Untitled Document
November 22, 2024 [GMT]
அப்படி என்ன இருக்கிறது அந்த உயிலில்? பரபரப்பு பின்னணி! Top News
[Sunday 2021-09-19 10:00]

உயில் பிரச்சனை என்பது சாதாரண அடித்தட்டு குடும்பத்திலிருந்து அரச குடும்பம் வரை பெரும் பிரச்சனையாகவே உள்ளது. உலகில் உள்ள அரச குடும்பங்களிலேயே மிகவும் செல்வாக்குமிக்கதும், அதிகாரம் பொருந்தியதாகவும் உள்ளது தான் இங்கிலாந்து அரச குடும்பம். இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு உலக அளவில் பெரும் மதிப்பும், செல்வாக்கும் உள்ளது. இங்கிலாந்து மக்களுக்கு அரச குடும்பத்தின் மீது உள்ள அன்பும் பற்றும் என்பது அலாதியானது.


  

இதனால் அரச குடும்பத்தில் நடக்கும் ஒரு சிறு அசைவும் தலைப்பு செய்தியாகிவிடுவதோடு, இங்கிலாந்து மக்களாலும் பெரிதும் விவாதிக்கப்படுவதும் உண்டு. இந்நிலையில் 95 வயதான ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், கடந்த ஏப்ரல் மாதம் 99 வயதில் மரணம் அடைந்தார்.

இந்த சூழ்நிலையில் இளவரசர் பிலிப் எழுதியுள்ள உயில் தொடர்பாக லண்டன் உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் பிலிப் எழுதி வைத்துள்ள உயிலில் உள்ள விவரங்களை வெளியிடாமல், அதனை 90 ஆண்டுகளுக்குச் சீல் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மறைந்த இளவரசர் பிலிப், அவரது மனைவி இரண்டாம் எலிசபெத்தின் கவுரவத்திற்காக தன், உயில் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவில், ''இறையாண்மை மற்றும் இளவரசரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்களின் கவுரவத்தைப் பாதுகாக்க, தனி நபர்களின் தனிப்பட்ட ரகசியங்களுக்கான பாதுகாப்பு அவசியமாக உள்ளது. எனவே இளவரசர் பிலிப்பின் உயிலை 90 ஆண்டுகளுக்குச் சீல் வைக்க உத்தரவிடப்படுகிறது. உயிலின் நகலைப் பதிவுசெய்யவோ, கோர்ட்டில் தாக்கல் செய்யவோ கூடாது'' என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே மரணமடைந்த இளவரசர் பிலிப்பின் சொத்து மதிப்பு சுமார் 30 மில்லியன் பவுண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் பெரும்பாலான சொத்துக்கள் அவரது மனைவி மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்குச் சொந்தமானது என்பது தான் ஆச்சரியமான ஒன்றாகும்.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா