Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் 5 முக்கிய வழிமுறைகள்!
[Wednesday 2020-04-01 17:00]

உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் அதிகரிக்கிறது. ஏராளமான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற தடைகள் அமலில் உள்ள நிலையில், பல நாடுகளிலும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் ரத்து செய்யப்படுகின்றன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த தொற்றின் கடும் பாதிப்பை, ஐரோப்பிய நாடுகள் பலவும் சந்தித்து வரும் நிலையில், லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது.

அதேவேளையில் இந்த வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை சில நாடுகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன. மார்ச் 23 வரையிலான காலகட்டத்தில் ஏறத்தாழ 15,000 பேர் இறந்துள்ள நிலையில், உலக அளவில் 4 லட்சம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அருகே தங்கள் நாடு இருந்தபோதிலும், பல ஆசிய நாடுகள் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன. இது குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்று நோய்கள் தொடர்பான ஆராய்ச்சி பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் டால்பர்ட் யென்ஸ்வா கூறுகையில், ''இந்த நாடுகளில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தீவிரமானவை. மற்றவர்கள் இதனை கற்றுக் கொள்ளவேண்டும்'' என்று தெரிவித்தார்.

''இந்த தொற்று ஆரம்பமான சீனாவை மட்டுமே நான் உதாரணமாகக் கூறவில்லை.மற்ற சில நாடுகளும் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்துள்ளன'' என்று அவர் மேலும் கூறினார். தைவான், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஹாங்காங் பிராந்தியத்தில் எடுக்கப்பட்ட தொற்று பரவல் நடவடிக்கைகள் மற்றும் அதன் விளைவுகள் உதாரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. இந்த நாடுகள் கடைப்பிடித்த 5 முக்கிய தடுப்பு நடவடிக்கைகளை யென்ஸ்வா பட்டியலிட்டுள்ளார்.

1. பரிசோதனை, பரிசோதனை, மீண்டும் பரிசோதனை

ஆரம்பத்திலேயே கண்டறிவது இந்த தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒரு முக்கிய காரணியாக விளங்கும் என்று உலக சுகாதார நிறுவனமும், பிபிசியிடம் பேசிய நிபுணர்களும் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். ''எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியாமல், இந்த வைரஸின் முழு தாக்கம் குறித்தோ, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தோ எந்த முடிவுக்கும் வர முடியாது'' என்று யென்ஸ்வா கூறினார்.

அமெரிக்காவின் டெம்பிள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்று நோய்கள் ஆராய்ச்சி பிரிவு பேராசிரியரான ஜான்சன் கூறுகையில், ''தினமும் 10,000க்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் தென் கொரியா, இரண்டு நாட்களில் சில நாடுகள் ஒரு மாதத்தில் மேற்கொள்ளும் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் விஞ்சி விடுகிறது என்று குறிப்பிட்டார்.

இதேபோல் அதிக அளவில் பரிசோதனை செய்வதே கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒரு முக்கிய வழி என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் பலமுறைகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ''அனைத்து நாடுகளுக்கும் ஒரு முக்கிய செய்தி, பரிசோதனை, பரிசோதனை, பரிசோதனை செய்யுங்கள் என்பதே'' என மார்ச் மாத தொடக்கத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை பலனைத் தரும் என அவர் குறிப்பிட்டார்.

2. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தல்

'கொரோனா தொற்று பாதிப்பு இருப்பவர்களைச் சரியாக இனம் காணுதல், , பரிசோதனைக்கு உட்படுத்துதல், மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவது எனப் பல அம்சங்களிலும் சீனா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன'' என்று ஜான்சன் குறிப்பிட்டார். பரிசோதனை செய்வது பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தவும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் மட்டுமல்ல, புதிதாகப் பாதிக்கப்படுபவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும் பயன்படுகிறது. சரியாக இனம்கண்டு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி, அதனால் அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிப்பது என கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைச் சிறப்பாகவும், மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டு வரும் சீனாவால் தங்கள் நாட்டில் பெருமளவு பாதிப்புகளைக் குறைக்க முடிந்ததாக ஜான்சன் தெரிவித்தார்.

அதேவேளையில் தைவான், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகியவை வேறு முறைகளைக் கடைப்பிடிக்கின்றன. கொரோனா தொற்று இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை அவர்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்தும் இந்நாடுகள், யாரேனும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களுக்கு 3000 அமெரிக்க டாலர்கள் அளவுக்கு அபராதமும் விதிக்கின்றன. ''ஒரு சிறந்த உதாரணம் கூற வேண்டுமானால், கடந்த மார்ச் 12-ஆம் தேதியன்று, ஹாங்காங்கில் 445 பேருக்கு கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், அங்கு சுமார் 14,900 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இந்த அளவு அதிக நபர்களுக்குப் பரிசோதனை செய்ததற்குக் காரணம் எந்த வாய்ப்பையும் அவர்கள் புறக்கணிக்கவில்லை என்பதுதான். இதில் 19 பேருக்கும் மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது'' என்று யென்ஸ்வா குறிப்பிட்டார்.

3. தயார் நிலை மற்றும் விரைந்து நடவடிக்கைகள் எடுப்பது

அண்மையில் மேற்கு ஆப்ரிக்காவில் இபோலா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின்போது அங்கு பணிபுரிந்த யென்ஸ்வா, வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் முக்கியம் விரைந்து நடவடிக்கைகள் எடுப்பது. மக்களை அது தாக்கும் முன், நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைவுகூர்ந்தார். ''தைவான் மற்றும் சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட அதிவிரைவு நடவடிக்கைகள் அந்நாடுகளில் வைரஸ் பரவலைப் பெரிதளவு கட்டுப்படுத்த உதவியது'' என்று அவர் மேலும் கூறினார்.

இது போன்ற ஒரு தொற்று பிரச்சினையைக் கடந்த 2003-இல் தைவான் சந்தித்துள்ளது, அங்கு விரைவான நடவடிக்கைகள் எடுப்பதற்கும், வைரஸ் தொற்று தொடர்பான கட்டுப்பாட்டு மையம் அமைக்கவும் காரணமாக அமைந்தது. ''தொற்று பரவலின் ஆரம்பக் கட்டங்களில் விரைந்து நடவடிக்கைகள் எடுப்பது மட்டுமே பயன் தரும். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இது போன்ற அதிவிரைவு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காரணம் இதனைச் சந்திக்க அந்த நாடுகள் தயார் நிலையில் இல்லை'' என்றார் அவர். ''நடவடிக்கைகள் எடுக்கும் நேரம், விரைந்து செயல்படுதல் ஆகியவை மிகவும் அவசியம்'' என யென்ஸ்வா மேலும் கூறினார்.

4. சமூக இடைவெளியை கடைப்பிடித்தல்

''ஒரு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்கனவே இருக்கும் பட்சத்தில், வழக்கமான கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மட்டும் போதாது'' என யென்ஸ்வா கூறுகிறார். இப்படிப்பட்ட சமயத்தில் தைவான், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கடைப்பிடிக்கப்பட்டது போல சமூக இடைவெளியைப் பராமரிப்பது மட்டுமே சிறந்த பயனைத் தரும். ஹாங்காங்கில் வீட்டிலிருந்தே பணியாற்ற மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.மேலும் அங்குப் பள்ளிகள் மூடப்பட்டன. பொது நிகழ்வுகள் பலவும் ரத்து செய்யப்பட்டன. சிங்கப்பூரில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு இருந்த போதிலும், சமூக இடைவெளி சிறப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டது.

5. சுகாதாரம் பேணுவது

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தவிர்க்க அடிக்கடி கைகளைக் கழுவுவது மற்றும் தூய்மையாக இருத்தல் அவசியம் என உலக சுகாதார மையம் கூறுகிறது. ''2003 சார்ஸ் வைரஸ் பாதிப்பிலிருந்து பல ஆசிய நாடுகளும் அனுபவம் பெற்றுள்ளன. சிறந்த முறையில் சுகாதாரத்தைப் பராமரிப்பது மக்களைப் பிணியிலிருந்து காக்கும். மற்றவர்களுக்கும் இது பரவுவதைத் தடுக்கும்'' என யென்ஸ்வா தெரிவித்தார்.

சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் தைவானில் சாலைகளில் பாக்டீரியாக்களை ஒடுக்கும் திரவங்கள் அடங்கிய மையங்களைக் காணலாம். அதேபோல் முக கவசம் அணிவதும் இங்கு இயல்பான ஒன்றாக உள்ளது. முக கவசம் அணிந்திருப்பவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதை முக கவசங்கள் தடுக்க இயலாது என்றபோதிலும் அவர்கள் மூலம் மற்றவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க இயலும்.

  
  
   Bookmark and Share Seithy.com



மழைகாலத்தில் கமகமக்கும் நண்டு மசாலா: செட்டிநாடு சுவையில் எப்படி செய்வது?
[Friday 2026-10-23 16:00]

மழைக்காலத்திற்கு ஏற்ப நண்டு மசாலா செட்டிநாடு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் இவற்றினால் அவதிப்படுவார்கள். இவ்வாறு சளி மற்றும் இருமலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் உணவாக நண்டு இருக்கின்றது. நண்டு சூப் மட்டுமின்றி நண்டு மசாலாவும் மழைக்காலத்திற்கு ஏற்ற உணவாக இருக்கின்றது. செட்டிநாடு ஸ்டைலில் நண்டு மசாலா எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



உள்ளிருந்து கூந்தலைப் பராமரிக்க உதவும் 6 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!
[Thursday 2026-10-22 16:00]

அழகான, அடர்த்தியான மற்றும் வலிமையான கூந்தலைப் பெற வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால், கூந்தலின் ஆரோக்கியம் என்பது நாம் பயன்படுத்தும் எண்ணெய்கள், ஷாம்புகள் மற்றும் தலைமுடிப் பராமரிப்புப் பொருட்களை மட்டும் சார்ந்ததல்ல. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளும் கூந்தலின் வளர்ச்சியிலும் வலிமையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைப்பது அவசியம்.



கேஸ் அடுப்பின் அருகில் வைக்கக்கூடாத 6 பொருட்கள்!
[Wednesday 2026-10-21 16:00]

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் செல்வம், அமைதி மற்றும் நிம்மதியைப் பராமரிப்பதில் சமையலறைக்கு முக்கியப் பங்கு உள்ளது. சமையலறையில் நெருப்பின் ஆதாரமாக இருக்கும் கேஸ் அடுப்பின் அருகில் சில பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. வாஸ்து நம்பிக்கைகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காரணங்களுக்காகவும் சில பொருட்களை அடுப்பிலிருந்து தள்ளி வைப்பது அவசியம்.



தினமும் எலுமிச்சை நீர் அருந்துவது நல்லதா?
[Tuesday 2026-10-20 17:00]

பொதுவாகவே பலரும் தங்களது நாளை ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் அருந்துவதன் மூலம் தொடங்குகின்றனர். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதுடன், தண்ணீர் உடலில் நீர்ச்சத்தைப் பேணவும் உதவுகிறது. தினமும் மிதமான அளவில் எலுமிச்சை நீர் அருந்துவது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. குறிப்பாக, உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பேணுவதற்கு இது பெரிதும் துணைப்புரிகின்றது.



ஒருமுறை மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க!
[Monday 2026-10-19 15:00]

மட்டன் சுக்கா தேங்காய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர். சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.



நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்!
[Saturday 2026-10-17 17:00]

உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாகச் செயல்படுவதற்கு, சத்தான உணவுகளை அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக்கொள்வது முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்கும் இயற்கை உணவுகளில் நெல்லிக்காய்க்கு தனித்துவமான இடம் உண்டு. சிறிய அளவில் காணப்பட்டாலும், நெல்லிக்காயில் வைட்டமின் சி, பாலிஃபீனால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் சேர்மங்கள் நிறைந்துள்ளன.



தொப்பையை கரைக்கும் சௌசௌ காய் குழம்பு!
[Friday 2026-10-16 16:00]

பொதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்கள் பல்வேறு ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. அந்த வகையில், சௌசௌ காயிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்தும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சௌசௌ ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும். மேலும், இதில் உள்ள ஃபோலேட் (வைட்டமின் B9) உள்ளிட்ட சத்துக்கள் புதிய ரத்த அணுக்கள் உருவாகவும் உதவுகின்றன. இத்தனை நன்மைகள் நிறைந்த சௌசௌ காயை வைத்து, சுவையான பொரிச்ச குழம்பை எளிமையாக எப்படிச் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்!



நாவூரும் சுவையில் காரசாரமான பூண்டு ஊறுகாய்!
[Thursday 2026-10-15 16:00]

பொதுவாகவே, நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளுக்கு கூடுதல் சுவையையும், தனித்துவமான மணத்தையும் சேர்ப்பதில் ஊறுகாய்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. எலுமிச்சை ஊறுகாய், அன்னாசி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய் எனப் பலவிதமான ஊறுகாய்கள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான சுவையும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.



அவித்த முட்டையில் ஆம்லெட் செய்ய முடியுமா?
[Wednesday 2026-10-14 16:00]

முட்டையை அவித்த பின்பு அதனை ஆம்லேட்டாக செய்வது எவ்வாறு என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். புரதச்சத்து நிறைந்த முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் முட்டை என்றால் ஆம்லெட் தான் முதலில் நினைவிற்கு வருகின்றது. வீட்டில் என்னதான் சுவையாக குழம்பு இருந்தாலும் அருகில் ஒரு முட்டையை ஆம்லெட் போட்டு வைத்து சாப்பிட்டால் சாப்பாடு 5 நிமிடத்திற்குள் தட்டில் காலியாகிவிடும்.



வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
[Tuesday 2026-10-13 16:00]

தேங்காய் எண்ணெய் என்பது நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு இயற்கையான பொருள். தலைமுடியைப் பராமரிக்கவும், சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், சமையலுக்குப் பயன்படுத்தவும் என இது தொன்று தொட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. நம் பாட்டி, அம்மா காலத்திலிருந்தே வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் தற்காலத்தில், கடைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயின் தரம், தயாரிப்பு முறை ஆகியவற்றில் சற்று ஐயம் இருக்கத்தான் செய்கின்றது. அதிக விலை கொடுத்து வாங்கினாலும், இந்த தேங்காய் எண்ணெய் சுகாதாரமான முறையில் தயாரி்கப்படுகின்றதா என்பதும் கவப்படம் அற்றதா என்பதும் சந்தேகம் தான்.



தலையனைக்கு அடியில் பூண்டை வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்!
[Monday 2026-10-12 16:00]

இரவில் தூங்கும் போது பூண்டை தலையனைக்கு அடியில் வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மையைக் குறித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக சமையலுக்கு பழங்காலம் முதலே பூண்டை பயன்படுத்தி வருகின்றனர். ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியா, எகிப்து, கிரீஸ் போன்ற பழங்கால மக்கள் பூண்டை ஒரு மருந்தாகவே பார்த்தார்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் செரிமானத்தையும் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர்.



கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ்!
[Sunday 2026-10-11 16:00]

அசைவ உணவில் அனைவருக்கும் பிடித்த சிக்கனை வைத்து கேரளா ஸ்டைலில் சிக்கன் மப்பாஸ் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று சிக்கன் ஆகும். சிக்கனை கிரேவி, ப்ரை, 65 என பல விதமாக சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் கேரள ஸ்டைலில் சற்று வித்தியாசமான ரெசிபியான மப்பாஸ் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



சிக்கனில் ரசம் வைத்து சாப்பிட்டதுண்டா?
[Saturday 2026-10-10 17:00]

அசைவ பிரியர்கள் விரும்பும் சிக்கனில் ரசம் வைப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்களுக்கு விருப்பமாக இருக்கும் சிக்கன் குழம்பு மற்றும் கிரேவி செய்வதை நாம் அவதானித்திருப்போம். சிக்கனை வைத்து ரசம் சமைப்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்காது. இந்த பதிவில் சிக்கனில் ரசம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆசையா?
[Friday 2026-10-09 16:00]

காலை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் அன்றாடம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட தடையாக இருக்கலாம். மேலும் காலை வெறும்வயிற்றில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிகவும் முக்கியமானவைகள். நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, நம்மை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கியமாகும். இதற்கு சரியான உணவாக தெரிவு செய்வது மிகவும் முக்கியமாகும்.



வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடிங்க: உடல் எடை கடகடவென குறையும்!
[Thursday 2026-10-08 16:00]

காலை வெறும்வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மையைக் குறித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக காலை எழுந்ததும் நாம் செய்யும் சில செயல்கள் நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றது. அதிலும் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் பானங்கள் மிக முக்கியமாக இருக்கின்றது. ஆதலால் ஆரோக்கிய பழக்கங்களை நாம் பின்பற்றுவது அவசியம் ஆகும்.


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா