்சர்லாந்தின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா