Untitled Document
May 7, 2024 [GMT]
வெளிநாடொன்றில் 56 குழந்தைகள் உள்பட 223 பேரை சுட்டுகொன்ற ராணுவத்தினர்!
[Friday 2024-04-26 18:00]

ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உள்பட 223 பேரை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உள்பட 223 பேரை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பர்கினோ பாசோவில் உள்ள குறிப்பிட்ட சில கிராமங்களில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் மற்றும் கிளர்ச்சிக்கான திட்டங்களை போராட்ட குழுவினர் திட்டமிடுவதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு ராணுவ துருப்புகள் களம் இறக்கப்பட்டு சந்தேகத்திற்குள்ளான நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி நான்டின் மற்றும் சோரா கிராமங்களில் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உள்பட 223 பேரை அந்த நாட்டின் ராணுவம் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தது.

கடந்த பெப்ரவரி மாதம் நடந்த இந்த மனித உரிமைகளை மீறிய பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையம் உள்பட சர்வதேச நிறுவனங்கள் விசாரணை நடத்த உள்ளன.

  
   Bookmark and Share Seithy.com



அமெரிக்க ராணுவ வீரர் ரஷ்யாவில் கைது!
[Tuesday 2024-05-07 06:00]

தென் கொரியாவில் படை வீரராக பணியாற்றி வந்த அமெரிக்க ராணுவ சார்ஜண்ட் கார்டன் (Gordon Black) பிளாக், திருட்டு பேரில் ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது . பிளாக் மே 2 ஆம் திகதி ரஷ்யாவின் கிழக்கு முனையிலுள்ள விளாடிவோஸ்டாக் நகரில் பிளாக் கைது செய்யப்பட்டதாகவும், அவர் அதிகாரபூர்வ பயணத்தில் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்!
[Tuesday 2024-05-07 06:00]

இஸ்ரேல் உடனான போர் நடவடிக்கையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் என 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



3 குழந்தைகளின் தாயை கொன்ற குற்றவாளி: சிறையில் மரணம்!
[Tuesday 2024-05-07 06:00]

மூன்று குழந்தைகளின் தாயாரை கொலை செய்த கைதி விக்டர் ஃபாரன்ட் சிறையில் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1996 ஆம் ஆண்டில் மூர்க்கத்தனமாக கிளெண்டா ஹோஸ்கின்ஸை கொலை செய்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட விக்டர் ஃபாரன்ட் சிறையில் இறந்துள்ளார். கிளெண்டா ஹோஸ்கின்ஸ், மூன்று குழந்தைகளின் தாயார், 44 வயதாக இருந்தபோது, ​​அவரது முன்னாள் காதலனான ஃபாரண்ட் அவரை தாக்கினார்.



வியட்நாமில் வெப்ப அலை தாங்காமல் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்!
[Monday 2024-05-06 18:00]

சுட்டெரிக்கும் வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தெற்கு வியட்நாமில் உள்ள 300 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சாங் மே ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன.



கனடா தபால் திணைக்களம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி செய்தி!
[Monday 2024-05-06 18:00]

கனடிய தபால் திணைக்களம் பாரியளவு நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. திணைக்களத்தின் நிதி நிலைமைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஓராண்டு காலப்பகுதிக்குள் நிதிப் பற்றாக்குறை நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



அவுஸ்திரேலிய பெண் எம்.பிக்கு மயக்க மருந்து கொடுத்து துஷ்பிரயோகம்!
[Monday 2024-05-06 18:00]

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த எம்.பியான 37 வயதான பிரிட்டானி லாவ்கா தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வெளியே சென்றபோது, அவரை சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதன்பின் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளதாக இந்த துயர செய்தியை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்திருக்கிறார்.



கனடாவில் உயிரணு தான் மூலம் பிறந்த 600 குழந்தைகள் தொடர்பில் கவலையை ஏற்படுத்தியுள்ள செய்தி!
[Monday 2024-05-06 18:00]

கனேடிய மாகாணமொன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று ஆண்கள், உயிரணு தானம் மூலம், 600க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தைகளாகியுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாடுகளில், ஒரு ஆண், இத்தனை முறை மட்டுமே உயிரணு தானம் செய்யலாம் என விதிமுறைகள் உள்ளன. அப்படியிருந்தும், விதிகளை மீறி பல பிள்ளைகளுக்கு தந்தைகளான ஆண்களைக் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன.



300 புதிய தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு: மன்னர் சார்லஸ் முடிவு!
[Monday 2024-05-06 06:00]

பிரித்தானிய மன்னர் 3ம் சார்லஸ் புதிதாக 300 தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அரியணை ஏறிய பிரித்தானிய மன்னர் சார்லஸ், தனது முடிசூட்டு விழாவின் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த வார இறுதியில் தனது ஆதரவு தரும் தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கையை 300 ஆக உயர்த்தியுள்ளார்.



பிரித்தானியாவில் 5 மாத குழந்தை மாரடைப்பு: லேகோலேண்டில் பெண் கைது!
[Monday 2024-05-06 06:00]

பிரித்தானியாவின் லேகோலாந்தில் குழந்தைக்கு ஏற்பட்ட மாரடைப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லேகோலாந்து விண்ட்சர் (Legoland Windsor) பொழுதுபோக்கு பூங்காவில் ஐந்து மாத கைக்குழந்தை மாரடைப்பு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த குழந்தை மருத்துவமனையில் ஆபத்தான (Critical) நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. டேம்ஸ் வேலி காவல்துறை (Thames Valley Police) தகவல் படி, வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது..



பத்திரிகையாளர் சுதந்திரத்தை மீறியதா இஸ்ரேல்?
[Monday 2024-05-06 06:00]

இஸ்ரேல் அதிகாரிகள் Al Jazeera அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை படையெடுத்தனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் (Hamas) இடையே போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கத்தார் நாடு போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்வதில் பங்கு வகிக்கிறது.



கனடாவில் கைதான மூன்று இந்தியர்கள்: பிரதமர் ட்ரூடோ வெளியிட்ட தகவல்!
[Sunday 2024-05-05 18:00]

இந்திய அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் சர்ரேயில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே சுட்டுகொல்லப்பட்டார். கனேடிய குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.



அமெரிக்காவிடம் உத்தரவாதம் கேட்கும் ஹமாஸ் படைகள்!
[Sunday 2024-05-05 18:00]

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எகிப்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அமெரிக்காவிடம் ஹமாஸ் அதிகாரிகள் ஒரே ஒரு உத்தரவாதம் அளிக்கக் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஹமாஸ் படைகள் இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தையானது எகிப்தின் கெய்ரோவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



பிரித்தானிய உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வியை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி!
[Sunday 2024-05-05 18:00]

பிரித்தானியாவில் அண்மையில் கவுன்சிலர்களை தேர்வு செய்ய உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லண்டன் மேயர் தேர்தலில் தொழிலாளர் கட்சி மூன்றாவது முறையாக வெற்றியை பெற்றுள்ளது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் சூசன் ஹாலை 11 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.



அவுஸ்திரேலியாவில் 16 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டுகொன்ற பொலிஸார்!
[Sunday 2024-05-05 18:00]

அவுஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுகொன்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அஸ்திரேலியாவின் பெர்த்தின் புறநகர் பகுதியான வில்லெட்டனில் 16 வயது சிறுவன் ஒருவன் பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.



மெக்ஸிக்கோவில் பதற வைக்கும் கண்டுபிடிப்பு: சுற்றுலா பயணிகள் மாயமான இடத்தில் உடல்கள்!
[Sunday 2024-05-05 07:00]

மெக்ஸிகோவில் அவுஸ்திரேலிய, அமெரிக்க சுற்றுலா பயணிகள் காணாமல் போன இடத்தில் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன. மெக்ஸிகோ நகரத்தில் கடந்த வார இறுதியில் சர்ஃபிங் பயணத்தின் போது காணாமல் போன இரு ஆவுஸ்திரேலியர்கள் மற்றும் ஒரு அமெரிக்க சுற்றுலா பயணியை தேடும் அதே பகுதியின் பாஜா கலிபோர்னியாவில்(Baja California) அதிகாரிகள் மூன்று உடல்களைக் கண்டெடுத்தனர்.



லண்டன் மேயர் தேர்தல்: 3 வது முறையாக சாதிக் கான் வெற்றி!
[Sunday 2024-05-05 07:00]

லண்டன் மேயர் தேர்தலில் மூன்றாவது முறையாக சாதிக் கான் வெற்றி பெற்றுள்ளார். பிரித்தானியாவில் இந்த ஆண்டின் இறுதிக்குள் தேசிய பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ்களை விட தொழிற்கட்சி வேட்பாளர்கள் பலத்த ஆளுமைகளை காட்டி வருகின்றனர்.



உக்ரைனின் 3 பகுதிகளில் திடீர் தாக்குதல்: குறிவைத்து அடித்த ரஷ்யா!
[Sunday 2024-05-05 07:00]

உக்ரைனில் ரஷ்ய நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு, வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்கள் சேதமடைந்ததாக பிராந்திய அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.



அமெரிக்காவில் நோயாளிகளை கொடூரமாக கொன்ற தாதி: 380 ஆண்டுகள் சிறை தண்டனை!
[Saturday 2024-05-04 17:00]

அமெரிக்காவில் மறுவாழ்வு மையங்களில் முதியோர்களுக்கு அளவுக்கு அதிகமாக இன்சூலின் கொடுத்து தாதியொருவர் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசித்து வரும் 41 வயதான ஹீதர் பிரஸ்டீ 5க்கும் மேற்பட்ட முதியோர் மறுவாழ்வு மையங்களில் தாதியாக பணியாற்றி வந்துள்ளார்.



பிரித்தானியாவைப்போலவே புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப மற்றொரு நாடு திட்டம்!
[Saturday 2024-05-04 17:00]

பிரித்தானியாவைப்போலவே புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒரு நாட்டு மக்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருகிறது. சுவிட்சர்லாந்தில், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கபட்ட, எரித்ரியா நாட்டவர்கள் சுமார் 300 பேர் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களை ருவாண்டா போன்றதொரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்ப சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருகிறது.



கனடாவில் இரு தமிழர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
[Saturday 2024-05-04 17:00]

கனடாவில்(Canada) முதியவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு தமிழர்களின் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, சந்தேக நபர்களினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என தெரிவித்துள்ள புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் படங்களை வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.


Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா