Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்வது எப்படி?
[Monday 2020-02-03 18:00]

மத்திய சீனாவில் உள்ள ஊஹான் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதம் இறுதியில் ஒரு வினோத நோய் வேகமாகப் பரவத் தொடங்கியது. ஒரு புது வகையான கொரோனா வைரஸ் தான் இந்த புதிய தொற்று நோய்க்கு காரணம் என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 17 வருடங்களில் நூற்றுக்கணக்கான உலக மக்களை கொன்றுகுவித்த சார்ஸ் (severe acute respiratory syndrome coronavirus/SARS-CoV) மற்றும் மெர்ஸ் (Middle East respiratory syndrome coronavirus (MERS-CoV) வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு வைரஸ் தான் இந்த புதிய கொரோனா வைரஸ். இந்த புதிய கொரோனா வைரஸ்க்கு 2019-nCoV என்று பெயரிட்டுள்ளது உலக சுகாதார மையம். தொடக்கத்தில் அதிகம் ஆபத்துகளை ஏற்படுத்தாத வைரசாக இருக்கும் என்று கருதப்பட்ட கொரோனா வைரஸ் சுமார் ஒரு மாத காலத்துக்குள் சீனாவில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பேருக்கு தொற்றியுள்ளது, நூற்றுக்கும் அதிகமானவர்களை பலிவாங்கியுள்ளது.

சரி, கொரோனாவைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி பரவுகிறது? இது எவ்வளவு ஆபத்தானது? இந்த வைரஸ் நோய் தாக்கினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன அல்லது இந்த நோயின் அறிகுறிகள் என்ன? இதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும்? மற்றும் இந்த நோய் குறித்து வெளியாகி வரும் செய்திகளில் எது உண்மை எது பொய்? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஒரு அறிவியல் பார்வையில் இனி பார்க்கலாம்.

கொரோனாவைரஸ் என்றால் என்ன?

ஒரு எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலமாக பார்க்கும்போது ஒரு கிரீடம் போல அல்லது சூரியனுடைய கொரோனா பகுதிபோல தோன்றுவதால் இந்த வகை வைரஸ்களுக்கு கொரோனா வைரஸ் எனும் பெயர் சூட்டப்பட்டது. அடிப்படையில், காற்று மூலமாக பரவும் தன்மைகொண்ட கொரோனா வைரஸ்கள், பாலூட்டிகள் மற்றும் பறவைகளை தாக்கும்போது அவற்றின் மூச்சுக்குழாயின் மேல் பகுதி மற்றும் குடல் பகுதிகளில் சென்றுவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். கொரோனா வைரஸ்கள் பெரும்பாலும் சாதாரண சளி போன்ற உபாதைகளை மட்டுமே ஏற்படுத்தும் என்றாலும், துரதிர்ஷ்டவசமாக, சார்ஸ் மற்றும் மெர்ஸ் வகை கொரோனா வைரஸ்கள் மனிதர்களின் உடலில் மிகவும் மோசமான மூச்சுத்திணறல் மற்றும் இதர பல ஆபத்துகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

இந்த கொரோனா வைரஸ்களை தடுக்கும், தடுப்பூசி அல்லது கொரோனா வைரஸ் தொற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை எதுவும் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்த கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றுகிறது, எப்படி பரவுகிறது மற்றும் எப்படி பல்கிப் பெருகுகிறது உள்ளிட்ட தகவல்களைக் கண்டறிந்தால் இதனை தடுக்கவும், இந்த நோயை குணப்படுத்தவும் முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். கொரோனா வைரஸ் தொற்றுநோயானது, விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் சூனாடிக் வைரஸ் நோய் (zoonotic viral diseases) வகையைச் சேர்ந்தது. மேலும் மனிதர்களைத் தாக்கி அவர்களின் உடலில் பல்கிப் பெருக அவசியமான பல மரபணு மாற்றங்களை இந்த வைரஸ் விலங்குகளின் உடலில் இருக்கும்போதே பெற்றுவிடுகிறது என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

கொரோனா வைரஸ் எப்படி பரவியது?

மனிதர்களுக்கு மத்தியில் வெகுவேகமாக பரவிவரும் இந்த வைரஸ், முதன்முதலில் வவ்வால்களில்தான் தோன்றியது என்றும், அதனைத் தொடர்ந்து ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் மற்றும் வாழக்கூடிய பாலூட்டிகள் மற்றும் ஒட்டகங்கள் ஆகியவற்றை தொற்றி இறுதியாக மனிதர்களுக்கு தொற்றியது என்றும் ஆய்வுகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனா வைரஸ் நோயைப் பொறுத்தவரை, முதலில் பாதிக்கப்பட்டவர்கள் சீனாவின் ஊஹான் நகரிலுள்ள மீன் மார்கெட்டில் வேலை செய்பவர்கள் மற்றும் அங்கு மீன் வாங்கிய வாடிக்கையாளர்கள் என்றே செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மீன் மார்க்கெட்டில் கறிகள் மற்றும் இறைச்சிக்காக விற்கப்படும் உயிருள்ள கோழி, கழுதை, செம்மறி ஆடு, பன்றி, ஒட்டகம், நரி, மூங்கில் எலி மற்றும் பாம்பு உள்ளிட்ட ஊர்வன என பல விலங்குகள் விற்பனையாகும் என்று கூறப்படுகிறது.

மேலும், மருத்துவ ஆய்விதழ் ஒன்றில் (Journal of Medical Virology) வெளியான ஒரு ஆய்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள மரபியல் ஆய்வுகளின் அடிப்படையில், சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ்கள் போல, இந்த கொரோனா வைரஸ்களும் அடிப்படையில் ஒரு வவ்வாலில் தோன்றியிருக்கும் என்றே விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். கொரோனா வைரசின் மரபணு மீதான மேலதிக ஆய்வுகளில் இது பாம்புகளில் இருந்து வந்திருக்கும் என்று சுட்டிக்காட்டும் உறுதியான சில முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

வவ்வால்களை பாம்புகள் வேட்டையாடுவதால், வவ்வால்களில் இருந்த கொரோனா வைரஸ் முதலில் பாம்புக்கு தாவி பின்னர் பாம்புகளை சாப்பிட்ட மனிதர்களுக்கு பரவிவிட்டது என்பதே தற்போதைய உறுதியான தகவல். ஆனால், குளிர்ச்சியான ரத்தம் கொண்ட வவ்வால் மற்றும் பாம்புகளில் வாழும் கொரோனா வைரஸ் எப்படி கதகதப்பான ரத்தம் கொண்ட மனிதர்களுக்கு பரவியது என்பது இன்னும் புரியாத புதிராகத்தான் உள்ளது.

கொரோனா வைரசிடமிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்வது?

கொரோனா வைரஸ் என்னைத் தாக்குமா? என்று கேட்டால் நீங்கள் சீனாவின் ஊஹான் நகருக்குச் செல்லாமல், அங்குள்ள யாருடனாவது தொடர்பில் இல்லாமல் இருந்தால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகின்றன. ஆனால், சளி, தொண்டை வலி, தலைவலி, ஜுரம், இருமல் உபாதைகளை ஏற்படுத்தும் கொரோனாவைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்ட ஒருவரின் தும்மல், இருமல் மற்றும் பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றால் வைரஸ் பரவும் என்பதால், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருப்பதும், கை கால்களை எப்போதும் சோப்பு போட்டு கழுவுவதும், கை கழுவாமல் கண், மூக்கு மற்றும் வாய் போன்ற பகுதிகளை தொடாமல் இருப்பதும் கொரோனா வைரஸ் நமக்கு தொற்றாமல் இருக்க நாம் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் ஆகும்.

  
  
   Bookmark and Share Seithy.com



மழைகாலத்தில் கமகமக்கும் நண்டு மசாலா: செட்டிநாடு சுவையில் எப்படி செய்வது?
[Friday 2026-10-23 16:00]

மழைக்காலத்திற்கு ஏற்ப நண்டு மசாலா செட்டிநாடு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் இவற்றினால் அவதிப்படுவார்கள். இவ்வாறு சளி மற்றும் இருமலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் உணவாக நண்டு இருக்கின்றது. நண்டு சூப் மட்டுமின்றி நண்டு மசாலாவும் மழைக்காலத்திற்கு ஏற்ற உணவாக இருக்கின்றது. செட்டிநாடு ஸ்டைலில் நண்டு மசாலா எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



உள்ளிருந்து கூந்தலைப் பராமரிக்க உதவும் 6 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!
[Thursday 2026-10-22 16:00]

அழகான, அடர்த்தியான மற்றும் வலிமையான கூந்தலைப் பெற வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால், கூந்தலின் ஆரோக்கியம் என்பது நாம் பயன்படுத்தும் எண்ணெய்கள், ஷாம்புகள் மற்றும் தலைமுடிப் பராமரிப்புப் பொருட்களை மட்டும் சார்ந்ததல்ல. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளும் கூந்தலின் வளர்ச்சியிலும் வலிமையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைப்பது அவசியம்.



கேஸ் அடுப்பின் அருகில் வைக்கக்கூடாத 6 பொருட்கள்!
[Wednesday 2026-10-21 16:00]

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் செல்வம், அமைதி மற்றும் நிம்மதியைப் பராமரிப்பதில் சமையலறைக்கு முக்கியப் பங்கு உள்ளது. சமையலறையில் நெருப்பின் ஆதாரமாக இருக்கும் கேஸ் அடுப்பின் அருகில் சில பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. வாஸ்து நம்பிக்கைகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காரணங்களுக்காகவும் சில பொருட்களை அடுப்பிலிருந்து தள்ளி வைப்பது அவசியம்.



தினமும் எலுமிச்சை நீர் அருந்துவது நல்லதா?
[Tuesday 2026-10-20 17:00]

பொதுவாகவே பலரும் தங்களது நாளை ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் அருந்துவதன் மூலம் தொடங்குகின்றனர். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதுடன், தண்ணீர் உடலில் நீர்ச்சத்தைப் பேணவும் உதவுகிறது. தினமும் மிதமான அளவில் எலுமிச்சை நீர் அருந்துவது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. குறிப்பாக, உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பேணுவதற்கு இது பெரிதும் துணைப்புரிகின்றது.



ஒருமுறை மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க!
[Monday 2026-10-19 15:00]

மட்டன் சுக்கா தேங்காய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர். சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.



நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்!
[Saturday 2026-10-17 17:00]

உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாகச் செயல்படுவதற்கு, சத்தான உணவுகளை அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக்கொள்வது முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்கும் இயற்கை உணவுகளில் நெல்லிக்காய்க்கு தனித்துவமான இடம் உண்டு. சிறிய அளவில் காணப்பட்டாலும், நெல்லிக்காயில் வைட்டமின் சி, பாலிஃபீனால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் சேர்மங்கள் நிறைந்துள்ளன.



தொப்பையை கரைக்கும் சௌசௌ காய் குழம்பு!
[Friday 2026-10-16 16:00]

பொதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்கள் பல்வேறு ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. அந்த வகையில், சௌசௌ காயிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்தும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சௌசௌ ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும். மேலும், இதில் உள்ள ஃபோலேட் (வைட்டமின் B9) உள்ளிட்ட சத்துக்கள் புதிய ரத்த அணுக்கள் உருவாகவும் உதவுகின்றன. இத்தனை நன்மைகள் நிறைந்த சௌசௌ காயை வைத்து, சுவையான பொரிச்ச குழம்பை எளிமையாக எப்படிச் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்!



நாவூரும் சுவையில் காரசாரமான பூண்டு ஊறுகாய்!
[Thursday 2026-10-15 16:00]

பொதுவாகவே, நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளுக்கு கூடுதல் சுவையையும், தனித்துவமான மணத்தையும் சேர்ப்பதில் ஊறுகாய்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. எலுமிச்சை ஊறுகாய், அன்னாசி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய் எனப் பலவிதமான ஊறுகாய்கள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான சுவையும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.



அவித்த முட்டையில் ஆம்லெட் செய்ய முடியுமா?
[Wednesday 2026-10-14 16:00]

முட்டையை அவித்த பின்பு அதனை ஆம்லேட்டாக செய்வது எவ்வாறு என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். புரதச்சத்து நிறைந்த முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் முட்டை என்றால் ஆம்லெட் தான் முதலில் நினைவிற்கு வருகின்றது. வீட்டில் என்னதான் சுவையாக குழம்பு இருந்தாலும் அருகில் ஒரு முட்டையை ஆம்லெட் போட்டு வைத்து சாப்பிட்டால் சாப்பாடு 5 நிமிடத்திற்குள் தட்டில் காலியாகிவிடும்.



வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
[Tuesday 2026-10-13 16:00]

தேங்காய் எண்ணெய் என்பது நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு இயற்கையான பொருள். தலைமுடியைப் பராமரிக்கவும், சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், சமையலுக்குப் பயன்படுத்தவும் என இது தொன்று தொட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. நம் பாட்டி, அம்மா காலத்திலிருந்தே வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் தற்காலத்தில், கடைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயின் தரம், தயாரிப்பு முறை ஆகியவற்றில் சற்று ஐயம் இருக்கத்தான் செய்கின்றது. அதிக விலை கொடுத்து வாங்கினாலும், இந்த தேங்காய் எண்ணெய் சுகாதாரமான முறையில் தயாரி்கப்படுகின்றதா என்பதும் கவப்படம் அற்றதா என்பதும் சந்தேகம் தான்.



தலையனைக்கு அடியில் பூண்டை வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்!
[Monday 2026-10-12 16:00]

இரவில் தூங்கும் போது பூண்டை தலையனைக்கு அடியில் வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மையைக் குறித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக சமையலுக்கு பழங்காலம் முதலே பூண்டை பயன்படுத்தி வருகின்றனர். ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியா, எகிப்து, கிரீஸ் போன்ற பழங்கால மக்கள் பூண்டை ஒரு மருந்தாகவே பார்த்தார்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் செரிமானத்தையும் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர்.



கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ்!
[Sunday 2026-10-11 16:00]

அசைவ உணவில் அனைவருக்கும் பிடித்த சிக்கனை வைத்து கேரளா ஸ்டைலில் சிக்கன் மப்பாஸ் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று சிக்கன் ஆகும். சிக்கனை கிரேவி, ப்ரை, 65 என பல விதமாக சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் கேரள ஸ்டைலில் சற்று வித்தியாசமான ரெசிபியான மப்பாஸ் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



சிக்கனில் ரசம் வைத்து சாப்பிட்டதுண்டா?
[Saturday 2026-10-10 17:00]

அசைவ பிரியர்கள் விரும்பும் சிக்கனில் ரசம் வைப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்களுக்கு விருப்பமாக இருக்கும் சிக்கன் குழம்பு மற்றும் கிரேவி செய்வதை நாம் அவதானித்திருப்போம். சிக்கனை வைத்து ரசம் சமைப்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்காது. இந்த பதிவில் சிக்கனில் ரசம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆசையா?
[Friday 2026-10-09 16:00]

காலை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் அன்றாடம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட தடையாக இருக்கலாம். மேலும் காலை வெறும்வயிற்றில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிகவும் முக்கியமானவைகள். நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, நம்மை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கியமாகும். இதற்கு சரியான உணவாக தெரிவு செய்வது மிகவும் முக்கியமாகும்.



வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடிங்க: உடல் எடை கடகடவென குறையும்!
[Thursday 2026-10-08 16:00]

காலை வெறும்வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மையைக் குறித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக காலை எழுந்ததும் நாம் செய்யும் சில செயல்கள் நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றது. அதிலும் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் பானங்கள் மிக முக்கியமாக இருக்கின்றது. ஆதலால் ஆரோக்கிய பழக்கங்களை நாம் பின்பற்றுவது அவசியம் ஆகும்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா