Untitled Document
October 24, 2026 [GMT]
பூமியை நெருங்கிக்கொண்டிருக்கும் பேராபத்து!
[Saturday 2020-09-12 08:00]

நாசா மையமானது அவ்வபோது சூரிய மண்டலத்தில் நடக்கும் பல ஆச்சரிய விஷயங்களை வெளிக்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய விஷயத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அப்படி ஒரு சிறுகோள் தற்போது பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோள் அளவில் பெரியது. கிட்டத்தட்ட இரண்டு கால்பந்தாட்ட மைதானங்களை சேர்த்தது போன்ற அளவுடையது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


  

இந்த சிறுகோள் பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிமீ வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், அளவில் பெரியது என்றாலும் இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த பாதிப்பில்லை என்றும் இது செப்டம்பர் 14ம் தேதியில் பூமியைக் கடந்து செல்லும் என தெரிவிக்கப்படுள்ளது.

இது குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில்,

சிறுகோள் அளவில் பெரியது தான். ஆனால் இது பூமியின் மீது மோத வாய்ப்பில்லை. அதாவது விண்கல்லின் அளவு மற்றும் பூமிக்கு அருகாமையில் செல்லும் தூரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதன் அபாயத்தை நாசா கணக்கிடுகிறது. அதன்படி விண்கல் 2020 கியூஎல் 2 நாசாவால் அபாயகரமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், இது பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் ஏதும் இல்லை என்றே தெரிகிறது.

இதுபோன்ற சிறிய கோள்கள் ஒவ்வொரு மாதமும் பூமியைக் கடந்து சில நேரங்களில் மோதுகின்றன, ஆனால் அவை மோதியதும் அழிந்துவிடும் என்று நாசா கூறியுள்ளது,

சி.என்.இ.ஓ.எஸ் படி, 0.05 வானியல் அலகுகளுக்குள் (4.6 மில்லியன் மைல்கள்) வந்து 140 மீட்டர் (460 அடி) க்கும் அதிகமான விட்டம் கொண்ட விண்வெளி பொருள்கள் அபாயகரமானவை என்று பெயரிடப்பட்டுள்ளன. இதன் மூலம், விண்கல் 2020 கியூஎல் 2அபாயம் என கருதப்படுகிறது.

இருப்பினும், அந்த விண்கல் பயணித்து வரும் பாதையை கருத்தில் கொண்டு, இது பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் ஏதும் இல்லை என்றே தெரிகிறது.

பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்வதாகவும், அடுத்த 100 ஆண்டுகளில் விண்கல் மோதும் அச்சுறுத்தல் இல்லை என்றும் சமீபத்தில் நாசா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா