Untitled Document
November 21, 2024 [GMT]
ரூ 17 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட அபூர்வ பிஸ்கட்!
[Sunday 2021-12-26 08:00]

உலகின் சொகுசு கப்பலில் ஒன்றான டைட்டானிக் கப்பல் 1912-ல் ஏப்ரல் மாதம் அதிகாலையில் பனிப்பாறையின்மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தை சித்தரிக்கும் படங்களும் பல வெளி வந்துவிட்டன. கப்பலின் காதல் கதையும் காவியமாகி விட்டது. விபத்து நடந்து 108 வருடங்கள் கடந்துவிட்டது. டைட்டானிக் கப்பலில் சுமார் 2500 நபர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் சுமார் 1500 இறந்துவிட்டனர். 700 பேர் உயிர் பிழைத்தனர்.


  

இறந்த 1500 பேரில் 340 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நீரில் மூழ்காது என பலராலும் நம்பப்பட்ட டைட்டானிக் கப்பல் கடலுக்கு இரையானது. கப்பலுக்கு தேடுதல் முயச்சிகள் பலவும் தோல்வியடைந்தன. 1985-ல் சிதைந்த நிலையில் டைட்டானிக்கை அமெரிக்கா கண்டடைகிறது. கப்பல் இரும்பால் ஆனதால் பல பொருட்கள் சிதைவடைந்திருக்கலாம் , ஆக அதை மேல் எடுக்கும் நோக்கம் அமெரிக்க அரசால் அப்போது கைவிடப்படுகிறது.

பின்பு 2000-ம் ஆண்டில் மீண்டும் கப்பல் மூழ்கிய இடத்தில் தேடுதல் வேட்டை தொடங்கியது. இதில் சுமார் 800 வகையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. வைர பிரேஸ்லட் , ஆட்டு தோலால் ஆன கோட் , வயலின் , கப்பலின் வரைபடம் குறிப்பிட தக்கது. அத்தோடு பையில் அடைக்கப்பட்ட பிஸ்கட் துண்டும் கிடைத்துள்ளது. விபத்திலிருந்து தப்பிய பயணி ஜேம்ஸ் ஃப்ன்விக் (James Fenwick) என்பர் இந்த பிஸ்கட்டை வைத்திருந்தாராம். அவர் இந்த பிஸ்கட்டை ஓர் காகித உறையில் அடைத்து `` Pilot biscuit from Titanic lifeboat April 1912" என குறிப்பிட்டு இருக்கிறார். அரசு 2015- ம் ஆண்டு அனைத்து பொருட்களையும் ஏலத்தில் விட்டிருக்கிறது.

அதில் வைர பிரேஸ்லட் - 146 கோடிக்கும் , கப்பலின் வரைபடம் - 2.15 கோடிக்கும் ஆட்டு தோலால் ஆன கோட் - 1.50 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டன. அதில் முக்கியமாக , Pilot பிஸ்கட் 17 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த பிஸ்கட் உலகில் மிக மதிப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. பிஸ்கட்டின் ஏல மதிப்பை 8000 முதல் 10000 பவுண்டுகளாக அரசு நிர்ணயித்தது. பின் அவை 15,000 பவுண்டுக்கு ஏலம் எடுக்கப்பட்டது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 17 லட்சம். அத்தோடு ஜேம்ஸின் புகைப்படமும் கிடைத்துள்ளது. ஜேம்ஸ் மற்றும் அவரது மனைவி மேபில் மூன்று மாத பயணமாக ஐரோப்பாவுக்கு செல்ல திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. டைட்டானிக் காலத்தை தாண்டியும் நினைவுகளால் நிலைத்து நிற்கிறது.

  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா