Untitled Document
November 8, 2026 [GMT]
2 மாத குழந்தையின் வயிற்றில் இருந்த முழு வளர்ச்சியடைந்த கரு!
[Monday 2026-10-26 16:00]

2 மாத குழந்தையின் வயிற்றில், முழு வளர்ச்சியடைந்த கரு இருந்த அரிதான நிகழ்வு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், சிந்துனூரை சேர்ந்த 2 மாத ஆண் குழந்தையின் வயிறு வழக்கத்தை விட அதிகமாக வீங்கியிருந்தது. மேலும், சாப்பிட்டதை ஜீரணிக்க முடியாததால், குழந்தை தொடர்ந்து வாந்தி எடுத்ததால் கவலையடைந்த பெற்றோர், சிகிச்சைக்காக குழந்தையை சிந்தானூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


  

அங்கு குழந்தையின் வயிற்றில் கட்டி போன்ற ஒன்று உள்ளதாக கருதிய மருத்துவர்கள், மருத்துவ பரிசோதனை செய்த போது குழந்தையின் வயிற்றில் முழு வளர்ச்சியடைந்த மற்றொரு கரு இருப்பது கண்டறியப்பட்டது.

தாயின் கருப்பையில் இரட்டைக் குழந்தைகள் உருவாகும் போது, 2 கருக்களில் ஒன்றின் வளர்ச்சி அசாதாரணமாக நின்றுவிடுகிறது.

வளர்ச்சியடையாத அந்தக் கரு, ஆரோக்கியமாக வளர்ந்து வரும் மற்ற கருவின் உடலுடன் இணைந்துவிடுகிறது. இது மருத்துவ துறையில் கருவுக்குள் கரு (fetus in foetus) என அழைக்கப்படுகிறது.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு 50 லட்சம் இரட்டையர்களில் ஒருவருக்கு மட்டுமே இது ஏற்படுகிறதாக கூறப்படுகிறது.

இதுவரை, இந்தியாவில் உள்ள மருத்துவ இதழ்களில் பதிவான வழக்குகளில் இது வெறும் 230 மட்டுமே. இது கர்நாடகாவில் பதிவான 3வது நிகழ்வாகும்.

குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து கருவை அகற்ற வேண்டிய சூழல் உள்ள நிலையில், 2 மாதங்களே ஆவதால் குழந்தை தீவிர கண்காணிப்பில் உள்ளது. மேலதிக சிகிச்சைக்காக, குழந்தை பெல்லாரியில் உள்ள VIMS மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா