Untitled Document
May 26, 2024 [GMT]
முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
[Monday 2024-05-06 04:00]


நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட  பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

  

இதனால் நோயாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் ஜி. விஜேசூரிய கருத்து தெரிவிக்கையில், வைத்தியசாலைகளில் இதுவரையில் 20 வீதமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அதற்கு மாற்று மருத்துகள் நாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



தமிழர்கள் ஒன்றுபடமாட்டார்கள் - விக்கியின் வீடு தேடிச் சென்று சவால் விட்ட ரணில்!
[Sunday 2024-05-26 05:00]

யாழ்ப்பாணம் வந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் வீடு தேடிச் சென்று, சந்தித்தார். இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இருவரும் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஈழத் தமிழினம் அழிந்த பின்னர் தான் சம்பந்தன் வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா?
[Sunday 2024-05-26 05:00]

ஈழத் தமிழினம் அழிந்த பின்னர் தான் சம்பந்தன் வெளியக சுய நிர்ணய உரிமையைக் கோரப் போகின்றாரா என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் ,நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.



சண்டையை தடுக்கச் சென்ற இளைஞன் மைத்துனரின் கத்திக்குத்துக்குப் பலி!
[Sunday 2024-05-26 05:00]

யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் தனது தந்தைக்கும் மைத்துனருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற, 23 வயதுடைய வரதராசா நியூட்சன் எனும் இளைஞன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.



அனுரவின் ஆட்சியில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு!
[Sunday 2024-05-26 05:00]

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தீர்வு கிடைக்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



குத்துவிளக்கு கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிர்வாக தெரிவு!
[Sunday 2024-05-26 05:00]

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான 15பேர் கொண்ட நிர்வாக தெரிவு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.



பொன்னாலையில் இன்று பனைத் திருவிழா!
[Sunday 2024-05-26 05:00]

பொன்னாலை, திருவடிநிலையில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பனைத் திருவிழா இடம்பெறவுள்ளது. அழிவடைந்து வரும் பனையைக் காக்கவும், பனைசார் உணவு மற்றும் ஏனைய நன்மைகளை அனுபவித்து ஆரோக்கியம் பெறவும், பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினரிடம் கடத்தும் நோக்கிலும் 'பனை இருந்தால் பஞ்சம் இல்லை' எனும் தொனிப் பொருளில் பனைத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



சீரற்ற வானிலையால் நேற்றிரவு கொழும்பு வீதிகள் பலவற்றுக்கு பூட்டு!
[Sunday 2024-05-26 05:00]

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பில் பல வீதிகள் நேற்று இரவு மூடப்பட்டிருந்தது. அதன்படி கொழும்பு பிரேபுரூக் பிளேஸ், பொரளை மயான சுற்றுவட்டத்தில் இருந்து தும்முல்லை சந்தி, பௌத்தலோக மாவத்தை, சர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் சுற்றுவட்டத்திலிருந்து ரொட்டுண்டா சுற்றுவட்டம் வரையான வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.



அரச நிகழ்வுகளில் அரசியல் நலன் தேடாதீர்கள்!
[Sunday 2024-05-26 05:00]

அரச வைத்தியசாலை கட்டடம் திறத்தல், காணி உறுதி வழங்கல் போன்றவை அரசு நிகழ்வுகள். அந்த நிகழ்வு மேடைகளை தேர்தல் பிரசாரத்துக்கான தளமாக்கிக் கொள்ளாதீர்கள் என, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பங்குபற்றிய இரண்டு நிகழ்வுகளில் உரையாற்றும்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ், முஸ்லிம்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படுகின்றனவாம்!
[Sunday 2024-05-26 05:00]

எதிர்வரும் தேர்தல்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்படாதவாறு அறிவுபூர்வமான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.



யாழ். போதனா மருத்துவமனையில் குழப்பத்தில் ஈடுபட்ட மூவர் கைது!
[Sunday 2024-05-26 05:00]

யாழ் போதனாமருத்துவமனைக்குள் நோயாளிகளை பார்வையிடும் நேரம் முடிந்த பின்னர் தம்மை உள்நுழைய அனுமதிக்குமாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு குழப்பத்தில் ஈடுபட்ட மூவர் நேற்று கைதுசெய்யப்பட்டனர். அண்மைக்காலமாக யாழ் போதனா மருத்துவமனைக்குள் மதுபோதையில் நுழைந்து குழப்பத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



ஜனாதிபதி வருகைக்கு எதிராக கிளிநொச்சியில் நடத்தவிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை!
[Saturday 2024-05-25 17:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



மூத்த அதிகாரிகளை வெறுக்கும் ஆளுநர்! - ஜனாதிபதிக்கு விக்கி கடிதம்.
[Saturday 2024-05-25 17:00]

வடக்கில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்களை விரைவில் நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.



முள்ளிவாய்க்கால் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்!
[Saturday 2024-05-25 17:00]

முள்ளிவாய்க்கால் படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.



ரணிலைப் புகழ்ந்து தள்ளிய சுமந்திரன்!- 2005 தேர்தல் புறக்கணிப்புக்காக தமிழ் மக்கள் வருந்துகிறார்களாம். Top News
[Saturday 2024-05-25 17:00]

2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணித்தமையை இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்பாகத் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



பொருளாதாரப் போரை வெற்றி கொள்ளக்கூடியவரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம்!
[Saturday 2024-05-25 17:00]

போரை மஹிந்த ராஜபக்ஷ முடிவுக்குக் கொண்டு வந்தது போல் பொருளாதாரப் போரை வெற்றி கொள்ளக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



கிளிநொச்சியில் சிறப்பு மகப்பேற்று பெண் நோயியல் மருத்துவமனை திறந்து வைப்பு!
[Saturday 2024-05-25 17:00]

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 5,320 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.



தீவுப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இன்றும் இல்லை!
[Saturday 2024-05-25 17:00]

யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் கடந்து பயணிக்கும் தீவுப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இன்றும் இடம்பெறமாட்டாது என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.



அடுத்த தேர்தலுக்குப் பின் அரசியலுக்கு முழுக்கு! - விஜயகலா அறிவிப்பு.
[Saturday 2024-05-25 17:00]

அடுத்த தேர்தலே தனது அரசியல் பயணத்தின் இறுதித் தேர்தல் என்றும், அதிலிருந்து தான் அரசியலில் இருந்து விலகி விடுவேன் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.



ஒஷாவா உணவக ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் தமிழ் மேலாளர் கைது!
[Saturday 2024-05-25 17:00]

கனடா -ஒஷாவாவில் உணவகம் ஒன்றில் பணிபுரிந்த இரண்டு ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், உணவகத்தின்மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என டுர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



பேசாலையில் வாள்வெட்டு! - குடும்பஸ்தர் படுகாயம்.
[Saturday 2024-05-25 15:00]

மன்னார் - பேசாலை முருகன் கோவிலடி 7ஆம் வட்டார பகுதியில் இடம் பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலத்த காயமடைந்து, யாழ்ப்பாணம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் கடந்த 22 ஆம் திகதி புதன்கிழமை இரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது.


Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா