Untitled Document
October 26, 2026 [GMT]
கோமா நிலையில் இருந்த கனேடிய பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
[Thursday 2020-12-17 17:00]

கனடாவில் கர்ப்பமாக இருந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட, அவரது நிலைமை மோசமடைந்ததால் மருத்துவமனையில் கோமா நிலையில் வைக்கப்பட்டார். பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Gillian McIntosh (37) என்ற அந்த பெண் நவம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  

அவரது கணவரான Dave McIntosh, தன் மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, தன் மூத்த மகளை கவனித்துக்கொள்வதற்காக வீடு திரும்பிவிட்டார்.

அதற்குள் Gillianஇன் நிலைமை மோசமடைந்ததால் அவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.

கோமாவிலிருந்ததால், Gillianஆல் தன் குழந்தையைக்கூட பார்க்கமுடியவில்லை. இந்நிலையில், கடந்த வார இறுதியில் Gillianக்கு மயக்க மருந்துகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து நினைவு திரும்பியுள்ளது.

கண் விழித்த Gillian, முதன்முறையாக தனது மகனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். அவனுக்கு Travis Len என்று பெயரிடப்பட்டுள்ளது.

Gillian கோமா நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், அவருக்கு மருத்துவர்கள் கண்காணிப்பு தேவைப்படுவதால் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கவேண்டியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா