Untitled Document
April 2, 2025 [GMT]
சவுதி அரேபியாவில் 4000 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!
[Sunday 2024-11-03 17:00]

சவுதி அரேபியாவின் வடமேற்கில், 4,000 ஆண்டுகள் பழமையான ஒரு கோட்டை நகரத்தின் எச்சங்களை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடுமையான பாலைவனத்தால் சூழப்பட்ட பசுமையான கைபர் சோலையில்(Khaybar oasis) அல்-நாதா நகரம் மறைந்து இருந்த நிலையில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.


  

அல்-நாதா(al-Natah) நகரம், நாடோடி வாழ்க்கை முறையிலிருந்து நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு மாறிய காலகட்டத்தின் கவர்ச்சிகரமான பார்வையை வழங்குகிறது.

பிரான்ஸ் தொல்லியல் ஆராய்ச்சியாளர் Guillaume Charloux தலைமையிலான குழு, குடியிருப்புப் பகுதியைச் சுற்றியுள்ள 14.5 கிலோமீட்டர் நீளமுள்ள சுவரைக் கண்டுபிடித்துள்ளது.

PLOS One இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குடியேற்றத்தின் இந்த உறுதியான சான்று, ஆரம்ப வெண்கல யுகத்தின் (கிமு 2400) சமூக மற்றும் கட்டடக் கலை முன்னேற்றங்களை வெளிப்படுத்துகிறது.

அல்-நாதா(al-Natah) நகரத்தில் சுமார் 500 பேர் வரை வசித்து இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. ஆய்வு முடிவுகள் அல்-நாதா(al-Natah) நகரம் கிமு 2400-2000 ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட 2.6 ஹெக்டேர் பரப்பளவுள்ள கோட்டை நகரம்" என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


Latika-Gold-House-2025
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா