Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கொரோனா நம்மை நெருங்காமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவு வகைகள்!
[Sunday 2020-04-05 20:00]

தீவிரமடைந்துவரும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க உடலில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். நமது உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் உணவு பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் நாம் அன்றாடம் எடுத்துகொள்ள வேண்டிய உணவு பொருள்களையும் சத்தானதாகத்தான் எடுத்துகொள்கிறோம். ஆனால் உரிய முறையில் திட்டமிட்டு எடுத்துகொள்வதன் மூலம் ஆயுள் முழுமைக்கும் நோய் நொடியின்றி நலமாக வாழலாம். ஆம், ஆரோக்கியமான உணவுகள் என்று பல உணவுகள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கீரைகள், புரதம் நிறைந்த இறைச்சிகள். உலர் பருப்புகள், பால் பொருள்கள், கொட்டைகள் என சத்திலும் சத்து மிக்க உணவுகள் பலவும் உண்டு. அப்படி தினமும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப்பொருள்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

ஆண்டுதோறும் ஏதாவது சில உயிர்க் கொல்லிகள், புதுப்புது வைரஸ்கள் தோன்றி நம்மைத் தாக்கிக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றால் நிறைய உயிரிழப்புகளும் பாதிப்புகளும் உண்டாகின்றன. அந்த வகையில் தற்போது நம்மை அச்சுறுத்திக் கொண்டிருப்பது கொரோனா வைரஸ். இதுபோன்ற கொடிய வைரஸ்கள் நம்மைத் தாக்காமல் இருக்க வேண்டுமென்றால், நம்முடைய உடலின் எதிர்ப்பு ஆற்றலைப் பெருக்க வேண்டும். அதற்கு சிறந்த வழி உணவு தான். உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் இந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். கொரோனா போன்ற எந்த வைரஸ்களும் உங்களைத் தாக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

​பானங்களில் சிறந்தது

சிறுவயது முதல் பால், பால் பொருள்களை எடுத்துகொள்வது வழக்கம். ஏனெனில் பால் பொருள்களில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. அன்றாடம் பால் குடிக்கும் குழந்தை பருவத்தில் தினமும் பால் குடிப்பவர்கள் கூட வளர்ந்த பிறகு பால் குடிப்பதை தவிர்த்துவிடுகிறார்கள்.

அதே நேரம் பால் மிகவும் நல்லது என்பதால் அதிக அளவு பால் எடுப்பதும் நல்லதல்ல. கொழுப்பு நிறைந்த பால் உடல் எடையை அதிகரிக்கவும் டைப்-2 சர்க்கரை நோய்க்கும் வழி வகுக்க வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது. நாட்டு மாடுகளுக்கு கொடுக்கப்படும் புண்ணாக்கு, தவிடு, புல் போன்றவற்றால் இந்த பாலிலிருந்து வைட்டமின் கே 2, லினோலெயிக் அமிலம் கிடைக்கும்.

​​பால் பொருள்கள்

கால்சியம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த பாலில் வைட்டமின்கள் தாதுக்கள், விலங்குகளின் புரதம் நிறைந்திருக்கிறது. அதனால் தினமும் ஒரு கப் பால் எடுத்துகொள்ள வேண்டும். பால்களில் மட்டும் அல்லாமல் பாலிலிருந்து பெறக்கூடிய ஊட்டசத்துகளை சிறிதும் குறைவில்லாமல் பால் பொருள்களிலும் பெறலாம். வெண்ணெய் என்று சொல்லக்கூடிய பாலாடைக்கட்டியில் முழுகப் பாலில் இருக்கும் சத்து பெறலாம். பால் சுவையை விரும் பாதவர்கள் சுவையான உணவில் பாலாடைக் கட்டி சேர்த்து சாப்பிடுவதன் மூலம் சத்தை முழுமையாக பெறலாம்.

​தயிர்

பாலிலிருந்து பெறக்கூடிய உணவு பொருள் இதுதான். பாலை பக்குவப்படுத்தும் போது உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிரிகள் உருவாகி தயிராக மாறுகிறது. தயிரில் கூடுதலாக புரோபயாடிக் சத்து நிறைந்திருக்கிறது. பால் ஒவ்வாமையை உண்டாக்கும் என்று சொல்பவர்கள் தினமும் உணவில் தயிர் அல்லது தயிரை கடைந்து மோர் சேர்த்து வருவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

​கொழுப்பு

உடலுக்கு கொழுப்பும், எண்ணெயும் தேவைப்படுகின்றன. இவை ஹார்மோன், வைட்ட மின் டி , செரிமானம் போன்றவற்றுக்கு கொழுப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் தாவர எண்ணெய்களிலிருந்து இவற்றை பெறலாம். வெண்ணெய் உடலுக்கு நன்மை தரும் கொழுப்பை கொண்டவை. ஆனால் இவை பசுமாட்டிலிருந்து பெறப்பட்ட பாலிலிருந்து தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் வைட்டமின் கே 2 உட்பட பல வைட்டமின்கள் அடங்கிய சத்துகளை பெற்றுவிடலாம்.

​எண்ணெய்

பொதுவாக தாவரங்களிலிருந்து எண்ணெய் வித்துகளை பெறுகிறோம். கடுகு எண் ணெய், சூரிய காந்தி எண்ணெய், கடலை எண்ணெய், எள் எண்ணெய், தேங்காய் எண் ணெய் என்று பலவகைகளை பயன்படுத்துகிறோம். இதில் தேங்காயெண்ணெய் அதிகம் பயன்படுத்தலாம் என்கிறார்கள். ஏனெனில் பிற எண்ணையோடு ஒப்பிடுகையில் இதில் Medium-chain triglycerides (MCTs) இதன் அளவு அதிகமுள்ளது. மேலும் இந்த என்ணெயை தொடர்ந்து எடுத்துகொள்ளும் போது வயதான பிறகு வரக்கூடிய அல்சைமர் நோய் தடுக்கப்படும். தேங்காயெண்ணெய் உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்கவும் உதவும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​​ஆலிவ் எண்ணெய்

தாவர எண்ணெயில் மற்றுமொரு எண்ணெய் ஆலிவ் எண்ணெய். ஆரோக்கியமான தாவர எண்ணெய் என்று அழைக்கப்படும் இது இதயத்துக்கு நல்லது செய்யும் ஆரோக் கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளைக் கொண்டிருக்கிறது. ஆண்டி ஆக்சிடெண்ட் நிறைந்த இவை உடலுக்கு நன்மையை தருகிறது.

​​பருப்பு வகைகள்

புரதங்கள் நிறைந்த பருப்பு வகைகளையும் உணவில் சேர்த்து வர வேண்டும். இவை உடல் ஊட்டச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவக்கூடியவை. அசைவம் விரும்பாதவர்களுக்கு வேண் டிய புரதச்சத்தை இந்த வகையான தாவரங்களிலிருந்து பெற்றுவிடலாம். பச்சை பீன்ஸ், சிறுநீரக பீன்ஸ் போன்றவற்றை அவ்வபோது எடுத்துகொள்வது அவசியம். இவற்றை உலர வைக்காமல் பச்சையாக இருக்கும் போதே எடுத்துகொள்வதன் மூலம் இதிலிருக் கும் இரும்புச்சத்து, வைட்டமின் சத்துகளை நிறைவாக கொண்டிருக்கும். இவை தவிர பருப்பு வகைகளையும் எடுத்துகொள்வதன் மூலம் புரதச்சத்தை இழக்காமல் இருக்க லாம்.

​தானியங்கள்

சமீப கால ஆய்வுகளில் தானியங்கள் ஆரோக்கியமானவையாக பரிந்துரைக்கப்படு கிறது. இவை அதிக அளவு கார்போ ஹைட்ரேட் உணவாக இருக்கிறது. எனினும் இவற்றை குறைந்த அளவிலேனும் எடுத்துகொள்வதை தவிர்க்க வேண்டாம் என்றும் பரிந்துரை கப்படுகிறது. பாலீஷ் செய்யப்படாத பழுப்பு அரிசியை இன்று ஆரோக்கியமான உணவாக அறிவுறுத் துகிறார்கள். இதில் நார்ச்சத்தும் வைட்டமின் பி1, மெக்னீஷியம் சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அரிசி உணவுகளை எடுத்துகொள்பவர்களுக்கு இவை மிகவும் சிறந்த தீர்வாக இருக்கும்.

​ஓட்ஸ்

தானிய வகையைச் சேர்ந்த ஓட்ஸ் ஆரோக்கியமான உணவு ஆகும்.இதி பீட்டா குலுக்கன் என்னும் பொருள் நிறைந்திருக்கிறது. இவை இதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றை தடுப்பதோடு நார்ச்சத்தும் நிறைந்த உணவு. ஓட்ஸில் இருக்கும் ட்ரிப்டோபன் என்னும் பொருள் உடல் ஆரோக்கியத்தோடு மன அழுத்தம் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. தூக்கமின்மை பிரச்சனையை சரிசெய்து உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. உடலுக்கு சத்து தரும் உணவாகவும் கூட இதை சொல்லலாம்.

​​உலர் பருப்புகள்

இதை நொறுக்குத்தீனிக்கு மாற்றாக எடுத்துகொள்ளுங்கள். இவை உங்கள் உடல் எடையை குறைக்கவும் உதவும். உடலை கட்டுக்குள் வைக்கும். இதில் நார்ச்சத்து, மெக்னீஷியம், வைட்டமின் ஈ, இரும்புச்சத்து, கால்சியம்,ஒமேகா-3 என பல்வேறு ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியவை பிற உணவுகளில்கிடைக்காத ஊட்டச்சத்துகள் இதில் கிடைக்கும். தினமும் 5 பருப்புகள் வீதம் எடுத்துகொள்ளலாம்.பாதாம் பருப்புகள், அத்திபழம், பிஸ்தா, வால்நட், உலர் திராட்சை, சியா விதைகள், உணவில் தேங்காய் கூட அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.

​காய்கறிகள்

காய்கறிகளை எப்போதும் தவிர்க்க கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தொடர்ந்து ஒரே காய்கறிகளை சாப்பிடாமல் தினம் ஒரு காய்கறிகளை வகைப்படுத்தி அதிகம் எடுத்துகொள்ளலாம். வைட்டமின் சி நிறைந்த பச்சை, சிவப்பு, மஞ்சள் வண்ண குடைமிளகாய், ஃபபர், வைட்ட மின் சி, கே, புரதம் நிறைந்த ப்ரக்கோலி, நீர்ச்சத்து நிறைந்த வைட்டமினில் கே சத்துகொண்ட வெள்ளரிக்காய், வைட்டமின் கே, ஊட்டச்சத்து, கரோட்டின் நிறைந்த கேரட் மற்றும் காலே கீரைகள் என ஒவ்வொன்றையும் தவிர்க்காமல் திட்டமிட்டு எடுத்துகொள்வது நல்லது.

​​பூண்டு, வெங்காயம், தக்காளி

வெங்காயம் உடலில் இருக்கும் கிருமிகளை விரட்டி அடிப்பவை. எல்லா உணவு பொருள்க லும் நீக்கமற பயன்படுத்துங்கள். தக்காளியில் பொட்டாசியம், வைட்டமின் சி சத்துகள் காணப்படுகிறது. பூண்டு அதிக அளவு ஆரோக்கியமான நன்மைகளை உடலுக்கு செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும். இரத்தத்தை சுத்தம் செய்வதிலும் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுவதிலும் இவை முக்கிய பங்காற்றுகிறது. இவை தவிர முட்டைகோஸ், கத்தரிக்காய், மஷ்ரூம், முள்ளங்கி, சுரைக்காய் போன்ற நீர்சத்து நிறைந்த காய்கறிகளையும் எடுத்துகொள்ளுங்கள்.

​பழங்கள்

பழங்களை அன்றாட உணவில் எடுத்துகொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். உணவுக்கு முந்தையை இடைவெளியில் பசியை உணர்ந்தால் ஆப்பிள் பழங்களை எடுத்துகொள்ளலாம். நார்ச்சத்தும் வைட்டமின் சி சத்தும் நிறைந்தது ஆப்பிள் ஆண்டி ஆக்சிடெண்ட் பண்புகளும் நிறைந்திருக்கிறது.

வாழைப்பழங்களில் மிகுந்திருக்கும் பொட்டாசியம் நிச்சயம் உடலுக்கு அத்தியாவசியம் அதுமட்டுமல்லாமல் இதில் வைட்டமின் பி 6 மற்றும் ஃபைபர் சத்தும் நிறைந்திருக்கிறது. இவை மலச்சிக்கலை எப்போதும் உருவாக்காது. பழங்களில் ருசியும் சத்துமிக்கவை செர்ரி மற்றூம் ப்ளுபெர்ரி எப்போதும் பொதுவான பழங்களை மட்டும் சாப்பிடாமல் இந்த வகையான பழங்களையும் எடுத்துகொள் ளுங்கள்.

ஆரஞ்சு வைட்டமின் சி நிறைந்தவை. வைட்டமின் சி சத்து உடலில் நிறைந்திருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதே போன்று எலுமிச்சை பழங்களையும் எடுத்துகொள்வது நல்லது. இவை தவிர அனைத்து பழங்களையும் அந்தந்த சீஸனில் தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள். கூடவே பிளம்ஸ், ராஸ் பெர்ரி, கிவி, ஆலிவ் பழங்களும் தவிர்க்க வேண்டாம்.

​​இறைச்சி

அசைவம் உண்பவர்களுக்கு ஏற்ற இறைச்சி உணவுகளில் பதப்படுத்தப்படாததுதான். மேலும் நன்றாக சமைத்த உணவை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மாட்டிறைச்சியில் புரத சத்துக்களை அதிகம் காண முடியும். கோழி மார்பகத்தில் மிகவும் குறைவான கொழுப்பும், கலோரிகள் மட்டுமே உள்ளது. ஆனால் புரத சத்து மிகவும் அதிகமாக உள்ளது. கார்போ ஹைட்ரேட் உணவுகளை குறைவாக எடுத்துகொள்பவர்கள் கோழி இறைச்சியை அதிகம் எடுத்துகொள்ளலாம். இதே போன்று ஆட்டிறைச்சிகளையும் எடுத்துகொள்ளலாம். இலை, தழைகளை உண்ணும் ஆடுகளில் நிறைவான சத்துகள் மிகுந்திருக்கும்.

​கடல் உணவுகள்

மீன்கள் மற்றும் கடல் உணவுகளான இறால், நண்டு,சிப்பி,சுறா உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரவல்லதுமுக்கியமாக இரண்டு ஊட்டச் சத்துக் குறைபாடுகளான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் அயோடின் கடல் உணவுகளில் அதிகமாக உள்ளது. ஆய்வாளர்கள் எடுத்த ஆராய்ச்சியின் முடிவில், அதிக கடல் உணவுகள் அதிலும் குறிப்பாக மீன்களை உண்ட மக்களுக்கு நீண்ட ஆயுளுடன், காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் அதிலும் குறிப்பாக இருதய நோய், மனக் கவலை,இளவயதில் முதுமை வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் கூறுகிறார்கள்.

சால்மன், மத்தி, இறால், டூனா மீன்களை தேர்வு செய்வது நல்லது. எண்ணெய் படலம் மிக்க மீன்களில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலம், புரதச் சத்துகளாலும், அதிக சுவை உள்ளதால் இது மிகவும் பிரபல வகையான மீனாகும். இதில் வைட்டமின்-டி யும் அதிகமாக காணப்படுகிறது.. இதையெல்லாம் சாப்பிடுகிறோமோ என்று சொல்லலாம். ஆனால் அன்றாட உணவில் மேற்குறிப்பிட்ட 50 உணவு பொருள்களில் தினமும் நான்கைந்தேனும் எடுத்து கொள் வதன் மூலம் ஆரோக்கியமும் உறுதியாகும் ஆயுளும் உறுதியாகும்.

  
  
   Bookmark and Share Seithy.com



மழைகாலத்தில் கமகமக்கும் நண்டு மசாலா: செட்டிநாடு சுவையில் எப்படி செய்வது?
[Friday 2026-10-23 16:00]

மழைக்காலத்திற்கு ஏற்ப நண்டு மசாலா செட்டிநாடு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் இவற்றினால் அவதிப்படுவார்கள். இவ்வாறு சளி மற்றும் இருமலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் உணவாக நண்டு இருக்கின்றது. நண்டு சூப் மட்டுமின்றி நண்டு மசாலாவும் மழைக்காலத்திற்கு ஏற்ற உணவாக இருக்கின்றது. செட்டிநாடு ஸ்டைலில் நண்டு மசாலா எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



உள்ளிருந்து கூந்தலைப் பராமரிக்க உதவும் 6 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!
[Thursday 2026-10-22 16:00]

அழகான, அடர்த்தியான மற்றும் வலிமையான கூந்தலைப் பெற வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால், கூந்தலின் ஆரோக்கியம் என்பது நாம் பயன்படுத்தும் எண்ணெய்கள், ஷாம்புகள் மற்றும் தலைமுடிப் பராமரிப்புப் பொருட்களை மட்டும் சார்ந்ததல்ல. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளும் கூந்தலின் வளர்ச்சியிலும் வலிமையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைப்பது அவசியம்.



கேஸ் அடுப்பின் அருகில் வைக்கக்கூடாத 6 பொருட்கள்!
[Wednesday 2026-10-21 16:00]

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் செல்வம், அமைதி மற்றும் நிம்மதியைப் பராமரிப்பதில் சமையலறைக்கு முக்கியப் பங்கு உள்ளது. சமையலறையில் நெருப்பின் ஆதாரமாக இருக்கும் கேஸ் அடுப்பின் அருகில் சில பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. வாஸ்து நம்பிக்கைகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காரணங்களுக்காகவும் சில பொருட்களை அடுப்பிலிருந்து தள்ளி வைப்பது அவசியம்.



தினமும் எலுமிச்சை நீர் அருந்துவது நல்லதா?
[Tuesday 2026-10-20 17:00]

பொதுவாகவே பலரும் தங்களது நாளை ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் அருந்துவதன் மூலம் தொடங்குகின்றனர். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதுடன், தண்ணீர் உடலில் நீர்ச்சத்தைப் பேணவும் உதவுகிறது. தினமும் மிதமான அளவில் எலுமிச்சை நீர் அருந்துவது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. குறிப்பாக, உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பேணுவதற்கு இது பெரிதும் துணைப்புரிகின்றது.



ஒருமுறை மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க!
[Monday 2026-10-19 15:00]

மட்டன் சுக்கா தேங்காய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர். சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.



நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்!
[Saturday 2026-10-17 17:00]

உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாகச் செயல்படுவதற்கு, சத்தான உணவுகளை அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக்கொள்வது முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்கும் இயற்கை உணவுகளில் நெல்லிக்காய்க்கு தனித்துவமான இடம் உண்டு. சிறிய அளவில் காணப்பட்டாலும், நெல்லிக்காயில் வைட்டமின் சி, பாலிஃபீனால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் சேர்மங்கள் நிறைந்துள்ளன.



தொப்பையை கரைக்கும் சௌசௌ காய் குழம்பு!
[Friday 2026-10-16 16:00]

பொதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்கள் பல்வேறு ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. அந்த வகையில், சௌசௌ காயிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்தும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சௌசௌ ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும். மேலும், இதில் உள்ள ஃபோலேட் (வைட்டமின் B9) உள்ளிட்ட சத்துக்கள் புதிய ரத்த அணுக்கள் உருவாகவும் உதவுகின்றன. இத்தனை நன்மைகள் நிறைந்த சௌசௌ காயை வைத்து, சுவையான பொரிச்ச குழம்பை எளிமையாக எப்படிச் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்!



நாவூரும் சுவையில் காரசாரமான பூண்டு ஊறுகாய்!
[Thursday 2026-10-15 16:00]

பொதுவாகவே, நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளுக்கு கூடுதல் சுவையையும், தனித்துவமான மணத்தையும் சேர்ப்பதில் ஊறுகாய்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. எலுமிச்சை ஊறுகாய், அன்னாசி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய் எனப் பலவிதமான ஊறுகாய்கள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான சுவையும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.



அவித்த முட்டையில் ஆம்லெட் செய்ய முடியுமா?
[Wednesday 2026-10-14 16:00]

முட்டையை அவித்த பின்பு அதனை ஆம்லேட்டாக செய்வது எவ்வாறு என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். புரதச்சத்து நிறைந்த முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் முட்டை என்றால் ஆம்லெட் தான் முதலில் நினைவிற்கு வருகின்றது. வீட்டில் என்னதான் சுவையாக குழம்பு இருந்தாலும் அருகில் ஒரு முட்டையை ஆம்லெட் போட்டு வைத்து சாப்பிட்டால் சாப்பாடு 5 நிமிடத்திற்குள் தட்டில் காலியாகிவிடும்.



வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
[Tuesday 2026-10-13 16:00]

தேங்காய் எண்ணெய் என்பது நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு இயற்கையான பொருள். தலைமுடியைப் பராமரிக்கவும், சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், சமையலுக்குப் பயன்படுத்தவும் என இது தொன்று தொட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. நம் பாட்டி, அம்மா காலத்திலிருந்தே வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் தற்காலத்தில், கடைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயின் தரம், தயாரிப்பு முறை ஆகியவற்றில் சற்று ஐயம் இருக்கத்தான் செய்கின்றது. அதிக விலை கொடுத்து வாங்கினாலும், இந்த தேங்காய் எண்ணெய் சுகாதாரமான முறையில் தயாரி்கப்படுகின்றதா என்பதும் கவப்படம் அற்றதா என்பதும் சந்தேகம் தான்.



தலையனைக்கு அடியில் பூண்டை வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்!
[Monday 2026-10-12 16:00]

இரவில் தூங்கும் போது பூண்டை தலையனைக்கு அடியில் வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மையைக் குறித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக சமையலுக்கு பழங்காலம் முதலே பூண்டை பயன்படுத்தி வருகின்றனர். ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியா, எகிப்து, கிரீஸ் போன்ற பழங்கால மக்கள் பூண்டை ஒரு மருந்தாகவே பார்த்தார்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் செரிமானத்தையும் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர்.



கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ்!
[Sunday 2026-10-11 16:00]

அசைவ உணவில் அனைவருக்கும் பிடித்த சிக்கனை வைத்து கேரளா ஸ்டைலில் சிக்கன் மப்பாஸ் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று சிக்கன் ஆகும். சிக்கனை கிரேவி, ப்ரை, 65 என பல விதமாக சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் கேரள ஸ்டைலில் சற்று வித்தியாசமான ரெசிபியான மப்பாஸ் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



சிக்கனில் ரசம் வைத்து சாப்பிட்டதுண்டா?
[Saturday 2026-10-10 17:00]

அசைவ பிரியர்கள் விரும்பும் சிக்கனில் ரசம் வைப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்களுக்கு விருப்பமாக இருக்கும் சிக்கன் குழம்பு மற்றும் கிரேவி செய்வதை நாம் அவதானித்திருப்போம். சிக்கனை வைத்து ரசம் சமைப்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்காது. இந்த பதிவில் சிக்கனில் ரசம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆசையா?
[Friday 2026-10-09 16:00]

காலை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் அன்றாடம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட தடையாக இருக்கலாம். மேலும் காலை வெறும்வயிற்றில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிகவும் முக்கியமானவைகள். நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, நம்மை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கியமாகும். இதற்கு சரியான உணவாக தெரிவு செய்வது மிகவும் முக்கியமாகும்.



வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடிங்க: உடல் எடை கடகடவென குறையும்!
[Thursday 2026-10-08 16:00]

காலை வெறும்வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மையைக் குறித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக காலை எழுந்ததும் நாம் செய்யும் சில செயல்கள் நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றது. அதிலும் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் பானங்கள் மிக முக்கியமாக இருக்கின்றது. ஆதலால் ஆரோக்கிய பழக்கங்களை நாம் பின்பற்றுவது அவசியம் ஆகும்.


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா