Untitled Document
November 21, 2024 [GMT]
இறந்து 7 மணி நேரத்திற்கு பிறகு அசைந்த உடல்: அதிர்ச்சியில் உறைந்துபோன உறவினர்கள்!
[Sunday 2021-11-21 17:00]

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீகேஷ் குமார் (40). எலக்ட்ரீஷியனாக பணிப்புரிந்து வந்த இவர், கடந்த வியாழக்கிழமை எதிரே வேகமாக வந்த மோட்டார் பைக் மோதி படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஸ்ரீகேஷ் குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர்.


  

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீகேஷின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தினர்கள் மருத்துவமனைக்கு வந்து அடையாளம் காட்டும் வரை வரை ஸ்ரீகேஷின் உடல் பிணவறையில் உள்ள குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டது. பின்னர், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சுமார் ஏழு மணி நேரத்திற்கு பிறகு, மருத்துவமனைக்கு வந்த ஸ்ரீகேஷின் குடும்பத்தினர், உடலை அடையாளம் காட்டிய பின் பிரேதப் பரிசோதனைக்கு சம்மதித்து ஆவணத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஆவணத்தை போலீசார் சமர்ப்பிக்க முற்பட்டபோது, ஸ்ரீகேஷின் உடலில் அசைவு தெரிவதை அவரது உறவினர் ஒருவர் கவனித்து மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஸ்ரீகேஷின் உடலை பரிசோதனை செய்தபோது, அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஸ்ரீகேஷின் உறவினர்கள் கூறுகையில், "அவர் இன்னும் சுயநினைவுக்கு வரவில்லை. அவரை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து கிட்டத்தட்ட கொன்றுவிட்டனர். அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது புகார் அளிக்கப்படும்" என்று அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மொராதாபாத் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஷிவ் சிங் கூறியதாவது, "படுகாயங்களுடன் வந்த ஸ்ரீகேஷை அவசரப் பிரிவு மருத்துவர்கள் அதிகாலை 3 மணியளவில் பரிசோதித்தனர். அப்போது அவருக்கு இதயத் துடிப்பு இல்லை. அவரை பலமுறை பரிசோதித்த பிறகே, இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஆனால், காலையில் ஸ்ரீகேஷ் உயிருடன் இருப்பது எங்களுக்கே அதிர்ச்சியாக உள்ளது. இது அரிதிலும் அரிதான நிகழ்வு. இதை அலட்சியம் என்று சொல்ல முடியாது. இதுகுறித்து விசாரிக்கிறோம். தற்போது அவரது உயிரைக் காப்பாற்றுவதே எங்களுக்கு முதல் வேலை". இவ்வாறு அவர் கூறினார்.

  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா