Untitled Document
November 8, 2026 [GMT]
ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டம்: 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
[Sunday 2026-11-08 16:00]

ஈரானில், அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில், கடந்த ஜனவரி மாதம் அரசுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் போராட்டத்தை அந்நாட்டு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. இதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றது.

ஈரானில், அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில், கடந்த ஜனவரி மாதம் அரசுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் போராட்டத்தை அந்நாட்டு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. இதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றது.

  

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் ஈரானில் உள்ள கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அரசுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டதாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட ஹசன் தியோபண்ட், ஹமீத் காசெமி மற்றும் ரெசா ஸன்கானே ஆகியோர் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை பயன்படுத்தி முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், அவர்கள் கராஜ் நகரத்திலுள்ள துணை மின் நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, ஈரானில் தொடர்ந்து ஏராளமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது சர்வதேச அளவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக மரண தண்டனை நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்துமாறு ஈரான் அரசுக்கு ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



இங்கிலாந்தில் அடர் பனிமூட்டம்: வாகன ஓட்டிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
[Sunday 2026-11-08 16:00]

பிரித்தானியாவின் பல பகுதியில் நிலவி வரும் தீவிர பனிமூட்டம் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் நிலவி வரும் கடுமையான பனிமூட்டம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பொது போக்குவரத்து சேவை பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையமான மெட் ஆபீஸ்(Met Office) மோசமான வானிலையை கருத்தில் கொண்டு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.



இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டிற்கு அழைப்பு!
[Sunday 2026-11-08 16:00]

இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, புதிய ஆட்சியை அமைக்கும் பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான காடி ஐசன்கோட்டிடம் (Gadi Eisenkot) ஒப்படைக்கவுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்ஸொக் (Isaac Herzog) அறிவித்துள்ளார். 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலியப் நாடாளுமன்றத் தேர்தலில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் (Benjamin Netanyahu) வலதுசாரி கூட்டணி 53 இடங்களையும், காடி ஐசன்கோட் தலைமையிலான மையவாத 'யாஷார்' (Yashar) கட்சி மற்றும் கூட்டணிப் பங்காளிகள் 48 இடங்களையும் பெற்றன.



கனடிய முன்னாள் பிரதமர் ட்ரூடோவிற்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் புதிய பொறுப்பு!
[Sunday 2026-11-08 16:00]

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் புதிய முக்கியப் பொறுப்பு ஒன்றை ஏற்றுள்ளார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பிளவாட்னிக் அரசுப் பள்ளியில் ‘சிறப்பு உறுப்பினராகவும்’, ‘உலகத் தலைவர்கள் வட்டத்தின்’ உறுப்பினராகவும் ஜஸ்டின் ட்ரூடோ இணைந்துள்ளதாக அப்பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



ட்ரம்ப்-புடின் ஒப்பந்தம்: ரஷ்ய டீசலை வாங்க மறுக்கும் எண்ணெய் வர்த்தகர்கள்!
[Sunday 2026-11-08 06:00]

ட்ரம்ப்-புடின் ஒப்பந்தத்திற்குப் பிறகு ரஷ்ய டீசலை வாங்க எண்ணெய் வர்த்தகர்கள் மறுப்பு. அமெரிக்காவிற்கு ரஷ்ய டீசலை ஏற்றிச் சென்ற குறைந்தது மூன்று கப்பல்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையே அக்டோபரில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ரஷ்யா தனது டீசல் இருப்புகளை அமெரிக்க மற்றும் உலகச் சந்தைகளுக்கு வழங்கலாம் என்று ட்ரம்ப் ஒப்புக்கொண்டு ஏறக்குறைய ஒரு மாதம் ஆகியும், நடைமுறையில் உள்ள தடைகளை மீறி இதுவரை ஒரு சொட்டு டீசல் கூட அமெரிக்காவை வந்தடையவில்லை.



முடிவுக்கு வரும் நெதன்யாகுவின் ஆட்சி!
[Sunday 2026-11-08 06:00]

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசென்கோட்டைத் தெரிவு செய்தார். இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைப் புறக்கணித்து, நாட்டின் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை அவரது போட்டியாளரான முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசென்கோட்டிடம் ஒப்படைத்துள்ளார். ஜனாதிபதி ஹெர்சாக் தனது முடிவை சனிக்கிழமை மாலை ஐசென்கோட்டிடம் தெரிவித்தார் என்றும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் அவரிடம் இதற்கான உத்தியோகப்பூர்வ ஆணையை வழங்கவுள்ளார் என்றும் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



குற்றம் நிரூபிக்கப்பட்டால் தாமஸ் மெர்க்கலுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வாய்ப்பு!
[Sunday 2026-11-08 06:00]

தாமஸ் மெர்க்கல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஃபெடரல் சிறார் ஆபாசக் குற்றச்சாட்டின் பேரில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட தாமஸ் மெர்க்கல் சீனியர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் இருபது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம். அவரது மனநிலையையும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் ஆபாசப் படங்களில் உள்ள சிறுமிகளின் வயதையும் பொறுத்து அவருக்கான தண்டனைக் காலம் இறுதி செய்யப்படலாம்.



191பேரை உயிரிழக்கத் தூண்டிய மத போதகருக்கு 200 ஆண்டுகள் சிறை!
[Saturday 2026-11-07 17:00]

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின் தலைவரான பால் மெக்கென்சி, 191 பேரின் கொலைக்காக வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) அன்று 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கபப்ட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. பட்டினி கிடந்து உயிரிழந்தோரில் 191 பேரில் 190 பேர் குழந்தைகள் ஆவர். மொம்பாசா உயர் நீதிமன்றத்தில், அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருபத்தி நான்கு பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.



கனடாவில் புதிய குடிவரவுத் திட்டம்: 2 இலட்சம் பேருக்கு நிரந்தர வதிவிட வாய்ப்பு!
[Saturday 2026-11-07 17:00]

கனடாவில் ஏற்கனவே தற்காலிகக் குடியிருப்பு அந்தஸ்துடன் வசித்து வரும் தகுதியுடைய 2 இலட்சம் பேருக்கு 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர வதிவிட அந்தஸ்து வழங்குவதற்கான புதிய குடிவரவுத் திட்டத்தை கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதுடன், குடிவரவு விண்ணப்பங்களின் நிலுவையைக் குறைத்து, ஏற்கனவே கனடாவில் வாழ்ந்து வரும் திறமையான பணியாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



மெலனியா ட்ரம்புக்கு உயரிய விருது வழங்கி கௌரவித்த உக்ரைன்!
[Saturday 2026-11-07 17:00]

ரஷ்யா - உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட உக்ரைனியக் குழந்தைகளை மீட்டதற்கும் மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்கும் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா ட்ரம்புக்கு உக்ரைன் அரசு உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.



கனடாவில் கரையொதுங்கிய அமெரிக்க ராணுவ பீப்பாய்!
[Saturday 2026-11-07 17:00]

கனடாவின் கியூபெக்கில், அமெரிக்க ராணுவ பீப்பாய் ஒன்று கரையொதுங்கியுள்ளது. சென்ற மாதம் 27ஆம் திகதி, கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள Île aux Canards என்னும் சிறு தீவில் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான பீப்பாய் ஒன்று கரையொதுங்கியுள்ளது. உடனடியாக, வெடிகுண்டு நிபுணர்கள், அபாயகரமான ரசாயனங்கள் முதலான விடயங்களைக் கையாளும் hazmat குழுவினர் மற்றும் ஹெலிகொப்டர்களுடன் பொலிசார் அந்த தீவுக்கு விரைந்துள்ளனர்.



மத்திய கிழக்கில் மீண்டும் பரபரப்பு: ஈரானின் கெஷ்ம் தீவு மீது ஏவுகணை தாக்குதல்!
[Saturday 2026-11-07 08:00]

கெஷ்ம் தீவில் இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிப்பதாக, ஈரானின் உத்தியோகப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனம் சனிக்கிழமை கூறியுள்ளது. குறித்த தாக்குதல் தொடர்பில் பாதிப்புகள் எதுவும் இதுவரை அதிகாரிகள் தரப்பில் இருந்து உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியதும், கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்று தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



தென் அமெரிக்க நாடொன்றின் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்த செனட் சபை!
[Saturday 2026-11-07 08:00]

பராகுவே அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு பெரிய வங்கி சரிந்ததன் காரணமாக, அந்நாட்டின் செனட் சபை வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி சாண்டியாகோ பென்னாவைப் பதவியிலிருந்து நீக்கியது. தென் அமெரிக்காவின் மிகவும் நிலையான ஜனாதிபதி பதவிகளில் ஒன்றிற்கு செனட் சபை முடிவுகட்டியுள்ளது. சபையில் இருந்த 44 செனட்டர்களும் ஒருமனதாக வாக்களித்து, பதவியில் முறைகேடாக நடந்துகொண்டதற்காக ஜனாதிபதி பென்யாவைப் பதவியிலிருந்து நீக்கினர்.



இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது: ட்ரம்ப் வெளிப்படை!
[Saturday 2026-11-07 08:00]

இஸ்ரேலும் மத்திய கிழக்கும் தப்பிப்பிழைத்ததற்குத் தான் தான் காரணம் என டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை பெருமை பேசியுள்ளார். தனக்கே உரிய தற்பெருமைப் பாணியில், ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தான் தடுத்திருக்காவிட்டால், இஸ்ரேலும் முழு மத்திய கிழக்கும் மொத்தமாக அழிந்திருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார். ஈரான் மீது மீண்டும் ஒரு வலுவானத் தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவல்களின் மத்தியில் ட்ரம்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.



லாஸ் ஏஞ்செல்ஸ் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் பெண் நித்யா ராமன்!
[Friday 2026-11-06 16:00]

லாஸ் ஏஞ்செல்ஸ் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் பெண்ணான நித்யா ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய நகரமான லாஸ் ஏஞ்செல்ஸின் மேயர் தேர்தலில் தற்போதைய மேயர் கரேன் பாஸுக்கும், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த தமிழ் பெண்ணான நித்யா ராமனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.



இந்திய மருத்துவருக்கு பிரான்சின் உயரிய விருது!
[Friday 2026-11-06 16:00]

Dr டேவி ஷெட்டி என்னும் இந்திய மருத்துவருக்கு பிரான்ஸ் உயரிய விருதொன்றை வழங்கியுள்ளது. பிரபல இந்திய மருத்துவருக்கு பிரான்ஸ் உயரிய விருதொன்றை வழங்கி கௌரவித்துள்ளது. இந்தியாவின் பெங்களூருவில் இயங்கிவரும் நாராயணா ஹெல்த் என்னும் மருத்துவமனையின் நிறுவனரும் தலைவருமான Dr டேவி ஷெட்டி (Dr Devi Shetty) என்பவருக்கு, பிரான்சின் உயரிய விருதுகளில் ஒன்றான Chevalier de l' Ordre national du Merite என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது.



வெள்ளைமாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்பு!
[Friday 2026-11-06 16:00]

வெள்ளை மாளிகையில் இன்று நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்க உள்ளார். இந்து மதப்பண்டிகையான தீபாவளி உலகின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.



கனடாவில் அதிகரிக்கப்படும் தபால் முத்திரைக் கட்டணங்கள்: 2027 முதல் புதிய உயர்வு!
[Friday 2026-11-06 16:00]

வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை அனுப்புவதற்கான செலவு அதிகரிக்கவுள்ளது. கனடா தபால் சேவையின் நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் வகையில், தபால் முத்திரைகளின் கட்டணத்தை உயர்த்தக் கூட்டாட்சி வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.



தாமஸ் மெர்க்கலிடம் சிறார்கள் தொடர்பில் 7500 புகைப்படங்கள்: மீட்டெடுத்த அதிகாரிகள்!
[Friday 2026-11-06 07:00]

மேகன் மெர்க்கலின் தந்தையான தாமஸ் மெர்க்கலுக்குச் சொந்தமானவை எனக் கூறப்படும் பொருட்களிலிருந்து, சிறார்களின் 7,500 புகைப்படங்களை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். அவரது மகன் தாமஸ் ஜூனியர், இரண்டு வாரங்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்த ஏராளமான பொருட்களில் இவையும் அடங்கும். பிலிப்பைன்ஸ் உள்விவகாரச் செயலாளர் ஜுவானிட்டோ விக்டர் ரெமுல்லா, மோசமாக உருவகப்படுத்தப்பட்டுள்ள சில சிறார்கள் பத்து வயதுக்குட்பட்டவர்கள் என்று வெளிப்படுத்தினார்.



இஸ்ரேலில் புதிய அரசாங்கம்: ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என ஜனாதிபதி!
[Friday 2026-11-06 07:00]

புதிய அரசாங்கத்தை யார் அமைப்பார்கள் என்பது ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும். அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் தேர்தலுக்குப் பிந்தைய பேச்சுவார்த்தைகளை அடுத்து, புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்பதை ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பதாக இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று, அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை நெசெட் (நாடாளுமன்ற) உறுப்பினர் ஒருவரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஹெர்சாக் ஒரு காணொளிச் செய்தியில் தெரிவித்தார்.



கலிபோர்னியா வரலாற்றிலேயே மரணதண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிய மாகாண ஆளுநர்!
[Friday 2026-11-06 07:00]

வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் 548 கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது. கலிபோர்னியா மாகாணத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட கைதிகளின் தண்டனையை, பரோல் வாய்ப்பில்லாத ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கப்போவதாக ஆளுநர் கேவின் நியூசம் தெரிவித்துள்ளார். 2027 ஜனவரியில் பதவியிலிருந்து விலகவிருக்கும் நியூசம், மரண தண்டனைக்குத் தனக்கிருந்த தார்மீக எதிர்ப்பின் காரணமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார்.


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா