Untitled Document
November 21, 2024 [GMT]
சால்மன் விந்தணுக்களிலிருந்து காஃபி கப் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை!
[Thursday 2021-12-23 16:00]

சால்மன் எனப்படும் ஒருவகை மீனின் விந்தணுவிலிருந்து விஞ்ஞானிகளால் காஃபி கப் தயாரிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது நிலத்தின் தன்மையை வீணடிக்கிறது. அதனால் பயோபிளாஸ்டிக்குகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இவற்றிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் சால்மன் மீனின் விந்தணுக்களிலிருந்து காஃபி கப்பை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர்.


  

கிழக்கு சீனாவில் உள்ள டியான்ஜின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு, சால்மன் விந்தணுக்களில் இருந்து DNAவைக் கொண்டு சில ரசாயனங்களை கலந்து பயோபிளாஸ்டிக் கப்களை உருவாக்கியுள்ளனர். இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.

சால்மன் விந்தணுக்களிலிருந்து DNA இழைகள் தண்ணீரில் கரைக்கப்பட்டு, அயனோமர்களுடன் கலக்கப்பட்டு, பசை போன்று உருவாகி பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கக்கூடிய ஒரு ஜெல்லை உருவாக்குகிறது. இந்த செயல்முறையை விஞ்ஞானிகள் "அக்வா-வெல்டிங்" என்று அழைக்கின்றனர். இந்த ஜெல்லானது உலர்த்தப்பட்டு கப் தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் செய்யப்படுகிறது.

இந்த செயல்முறை பாலிஸ்டிரீன் பிளாஸ்டிக்குகளை உற்பத்தி செய்வதை விட 97 சதவீதம் குறைவான கார்பன் உமிழ்வை உருவாக்குகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக்குகளை காட்டிலும் இவை சுற்றுசூழலுக்கு ஏற்றதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பயோபிளாஸ்டிக்குகள் சோள மாவு, மரத்தூள் மற்றும் உணவுக் கழிவுகள் போன்ற கரிமப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இவை பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக இருந்தாலும் இவை சுற்றுசூழலுக்கு தகுந்ததாக உள்ளதா? என்பது சந்தேகம் தான்.

ஆனால் இதுபோன்ற விந்தணுக்களிலின் DNAவிலிருந்து உருவாக்கப்படும் கப்புகள் பாதிப்பை ஏற்படுத்தாது, மேலும் இவற்றை விரைவில் சந்தைப்படுத்த உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா