Untitled Document
November 21, 2024 [GMT]
ஆயிரம் கோடிக்கும் மேல் ஏலத்தில் விற்கப்பட்ட கார்! Top News
[Saturday 2022-05-21 16:00]

உலக வரலாற்றிலேயே பழைய கார் ஒன்று ஆயிரம் கோடிக்கும் மேல் ஏலத்திற்க்கு சென்று விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன தான் இன்றைய நவீன காலக்கடத்தில் பல பொருட்கள் வந்தாலுமே பழைய பொருட்களுக்கு எப்பவுமே மவுசு இருக்கதான் செய்கிறது. அதனால் தான் பழைய ஓவியங்கள், பொருட்கள், உபகரணங்கள் என பலவும் ஏலத்தில் பலரால் அதிகமான விலைக்கு வாங்கப்படுகிறது.


  

1100 கோடிக்கு விற்பனை

அதிலும், பழைய பொருட்களை சேகரிப்பது பலரும் விரும்புகின்றனர். அந்த வகையில், பழைய கார் ஒன்று ரூ.1100 கோடிக்கு ஏலத்தில் பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவர் வாங்கியுள்ள தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பல வகையான பழமையான கார் இருந்தாலும் கனடாவை சேர்ந்த மெர்சிடிஸ் நிறுவனம் சமீபத்தில் தனது 1955ல் தயாரிக்கப்பட்ட விண்டேஜ் மாடல் காரை ஏலத்தில் விட்டுள்ளது.

காரின் சிறப்பு அம்சம்

இந்த காரின் சிறப்பு அம்சமே 300 எஸ்எல்ஆர் மாடல் காரான இது இரண்டு முறை உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது. ஜூவான் மானு வல் பான்ஜியோ என்பவர் இந்தக் காரை ஓட்டி பட்டம் வென்றுள்ளார்.

மிகவும் சக்தி வாய்ந்த 3 லிட்டர் இன்ஜினைக் கொண்டது. அந்த காலகட்டத்தில் மணிக்கு 289.68 கி.மீ. வேகத்தில் விரைந்த இந்தக் கார் தான் அதி விரைவு காராக இருந்தது.

இதனை பிரிட்டனை சேர்ந்த கார் ஆர்வலர் சைமன் கித்ஸ்டான் என்பவர் இந்திய மதிப்பில் ரூ.1100 கோடிக்கு வாங்கியுள்ளார்.

காரை எப்பொழுதும் பயன்படுத்த முடியாது மேலும், இந்த காரை ஒருவர் ஏலம் எடுத்தாலும் அவரால் இந்த காரை தன் வீட்டிற்கு எடுத்து செல்ல முடியாதாம். அந்த மியூசியத்திற்கும் கார் தயாரிப்பாளர்களுக்கு உள்ள ஒப்பந்தத்தின் படி இந்த கார் இங்கு தான் இருக்க வேண்டும்...

வேண்டும் என்றால் தேவைப்படும் நேரத்தில் இந்த காரின் ஓனர் எடுத்துப் பயன்படுத்த முடியும். ஆனால் அவ்வப்போது மட்டுமே பயன்படுத்தலாம் என்ற விதியிருக்கிறது.

உதவி

காருக்கான 1100 கோடி பணத்தை மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் கல்விக்கான உதவி, இன்ஜினியரிங், கணிதம், அறிவியல் ஆகிய துறைகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா