Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கொரோனாவிலிருந்து தப்பிக்க நாம் கடைபிடிக்க வேண்டியவை...
[Thursday 2020-03-26 18:00]

நோயை எப்போதும் அச்சத்துடன் எதிர்கொள்ள கூடாது. அதிலும் நோய் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சமே மன உளைச்சலுக்கு உள்ளாக்கிவிடும். தற்போது கொரோனா வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துதான் இருக்கிறது அதைவிட அதிகமாய் அச்சமும் சேர்ந்திருக்கிறது. எதையும் பயத்துடன் எதிர்கொள்ளும் போது அவை அதிக வலிமையைப் பெற்றுவிடும். அந்த வகையில் கொரோனா வைரஸ் இப்போது வலிமை மிக்கவர்களையும் அசைத்து பார்த்துள்ளது என்பதே உண்மை. பொதுவாகமருத்துவர்கள் அறிவுறுத்துவது ஒரு விஷயம் தான். நோய் வந்தாலும் அதை மன உறுதியோடு நம்பிக்கையுடன் எதிர்கொண்டாலே போதுமானது. அப்படி இருந்தால் வரும் நோய் எவ்வளவு கொடியதாக இருந்தாலும் அவை ஆச்சரியத்தக்க வகையில் குணமடைந்துவிடும். அப்படி இருக்கும் போது வராத நோயை நினைத்து பயம் கொள்வதை விட நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை கொண்டிருந்தாலே போதும். பீதி அடைய தேவையில்லை. அப்படி நீங்கள் என்னெல்லாம் செய்ய வேண்டும். தெரிந்துகொள்வோமா?

​கொரோனா வைரஸ்

இது குறித்து அதிகம் பார்த்தும் படித்தும் விட்டோம் என்றாலும் சிறு குறிப்புடன் முடித்து கொள்ளலாம். கடந்த டிசம்பர் மாதம் அன்று சீனாவின் வுஹான் மாநிலத்தில் இது தீவிர மான வைரஸ் தொற்று என்பதை சீன தேசிய சுகாதாரம் உறுதி செய்து அறிக்கை வெளி யிட்டது. இறைச்சியின் வாயிலாக விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு இந்த தொற்று பரவியிருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது. இறுதியாக கொரோனா குடும்பத்திலிருந்து இவை 7 வது வைரஸ் என்பதும் இதற்கு 2019 -nCoV (new strain of coronavirus) என்ற பெயரும் வைத்து அழைக்கப்பட்டது. சீனாவை தொடர்ந்து தாய்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்த அறிகுறிகளுடன் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

எப்போது இந்தியா வருமோ என்று அஞ்சிகொண்டிருந்த நிலையில் சீனாவிலிருந்து வந்த வர்களை தொடர் கண்காணிப்பில் வைத்து பரிசோதனை செய்ததில் சீனாவில் படித்து கொண்டிருந்த கேரள மாணவி ஒருவருக்கு இந்த தொற்று இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது. அவர் குணமடைந்துவிட்ட நிலையில் இன்று கொரோனா வைரஸ் தாக்கதுக்கு இதுவரை 143 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

​ஆபத்தை உண்டாக்க கூடியதா?

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 200 க்கும் மேற்பட்டவர்கள் பலி யாகியிருக்கிறார்கள். இவை குணப்படுத்த கூடிய வைரஸ் அல்ல என்று சொல்வதை விட இதை குணப்படுத்த இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சொல்லலாம். அதே நேரம் இதை கட்டுப்படுத்தவும் தவிர்க்கவும் என்னவெல்லாம் செய்யலாம் என்று அரசும், மருத்துவர்களும் மக்களுக்கு பலவிதமான விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து சித்த மருத்துவர் விக்ரம் குமார் அவர்களிடம் கேட்டபோது இந்த வைரஸ் தொற்று வந்தாலே உயிரிழப்பு ஏற்படும் என்று மக்கள் மத்தியில் தவறான கருத்து அதிகரித்துவருகிறது. ஆனால் இதுவும் ஒரு வைரஸ் தொற்று அவ்வளவே. அதோடு இவை தீவிரமாக எளிதாக பரவக்கூடியது என்பதால் தான் இத்தொற்று பாதித்தவரை தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் உண்டாகிறது.

​குணமாக்கலாமா? யாருக்கு பாதிப்பு..

வழக்கத்தை விட அதிக வெப்பநிலையில் உடல், தொண்டையில் புண், சளி, இருமல் இந்த அறிகுறிகள் தென்படும் போதே மருத்துவரை அணுகினால் இந்த பாதிப்புக்கு மருந்துகள் அளிக்கப்படும். அதே நேரம் கொரோனா வைரஸ் அழிக்க மருந்துகள் இல்லை. அதனால் தான் இத்தொற்று பரவாமல் இருப்பதில் அதிக விழிப்புணர்வு காட்டி வருகிறோம். ஒரு பொதுவாக நோய்த்தொற்று என்பது எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தை களையும், வயதான வர்களையும் வைரஸ் தொற்று எளிதாக தாக்கும். ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்கள் இது குறித்து பயப்பட வேண்டாம். அன்றாட பழக்க வழக்கங் களிலும் உணவு முறையிலும் கடைபிடிக்கவேண்டியதை கவனமாக கையாண்டால் தேவையில்லாமல் பீதியடைய வேண்டியதில்லை.

​எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பவர்களை வைரஸ் அவ்வளவு எளிதில் தாக் காது. அதற்கேற்ப அன்றாட உணவில் வைட்டமின் சி உணவுகளை அதிகம் எடுத்து கொள்வது மிகவும் முக்கியம். நெல்லிக்கனி எதிர்ப்புசக்தியை அதிகரிக்க கூடியது. தினமும் காலை நெல்லிக்காயை கொட்டை நீக்கி மிக்ஸியில் அடித்து சாறு பிழிந்து குடிக்கலாம். தினமும் ஒரு வேளை எலு மிச்சை சாறு, சமபாதி அளவு நெல்லிச்சாறு கலந்து பழச்சாறாக குடிக்கலாம். இனிப்புக்கு தேன் சேர்த்துகொள்ளலாம்.

பழங்கள் அனைத்துமே சத்துமிக்கவை என்பதால் பழங்கள் இல்லாமல் உணவை எடுக்க வேண்டாம். குறிப்பாக கொய்யா பழம் தினமும் சாப்பிடுவது எதிர்ப்புசக்தியை அதிகரிக் கும். இவை தவிர கீரைகள் காய்கறிகளையும் பயன்படுத்துங்கள்.உணவில் காரத்துக்கு மிளகாயை சேர்க்காமல் மிளகை சேருங்கள். கிருமி நாசினியான மஞ்சளை அன்றாடம் சமையலில் சேர்ப்பதுண்டு என்றாலும் கூட சற்று அதிகப்படியாக சேர்க்கலாம். குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் தினமும் பாலில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் மிளகுபொடியை சேர்த்து கொடுப்பதும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இப்படி உணவில் தினமும் இஞ்சி, மஞ்சள் தூள், மிளகு, நெல்லிக்கனி, எலுமிச்சை போன்ற வற்றை தவறாமல் சேர்த்துகொள்வது நிச்சயம் வைரஸ் தொற்று உங்களை அண்டாமால் பாதுகாக்கும். அதை எதிர்த்து போராடக்கூடிய எதிர்ப்புசக்தியை உங்கள் உடலுக்கு கொண்டு வர இந்த வகை உணவுகள் உதவும். இது குறித்து மேலும் விரிவாக மற்றுமொரு கட்டுரையில் பார்க்கலாம்.

​நிலவேம்பு குடிக்கலாமா?

பொதுவாக காய்ச்சலுக்கு பயன்படுத்தகூடிய நிலவேம்பு காய்ச்சலை மட்டும் விரட்டி அடிக்காமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. கொரோனா அச்சத் தில் இருப்பவர்கள் வாரம் இருமுறை நிலவேம்பு நீர் குடிக்கலாம். இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. அருகிலிருக்கும் மருத்துவமனையில் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நிலவேம்பு பொடியை நீரில் கொதிக்கவிட்டு வடிகட்டி கால் தம்ளர் வீதம் குடிக்கலாம். நிலவேம்பு குடித்தால் கொரோனா வைரஸ் குணமாயிடும் என்பதற்காக அல்ல. இவை வைரஸை எதிர்த்து போரிடக்கூடியவை என்பதால் உடலை வலுப்படுத்தி கொள்ள நில வேம்பு குடிக்கலாம் என்று சொல்லலாம்.

​இறைச்சியால் பரவுமா?

இறைச்சி கூடத்திலிருந்து கரோனா வைரஸ் பரவியது என்பதால் மக்களிடம் இறைச்சி சாப்பிட்டாலே கரோனோ வந்துவிடும் என்ற சந்தேகம் இருந்துவருகிறது. ஆனால் நாம் இறைச்சியை நன்றாக வேக வைத்து தான் சாப்பிடுகிறோம். தவிர சீனர்களை போன்று அதிக வகையான விலங்குகளை நாம் உண்பதில்லை. அவர்களை போல் ரா-வாகவும் சாப்பிடுவதில்லை என்பதால் இந்த பயம் தேவையில்லை.

சுகாதாரமும் குறிப்பிட வேண்டிய விஷயம். குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் வெளியில் செல்லும் போது முகமூடி அணிந்துகொள்வதும், வெளியிலிருந்து வீட்டுக்கு வந்ததும் கை, முகத்தை சோப்பு போட்டு கழுவுவதும் முக்கியம். இதையும் மீறி அதிகப் படியான காய்ச்சல், சளி, இருமல், தும்மல், மூச்சுத்திணறல் அறிகுறி இருந்தால் தயங்கா மல் மற்றவர்களிடமிருந்து விலகி மருத்துவமனையை அணுகுவதும் அவசியம்.

இறுதியாக வெப்பமிகுந்த நம் நாட்டில் இந்த வைரஸ்தொற்று தீவிரமாக பரவ வாய்ப் பில்லை என்பதும் குறிப்பிடதக்கது. அதிலும் தற்போது கோடைக்காலத்தை நோக்கிய நம் பயணத்தில் கண்டிப்பாக இந்த கொரோனா வைரஸ் வேகமாக பயணிக்காது என்பதும் குறிப்பிடதக்கது. எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு வகைகளையும் பாதுகாப்பான நடவடிக்கைகளையும் கவனமாக மேற்கொள்ளும் போது கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாகாது என்பதே உண்மை.

  
  
   Bookmark and Share Seithy.com



மழைகாலத்தில் கமகமக்கும் நண்டு மசாலா: செட்டிநாடு சுவையில் எப்படி செய்வது?
[Friday 2026-10-23 16:00]

மழைக்காலத்திற்கு ஏற்ப நண்டு மசாலா செட்டிநாடு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் இவற்றினால் அவதிப்படுவார்கள். இவ்வாறு சளி மற்றும் இருமலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் உணவாக நண்டு இருக்கின்றது. நண்டு சூப் மட்டுமின்றி நண்டு மசாலாவும் மழைக்காலத்திற்கு ஏற்ற உணவாக இருக்கின்றது. செட்டிநாடு ஸ்டைலில் நண்டு மசாலா எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



உள்ளிருந்து கூந்தலைப் பராமரிக்க உதவும் 6 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!
[Thursday 2026-10-22 16:00]

அழகான, அடர்த்தியான மற்றும் வலிமையான கூந்தலைப் பெற வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால், கூந்தலின் ஆரோக்கியம் என்பது நாம் பயன்படுத்தும் எண்ணெய்கள், ஷாம்புகள் மற்றும் தலைமுடிப் பராமரிப்புப் பொருட்களை மட்டும் சார்ந்ததல்ல. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளும் கூந்தலின் வளர்ச்சியிலும் வலிமையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைப்பது அவசியம்.



கேஸ் அடுப்பின் அருகில் வைக்கக்கூடாத 6 பொருட்கள்!
[Wednesday 2026-10-21 16:00]

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் செல்வம், அமைதி மற்றும் நிம்மதியைப் பராமரிப்பதில் சமையலறைக்கு முக்கியப் பங்கு உள்ளது. சமையலறையில் நெருப்பின் ஆதாரமாக இருக்கும் கேஸ் அடுப்பின் அருகில் சில பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. வாஸ்து நம்பிக்கைகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காரணங்களுக்காகவும் சில பொருட்களை அடுப்பிலிருந்து தள்ளி வைப்பது அவசியம்.



தினமும் எலுமிச்சை நீர் அருந்துவது நல்லதா?
[Tuesday 2026-10-20 17:00]

பொதுவாகவே பலரும் தங்களது நாளை ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் அருந்துவதன் மூலம் தொடங்குகின்றனர். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதுடன், தண்ணீர் உடலில் நீர்ச்சத்தைப் பேணவும் உதவுகிறது. தினமும் மிதமான அளவில் எலுமிச்சை நீர் அருந்துவது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. குறிப்பாக, உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பேணுவதற்கு இது பெரிதும் துணைப்புரிகின்றது.



ஒருமுறை மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க!
[Monday 2026-10-19 15:00]

மட்டன் சுக்கா தேங்காய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர். சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.



நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்!
[Saturday 2026-10-17 17:00]

உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாகச் செயல்படுவதற்கு, சத்தான உணவுகளை அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக்கொள்வது முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்கும் இயற்கை உணவுகளில் நெல்லிக்காய்க்கு தனித்துவமான இடம் உண்டு. சிறிய அளவில் காணப்பட்டாலும், நெல்லிக்காயில் வைட்டமின் சி, பாலிஃபீனால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் சேர்மங்கள் நிறைந்துள்ளன.



தொப்பையை கரைக்கும் சௌசௌ காய் குழம்பு!
[Friday 2026-10-16 16:00]

பொதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்கள் பல்வேறு ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. அந்த வகையில், சௌசௌ காயிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்தும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சௌசௌ ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும். மேலும், இதில் உள்ள ஃபோலேட் (வைட்டமின் B9) உள்ளிட்ட சத்துக்கள் புதிய ரத்த அணுக்கள் உருவாகவும் உதவுகின்றன. இத்தனை நன்மைகள் நிறைந்த சௌசௌ காயை வைத்து, சுவையான பொரிச்ச குழம்பை எளிமையாக எப்படிச் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்!



நாவூரும் சுவையில் காரசாரமான பூண்டு ஊறுகாய்!
[Thursday 2026-10-15 16:00]

பொதுவாகவே, நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளுக்கு கூடுதல் சுவையையும், தனித்துவமான மணத்தையும் சேர்ப்பதில் ஊறுகாய்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. எலுமிச்சை ஊறுகாய், அன்னாசி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய் எனப் பலவிதமான ஊறுகாய்கள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான சுவையும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.



அவித்த முட்டையில் ஆம்லெட் செய்ய முடியுமா?
[Wednesday 2026-10-14 16:00]

முட்டையை அவித்த பின்பு அதனை ஆம்லேட்டாக செய்வது எவ்வாறு என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். புரதச்சத்து நிறைந்த முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் முட்டை என்றால் ஆம்லெட் தான் முதலில் நினைவிற்கு வருகின்றது. வீட்டில் என்னதான் சுவையாக குழம்பு இருந்தாலும் அருகில் ஒரு முட்டையை ஆம்லெட் போட்டு வைத்து சாப்பிட்டால் சாப்பாடு 5 நிமிடத்திற்குள் தட்டில் காலியாகிவிடும்.



வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
[Tuesday 2026-10-13 16:00]

தேங்காய் எண்ணெய் என்பது நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு இயற்கையான பொருள். தலைமுடியைப் பராமரிக்கவும், சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், சமையலுக்குப் பயன்படுத்தவும் என இது தொன்று தொட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. நம் பாட்டி, அம்மா காலத்திலிருந்தே வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் தற்காலத்தில், கடைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயின் தரம், தயாரிப்பு முறை ஆகியவற்றில் சற்று ஐயம் இருக்கத்தான் செய்கின்றது. அதிக விலை கொடுத்து வாங்கினாலும், இந்த தேங்காய் எண்ணெய் சுகாதாரமான முறையில் தயாரி்கப்படுகின்றதா என்பதும் கவப்படம் அற்றதா என்பதும் சந்தேகம் தான்.



தலையனைக்கு அடியில் பூண்டை வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்!
[Monday 2026-10-12 16:00]

இரவில் தூங்கும் போது பூண்டை தலையனைக்கு அடியில் வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மையைக் குறித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக சமையலுக்கு பழங்காலம் முதலே பூண்டை பயன்படுத்தி வருகின்றனர். ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியா, எகிப்து, கிரீஸ் போன்ற பழங்கால மக்கள் பூண்டை ஒரு மருந்தாகவே பார்த்தார்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் செரிமானத்தையும் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர்.



கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ்!
[Sunday 2026-10-11 16:00]

அசைவ உணவில் அனைவருக்கும் பிடித்த சிக்கனை வைத்து கேரளா ஸ்டைலில் சிக்கன் மப்பாஸ் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று சிக்கன் ஆகும். சிக்கனை கிரேவி, ப்ரை, 65 என பல விதமாக சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் கேரள ஸ்டைலில் சற்று வித்தியாசமான ரெசிபியான மப்பாஸ் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



சிக்கனில் ரசம் வைத்து சாப்பிட்டதுண்டா?
[Saturday 2026-10-10 17:00]

அசைவ பிரியர்கள் விரும்பும் சிக்கனில் ரசம் வைப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்களுக்கு விருப்பமாக இருக்கும் சிக்கன் குழம்பு மற்றும் கிரேவி செய்வதை நாம் அவதானித்திருப்போம். சிக்கனை வைத்து ரசம் சமைப்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்காது. இந்த பதிவில் சிக்கனில் ரசம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆசையா?
[Friday 2026-10-09 16:00]

காலை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் அன்றாடம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட தடையாக இருக்கலாம். மேலும் காலை வெறும்வயிற்றில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிகவும் முக்கியமானவைகள். நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, நம்மை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கியமாகும். இதற்கு சரியான உணவாக தெரிவு செய்வது மிகவும் முக்கியமாகும்.



வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடிங்க: உடல் எடை கடகடவென குறையும்!
[Thursday 2026-10-08 16:00]

காலை வெறும்வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மையைக் குறித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக காலை எழுந்ததும் நாம் செய்யும் சில செயல்கள் நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றது. அதிலும் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் பானங்கள் மிக முக்கியமாக இருக்கின்றது. ஆதலால் ஆரோக்கிய பழக்கங்களை நாம் பின்பற்றுவது அவசியம் ஆகும்.


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா