Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கொரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்வது எப்படி?..
[Tuesday 2020-03-31 17:00]

உலகம் முழுவதும் மிகவும் தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் 177 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 7,87,010 பேருக்குப் பரவியுள்ளது. 37,829 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 1,66,214ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1251ஆக உயர்ந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி ஒருவருக்கு பரவுகிறது? இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியுமா? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை.

கொரோனாவிலிருந்து நான் என்னை தற்காத்து கொள்வது எப்படி?

உங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். உங்கள் கைகளின் அனைத்து பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள். சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். உங்கள் கண்கள், மூக்குகள், மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள் எனவே அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும்.

கொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி?

நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள். கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள். டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள். கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள். காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.

உங்களுக்கு கொரோனா உள்ளது என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்திருந்தாலோ அல்லது பயணம் செய்தவருடன் தொடர்பில் இருந்தாலோ, விட்டிலேயே இருங்கள். குறிப்பாக உங்களுக்கு லேசாக ஏதேனும் அறிகுறி இருந்தாலோ அது சரியாகும் வரை பிறருடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். மாஸ்க் (முகக்கவசம்) அணிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மருத்துவரிடம் சென்றாலும் அது முழுமையாக உறுதிப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் வைரஸ் தொற்று ஏற்பட்டு அது அறிகுறிகள் காட்டுவதற்கு 14 நாட்கள் எடுத்துக் கொள்ளும். உங்கள் மாநில கொரோனா உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அதன் பின் சுகாதார அதிகாரிகள் உங்களின் மாதிரிகளை சேகரிப்பர். இந்தியாவில் தற்போது 15 சோதனை ஆய்வகங்கள் உள்ளன. உங்களுக்கு தொற்று இருப்பது தெரிந்தால் நீங்கள் தனிமை வார்டில் சிகிச்சை பெறுவீர்கள்.

கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?

இந்த கோவிட் 19 முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.

இந்த கோவிட் 19 தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம். பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக ஐந்து நாட்களில் தெரியலாம என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென் படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 என்றால் என்ன?

கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவை. அது மனிதர்கள் மற்றும் விலங்குகள் மத்தியில் பல நோய்களை உருவாக்கும். மனிதர்களில் இந்த கொரோனா வைரஸ் சளி முதல் சார்ஸ் வரையில் உண்டாக்கக்கூடியவை. தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த தொற்றுக்கு கோவிட்-19 என பெயரிட்டுள்ளனர். இந்த தொற்று சமீபமாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படுகிறது. இது விஞ்ஞானிகளால், சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் கொரோனா வைரஸ் 2 அல்லது Sars-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது.

கொரோனா ஏற்பட்டால் இறப்பு நிச்சயமா?

கொரோனா தொற்று குறித்த அச்சம் பரவலாக இருந்தாலும், இதனால் இறப்பு ஏற்படும் விகிதம் மிகவும் குறைவே. ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதம் வரையே இறப்பு விகிதம் என கூறப்படுகிறது. ஆனால் அதை உறுதியாக கூற முடியவில்லை.

56,000 நோயாளிகளிடம் உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்தது; அதில் கண்டறிந்தவை:

* 6% பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது என்றும் அவர்களுக்கு - நுரையீரல் பழுது, செப்டிக் ஷாக் (தொற்றிலிருந்து நம்மைக் காக்க நோய் எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் வெளியிடும் ரசாயனம் தவறாக நமக்கு ஆபத்தை உருவாக்கும் நிலை), உறுப்புகள் செயலிழப்பு மற்றும் இறப்பு ஏற்படும் ஆபத்து ஆகியவை தென்படுகிறது.

* 14% பேருக்கு தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன. - சுவாப்பதில் சிரமம் மற்றும் நுரையீரலுக்குள் சரியாக காற்று செல்லாமை

* 80% பேருக்கு மிதமான அறிகுறிகள் - காய்ச்சல், இருமல் சிலருக்கு நிமோனியாவும் இருக்கலாம்.

வயதானவர்கள், ஆஸ்துமா, நீரிழிவு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம்.

கொரோனாவை குணப்படுத்த முடியுமா?

தற்சமயம் கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து இல்லை. இருப்பினும் ஆய்வாளர்கள் மருந்து கண்டுபிடித்து விலங்குகளில் சோதனை செய்து வருகின்றனர் அது சரியாக இருந்தால் பின் மனிதர்களிடத்தில் சோதனை செய்யப்படும். விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்தாலும் அது அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். கோவிட் 19 வைரஸ் என்பதால் ஆண்டி பாக்டீரியல் மருந்து (பாக்டீரியாவை அழிக்கும் மருந்து)) செயல்படாது.

கொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி நன்றாக கைகளை சுத்தம் செய்வது. சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.

கொரோனா எங்கிருந்து வந்தது?

இந்த SARS-COV-2 வைரஸ் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள விலங்குகள் சந்தையிலிருந்து, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எந்த விலங்கு என்று இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் வெளவால்கள் மூலம் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கொரோனா தொற்று எவ்வாறு பரவுகிறது?

கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரும்பும்போது, அந்த வைரஸ் காற்றில் கலக்கலாம். இதை சுவாசித்தாலோ அல்லது அந்த வைரஸ் துகள்கள் பட்ட இடத்தை தொட்டு பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொட்டாலோ தொற்று ஏற்படலாம். இரும்பும் போதோ அல்லது தும்மலின் போதோ டிஷ்யூ வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் முகத்தை தொடக்கூடாது. மேலும் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து தள்ளி இருத்தல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் மலத்திலிருந்து இந்த வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுபரவலை தடுப்பது எவ்வாறு?

உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்றாக அறிவித்துள்ளது. Pandemic என்பது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் மக்களிடையே பரவும் தொற்றாகும். உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் நிலையின் ஆபத்தை விவரிக்கவே இந்த பதம் இப்போது பயன்படுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், சில நாடுகள் கட்டுப்படுத்தும் திறன் இல்லாமலும் ,வளம் இல்லாமலும், பிரச்சனைகளை தீர்க்க முடியாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன என்கிறார். எனவே உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளிடமும், உடனடி சிகிச்சை தரும் முறையை உயர்த்தவும், மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றி கொள்ளும் முறை குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கவும் கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி, சோதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் எடுத்துரைப்பதாக கூறியுள்ளது.

மாஸ்க் அணிவது பயன் தருமா?

காற்றில் உலவும் பாக்டீரியா அல்லது வைரஸை தடுப்பதற்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் மாஸ்க் பெரிய பலனை தராது. அந்த மாஸ்க் அழுத்தமாக இருக்காது என்பதாலும், அதில் காற்று தடுப்பான் இல்லை என்பதாலும், கண்கள் மூடப்படாது என்பதால் அவ்வளவு பலனை தராது. என்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தின் டேவிட் காரிங்டன்

உங்களை நீங்களே எவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்ளலாம்?

நீங்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பள்ளி, பணி மற்றும் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது. மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடமிருந்து தள்ளி இருங்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com



மழைகாலத்தில் கமகமக்கும் நண்டு மசாலா: செட்டிநாடு சுவையில் எப்படி செய்வது?
[Friday 2026-10-23 16:00]

மழைக்காலத்திற்கு ஏற்ப நண்டு மசாலா செட்டிநாடு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் இவற்றினால் அவதிப்படுவார்கள். இவ்வாறு சளி மற்றும் இருமலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் உணவாக நண்டு இருக்கின்றது. நண்டு சூப் மட்டுமின்றி நண்டு மசாலாவும் மழைக்காலத்திற்கு ஏற்ற உணவாக இருக்கின்றது. செட்டிநாடு ஸ்டைலில் நண்டு மசாலா எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



உள்ளிருந்து கூந்தலைப் பராமரிக்க உதவும் 6 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!
[Thursday 2026-10-22 16:00]

அழகான, அடர்த்தியான மற்றும் வலிமையான கூந்தலைப் பெற வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால், கூந்தலின் ஆரோக்கியம் என்பது நாம் பயன்படுத்தும் எண்ணெய்கள், ஷாம்புகள் மற்றும் தலைமுடிப் பராமரிப்புப் பொருட்களை மட்டும் சார்ந்ததல்ல. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளும் கூந்தலின் வளர்ச்சியிலும் வலிமையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைப்பது அவசியம்.



கேஸ் அடுப்பின் அருகில் வைக்கக்கூடாத 6 பொருட்கள்!
[Wednesday 2026-10-21 16:00]

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் செல்வம், அமைதி மற்றும் நிம்மதியைப் பராமரிப்பதில் சமையலறைக்கு முக்கியப் பங்கு உள்ளது. சமையலறையில் நெருப்பின் ஆதாரமாக இருக்கும் கேஸ் அடுப்பின் அருகில் சில பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. வாஸ்து நம்பிக்கைகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காரணங்களுக்காகவும் சில பொருட்களை அடுப்பிலிருந்து தள்ளி வைப்பது அவசியம்.



தினமும் எலுமிச்சை நீர் அருந்துவது நல்லதா?
[Tuesday 2026-10-20 17:00]

பொதுவாகவே பலரும் தங்களது நாளை ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் அருந்துவதன் மூலம் தொடங்குகின்றனர். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதுடன், தண்ணீர் உடலில் நீர்ச்சத்தைப் பேணவும் உதவுகிறது. தினமும் மிதமான அளவில் எலுமிச்சை நீர் அருந்துவது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. குறிப்பாக, உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பேணுவதற்கு இது பெரிதும் துணைப்புரிகின்றது.



ஒருமுறை மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க!
[Monday 2026-10-19 15:00]

மட்டன் சுக்கா தேங்காய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர். சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.



நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்!
[Saturday 2026-10-17 17:00]

உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாகச் செயல்படுவதற்கு, சத்தான உணவுகளை அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக்கொள்வது முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்கும் இயற்கை உணவுகளில் நெல்லிக்காய்க்கு தனித்துவமான இடம் உண்டு. சிறிய அளவில் காணப்பட்டாலும், நெல்லிக்காயில் வைட்டமின் சி, பாலிஃபீனால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் சேர்மங்கள் நிறைந்துள்ளன.



தொப்பையை கரைக்கும் சௌசௌ காய் குழம்பு!
[Friday 2026-10-16 16:00]

பொதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்கள் பல்வேறு ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. அந்த வகையில், சௌசௌ காயிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்தும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சௌசௌ ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும். மேலும், இதில் உள்ள ஃபோலேட் (வைட்டமின் B9) உள்ளிட்ட சத்துக்கள் புதிய ரத்த அணுக்கள் உருவாகவும் உதவுகின்றன. இத்தனை நன்மைகள் நிறைந்த சௌசௌ காயை வைத்து, சுவையான பொரிச்ச குழம்பை எளிமையாக எப்படிச் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்!



நாவூரும் சுவையில் காரசாரமான பூண்டு ஊறுகாய்!
[Thursday 2026-10-15 16:00]

பொதுவாகவே, நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளுக்கு கூடுதல் சுவையையும், தனித்துவமான மணத்தையும் சேர்ப்பதில் ஊறுகாய்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. எலுமிச்சை ஊறுகாய், அன்னாசி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய் எனப் பலவிதமான ஊறுகாய்கள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான சுவையும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.



அவித்த முட்டையில் ஆம்லெட் செய்ய முடியுமா?
[Wednesday 2026-10-14 16:00]

முட்டையை அவித்த பின்பு அதனை ஆம்லேட்டாக செய்வது எவ்வாறு என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். புரதச்சத்து நிறைந்த முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் முட்டை என்றால் ஆம்லெட் தான் முதலில் நினைவிற்கு வருகின்றது. வீட்டில் என்னதான் சுவையாக குழம்பு இருந்தாலும் அருகில் ஒரு முட்டையை ஆம்லெட் போட்டு வைத்து சாப்பிட்டால் சாப்பாடு 5 நிமிடத்திற்குள் தட்டில் காலியாகிவிடும்.



வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
[Tuesday 2026-10-13 16:00]

தேங்காய் எண்ணெய் என்பது நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு இயற்கையான பொருள். தலைமுடியைப் பராமரிக்கவும், சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், சமையலுக்குப் பயன்படுத்தவும் என இது தொன்று தொட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. நம் பாட்டி, அம்மா காலத்திலிருந்தே வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் தற்காலத்தில், கடைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயின் தரம், தயாரிப்பு முறை ஆகியவற்றில் சற்று ஐயம் இருக்கத்தான் செய்கின்றது. அதிக விலை கொடுத்து வாங்கினாலும், இந்த தேங்காய் எண்ணெய் சுகாதாரமான முறையில் தயாரி்கப்படுகின்றதா என்பதும் கவப்படம் அற்றதா என்பதும் சந்தேகம் தான்.



தலையனைக்கு அடியில் பூண்டை வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்!
[Monday 2026-10-12 16:00]

இரவில் தூங்கும் போது பூண்டை தலையனைக்கு அடியில் வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மையைக் குறித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக சமையலுக்கு பழங்காலம் முதலே பூண்டை பயன்படுத்தி வருகின்றனர். ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியா, எகிப்து, கிரீஸ் போன்ற பழங்கால மக்கள் பூண்டை ஒரு மருந்தாகவே பார்த்தார்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் செரிமானத்தையும் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர்.



கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ்!
[Sunday 2026-10-11 16:00]

அசைவ உணவில் அனைவருக்கும் பிடித்த சிக்கனை வைத்து கேரளா ஸ்டைலில் சிக்கன் மப்பாஸ் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று சிக்கன் ஆகும். சிக்கனை கிரேவி, ப்ரை, 65 என பல விதமாக சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் கேரள ஸ்டைலில் சற்று வித்தியாசமான ரெசிபியான மப்பாஸ் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



சிக்கனில் ரசம் வைத்து சாப்பிட்டதுண்டா?
[Saturday 2026-10-10 17:00]

அசைவ பிரியர்கள் விரும்பும் சிக்கனில் ரசம் வைப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்களுக்கு விருப்பமாக இருக்கும் சிக்கன் குழம்பு மற்றும் கிரேவி செய்வதை நாம் அவதானித்திருப்போம். சிக்கனை வைத்து ரசம் சமைப்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்காது. இந்த பதிவில் சிக்கனில் ரசம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆசையா?
[Friday 2026-10-09 16:00]

காலை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் அன்றாடம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட தடையாக இருக்கலாம். மேலும் காலை வெறும்வயிற்றில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிகவும் முக்கியமானவைகள். நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, நம்மை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கியமாகும். இதற்கு சரியான உணவாக தெரிவு செய்வது மிகவும் முக்கியமாகும்.



வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடிங்க: உடல் எடை கடகடவென குறையும்!
[Thursday 2026-10-08 16:00]

காலை வெறும்வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மையைக் குறித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக காலை எழுந்ததும் நாம் செய்யும் சில செயல்கள் நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றது. அதிலும் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் பானங்கள் மிக முக்கியமாக இருக்கின்றது. ஆதலால் ஆரோக்கிய பழக்கங்களை நாம் பின்பற்றுவது அவசியம் ஆகும்.


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா