Untitled Document
November 22, 2024 [GMT]
ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த இலங்கை பெண்!
[Thursday 2021-10-21 17:00]

முதல் முறையாக இலங்கை பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பெற்றெடுத்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இன்று காலை குறித்த பெண் இந்த குழந்தைகளை பெற்றுள்ளார்.


  

பேராசிரியர் ரிடான் டயஸின் தலைமையில் இடம்பெற்ற சிஸேரியன் சத்திர சிகிச்சை ஊடாக இந்த குழந்தைகள் பிறந்துள்ளன.

இன்று அதிகாலை 12.16 - 12.18 காலப்பகுதியில் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பெண் பிள்ளைகளும் மூன்று ஆண் பிள்ளைகளுமே பிறந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

31 வயதுடைய தாயும் 6 குழந்தைகளும் சிறந்த உடல் நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவர்களில் இரண்டாவது பிறந்த குழந்தை மாத்திரம் தற்போது வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா