Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கொரோனா வைரஸ் மனித உடல் பாகங்களில் எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கும்?..
[Tuesday 2020-03-24 18:00]

கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளபடி மக்களும் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றனர். ஏனெனில் இது ஒரு தொற்று நோய் என்பதால் ஒருவரிடம் இருந்து மற்றவர்க்கு எளிதாக பரவும். எனவே மக்கள் எப்பொழுதும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. அடிக்கடி கை கழுவுவது, நம் வீட்டை சுத்தமாக வைப்பது போன்றவை COVID-19 வராமல் தடுக்க உதவுகிறது. ஆனால் வெறும் கைகளை மட்டும் கழுவினால் போதுமா, நமது கைகள் தலைமுடியை கோத வாய்ப்புள்ளது, முகத்தை தொட வாய்ப்புள்ளது, நகங்கள் சுத்தமாக இருக்குமா இது போன்ற கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடையே இருக்கிறது. கொரோனா மற்ற பரப்புகளிலும் இருக்குமா, இருந்தால் எவ்வளவு காலம் நீடிக்கும் இது குறித்து மருத்துவர்கள் நிறைய கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்கள் நமக்கு கொரோனா வைரஸை பற்றி அறிந்து கொள்வதற்கும், இதன் மூலம் அதை தடுக்க கூடுதல் நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும்.

​மருத்துவர்களின் கருத்துக்கள்

இந்த வைரஸ் மருத்துவர்களுக்கே புதியதாக இருக்கிறது. அதனால் இது குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் உலகளவில் நடந்து கொண்டு இருக்கின்றனர். இந்த வைரஸ் கடினமான மேற்பரப்புகளில் 2 மற்றும் 3 நாட்கள் உயிர் வாழ வாய்ப்புள்ளது. இந்த வைரஸூக்கு கிச்சன் கவுண்டர்டாப்ஸ் போன்ற பகுதிகளை அதிகம் விரும்புகிறது. எனவே வீட்டின் தரை மற்றும் மேற்பரப்புகளை நன்றாக சுத்தமாக வைக்க முற்படுங்கள். அதே மாதிரி இந்த வைரஸ் காற்றில் 3 மணி நேரம் நிலை நிறுத்தப்படுகிறது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றனர். ஆனால் இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இந்த தகவல் எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றம் பெறலாம்.

​​மனித தோலில் இந்த வைரஸ் எவ்வளவு காலம் வாழும்?

இந்த வைரஸ் ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்கு பரவி அறிகுறிகளை காட்ட நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்கிறது. அது தான் இந்த கொரோனா பாதிப்பில் உள்ள சிக்கலே . அறிகுறிகள் சீக்கிரம் தெரியாத காரணத்தால் மக்கள் அலட்சியமாக இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தனக்கு இருப்பதைக் கூட தெரியாமல் மற்ற நபர்களுடன் தொடர்பு கொள்கின்றனர். இதனால் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

​​நகச்சுத்தம்

இந்த வைரஸிலிருந்து தப்பிக்க நீங்கள் வெறும் கைகளை மட்டும் மேலோட்டமாக கழுவினால் போதாது. நகங்களையும் இடுக்குகளையும் தூய்மை செய்து கொள்ளுங்கள். நெயில் பாலிஷ் போன்றவை போட்டால் கூட நகங்களை சரியாக சுத்தம் செய்யுங்கள். ஏனெனில் அக்ரிலிக் நகங்கள் கிருமிகள் பதுங்குவதற்கு ஏதுவான இடமளிக்கிறது. ஏனெனில் அக்ரிலிக் நகங்கள் வைரஸ் வசிப்பதற்கு பிளவுகளை உண்டாக்குகிறது. இந்த பிளவுகளின் இடுக்குகளில் கொரோனா வைரஸ்கள் ஒழிந்து கொள்கிறது. நீங்கள் கைகளை சுத்தம் செய்தால் கூட நகங்கள் சுத்தமாவது கடினம் என்கின்றனர் மருத்துவர்கள். அதே மாதிரி நகங்களுக்கு அடிப்பகுதியில் நல்ல சுத்தத்தை நீங்கள் செய்ய வேண்டும்.

​​செயற்கை நகங்கள் வேண்டாம்

சி. டி. சி தங்கள் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் நீண்ட நகங்களையோ அல்லது செயற்கை நகங்களையோ வைக்க கூடாது என்று கட்டளையிட்டு உள்ளது. ஏனெனில் நீங்கள் கைகளை கழுவின பிறகும் கூட கிருமிகள் நகங்களில் வாழ வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே நீண்ட நகங்களை பெரும்பாலும் இந்த மாதிரியான நேரங்களில் தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் கூடுதல் நகச் சுத்தத்தை மேற்கொள்ளுங்கள். அதே மாதிரி தயவு செய்து செயற்கை நகங்களை வைக்காதீர்கள். இது தொற்றை எளிதாக பரவ வைத்துவிடும்.

​​நமது முடி மற்றும் தோலில் கொரோனா வாழுமா?

நமது முடி மற்றும் சருமம் குறித்து நீங்கள் அதிகமாக கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அவை பாதிக்கப்பட்ட மேற்பரப்புகளுடன் அரிதாகவே தொடர்பு கொள்ளும். ஆனால் கைகளைக் கொண்டு முடிகளை அதிகமாக சுழற்றுவதை குறையுங்கள். இதனால் தொற்று அந்த பகுதிக்கு பரவ வாய்ப்புள்ளது. ஆனால் உங்க முடியுடன் மற்றவர் தொடர்பு குறைவு என்பதால் முடி வழியாக தொற்று பரவுவது குறைவு. ஆனால் நாம் கைகளைக் கொண்டு மற்றவருடன் அதிகமாக தொடர்பு கொள்கிறோம். எனவே தான் கை சுகாதாரம் அவசியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் கைகளை நம் உடல் பாகங்களில் எங்கு வைத்தாலும் உடனே தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே தான் முதலில் கைகளை சுத்தமாகி கழுவி விடுவது நல்லது என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

​​கை கழுவ சோப்பு சிறந்ததா, இல்லை சானிட்ரைசர் வேண்டுமா?

உண்மையில் கையை முழுமையாக சுத்தம் செய்ய சோப்பு மற்றும் தண்ணீர் போதும் என்கிறார்கள் மருத்துவர்கள் . காரணம் ஆன்டி பாக்டீரியல் சோப்பு தான் சிறந்தது என்று ஆய்வுகள் எதுவும் சொல்லவில்லை . நீங்கள் வெளியே இருந்தால் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அடிக்கடி கழுவிக் கொண்டு இருக்க முடியாது. எனவே தான் வெளியே இருக்கும் சமயங்களில் சானிட்ரைசர் கொண்டு சுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. சானிட்ரைசர் நம் கைகளை முழுமையாக சுத்தம் செய்வதில்லை. கைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் இயற்கையான எண்ணெய்கள் நாம் சுத்தம் செய்த பிறகும் கூட வைரஸ் அங்கேயே இருக்க உதவுகிறது.

​​எப்படி கழுவ வேண்டும்?

கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு குறைந்தது 20 விநாடிகள் வரை நன்றாக தேய்த்து நக இடுக்குகள் மற்றும் விரல் இடுக்குகளை எல்லாம் தேய்த்து முழுமையாக சுத்தம் செய்யுங்கள். தேய்த்து கழுவுதல் உங்க கைகளில் உள்ள வைரஸை வெளியேற்றுகிறது. மற்ற பாகங்களுக்கு பரவாமலும் மற்றவர்க்கு பரவாமலும் தடுக்கப்படுகிறது. எனவே இதன் படி கை சுகாதாரம் செய்ய முயற்சி செய்யுங்கள். நாம் ஒருவர் செய்யும் கை சுகாதாரம் பல உயிர்களை காக்க உதவி செய்யும் என்பதை மறவாதீர்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com



மழைகாலத்தில் கமகமக்கும் நண்டு மசாலா: செட்டிநாடு சுவையில் எப்படி செய்வது?
[Friday 2026-10-23 16:00]

மழைக்காலத்திற்கு ஏற்ப நண்டு மசாலா செட்டிநாடு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் இவற்றினால் அவதிப்படுவார்கள். இவ்வாறு சளி மற்றும் இருமலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் உணவாக நண்டு இருக்கின்றது. நண்டு சூப் மட்டுமின்றி நண்டு மசாலாவும் மழைக்காலத்திற்கு ஏற்ற உணவாக இருக்கின்றது. செட்டிநாடு ஸ்டைலில் நண்டு மசாலா எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



உள்ளிருந்து கூந்தலைப் பராமரிக்க உதவும் 6 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!
[Thursday 2026-10-22 16:00]

அழகான, அடர்த்தியான மற்றும் வலிமையான கூந்தலைப் பெற வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால், கூந்தலின் ஆரோக்கியம் என்பது நாம் பயன்படுத்தும் எண்ணெய்கள், ஷாம்புகள் மற்றும் தலைமுடிப் பராமரிப்புப் பொருட்களை மட்டும் சார்ந்ததல்ல. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளும் கூந்தலின் வளர்ச்சியிலும் வலிமையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைப்பது அவசியம்.



கேஸ் அடுப்பின் அருகில் வைக்கக்கூடாத 6 பொருட்கள்!
[Wednesday 2026-10-21 16:00]

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் செல்வம், அமைதி மற்றும் நிம்மதியைப் பராமரிப்பதில் சமையலறைக்கு முக்கியப் பங்கு உள்ளது. சமையலறையில் நெருப்பின் ஆதாரமாக இருக்கும் கேஸ் அடுப்பின் அருகில் சில பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. வாஸ்து நம்பிக்கைகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காரணங்களுக்காகவும் சில பொருட்களை அடுப்பிலிருந்து தள்ளி வைப்பது அவசியம்.



தினமும் எலுமிச்சை நீர் அருந்துவது நல்லதா?
[Tuesday 2026-10-20 17:00]

பொதுவாகவே பலரும் தங்களது நாளை ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் அருந்துவதன் மூலம் தொடங்குகின்றனர். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதுடன், தண்ணீர் உடலில் நீர்ச்சத்தைப் பேணவும் உதவுகிறது. தினமும் மிதமான அளவில் எலுமிச்சை நீர் அருந்துவது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. குறிப்பாக, உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பேணுவதற்கு இது பெரிதும் துணைப்புரிகின்றது.



ஒருமுறை மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க!
[Monday 2026-10-19 15:00]

மட்டன் சுக்கா தேங்காய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர். சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.



நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்!
[Saturday 2026-10-17 17:00]

உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாகச் செயல்படுவதற்கு, சத்தான உணவுகளை அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக்கொள்வது முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்கும் இயற்கை உணவுகளில் நெல்லிக்காய்க்கு தனித்துவமான இடம் உண்டு. சிறிய அளவில் காணப்பட்டாலும், நெல்லிக்காயில் வைட்டமின் சி, பாலிஃபீனால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் சேர்மங்கள் நிறைந்துள்ளன.



தொப்பையை கரைக்கும் சௌசௌ காய் குழம்பு!
[Friday 2026-10-16 16:00]

பொதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்கள் பல்வேறு ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. அந்த வகையில், சௌசௌ காயிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்தும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சௌசௌ ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும். மேலும், இதில் உள்ள ஃபோலேட் (வைட்டமின் B9) உள்ளிட்ட சத்துக்கள் புதிய ரத்த அணுக்கள் உருவாகவும் உதவுகின்றன. இத்தனை நன்மைகள் நிறைந்த சௌசௌ காயை வைத்து, சுவையான பொரிச்ச குழம்பை எளிமையாக எப்படிச் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்!



நாவூரும் சுவையில் காரசாரமான பூண்டு ஊறுகாய்!
[Thursday 2026-10-15 16:00]

பொதுவாகவே, நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளுக்கு கூடுதல் சுவையையும், தனித்துவமான மணத்தையும் சேர்ப்பதில் ஊறுகாய்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. எலுமிச்சை ஊறுகாய், அன்னாசி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய் எனப் பலவிதமான ஊறுகாய்கள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான சுவையும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.



அவித்த முட்டையில் ஆம்லெட் செய்ய முடியுமா?
[Wednesday 2026-10-14 16:00]

முட்டையை அவித்த பின்பு அதனை ஆம்லேட்டாக செய்வது எவ்வாறு என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். புரதச்சத்து நிறைந்த முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் முட்டை என்றால் ஆம்லெட் தான் முதலில் நினைவிற்கு வருகின்றது. வீட்டில் என்னதான் சுவையாக குழம்பு இருந்தாலும் அருகில் ஒரு முட்டையை ஆம்லெட் போட்டு வைத்து சாப்பிட்டால் சாப்பாடு 5 நிமிடத்திற்குள் தட்டில் காலியாகிவிடும்.



வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
[Tuesday 2026-10-13 16:00]

தேங்காய் எண்ணெய் என்பது நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு இயற்கையான பொருள். தலைமுடியைப் பராமரிக்கவும், சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், சமையலுக்குப் பயன்படுத்தவும் என இது தொன்று தொட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. நம் பாட்டி, அம்மா காலத்திலிருந்தே வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் தற்காலத்தில், கடைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயின் தரம், தயாரிப்பு முறை ஆகியவற்றில் சற்று ஐயம் இருக்கத்தான் செய்கின்றது. அதிக விலை கொடுத்து வாங்கினாலும், இந்த தேங்காய் எண்ணெய் சுகாதாரமான முறையில் தயாரி்கப்படுகின்றதா என்பதும் கவப்படம் அற்றதா என்பதும் சந்தேகம் தான்.



தலையனைக்கு அடியில் பூண்டை வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்!
[Monday 2026-10-12 16:00]

இரவில் தூங்கும் போது பூண்டை தலையனைக்கு அடியில் வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மையைக் குறித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக சமையலுக்கு பழங்காலம் முதலே பூண்டை பயன்படுத்தி வருகின்றனர். ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியா, எகிப்து, கிரீஸ் போன்ற பழங்கால மக்கள் பூண்டை ஒரு மருந்தாகவே பார்த்தார்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் செரிமானத்தையும் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர்.



கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ்!
[Sunday 2026-10-11 16:00]

அசைவ உணவில் அனைவருக்கும் பிடித்த சிக்கனை வைத்து கேரளா ஸ்டைலில் சிக்கன் மப்பாஸ் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று சிக்கன் ஆகும். சிக்கனை கிரேவி, ப்ரை, 65 என பல விதமாக சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் கேரள ஸ்டைலில் சற்று வித்தியாசமான ரெசிபியான மப்பாஸ் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



சிக்கனில் ரசம் வைத்து சாப்பிட்டதுண்டா?
[Saturday 2026-10-10 17:00]

அசைவ பிரியர்கள் விரும்பும் சிக்கனில் ரசம் வைப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்களுக்கு விருப்பமாக இருக்கும் சிக்கன் குழம்பு மற்றும் கிரேவி செய்வதை நாம் அவதானித்திருப்போம். சிக்கனை வைத்து ரசம் சமைப்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்காது. இந்த பதிவில் சிக்கனில் ரசம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆசையா?
[Friday 2026-10-09 16:00]

காலை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் அன்றாடம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட தடையாக இருக்கலாம். மேலும் காலை வெறும்வயிற்றில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிகவும் முக்கியமானவைகள். நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, நம்மை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கியமாகும். இதற்கு சரியான உணவாக தெரிவு செய்வது மிகவும் முக்கியமாகும்.



வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடிங்க: உடல் எடை கடகடவென குறையும்!
[Thursday 2026-10-08 16:00]

காலை வெறும்வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மையைக் குறித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக காலை எழுந்ததும் நாம் செய்யும் சில செயல்கள் நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றது. அதிலும் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் பானங்கள் மிக முக்கியமாக இருக்கின்றது. ஆதலால் ஆரோக்கிய பழக்கங்களை நாம் பின்பற்றுவது அவசியம் ஆகும்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா