Untitled Document
October 24, 2026 [GMT]
வெளிநாட்டில் இருந்தபடி உள்ளூரில் வீட்டுக்குள் புகுந்த திருடனை போலீசாரிடம் சிக்கவைத்த தமிழர்!
[Wednesday 2020-10-21 17:00]

சென்னையில் பூட்டியிருந்த வீட்டுக்குள் திருடன் புகுந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து சிசிடிவி கமெரா மூலம் அதை பார்த்த உரிமையாளர் திருடனை பொலிசில் சிக்க வைத்துள்ளார். போரூரில் தனியாக வசித்து வருபவர் சண்முக சுந்தரவள்ளி (67). இவரது மகன் அருள்முருகன், அயர்லாந்தில் குடும்பத்துடன் வசித்து வசிக்கிறார். இந்நிலையில், மூதாட்டி நேற்று அண்ணா நகரில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.


  

அருள்முருகன், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு தாய் என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்பதற்காக வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை தனது செல்போனில் பார்த்த போது வீட்டிற்குள் வேறு ஆள் நடமாட்டம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் அளிக்க, அங்கு விரைந்த காவல்துறையினர் லேப்டாப்புடன் சுவர் ஏறி வெளியே குதித்த செங்கல்பட்டைச் சேர்ந்த சைக்கோ முரளி என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், சில தினங்களுக்கு முன், கூடுவாஞ்சேரியில் வாசலில் கோலம் போடாத வீடுகளைத் தேடிப்பிடித்து‌, உள்ளே நுழைந்து கொள்ளையடித்து, காவல்துறையிடம் பிடிபட்டது தெரியவந்தது. மேலும், இதுவரை கொள்ளையடித்த 4 இடங்களிலும் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டதாகவும் கொள்ளை அடித்து நான் ஒன்றும் அனுபவிக்கவில்லை எனவும் அதற்குள்ளேயே பொலிசில் சிக்கிக் கொள்கிறேன் எனவும் சைக்கோ முரளி பொலிசில் புலம்பியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா