Untitled Document
November 24, 2024 [GMT]
ஒரு நாளில் 70 முறை வாந்தி எடுக்கும் விசித்திரமான பெண்!
[Tuesday 2021-11-23 16:00]

உலகில் அன்றாடம் ஏதாவது ஒரு விசித்திரமான சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அதிலும், விசித்திரமாக நோயால் பாதிக்கப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையுமே ஏற்படுத்துகிறது. அந்த வகையில், இங்கிலாந்தின் போல்டனில் வசிக்கும் லீன் வில்லியன்(39) என்ற பெண் ஒருவர் காஸ்ட்ரோபரேசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நோயினால், அப்பெண்ணின் உடம்பில் செரிமானம் ஆன உணவு வாந்தி மூலம் வெளியேறுகிறது.


  

இதனால்,அவர் ஒரு நாளில் 70 முறை வாந்தி எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். சிறுவயதிலிருந்தே தனக்கு உடல்நிலை சரியில்லை என்று லீன் கூறினார். குழந்தைகளைப் பெற்ற பிறகும், இந்த நோயைக் கண்டறிய முடியவில்லை.

ஆனால் எனக்கு காஸ்ட்ரோபரேசிஸ் இருப்பது கண்டறியப்படுவதற்கு முன்பு, நான் மிகவும் வருத்தமாகவும் நோய்வாய்ப்பட்டதாகவும் இருந்தேன். மேலும், நான் எதைச் சாப்பிட்டாலும் அல்லது குடித்தாலும், வாந்தி மூலம் வெளியே வந்துவிடும் என சோகத்துடன் தெரிவித்து இருக்கிறார்.

இந்த அரிய நோய் பிரச்சினையால் அவர் வேலையை விட்டு வெளியேற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்.

இதுமட்டுமின்றி, காஸ்ட்ரோபரேசிஸ் நோய் என்பது வயிற்றை காலியாக்குவதைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் மற்றும் தசைகளின் பிரச்சனையின் விளைவாகும். இவை தொடர்ச்சியான வாந்தி, வயிறு வீக்கம், எடை இழப்பு மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா