Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கோடை காலத்தில் நுங்கு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!..
[Tuesday 2020-05-05 18:00]

பருவகாலத்துக்கு ஏற்ப உடல்நிலையில் உண்டாகும் மாற்றங்களை தடுத்து ஆரோக்கியமாக வைத்திருக்க இயற்கையே நமக்கு உதவுகிறது. அந்த வகையில் கோடை வந்துவிட்டாலே உடலுக்கு குளுமைதரும் பொருள்களில் நுங்கு இன்றியமையாததாகிறது. பனைமரத்திலிருந்து பெறப்படும் பனைவெல்லம், பனங்கற்கண்டு பனங்கிழங்கு, பதநீர் வரிசையில் நுங்குவும் எண்ணற்ற மருத்துவகுணங்களை கொண்டிருக்ககூடியது. எல்லோரும் நுங்கு சாப்பிடும் போது அதன் தோலை நீக்கி உள்ளிருக்கும் சதை பகுதியை மட்டும் சாப்பிடுவோம்.

ஆனால் துவர்ப்பாக இருக்கும் நுங்கின் தோல்பகுதியில் தான் கால்சியம், பாஸ்பரஸ் , வைட்டமின் பி, சி போன்றவை அடங்கியிருக்கின்றன. இனி நுங்கை சாப்பிடும் போது தோலோடு சாப்பிட பழகுங்கள். கோடையில் மட்டுமே கிடைக்கும் நுங்கு கோடையால் உண்டாகும் உடல் பிரச்சனைகளை களைவதோடு அதை தீர்க்கவும் பயன்படுகிறது. இது குறித்து தெரிந்துகொள்வோம்.

அம்மை

கோடையில் வாட்டி வதைக்கும் அம்மை நோய்கள் வராமல் தடுக்க நுங்கு பயன்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பவர்கள் எளிதில் சின்னம்மை, பெரியம்மை, தட்டம்மை போன்ற நோய்களுக்கு உள்ளாவார்கள். சீதோஷ்ண நிலையால் உடல் சூடாகி பித்தம் அதிகமாகி அதனோடு கபமும் சேர்ந்து கிருமித்தொற்று உண்டாவதன் மூலம் அம்மை வருகிறது. இவை 7 நாட்கள் முதல் 15 நாட்கள்வரை இருக்கும் என்றாலும் இந்த நாள்கள் உபாதையாக இருக்கும்.

இந்த நீர் கொப்புளங்கள் சுருங்க சுருங்க உடலில் அரிப்பை ஏற்படுத்தும், அரிப்பு தாங்காமல் சொரிந்து விடுவதால் அங்கு மீண்டும் அம்மை கொப்புளங்கள் உருவாகும். அம்மை கண்டவர்கள் தினமும் நுங்கை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும். கொப்புளங்களின் மீது நுங்கு நீரை தடவி வருவதன் மூலம் கொப்புளங்கள் குளிர்ச்சியடைந்து அரிப்பை உண்டாக்காமல் இருக்கும். கோடை துவங்கும் போதே தினமும் நுங்கு சாப்பிட்டு வந்தால் அம்மை நோய் பெரும்பாலும் நெருங்காமல் செய்துவிடலாம்.

​தாகம் தணியும்

கோடையில் உடலில் எவ்வளவு நீர் இருந்தாலும் நீர் பற்றாக்குறை உண்டாகும். ஐஸ் வாட்டர், செயற்கை குளிர்பானங்கள் எல்லாமே தொண்டைக்கு இதமளித்தாலும் அவை ஆரோக்கியத்தை கெடுக்கவே செய்யும். இதை தாண்டி எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்கவில்லை என்பவர்கள் நுங்கு சாப்பிட்டால் தாகம் தணியும். குறிப்பாக வெயிலில் செல்லும் போது சிலருக்கு அனல் காற்று உடலில் படும் போது உடலில் இருக்கும் நீர்ச்சத்து குறைந்து ரத்த ஓட்டத்தில் குறைபாடும் ஹீட் ஸ்ட்ரோக் போன்ற மயக்க நிலை உண்டாகும் வாய்ப்புண்டு. நுங்கில் சோடியம் மற்றும் பொட்டாசிய தாதுக்கள் உள்ளதால் இவை நீரிழிப்பு அபாயத்திலிருந்து காக்கிறது.

வெயிலின் வெப்பம் உடலை தாக்காமல் இருக்க வீட்டிலிருக்கும் போது வெளியே வந்த பிறகு நுங்கு சாப்பிட்டு வந்தால் தாகம் தணிவதோடு நீர்ச்சத்து இழப்பு அபாயமும் உண்டாகாது. உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்கவும் உடலுக்கு ஆற்றலையும் வழங்குகிறது.

​மலச்சிக்கல்

உடலில் அதிகபடியாக வியர்வை வெளியேறுவதால் உடலில் வழக்கத்தை விட அதிகப்படியான நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும். அதை தவிர்க்கவே பழங்கள், நீர்ச்சத்து மிக்க காய்கறிகளை எடுத்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். ஆனால் சற்று காரமான உணவு வகைகளாலும், வயிற்றுபிரச்சனை, செரிமானக்கோளாறு, நீர்ச்சத்து குறைபாடாலும் மலச்சிக்கல் பிரச்சனையும் சந்திக்க நேரிடும். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்த பிறகு இரண்டு அல்லது மூன்று நுங்குகளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் காணாமல் போகும். குடல் இயக்கத்தை சீராக செயல்பட வைக்க நுங்கு உதவுகிறது.

​அல்சர் தீவிரம்

உண்வுக்குழாய், இரைப்பை, சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் ஒரு வகை புண். அல்சரால் அவதிப்படுபவர்கள் கோடையில் உணவு முறையில் கவனமாக இல்லாவிட்டால் மேலும் அதிக வீரியத்துக்கு உள்ளாவார்கள். உணவு பழக்கம் மூலமே இதை பெரும்பாலும் குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிதமான கார உணவுகளும் கூட வெயில் காலங்களில் அதிகப்படியான உபாதையை உண்டாக்கும். தினமும் நுங்கு எடுத்துகொள்வதன் மூலம் அல்சர் தீவிரமாகாமல் கட்டுப்படுத்தமுடியும். வயிற்றுப்புண், குடல்புண் ஆறுவதற்கும் வாய்ப்புண்டு.கல்லீரலில் இருக்கும் நச்சை நீக்கி கல்லீரலையும் சுத்தம் செய்ய உதவுகிறது. குடலில் இருக்கும் கழிவுகளும் வெளியேற்றும். நெஞ்சு முதல் வயிறு வரை எரிச்சல் இருந்தாலும் நுங்கு இதமான குளுமை தரும்.

​கர்ப்பிணி பெண்

கருவுற்றிருக்கும் பெண்கள் கர்ப்பக்காலத்தின் போது கோடையை சந்தித்தால் தவிர்க்காமல் நுங்கு சேர்க்க வேண்டும். இதனால் கர்ப்பக்காலத்தில் செரிமானப்பிரச்சனை நீங்கும். வாந்தி மற்றும் குமட்டல் உணர்வும் உண்டாகாது. நெஞ்செரிச்சல், அஜீரணக்கோளாறுகள், மலச்சிக்கல் போன்ற வழக்கமான பிரச்சனைகளின் தீவிரம் கட்டுக்குள் இருக்கும்.

கர்ப்பக்கால ஒவ்வாமையை போக்கவும் ஹார்மோன் சுரப்புகள் சீராக இயங்கவும் அடிக்கடி அளவோடு நுங்கு சேர்த்து வருவது நல்லது. கர்ப்பக்காலத்தில் குளுமை கொடுக்குமோ என்று அஞ்ச வேண்டாம். அளவாக எடுத்துவருவதன் மூலம் நன்மையே கிடைக்கும்.

புற்றுநோய்

புற்றுநோயில் கருப்பை வாய் புற்றுநோய்க்கு அடுத்ததாக பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு தான் அதிகம் ஆளாகிறார்கள் என்கிறது ஆய்வு. மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் ஆன் தோசயனின் என்னும் வேதிப்பொருள் நுங்கில் இருக்கிறது. இந்த ஆன் தோசயனின் என்னும் வேதிபொருளானது புற்றுநோய் செல்கள் மற்றும் அது உருவாக்கும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது. பெண்கள் நுங்கு கிடைக்கும் சீஸனில் அதிக அளவில் எடுத்துகொள்வதன் மூலம் சிறந்த பயனை அடையமுடியும். கூடுதலாக இவை இதய நோய்களையும் குறைக்கின்றன.

வியர்க்குரு

அதிகப்படியான வெப்பத்தால் சருமத்தில் வறட்சி, எரிச்சல், சரும வியாதி பொதுவாக பாதிப்புக்குள்ளாக்கும். குறிப்பாக கோடைக்காலத்தில் பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் வியர்க்குரு பிரச்சனைக்கு உள்ளாவதுண்டு. நுங்கு சாப்பிடுவதோடு அவ்வபோது வியர்க்குருவின் மீது தடவி வந்தாலும் வியர்க்குரு மறையும். அதே போன்று வெயிலால் வரும் சூட்டு கொப்புளங்களும் கூட நுங்கு தடவி பூசுவதன் மூலம் எரிச்சல் இல்லாமல் சரியாகும். மீண்டும் இவை வரவும் செய்யாது.

​டயட்டில் இருப்பவர்கள்

அதிக எடை கொண்டிருப்பவர்கள் உடல் எடையை குறைக்க பலவிதமான டயட் மேற்கொள்வதுண்டு. அதை கோடைக்காலங்களிலும் கடைபிடிக்கும் போது உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரக்கூடும்.

இவர்கள் தினமும் 3 நுங்கை அரை டம்ளர் நீரில் ஊறவைத்து நன்றாக மசித்து வேண்டிய அளவு நீர் விட்டு குடித்துவரலாம். டயட் பிரச்சனையால் உடலுக்கு வரக்கூடிய உஷ்ணப்பிரச்சனைகள் வராமல் இருக்கும். அதோடு நுங்கில் இருக்கும் கனிமச்சத்தும், ஊட்டச்சத்தும் உடலில் குளுக்கோஸ் அளவை சீராக வைத்து உடலை சோர்வின்றி சுறுசுறுப்பாக வைத்திருக்கும். கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையையும் குறைக்க உதவும். குறைந்த கலோரி கொண்டிருப்பதால் இவை நீண்ட நேரம் உங்கள் பசியை ஊக்குவிக்காது.

குறிப்பு நுங்கு மிக மிக நல்லது என்பதில் மாற்றுகருத்தில்லை. ஆனா வாங்கிய உடன் அல்லது நுங்கை பிரித்து எடுத்த சில மணி நேரங்களில் பயன்படுத்திவிட வேண்டும். அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்த கூடாது. அளவுக்கதிகமாக சாப்பிட்டாலும் வயிற்று வலியை உண்டாக்கும்.

  
  
   Bookmark and Share Seithy.com



மழைகாலத்தில் கமகமக்கும் நண்டு மசாலா: செட்டிநாடு சுவையில் எப்படி செய்வது?
[Friday 2026-10-23 16:00]

மழைக்காலத்திற்கு ஏற்ப நண்டு மசாலா செட்டிநாடு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் இவற்றினால் அவதிப்படுவார்கள். இவ்வாறு சளி மற்றும் இருமலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் உணவாக நண்டு இருக்கின்றது. நண்டு சூப் மட்டுமின்றி நண்டு மசாலாவும் மழைக்காலத்திற்கு ஏற்ற உணவாக இருக்கின்றது. செட்டிநாடு ஸ்டைலில் நண்டு மசாலா எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



உள்ளிருந்து கூந்தலைப் பராமரிக்க உதவும் 6 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!
[Thursday 2026-10-22 16:00]

அழகான, அடர்த்தியான மற்றும் வலிமையான கூந்தலைப் பெற வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால், கூந்தலின் ஆரோக்கியம் என்பது நாம் பயன்படுத்தும் எண்ணெய்கள், ஷாம்புகள் மற்றும் தலைமுடிப் பராமரிப்புப் பொருட்களை மட்டும் சார்ந்ததல்ல. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளும் கூந்தலின் வளர்ச்சியிலும் வலிமையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைப்பது அவசியம்.



கேஸ் அடுப்பின் அருகில் வைக்கக்கூடாத 6 பொருட்கள்!
[Wednesday 2026-10-21 16:00]

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் செல்வம், அமைதி மற்றும் நிம்மதியைப் பராமரிப்பதில் சமையலறைக்கு முக்கியப் பங்கு உள்ளது. சமையலறையில் நெருப்பின் ஆதாரமாக இருக்கும் கேஸ் அடுப்பின் அருகில் சில பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. வாஸ்து நம்பிக்கைகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காரணங்களுக்காகவும் சில பொருட்களை அடுப்பிலிருந்து தள்ளி வைப்பது அவசியம்.



தினமும் எலுமிச்சை நீர் அருந்துவது நல்லதா?
[Tuesday 2026-10-20 17:00]

பொதுவாகவே பலரும் தங்களது நாளை ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் அருந்துவதன் மூலம் தொடங்குகின்றனர். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதுடன், தண்ணீர் உடலில் நீர்ச்சத்தைப் பேணவும் உதவுகிறது. தினமும் மிதமான அளவில் எலுமிச்சை நீர் அருந்துவது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. குறிப்பாக, உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பேணுவதற்கு இது பெரிதும் துணைப்புரிகின்றது.



ஒருமுறை மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க!
[Monday 2026-10-19 15:00]

மட்டன் சுக்கா தேங்காய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர். சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.



நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்!
[Saturday 2026-10-17 17:00]

உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாகச் செயல்படுவதற்கு, சத்தான உணவுகளை அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக்கொள்வது முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்கும் இயற்கை உணவுகளில் நெல்லிக்காய்க்கு தனித்துவமான இடம் உண்டு. சிறிய அளவில் காணப்பட்டாலும், நெல்லிக்காயில் வைட்டமின் சி, பாலிஃபீனால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் சேர்மங்கள் நிறைந்துள்ளன.



தொப்பையை கரைக்கும் சௌசௌ காய் குழம்பு!
[Friday 2026-10-16 16:00]

பொதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்கள் பல்வேறு ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. அந்த வகையில், சௌசௌ காயிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்தும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சௌசௌ ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும். மேலும், இதில் உள்ள ஃபோலேட் (வைட்டமின் B9) உள்ளிட்ட சத்துக்கள் புதிய ரத்த அணுக்கள் உருவாகவும் உதவுகின்றன. இத்தனை நன்மைகள் நிறைந்த சௌசௌ காயை வைத்து, சுவையான பொரிச்ச குழம்பை எளிமையாக எப்படிச் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்!



நாவூரும் சுவையில் காரசாரமான பூண்டு ஊறுகாய்!
[Thursday 2026-10-15 16:00]

பொதுவாகவே, நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளுக்கு கூடுதல் சுவையையும், தனித்துவமான மணத்தையும் சேர்ப்பதில் ஊறுகாய்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. எலுமிச்சை ஊறுகாய், அன்னாசி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய் எனப் பலவிதமான ஊறுகாய்கள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான சுவையும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.



அவித்த முட்டையில் ஆம்லெட் செய்ய முடியுமா?
[Wednesday 2026-10-14 16:00]

முட்டையை அவித்த பின்பு அதனை ஆம்லேட்டாக செய்வது எவ்வாறு என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். புரதச்சத்து நிறைந்த முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் முட்டை என்றால் ஆம்லெட் தான் முதலில் நினைவிற்கு வருகின்றது. வீட்டில் என்னதான் சுவையாக குழம்பு இருந்தாலும் அருகில் ஒரு முட்டையை ஆம்லெட் போட்டு வைத்து சாப்பிட்டால் சாப்பாடு 5 நிமிடத்திற்குள் தட்டில் காலியாகிவிடும்.



வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
[Tuesday 2026-10-13 16:00]

தேங்காய் எண்ணெய் என்பது நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு இயற்கையான பொருள். தலைமுடியைப் பராமரிக்கவும், சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், சமையலுக்குப் பயன்படுத்தவும் என இது தொன்று தொட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. நம் பாட்டி, அம்மா காலத்திலிருந்தே வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் தற்காலத்தில், கடைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயின் தரம், தயாரிப்பு முறை ஆகியவற்றில் சற்று ஐயம் இருக்கத்தான் செய்கின்றது. அதிக விலை கொடுத்து வாங்கினாலும், இந்த தேங்காய் எண்ணெய் சுகாதாரமான முறையில் தயாரி்கப்படுகின்றதா என்பதும் கவப்படம் அற்றதா என்பதும் சந்தேகம் தான்.



தலையனைக்கு அடியில் பூண்டை வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்!
[Monday 2026-10-12 16:00]

இரவில் தூங்கும் போது பூண்டை தலையனைக்கு அடியில் வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மையைக் குறித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக சமையலுக்கு பழங்காலம் முதலே பூண்டை பயன்படுத்தி வருகின்றனர். ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியா, எகிப்து, கிரீஸ் போன்ற பழங்கால மக்கள் பூண்டை ஒரு மருந்தாகவே பார்த்தார்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் செரிமானத்தையும் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர்.



கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ்!
[Sunday 2026-10-11 16:00]

அசைவ உணவில் அனைவருக்கும் பிடித்த சிக்கனை வைத்து கேரளா ஸ்டைலில் சிக்கன் மப்பாஸ் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று சிக்கன் ஆகும். சிக்கனை கிரேவி, ப்ரை, 65 என பல விதமாக சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் கேரள ஸ்டைலில் சற்று வித்தியாசமான ரெசிபியான மப்பாஸ் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



சிக்கனில் ரசம் வைத்து சாப்பிட்டதுண்டா?
[Saturday 2026-10-10 17:00]

அசைவ பிரியர்கள் விரும்பும் சிக்கனில் ரசம் வைப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்களுக்கு விருப்பமாக இருக்கும் சிக்கன் குழம்பு மற்றும் கிரேவி செய்வதை நாம் அவதானித்திருப்போம். சிக்கனை வைத்து ரசம் சமைப்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்காது. இந்த பதிவில் சிக்கனில் ரசம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆசையா?
[Friday 2026-10-09 16:00]

காலை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் அன்றாடம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட தடையாக இருக்கலாம். மேலும் காலை வெறும்வயிற்றில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிகவும் முக்கியமானவைகள். நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, நம்மை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கியமாகும். இதற்கு சரியான உணவாக தெரிவு செய்வது மிகவும் முக்கியமாகும்.



வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடிங்க: உடல் எடை கடகடவென குறையும்!
[Thursday 2026-10-08 16:00]

காலை வெறும்வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மையைக் குறித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக காலை எழுந்ததும் நாம் செய்யும் சில செயல்கள் நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றது. அதிலும் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் பானங்கள் மிக முக்கியமாக இருக்கின்றது. ஆதலால் ஆரோக்கிய பழக்கங்களை நாம் பின்பற்றுவது அவசியம் ஆகும்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா