Untitled Document
November 21, 2024 [GMT]
வளர்ப்பு நாய்க்கு கோயில் கட்டிய எஜமான்!
[Tuesday 2022-04-05 16:00]

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் முத்து(வயது 82). ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியரான இவர், அவரது தோட்டத்தில் தனது வளர்ப்பு நாய் ‘டாம்’ நினைவாக கோவில் ஒன்றை கட்டியுள்ளார். இது குறித்து முத்து கூறுகையில், தனது வளர்ப்பு நாய்க்கு ‘டாம்’ என்று பெயரிட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் வளர்த்து வந்ததாகவும், தனது குழந்தையை விட அதிகமாக அதை நேசித்ததாகவும் கூறுகிறார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2021 ஜனவரி மாதம் டாம் உயிரிழந்துள்ளது.


  

இதையடுத்து தனது வளர்ப்பு நாய்க்கு கோவில் கட்ட முத்து முடிவு செய்துள்ளார். இதற்காக தனது சேமிப்பு பணத்தில் இருந்து 80 ஆயிரம் ரூபாயை எடுத்து, ‘டாம்’ நினைவாக மார்பில் சிலை ஒன்றை செய்துள்ளார். அந்த சிலையை முத்து தனக்கு சொந்தமான தோட்டத்தில் நிறுவியுள்ளார்.

முத்துவின் மகன் மனோஜ் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் இதற்கு ஆதரவாக இருந்துள்ளனர். மேலும் வெள்ளிக்கிழமைகள் மற்றும் விசேஷ தினங்களில் தங்கள் வளர்ப்பு நாயின் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வளர்ப்பு நாயின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலை, அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com


பல நூற்றாண்டுகளாக தீபாவளி கொண்டாடாத கிராமம்: பின்னணியில் இருக்கும் கர்ப்பிணியின் சாபம்!
[Friday 2024-11-01 18:00]

சாபத்திற்கு பயந்து பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்றில் தீபாவளி பண்டிகை கொண்டாடாமல் உள்ளனர். இந்தியா முழுவதும் தீபாவளி திருநாளான நேற்று கொண்டாட்டங்கள் களைகட்டின. மக்கள் அனைவரும் புத்தாடை கட்டி, இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆனால், இமாச்சல பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பல நூற்றாண்டுகளாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவில்லை.


சபிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மரகதக்கல்!
[Saturday 2024-10-26 16:00]

உலகின் மிகப்பெரிய மரகதக்கல் என அழைக்கப்படும் ஒரு கல்லுக்காக இரண்டு நாடுகள் உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், அது சபிக்கப்பட்ட கல் என அழைக்கப்படுகிறது. ஒரு சிறிய ஃப்ரிட்ஜ் அளவில் காணப்படும் அந்த அபூர்வ மரகதக்கல் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கே காணலாம். உலகின் மிகப்பெரிய மரகதக்கல் என கொலம்பியா நாட்டிலுள்ள ஒரு கல் அழைக்கப்பட்டாலும், பிரேசில் நாட்டிலுள்ள Bahia என்னுமிடத்திலுள்ள சுரங்கம் ஒன்றில் வெட்டியெடுக்கப்பட்ட ஒரு சிறிய ஃப்ரிட்ஜ் அளவிலான மரகதக்கல்லும் உலகின் மிகப்பெரிய மரகதக்கல் என்றுதான் அழைக்கப்படுகிறது.


துபாய் பாலைவனத்தில் “உபெர் ஒட்டக சவாரி”!
[Thursday 2024-10-24 06:00]

துபாயின் பரந்த பாலைவனத்தில் சிக்கிக் கொண்ட பெண் சுற்றுலா குழு ஒன்று, ஆச்சரியம் ஏற்படுத்தும் உபெர் பயணத்தின் மூலம் தங்கள் சாகசத்தை மேலும் சுவாரஸ்யம் ஆக்கியுள்ளனர். துபாயில் உள்ள பாலைவனத்தில் பெண் சுற்றுலா பயணிகளின் வாகனம் பழுதடைந்து எதிர்பாராத சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர். அப்போது உதவி தேடும் கடினமான பணியை எதிர்கொண்ட அவர்களுக்கு ஆச்சரியமான தீர்வு ஒன்றை உபெர்(Uber) வழங்கியுள்ளது.


நூறு நாட்களில் 100 மரதன் போட்டிகளில் ஓடிய கனடியர்!
[Monday 2024-10-14 18:00]

கனடாவின் ஹிப் ஹாப் இசை கலைஞர் ஒருவர் 100 நாட்களில் 100 மரதன் ஓட்ட போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். குறித்த நபர் சுமார் 4200 கிலோ மீட்டர் தூரத்தை ஓடியுள்ளார். மக்கள் மத்தியில் ஆண்களின் உளச்சுகாதாரம் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார்.


24 வருடங்களாக எஞ்சின் ஆயிலை குடித்து உயிர்வாழும் அதிசய நபர்!
[Thursday 2024-10-03 06:00]

24 ஆண்டுகளாக பழைய வாகனத்தின் எஞ்சின் ஆயிலை குடித்து உயிர் வாழ்ந்து வரும் நபரின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்திய மாநிலமான கர்நாடகா, சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த குமார்(40). இவர், கடந்த 24 ஆண்டுகளாக பழைய வாகனத்தின் எஞ்சின் ஆயிலை குடித்து உயிர் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.


மனைவி குளிக்க 418 கோடியில் தனித்தீவு வாங்கிய கணவன்!
[Friday 2024-09-27 18:00]

நீச்சல் உடையில் குளிக்க ஆசைப்பட்ட மனைவிக்காக, அவரது கணவர் 418 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு தனித்தீவை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஜமால் என்பவரது மனைவி சவுதி அல்நாத், இங்கிலாந்தில் பிறந்தவர் . துபாயில் படித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டதை அடுத்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.


ஒரு வீடுகளில் கூட சமைக்காத வினோத கிராமம்!
[Thursday 2024-09-26 18:00]

இந்திய கிராமம் ஒன்றில் ஒரு வேளை கூட வீடுகளில் சமைத்து சாப்பிடாத நிலை உள்ளது. அந்த கிராமம் எங்குள்ளது என்பதை பார்க்கலாம். தற்போதைய காலத்தில் மூன்று வேளைகளிலும் உணவு டெலிவரி ஆப் மூலம் ஒர்டர் செய்து சாப்பிடும் நிலைமை ஒரு புறம் இருக்க, இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்றில் வீடுகளில் சமைக்காத நிலைமையும் மறுபுறம் உள்ளது.


கின்னஸில் இடம்பிடித்த உலகின் விலை உயர்ந்த உள்ளாடை!
[Saturday 2024-09-14 18:00]

உலகின் விலை உயர்ந்த உள்ளாடை என விக்டோரியாவின் சீக்ரெட் ஃபேண்டஸி ப்ரா கின்னஸில் இடம்பிடித்துள்ளது. உள்ளாடையின் மதிப்பு $15 மில்லியன் . இதில், 1,300 காரட் வைரம் மற்றும் மாணிக்கங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இதுவரை தயாரிக்கப்பட்ட மிக விலையுயர்ந்த உள்ளாடைகளுக்கான கின்னஸ் புத்தகத்தில் இந்த ப்ரா இடம்பிடித்தது.


கடவுளுக்கு தண்டனை கொடுக்கும் வினோத மாநிலம்!
[Tuesday 2024-09-10 18:00]

மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றாத கடவுள்களுக்கு இந்திய மாநிலம் ஒன்றில் தண்டனை வழங்கப்படுகிறது. பொதுவாகவே மனிதர்கள், தான் நினைத்தது ஏதாவது நடக்கவில்லை என்றாலோ, ஏதாவது ஒரு தேவை இருக்கிறது என்றாலோ, கஷ்ட காலம் ஏற்படும் போதெல்லாம் கடவுளிடம் தான் குறைகளை சொல்வார்கள். அதில் சில விடயங்கள் நடப்பதுண்டு, சில விடயங்கள் நடக்காமல் போகலாம். ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் வேண்டுதல்களை நிறைவேற்றாவிட்டால் கடவுளுக்கு தண்டனை வழங்கும் வினோதமான பழக்கங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது.


சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான் பொருள் கண்டுபிடிப்பு!
[Wednesday 2024-08-28 18:00]

பிரபஞ்சத்தில் சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமான ஒளிரும் பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு பிரகாசமுடைய இந்த குவாசருக்கு J0529-4351 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை எங்கும் கண்டிராத அளவுக்கு இது மிகவும் பிரகாசமான உள்ளதாகவும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் VLT எனப்படும் மிகப்பெரிய தொலை நோக்கி மூலம் இதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


பிறப்புறுப்பு உட்பட உடல் முழுவதும் டாட்டூ: கின்னஸ் சாதனை படைத்த பெண்!
[Saturday 2024-08-24 06:00]

அமெரிக்க பெண் ஒருவர் அதிக எண்ணிக்கையில் பச்சை (Tattoo) குத்தி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அவரது உடலில் 99.98 சதவீதம் அவரது பச்சை குத்தல்களால் நிரம்பியுள்ளது. கைகள் மற்றும் கால்கள், உச்சந்தலை, நாக்கு, ஈறுகள், கண் இமைகளின் வெள்ளை வெளிப்புற அடுக்கு மற்றும் பிறப்புறுப்புகள் உட்பட உடலின் எந்த பாகத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை.


பிரித்தானியாவில் 17 ஆண்களை தாக்கிய பேய் பிடித்த மணப்பெண் பொம்மை!
[Friday 2024-08-23 06:00]

உலகின் பயங்கரமான பொம்மை இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயரில் உள்ள ரோதர்ஹாமில் உள்ளது. பேய் பிடித்த இந்த பொம்மை இதுவரை 17 பேரை தாக்கியுள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கணவரால் ஏமாற்றப்பட்ட எலிசபெத் என்ற மணமகளின் ஆவி இந்த பொம்மை இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த காரணத்திற்காக, இது மணப்பெண் பொம்மை (Bridal Doll) என்றும் அழைக்கப்படுகிறது.


கத்தரிக்கோல் காணாமல் போனதால் 36 விமானங்கள் இரத்து!
[Tuesday 2024-08-20 18:00]

ஜப்பான் விமான நிலையத்தில் கத்தரிக்கோல் ஒன்று ்காணாமல் போனதால் 36 விமானங்கள் பயணத்தை இரத்து செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை (17) ஜப்பானில் கொக்கைடோவின் நியூ சிட்டோஸ் விமான நிலையத்தின் உள் நுழையும் வாயிலின் அருகே இருந்த கடையொன்றில் கத்தரிக்கோல் காணாமல் போனதால் 36 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதோடு, 201 விமான சேவைகள் தாமதமடைந்துள்ளன.


கிணறு ஏன் வட்ட வடிவில் இருக்கிறது? பின்னணியில் இருக்கும் ஆச்சரிய காரணம்!
[Sunday 2024-08-18 16:00]

கிணறுகள் வட்ட வடிவில் ஏன் இருக்கிறது என்பதையும், அதற்கு பின்னணியில் இருக்கும் காரணத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம். பண்டைய காலங்களில் இருந்து கிணறுகளில் தண்ணீர் சேமிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் இன்றும் கிணறுகள் இருந்து வருகிறது. நகரங்களிலும் சில இடங்களில் நாம் கிணறுகளை பார்க்க முடியும்.


"வெறித்தனமாக காதலிக்கிறேன்" - மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமியார்!
[Wednesday 2024-08-14 18:00]

கணவரை விட்டு பிரிந்து தனது மருமகளை மாமியார் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இந்திய மாநிலமான பீகார், கோபால் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தைச் சேர்ந்தவர் சுமன். இவருடைய சொந்த மருமகள் ஷோபா. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக மருமகள் மீது காதல் ஏற்பட்டுள்ளது.


Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா