Untitled Document
October 24, 2026 [GMT]
700 ஆண்டுகால ஸ்பெயின் அரச கல்லறைக்குள் அதிர்ச்சி: எதிர்பாராத திடுக்கிடும் உண்மைகள்!
[Wednesday 2026-07-22 16:00]

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘சாண்டா மரியா டி பெட்ரால்பஸ்’ (Santa Maria de Pedralbes) மடாலயத்தில், 700 ஆண்டுகள் பழமையான அரச கல்லறைகளைத் திறந்து தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் எதிர்பாராத திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. 14-ஆம் நூற்றாண்டில் அரசி எலிசெண்டா (Queen Elisenda) என்பவரால் நிறுவப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னத்தின் 700-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், இதுவரை சொல்லப்பட்டு வந்த வரலாற்றுப் பதிவுகளுக்கு முற்றிலும் மாறான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.


  

வரலாற்று ஏடுகளின்படி, வீரத் தளபதியான ஆர்டாவ் டி ஃபோசெஸ் (Artau de Foces) என்பவரின் கல்லறை என நினைத்துத் திறக்கப்பட்ட இடத்தில், ஒரு ஆண் எலும்புக்கூடு கூடக் கிடைக்கவில்லை.

மாறாக, அங்கு இரண்டு பெண்களின் உடல்களும், மூன்று குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு பெண்ணின் மண்டையோட்டுடன் 700 ஆண்டுகள் கடந்தும் சடை போட்ட கூந்தல் (Ponytail) அப்படியே சிதையாமல் மம்மியாகி இருந்தது தொல்லியலாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

அதைவிடப் பெரிய அதிர்ச்சியாக, அரசியின் உறவினரும் மடாலயத்தின் தலைவியுமான பிரான்செஸ்கா என்பவரின் கல்லறையை ஆய்வு செய்த போது, அங்குப் பல்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்த 9 நபர்களின் எலும்புக்கூடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் கூர்மையான ஆயுதங்களால் வெட்டப்பட்டு உயிரிழந்த 4 ஆண்களின் மண்டையோடுகளும், பிரசவத்தின் போதே இறந்து போன ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் மம்மியான உடலும் கண்டெடுக்கப்பட்டன.

அந்தப் பெண்ணின் பிரசவப் பாதையிலேயே 22 வாரக் கருவின் எலும்புகள் சிக்கியிருந்த காட்சி ஆராய்ச்சியாளர்களை உரைய வைத்தது. மடாலயத்தின் நிறுவனர் அரசி எலிசெண்டாவின் உடலும் மரப்பெட்டிக்குள் வைத்துப் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரச குடும்பத்துக்கான ஆடம்பரத்துடன் புதைக்கப்படாமல், எளிய துறவி உடையில் அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது, அவரது ஆன்மீக வாழ்க்கை முறைக்குச் சான்றாக உள்ளது.

இந்நிலையில் அரச கல்லறைகளுக்குள் கொலை செய்யப்பட்ட ஆண்களின் உடல்களும், பெண்களும், குழந்தைகளும் எப்படி வந்தார்கள் என்ற வரலாற்றுப் புதிரை அவிழ்க்க, மரபணு (DNA) மற்றும் கார்பன் ரேடியோ சோதனைகளைத் தொல்லியல் வல்லுநர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா