Untitled Document
November 8, 2026 [GMT]
கனடாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய லாட்டரி பரிசு!
[Sunday 2026-11-08 16:00]

லாட்டரி சீட்டுக்காகத் தனியாக அமைக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவின் மூலம் இணைந்த நான்கு நண்பர்கள், தற்போது கனடாவின் வரலாற்றிலேயே மிக அதிகப்படியான லொட்டோ மெக்ஸ் ஜக்பாட் பரிசான 90 மில்லியன் டொலர் தொகையை வென்று தங்களது கனவை நனவாக்கியுள்ளனர். ஐடெல்சன் எல்சிகோ, லவ்லின் மால்வர், ஹேஸலின் ஓங் மற்றும் வெல்னா ராமிரெஸ்ஆகிய நால்வரும் அக்டோபர் 20-ஆம் திகதி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த குலுக்கலில் இமாலயப் பரிசைத் தட்டிச் சென்றுள்ளனர்.


  

கல்கரியைச் சேர்ந்த இந்த 4 நண்பர்களும் பரிசைச் சமமாகப் பிரித்துக் கொள்வதன் மூலம், ஒவ்வொருவருக்கும் தலா 22,500,000 டொலர் கிடைக்கவுள்ளது. இந்த வெற்றியாளர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே இந்த லாட்டரி சீட்டை வாங்கியுள்ளனர்.

மேலும், இவர்கள் தங்களது வாட்ஸ்அப் குழுவிற்கு “மேனிஃபெஸ்டிங் மில்லியன்ஸ்” என்று பெயரிட்டுத் தொடர்ந்து உரையாடி வந்துள்ளனர்.

ஒரு நாள் அதிகாலையில் தனது மின்னஞ்சலை சரிபார்த்தபோதுதான் இந்த வெற்றி குறித்துத் தெரியவந்ததாக எல்சிகோ தெரிவித்துள்ளார்.

உடனடியாக அவர் குழுவில் இருந்த மற்ற நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து லவ்லின் மால்வர் கூறுகையில், "அதிகாலை நேரத்தில் எங்கள் குரூப் சாட்டில் அடுத்தடுத்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

'இவ்வளவு காலையிலேயே என்ன செய்தி?' என்று யோசித்தேன். ஆனால் நண்பர்களோ, 'உடனே போனை எடு, இது ஒரு எமர்ஜென்சி!' என்று பதற்றத்துடன் கூறினார்கள்," எனப் பகிர்ந்து கொண்டார்.

மற்றொரு வெற்றியாளரான ஹேஸலின் ஓங் கூறுகையில், "என் கணவர் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது அவருக்கு அழைப்பு வந்தது.

அவர் ஓடிவந்து என்னை எழுப்பி, வீடியோ காலில் இணையுமாறு கூறினார். நாங்கள் முதல் முறையிலேயே இவ்வளவு பெரிய தொகையை வென்றதை என்னால் நம்பவே முடியவில்லை," என்றார்.

ஆரம்பத்தில் இதை நம்ப கடினமாக இருந்தாலும், பின்னர் உண்மையைப் புரிந்து கொண்டு அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். வெற்றி பெற்ற இந்த நால்வரும் தங்களது வீடுகளுக்கான கடன் அடமானங்களை அடைக்கவும், தொண்டு நிறுவனங்களுக்கு உதவவும், வாழ்க்கையை இன்னும் மகிழ்ச்சியாக வாழவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com


2 மாத குழந்தையின் வயிற்றில் இருந்த முழு வளர்ச்சியடைந்த கரு!
[Monday 2026-10-26 16:00]

2 மாத குழந்தையின் வயிற்றில், முழு வளர்ச்சியடைந்த கரு இருந்த அரிதான நிகழ்வு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், சிந்துனூரை சேர்ந்த 2 மாத ஆண் குழந்தையின் வயிறு வழக்கத்தை விட அதிகமாக வீங்கியிருந்தது. மேலும், சாப்பிட்டதை ஜீரணிக்க முடியாததால், குழந்தை தொடர்ந்து வாந்தி எடுத்ததால் கவலையடைந்த பெற்றோர், சிகிச்சைக்காக குழந்தையை சிந்தானூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


நீல நிறத்தில் ஒளிரும் கடல்: மும்பை அருகே ஒரு அரிய காட்சி!
[Friday 2026-10-23 17:00]

மும்பை அருகிலுள்ள கடல் ஒன்று இரவு நேரத்தில் நீல நிறத்தில் ஒளிர்கிறது. மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள மும்பையின் அருகே அமைந்துள்ள கடல் ஒன்றின் நீர், இரவு நேரத்தில் நீல நிறத்தில் ஒளிரும் காட்சிகள் வைரலாகிவருகின்றன. மும்பை அருகிலுள்ள அர்னாலா என்னுமிடத்தில் அமைந்துள்ள கடல் நீர், இரவு நேரத்தில் நீல நிற மின்மினிப்பூச்சிகள் நீந்துவதைபோல் ஒளிர்வதைக் கண்டு அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள்.


உலகிலே முதல்முறை: இந்திய சிறுவனுக்கு கண்ணுக்கு மேல் வளர்ந்த பல்!
[Tuesday 2026-10-20 17:00]

இந்தியாவில் 16 வயது சிறுவன் ஒருவனுக்கு, வரலாற்றில் முதல்முறையாக கண்ணுக்கு மேல் வளர்ந்த பல் வளர்ந்துள்ளது. இந்தியாவில் 16 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது இடது கண் இமைக்கும் புருவத்திற்கும் இடையில் உள்ள கண் குழியின் மேற்பகுதியில் கடந்த சில மாதங்களாக வலியற்ற வீக்கம் இருந்து வந்தது. முதலில் ஒரு லேசான கட்டியாக இருந்தது, விரைவில் இரண்டு கடினமான, வெள்ளை நிறப் புள்ளிகள் தோலைத் துளைத்துக்கொண்டு வெளிவரத் தொடங்கியது.


60 ஆண்டுகளாக வெட்டப்படாத பாட்டியின் 6 மீட்டர் நீள முடி!
[Saturday 2026-10-17 17:00]

வியட்நாமைச் சேர்ந்த 83 வயது பாட்டி ஒருவர் நீண்டு ஆண்டுகளாக முடியை வெட்டாமல் 6 மீற்றர் நீளத்திற்கு வளர்த்துள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமைச் சேர்ந்த நெஹூயென் தி தின் என்ற பெண், தனது 19 வயதில் ஏற்பட்ட தலைவலிக்கு மருத்துவ சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.


90 நிமிடங்கள் தூங்கி ரூ.12 லட்சம் சம்பாதித்த நபர்!
[Friday 2026-10-09 16:00]

ஜப்பானில் நடைபெற்ற 90 நிமிட தூக்க போட்டியில் விரைவாகவும், ஆழ்ந்தும் தூங்கிய சுய்மி ரூ.12 லட்சம் பரிசு வென்றுள்ளார். ஜப்பான், பொதுவாக நீண்ட வேலை நேரம், நீண்ட பயண நேரம் மற்றும் பரபரப்பான இரவு நேரப் பொருளாதாரம் ஆகியவை கொண்ட நாடாக உள்ளதால் அந்த நாட்டு மக்கள் குறைந்த நேரமே தூங்குவதாக கூறப்படுகிறது.


3 மாத குழந்தையாக இருந்ததிலிருந்தே நினைவுகளை மீட்டெடுக்கும் சிறுவன்!
[Saturday 2026-09-26 17:00]

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கடந்த வாரம் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி பார்ப்பது கூட சிரமமாக இருக்கும். ஆனால் 16 வயதான சிறுவன் ஒருவரால், தான் 3 மாத குழந்தையாக இருந்த காலத்திலிருந்து தனக்கு நடந்த நிகழ்வுகளை நினைவு கூற முடிவதாக தெரிவித்துள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக ஆய்வாளர்கள் அந்த சிறுவனுக்கு KCL என பெயரிட்டுள்ளனர்.


தெஹ்ரான் வானில் இரவு நேரத்தில் தெரிந்த மர்ம பொருள்!
[Tuesday 2026-09-22 16:00]

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட குறித்த மர்மப் பொருளை, அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் தங்களது கைத்தொலைபேசிகளில் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர்.


1952-ல் அணிவகுத்த பறக்கும் தட்டுகள்: வீடியோ ஆவணங்களை வெளியிட்ட அமெரிக்கா!
[Saturday 2026-09-19 07:00]

பென்டகனின் நிர்வாக உத்தரவின் கீழ் 1952ம் ஆம் ஆண்டை சேர்ந்த UFO ஆவணங்களின் ஆறாவது தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அரசிடம் உள்ள UFO தொடர்பான கோப்புகளை வெளியிடுமாறு நிர்வாக உத்தரவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த உத்தரவின் கீழ் அமெரிக்க ராணுவத்தின் கட்டளை மையமான பென்டகன், UFO தொடர்பான வரலாற்று ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு வருகிறது. இதுவரை 6 தொகுப்புகளாக நூற்றுக்கும் மேற்பட்ட கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 6 தொகுப்பில் 1952ம் ஆண்டை சேர்ந்த பழமையான காட்சிகள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


முதுகு சொறிவதற்கே 300 யுவான்: சீனாவில் வைரலாகும் வித்தியாசமான தொழில்!
[Friday 2026-09-04 16:00]

சீனாவில் முதுகு சொறியும் சேவையை வணிகமாக மாற்றிய தொழில்முனைவோர் ஒருவர், அதனை வெற்றிகரமாக நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் ஷென்சென் நகரில் 32 வயதான ஜாங் சியாவோகியா (Zhang Xiaoqiao) என்பவர் ‘சுமா’ (Suma) என்ற பெயரில் இந்த சேவை நிலையங்களை நடத்தி வருகிறார். இங்கு ஒரு மணிநேர அமர்வுக்கு சுமார் 300 யுவான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


ஒரு நாடே கடல் நீரில் மூழ்கும் அபாயம்!
[Sunday 2026-08-16 05:00]

கடல் உயர்ந்துகொண்டே சென்றால், ஒரு நாடே வரைபடத்திலிருந்து மறைந்துவிடுமா?தெற்குப் பசிபிக் பெருங்கடலின் மத்தியில் வெறும் 26 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடன் அமைந்துள்ள துவாலு, அந்த அச்சுறுத்தலை நிஜமாக எதிர்கொண்டு வருகிறது. உலகின் கடல் மட்ட உயர்வால் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கும் நாடுகளில் ஒன்றாகத் திகழும் இந்தச் சிறிய தீவு நாடு, எதிர்காலத்தில் தனது நிலத்தையும் வாழ்விடத்தையும் கடலிடம் இழக்கும் அபாயத்தில் உள்ளது. தெற்குப் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு வெறும் 26 சதுர கிலோமீட்டர்.


வெளியே வந்தால் உடல் எரியும்: மீன்களை போல் குளத்தில் வாழும் சிறுவன்!
[Tuesday 2026-08-11 16:00]

இளைஞர் ஒருவர் வெளியே வந்தால் உடல் எரியும் என்பதால் ஆண்டு கணக்கில் குளத்தின் உள்ளே வசித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெல்டங்கா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த 16 வயது இளைஞர் இக்பால் ஷேக். இந்த இளைஞர் கிட்டதட்ட சில ஆண்டுகளாக தனது பெரும்பாலான நேரங்களில் அங்குள்ள குளத்திலே வசித்து வருகிறார். குளத்திலிருந்து வெளியே வந்தால் அவரது உடலில் கடும் எரிச்சல் ஏற்படுவதாகவும், குளத்தின் உள்ளே சென்றால் எரிச்சல் தணிவதாகவும் தெரிவித்துள்ளார்.


ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட மர்ம கோவில்: 6 மணிக்கு மேல் இங்கு அனுமதியில்லை!
[Monday 2026-08-10 16:00]

இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு சிவாலயம் பெய்களால் கட்டப்பட்டு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதை பற்றி இப்பொழுது நாம் விரிவாக பார்க்கலாம். நம்முடைய இந்தியா கோவில்கள் நிறைந்த ஆன்மிக பூமியாக பார்க்கப்படுகிறது. அதாவது குக் கிராமங்கள் துவங்கி பெரிய பெரிய நகரங்கள் வரை சிறப்புமிக்க பல்வேறு ஆலயங்களும் அதற்கு பின்னால் மிகப்பெரிய அளவில் வரலாறுகளும் உள்ளது. அந்த வகையில், பல அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்டுள்ளது தான் கக்கன்மாத் சிவன் கோவில்.இந்த கோவில் பேய்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.


40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட கோவில்!
[Sunday 2026-08-09 17:00]

இந்தியாவில் உள்ள ஒரு கோவிலை தண்ணீருக்கு பதிலாக 40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள பண்டசார் சமணக் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சுமார் 550 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில், சமண மதத்தின் ஐந்தாவது தீர்த்தங்கரரான சுமதிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவில் தண்ணீருக்குப் பதிலாக நெய்யைப் பயன்படுத்தி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.


மனிதர்களால் முடியவில்லை: Cryptography துறையில் AI வரலாற்றுச் சாதனை!
[Wednesday 2026-08-05 16:00]

உலகின் தலைசிறந்த கிரிப்டோகிராஃபி வல்லுநர்கள் இரண்டு ஆண்டுகள் தீவிரமாக ஆராய்ந்தும் கண்டுபிடிக்கத் தவறிய கணிதவியல் பிழையை (Mathematical Flaw), இந்த AI மாடல் வெறும் 60 மணி நேரத் தேடலில் மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் முன்னணி நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic) உருவாக்கியுள்ள தனது அதிநவீன ‘க்ளாட் மைத்தோஸ்’ (Claude Mythos) என்ற மாடல், தகவல் பாதுகாப்புத் துறையில் (Cryptography) பெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.


மனித மலத்தில் இருந்து மருந்து!
[Monday 2026-07-27 16:00]

ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத 'சுப்பர் பக்டீரியா' தொற்றுகளுக்கு எதிராக புதிய சிகிச்சை முறையாக "மல நுண்ணுயிர் உறையுறைகள்" (Poop Pills) பயன்படுத்தும் ஆய்வு இங்கிலாந்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சிகிச்சைக்காக, ஆரோக்கியமான நபர்களின் மலத்தில் உள்ள பயனுள்ள குடல் நுண்ணுயிரிகள் (Gut Microbiome) சுத்திகரிக்கப்பட்டு, உறையவைக்கப்பட்டு


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா