Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்!
[Friday 2020-02-07 18:00]

கறிவேப்பிலை இல்லாத சமையலே இல்லை என்று சொல்லுமளவு உணவு பொருள்களில் நீக்கமற நிறைந்திரு க்கிறது. இதை வாசனைக்காக மட்டும் பயன்படுத்தவில்லை என்பதை உணர்ந்திருப்பவர்களின் சதவீதம் குறைவு என்றே சொல்லலாம். சமீப வருடங்களாக சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற முக்கிய நோயை தாண்டி, அழகு குறிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இதற்கான விழிப்புணர்வு அதிகரித்துவருகிறது என்றும் சொல்லலாம். கறிவேப்பிலையின் பயன்களை தெரிந்து கொண்டால் அதை பயன்படுத்தும் ஆர்வமும், சாப்பிடும் ஆர்வமும் இயல்பாக வந்துவிடும் என்கிறார்கள் உணவு பொருள்களை ஆராய்ச்சி செய்பவர்கள். கறிவேப்பிலை காலங் காலமாக சித்த மருத்துவத்திலும்,ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. கறி வேப்பிலை என்பது ஒரு வகை இலை. இது கறிவேம்பு இலை என்ற பெயரை உடையது. காலப்போக்கில் மருவி கறிவேப்பிலை ஆகிவிட்டது. தனி மணமும் சுவையும் கொண்ட இந்த இலையை வெறும் வாயில் இட்டு மென்றால் சற்று காரம் இலேசான கசப்பு சுவையை அளிக்கும். அதனால் பெரும்பாலோனோர் உணவில் இருக்கும் கொத்துமல்லித் தழையை சாப்பிட்டாலும் கறிவேப்பிலையை முதலில் எடுத்து அப்புறப்படுத்திய பிறகு சாப்பிட தொடங்குவார்கள். இதன் நன்மைகளை அறியாமல் இருப்பவர்கள் இனியாவது தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மணம் சுவை கொண்ட சாதாரண பொருள் அல்ல கறிவேப்பிலை. பலவிதமான சத்துகளையும், வைட்டமின் களையும் உள்ளடக்கியது. கறிவேப்பிலையில் மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரல் போன்ற தாதுசத்துகளும், வைட்டமின் ஏ,பி,சி, இ, அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள், ஃப்ளேவ னாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடண்ட், கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்துகளும் நிறைந்திருக்கின்றன. (சக்கையை உள்ளிழுத்து சத்தை வெளியே தள்ளிகொண்டிருக்கிறோம் என்பது இப்போதாவது புரிகிறதா)

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளபட்டது. கறிவேப்பிலையில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் ஹீமோகுளோபின் குறைபாடு நேராது. இதனால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம். தற்போது ஹீமோகுளோபின் அளவு குற்றைபாடு என்பது அனைத்து வயதினரிடமும் அதிகமாக காணப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இவர்கள் தினமும் உணவில் கறிவேப்பிலையை துவையலாகவோ பொடி செய்தோ சேர்த்து வந்தால் இந்த குறைபாடு விரைவில் நீங்கும்.

உடலில் சேரும் அதிகப்படியான கெட்ட கொழுப்புகளை வெளியேற்றவும் நல்ல கொழுப்பின் அளவை அதிக ரி க்கவும் கறிவேப்பிலை உதவுகிறது. உடலில் இரத்த நாளங்களில் இரத்த ஓட்டத்தை தடை செய்யும் வகையில் கெட்ட கொழுப்புகள் படிவதுண்டு. அதை கரைத்து வெளியேற்றுவதால் இரத்த ஓட்டம் சீராக உடலின் அனைத் து பாகங்களுக்கும் செல்கிறது. இதனால் இதயத்தில் ஆரோக்கியம் பாதிக்காமல் பாதுகாக்கப்படுகிறது. இதயம் வலுவாகவும், இதய தசைகள் பாதுகாப்பாகவும், இதய நோய் வராமலும் இருக்க தினம் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை எடுத்துகொள்ளலாம் என்கிறார்கள்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கறிவேப்பிலை உதவுகிறது. கறிவேப்பிலையில் இருக்கும் வைட்ட மின் ஏ கண்களை பாதுகாக்க உதவுகிறது, இவை கரோட்டினாய்டு பாதிப்பை வராமல் தடுக்கும். பார்வை குறைபாட்டை உண்டாக்காமல் காக்கும். மேலும் இதிலிருக்கும் வைட்டமின் சி கல்லீரலை பலப்படுத்துகிறது. கல்லீரலில் இருக்கும் செல்களை பாதுகாத்து கல்லீரலை ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது. மிக முக்கியமாக புற்றுநோய் உண்டாவதை தடுக்கவும் கறிவேப்பிலை சிறப்பாக செயல்படுகிறது. ஃபீனால் என்னும் வேதிப்பொருள் கறிவேப்பிலையில் மிகுந்திருக்கிறது. இவை குடல் புற்றுநோய் செல்களை வர விடா மல் தடுக்கிறது. அதை எதிர்த்து போராடக்கூடிய கார்பாஸோல் ஆல்கலாய்டுகள் கறிவேப்பிலையில் அதிகமா கவே உள்ளது. வயிற்றில் உண்டாகும் கோளாறு, வயிற்றுப்போக்கு போன்றவைற்றையும் இவை குணப்படுத்து கிறது. இவை குடல், வயிறு, கல்லீரல் உறுப்புகளை பலமாக்கி புற்றுநோய் தாக்காமல் பாதுகாக்கிறது.

இன்று செரிமானப் பிரச்சனையால் அவதிப்படும் பலருக்கும் கறிவேப்பிலை நல்ல தீர்வாக இருக்கும். செரிமான பிரச்சனை அதை தொடர்ந்து வயிறு மந்தமாக இருப்பது, பிறகு மலச்சிக்கல் என்று சிக்கல் மேல் சிக்கலாக அவதிப்படுபவர்கள் கறிவேப்பிலையை சாப்பிட்டால் செரிமானம் தூண்டப்படும். பசியின்மை பிரச்சனை இருக்காது. ஜீரண உறுப்புகள் துரிதமாக செயல்படும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு கறிவேப்பிலையை அவ்வபோது கொடுத்து வந்தால் செரிமான பிரச்சனை இன்றி சுறு சுறுப்பாக வளைய வருவார்கள். மந்ததன்மை இல்லாததோடு ஆரோக்கியமாக வளர்வார்கள். ஜீரண சக்தியை தூண்டும் கறிவேப்பிலை நீரிழிவு கட்டுக்கு வருவதற்கும் துணைபுரிகிறது. உணவில் இருக்கும் மாவுபொருள்கள் உடலுக்கு செல்லும் போது அதை குளுக்கோஸாக மாற்றி உடலுக்கு தருவதை செய்கிறது.

அழகு குறிப்பிலும் கறிவேப்பிலை பயன்பாட்டுக்கு சிறப்பான இடம் சொல்லலாம். கூந்தல் பிரச்சனையான முடி உதிர்வு, இளநரை, வறட்சியான கூந்தல், அடர்த்தி குறைவு இப்படி இருக்கும் அத்தனையும் சேர்த்து தீர்ப்பதில் மிக முக்கிய பங்கு இதற்கு உண்டு. கறிவேப்பிலை அப்படியே அரைத்து தலையில் தேய்த்து வந்தாலே முடிக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைவாக கிடைத்துவிடும். சருமத்தில் தேமல், அரிப்பு, நமைச்சல் பிரச்சனை இருப்பவர்களும் கறிவேப்பிலையை அரைத்து பூசி வந்தால் சருமப் பிரச்சனைகளும் ஓடிவிடும்.

இவ்வளவு ஏன் உடல் எடை குறைப்பதில் கூட கறிவேப்பிலை நன்றாகவே செயல்படுகிறது என்கிறார்கள் பயன்படுத்தி பலன் பெற்றவர்கள். இவ்வளவு குணங்கள் நிறைந்ததா கறிவேப்பிலை என்கிறீர்களா? ஆமாம் ஆனால் வெறும் உணவு பொருளில் இருக்கும் ஒன்றிரண்டு இலையை மட்டும் சாப்பிட்டால் போதுமா, இனி வாரம் ஒருமுறை கறிவேப்பிலை துவையல், கறிவேப்பிலை பொடி சாதம், கறிவேப்பிலை குழம்பு என்று சாப்பிடுங்கள். இன்னும் இன்னும் பலன் கிடைக்குமா எனக்கு நீரிழிவு வேறு இருக்கு என்று கேட்பவர்கள் தினமும் காலையில் பச்சையாக 10 இலைகளை மென்று வந்தால் அடுத்த 20 நாளில் நீரிழிவு உடற்சோர்வு, களைப்பு இல்லாமல் ஜம்மென்று வளைய வருவீர்கள். ஏனெனில் நீரிழிவை கட்டுப்படுத்துவதிலும் கறிவேப்பிலைக்கு முதல் மதிப்பெண் தான்.

  
  
   Bookmark and Share Seithy.com



மழைகாலத்தில் கமகமக்கும் நண்டு மசாலா: செட்டிநாடு சுவையில் எப்படி செய்வது?
[Friday 2026-10-23 16:00]

மழைக்காலத்திற்கு ஏற்ப நண்டு மசாலா செட்டிநாடு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் இவற்றினால் அவதிப்படுவார்கள். இவ்வாறு சளி மற்றும் இருமலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் உணவாக நண்டு இருக்கின்றது. நண்டு சூப் மட்டுமின்றி நண்டு மசாலாவும் மழைக்காலத்திற்கு ஏற்ற உணவாக இருக்கின்றது. செட்டிநாடு ஸ்டைலில் நண்டு மசாலா எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



உள்ளிருந்து கூந்தலைப் பராமரிக்க உதவும் 6 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!
[Thursday 2026-10-22 16:00]

அழகான, அடர்த்தியான மற்றும் வலிமையான கூந்தலைப் பெற வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால், கூந்தலின் ஆரோக்கியம் என்பது நாம் பயன்படுத்தும் எண்ணெய்கள், ஷாம்புகள் மற்றும் தலைமுடிப் பராமரிப்புப் பொருட்களை மட்டும் சார்ந்ததல்ல. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளும் கூந்தலின் வளர்ச்சியிலும் வலிமையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைப்பது அவசியம்.



கேஸ் அடுப்பின் அருகில் வைக்கக்கூடாத 6 பொருட்கள்!
[Wednesday 2026-10-21 16:00]

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் செல்வம், அமைதி மற்றும் நிம்மதியைப் பராமரிப்பதில் சமையலறைக்கு முக்கியப் பங்கு உள்ளது. சமையலறையில் நெருப்பின் ஆதாரமாக இருக்கும் கேஸ் அடுப்பின் அருகில் சில பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. வாஸ்து நம்பிக்கைகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காரணங்களுக்காகவும் சில பொருட்களை அடுப்பிலிருந்து தள்ளி வைப்பது அவசியம்.



தினமும் எலுமிச்சை நீர் அருந்துவது நல்லதா?
[Tuesday 2026-10-20 17:00]

பொதுவாகவே பலரும் தங்களது நாளை ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் அருந்துவதன் மூலம் தொடங்குகின்றனர். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதுடன், தண்ணீர் உடலில் நீர்ச்சத்தைப் பேணவும் உதவுகிறது. தினமும் மிதமான அளவில் எலுமிச்சை நீர் அருந்துவது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. குறிப்பாக, உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பேணுவதற்கு இது பெரிதும் துணைப்புரிகின்றது.



ஒருமுறை மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க!
[Monday 2026-10-19 15:00]

மட்டன் சுக்கா தேங்காய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர். சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.



நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்!
[Saturday 2026-10-17 17:00]

உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாகச் செயல்படுவதற்கு, சத்தான உணவுகளை அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக்கொள்வது முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்கும் இயற்கை உணவுகளில் நெல்லிக்காய்க்கு தனித்துவமான இடம் உண்டு. சிறிய அளவில் காணப்பட்டாலும், நெல்லிக்காயில் வைட்டமின் சி, பாலிஃபீனால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் சேர்மங்கள் நிறைந்துள்ளன.



தொப்பையை கரைக்கும் சௌசௌ காய் குழம்பு!
[Friday 2026-10-16 16:00]

பொதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்கள் பல்வேறு ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. அந்த வகையில், சௌசௌ காயிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்தும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சௌசௌ ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும். மேலும், இதில் உள்ள ஃபோலேட் (வைட்டமின் B9) உள்ளிட்ட சத்துக்கள் புதிய ரத்த அணுக்கள் உருவாகவும் உதவுகின்றன. இத்தனை நன்மைகள் நிறைந்த சௌசௌ காயை வைத்து, சுவையான பொரிச்ச குழம்பை எளிமையாக எப்படிச் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்!



நாவூரும் சுவையில் காரசாரமான பூண்டு ஊறுகாய்!
[Thursday 2026-10-15 16:00]

பொதுவாகவே, நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளுக்கு கூடுதல் சுவையையும், தனித்துவமான மணத்தையும் சேர்ப்பதில் ஊறுகாய்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. எலுமிச்சை ஊறுகாய், அன்னாசி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய் எனப் பலவிதமான ஊறுகாய்கள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான சுவையும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.



அவித்த முட்டையில் ஆம்லெட் செய்ய முடியுமா?
[Wednesday 2026-10-14 16:00]

முட்டையை அவித்த பின்பு அதனை ஆம்லேட்டாக செய்வது எவ்வாறு என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். புரதச்சத்து நிறைந்த முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் முட்டை என்றால் ஆம்லெட் தான் முதலில் நினைவிற்கு வருகின்றது. வீட்டில் என்னதான் சுவையாக குழம்பு இருந்தாலும் அருகில் ஒரு முட்டையை ஆம்லெட் போட்டு வைத்து சாப்பிட்டால் சாப்பாடு 5 நிமிடத்திற்குள் தட்டில் காலியாகிவிடும்.



வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
[Tuesday 2026-10-13 16:00]

தேங்காய் எண்ணெய் என்பது நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு இயற்கையான பொருள். தலைமுடியைப் பராமரிக்கவும், சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், சமையலுக்குப் பயன்படுத்தவும் என இது தொன்று தொட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. நம் பாட்டி, அம்மா காலத்திலிருந்தே வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் தற்காலத்தில், கடைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயின் தரம், தயாரிப்பு முறை ஆகியவற்றில் சற்று ஐயம் இருக்கத்தான் செய்கின்றது. அதிக விலை கொடுத்து வாங்கினாலும், இந்த தேங்காய் எண்ணெய் சுகாதாரமான முறையில் தயாரி்கப்படுகின்றதா என்பதும் கவப்படம் அற்றதா என்பதும் சந்தேகம் தான்.



தலையனைக்கு அடியில் பூண்டை வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்!
[Monday 2026-10-12 16:00]

இரவில் தூங்கும் போது பூண்டை தலையனைக்கு அடியில் வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மையைக் குறித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக சமையலுக்கு பழங்காலம் முதலே பூண்டை பயன்படுத்தி வருகின்றனர். ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியா, எகிப்து, கிரீஸ் போன்ற பழங்கால மக்கள் பூண்டை ஒரு மருந்தாகவே பார்த்தார்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் செரிமானத்தையும் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர்.



கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ்!
[Sunday 2026-10-11 16:00]

அசைவ உணவில் அனைவருக்கும் பிடித்த சிக்கனை வைத்து கேரளா ஸ்டைலில் சிக்கன் மப்பாஸ் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று சிக்கன் ஆகும். சிக்கனை கிரேவி, ப்ரை, 65 என பல விதமாக சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் கேரள ஸ்டைலில் சற்று வித்தியாசமான ரெசிபியான மப்பாஸ் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



சிக்கனில் ரசம் வைத்து சாப்பிட்டதுண்டா?
[Saturday 2026-10-10 17:00]

அசைவ பிரியர்கள் விரும்பும் சிக்கனில் ரசம் வைப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்களுக்கு விருப்பமாக இருக்கும் சிக்கன் குழம்பு மற்றும் கிரேவி செய்வதை நாம் அவதானித்திருப்போம். சிக்கனை வைத்து ரசம் சமைப்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்காது. இந்த பதிவில் சிக்கனில் ரசம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆசையா?
[Friday 2026-10-09 16:00]

காலை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் அன்றாடம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட தடையாக இருக்கலாம். மேலும் காலை வெறும்வயிற்றில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிகவும் முக்கியமானவைகள். நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, நம்மை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கியமாகும். இதற்கு சரியான உணவாக தெரிவு செய்வது மிகவும் முக்கியமாகும்.



வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடிங்க: உடல் எடை கடகடவென குறையும்!
[Thursday 2026-10-08 16:00]

காலை வெறும்வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மையைக் குறித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக காலை எழுந்ததும் நாம் செய்யும் சில செயல்கள் நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றது. அதிலும் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் பானங்கள் மிக முக்கியமாக இருக்கின்றது. ஆதலால் ஆரோக்கிய பழக்கங்களை நாம் பின்பற்றுவது அவசியம் ஆகும்.


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா