Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ரோஜா ஆப்பிளில் நிறைந்திருக்கும் மருத்துவ பலன்கள்!
[Friday 2020-05-15 18:00]

ரோஜா பூ அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அது என்ன ரோஜா ஆப்பிள். இந்த பழம் ஆப்பிள் குடும்பத்தை சார்ந்தது அல்ல. பெயர் மட்டும் தான் ஆப்பிளே தவிர, சுவை மற்றும் பிற விஷயங்கள் அனைத்தும் கொய்யாப்பழத்தை போன்றது. தினமொரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை நாட வேண்டியது இருக்காது என்பது போல தான், இந்த ரோஜா ஆப்பிளும் தன்னுள் எண்ணிலடங்கா சத்துக்களை மறைத்து வைத்துள்ளது. வெளிநாடுகளில் பெரும்பாலானோர் சாப்பிட்டு வரும் இந்த பழம் பற்றி, நமக்கு தான் இத்தனை நாட்கள் தெரியாமல் போய்விட்டது. இந்த பழமானது, கோயில் மணி வடிவத்தில் ரோஸ் நிறத்தில் இருக்கும். இதற்கு தண்ணீர் ஆப்பிள் என்ற பெயரும் உண்டு. இந்தியாவில் இதனை ஜாம் பழம் என்று அழைக்கின்றனர்.

இந்த பழம் சுவையில் மட்டும் சிறந்ததல்ல, மருத்துவ பலன்களிலும் பெரும் இடத்தை வகிக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், இதிலுள்ள சத்துக்கள் அப்படி, வாருங்கள், இப்போது ரோஜா ஆப்பிளின் மருத்துவ குணங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறேன். இதை படித்துவிட்டாவது, இதை எங்காவது பார்த்தால் வாங்கி சாப்பிட மறவாதீர்கள்.... நீரிழிவு நோய், புற்றுநோய் தடுப்பு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான பிரச்சனைகள், வலிப்புத்தாக்கங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவும் பாரம்பரிய மருந்துகளில் இந்த பழம் பயன்படுத்தப்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்.

ரோஜா ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்துக்களின் பட்டியல்

ஒவ்வொரு பழத்திலும், நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடிய எண்ணற்ற வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மறைந்துள்ளன. அவற்றுள் சில,

* வைட்டமின் சி மற்றும் ஏ

* நியாசின்

* கால்சியம்

* பொட்டாசியம்

* மெக்னீசியம்

* பாஸ்பரஸ்

* புரதம்

* நார்ச்சத்து

ரோஜா ஆப்பிளின் மருத்துவ பயன்பாடுகள்:

முன்பு கூறியது போலவே, இந்த பழம் எண்ணற்ற மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, நாட்டு மருத்துவத்தில் பெரும் பங்கை வகிக்கிறது.

* மலேசியாவில் த்ரஷ் சிகிச்சைக்கு ரோஜா ஆப்பிள் மரத்தின் பட்டையை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை காபி பயன்படுத்தப்படுகிறது.

* இதன் சாறு மூளை மற்றும் கல்லீரல் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வினை பெற உதவுகிறது.

* ரோஜா ஆப்பிளின் பூக்கள் காய்ச்சலை விரட்ட உதவுகின்றன.

* அதன் இலைகளில் கண்களில் வரும் புண் மற்றும் வாத நோய்க்கு சிகிச்சையளிக்க உதவக்கூடிய டையூரிடிக் மற்றும் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன.

* ரோஸ் ஆப்பிள் பழத்தின் விதைகள் வயிற்றுப்போக்கை சரிசெய்ய உதவுகிறது.

* கியூபாவின் பூர்வீகத்தில், ரோஸ் ஆப்பிள் வேரை கால்-கை வலிப்பு பிரச்சனை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

* கொலாம்பிய மக்கள் ரோஜா ஆப்பிள் விதைகளை வலி நிவாரணியாக பயன்படுத்துகின்றனர்.

ரோஜா ஆப்பிளின் நன்மைகள்:

நீரிழிவை கட்டுப்படுத்தும்

ரோஜா ஆப்பிள்களில் ஒரு ஆல்கலாய்டு ‘ஜம்போசின்'உள்ளது. இது ஸ்டார்ச் வழிமுறையை சர்க்கரையாக மாற்றிடும். நாவல் பழத்தைப் போலவே, நீரிழிவு நோயாளிகளும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இந்த பழத்தை சாப்பிடலாம். இந்த விரல் சின்னதாக இருக்கும் ஆண்களின்… ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள்…

சிறந்த இதய ஆரோக்கியம்

ரோஜா ஆப்பிளில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளதால், அது கொழுப்புச்சத்துக்களை சீராக்க உதவிடும். இதன் மூலம், இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படும், அதாவது, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாது.

புற்றுநோயை தடுக்க

ரோஜா ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ பிற சேர்மங்களுடன் இணைந்து புற்றுநோயில் இருந்து ஒருவரது உடலை பாதுகாத்திடும். அதுமட்டுமல்லாது, பல ஆய்வுகளின் முடிவுகளின் படி, ரோஜா ஆப்பிளானது, மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்க்கு நல்ல தீர்வினை வழங்குவது தெரிய வந்துள்ளது.

சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி

ரோஜா ஆப்பிளில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், அவை உடலை நோய் தொற்றுகளில் இருந்து காத்திடும். அதுமட்டுமின்றி. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கிடும்.

சீரான செரிமானம்

நார்ச்சத்தை தன்னுள் அதிகமாக கொண்டுள்ள ரோஜா ஆப்பிள், அனைத்து வகையான செரிமான பிரச்சனைகளை சுலபமாக தீர்த்துவிடும். வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமானப் பாதையில் உள்ள சிக்கல்களை நீக்கவும் இவை உதவக்கூடியது.

ரோஜா ஆப்பிள் சாப்பிடுவதன் பிற நன்மைகள்:

* சிறுநீர்ப்பை நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க

* நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களின் நச்சுத்தன்மைகளை நீக்க

* கர்ப்ப காலத்தில் நீரிழப்புகளை தவிர்க்க

* சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க மற்றும் சரும சுரப்பு உற்பத்தியை ஒழுங்குபடுத்த * முகப்பருக்களுக்கு சிகிச்சையளிக்க

* புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க

* வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க * எலும்புகளை பலப்படுத்த

* கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த

* மெலிந்த முடி, வழுக்கை பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவிடுகிறது.

ரோஜா ஆப்பிளினால் பக்கவிளைவு ஏதேனும் ஏற்படக்கூடுமா?

ரோஜா ஆப்பிளை பொறுத்தவரை, அநேக சத்துக்களையும், ஆரோக்கிய பலன்களையும் மட்டுமே அள்ளி கொடுக்கக்கூடியது. சாப்பிடுவது அமுதாகவே இருந்தாலும், அளவிற்கு மீறினால் அதுவும் நஞ்சாகும் அல்லவா? அப்படி தான், அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது மட்டுமே ரோஜா ஆப்பிள் கேடு விளைவிக்கக்கூடும். ரோஜா ஆப்பிளின் விதைகள், இலைகள் மற்றும் வேர் ஆகியவற்றில் ப்ருசிக் அமிலம் அல்லது சயனைடு அதிகமாக உள்ளது. இவை அதிகமாக உடலில் சேரும் பட்சத்தில் அதிகப்படியான ஆபத்து என்றே கூற வேண்டும். ஒருவர் பாதுகாப்பாக இருப்பதோடு, நன்மைகளை அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையில் இருந்தால், ரோஜா ஆப்பிளை அதிக எண்ணிக்கையில் சாப்பிடுவதை தவிர்த்தே ஆக வேண்டும்.

  
  
   Bookmark and Share Seithy.com



மழைகாலத்தில் கமகமக்கும் நண்டு மசாலா: செட்டிநாடு சுவையில் எப்படி செய்வது?
[Friday 2026-10-23 16:00]

மழைக்காலத்திற்கு ஏற்ப நண்டு மசாலா செட்டிநாடு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் இவற்றினால் அவதிப்படுவார்கள். இவ்வாறு சளி மற்றும் இருமலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் உணவாக நண்டு இருக்கின்றது. நண்டு சூப் மட்டுமின்றி நண்டு மசாலாவும் மழைக்காலத்திற்கு ஏற்ற உணவாக இருக்கின்றது. செட்டிநாடு ஸ்டைலில் நண்டு மசாலா எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



உள்ளிருந்து கூந்தலைப் பராமரிக்க உதவும் 6 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!
[Thursday 2026-10-22 16:00]

அழகான, அடர்த்தியான மற்றும் வலிமையான கூந்தலைப் பெற வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால், கூந்தலின் ஆரோக்கியம் என்பது நாம் பயன்படுத்தும் எண்ணெய்கள், ஷாம்புகள் மற்றும் தலைமுடிப் பராமரிப்புப் பொருட்களை மட்டும் சார்ந்ததல்ல. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளும் கூந்தலின் வளர்ச்சியிலும் வலிமையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைப்பது அவசியம்.



கேஸ் அடுப்பின் அருகில் வைக்கக்கூடாத 6 பொருட்கள்!
[Wednesday 2026-10-21 16:00]

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் செல்வம், அமைதி மற்றும் நிம்மதியைப் பராமரிப்பதில் சமையலறைக்கு முக்கியப் பங்கு உள்ளது. சமையலறையில் நெருப்பின் ஆதாரமாக இருக்கும் கேஸ் அடுப்பின் அருகில் சில பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. வாஸ்து நம்பிக்கைகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காரணங்களுக்காகவும் சில பொருட்களை அடுப்பிலிருந்து தள்ளி வைப்பது அவசியம்.



தினமும் எலுமிச்சை நீர் அருந்துவது நல்லதா?
[Tuesday 2026-10-20 17:00]

பொதுவாகவே பலரும் தங்களது நாளை ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் அருந்துவதன் மூலம் தொடங்குகின்றனர். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதுடன், தண்ணீர் உடலில் நீர்ச்சத்தைப் பேணவும் உதவுகிறது. தினமும் மிதமான அளவில் எலுமிச்சை நீர் அருந்துவது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. குறிப்பாக, உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பேணுவதற்கு இது பெரிதும் துணைப்புரிகின்றது.



ஒருமுறை மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க!
[Monday 2026-10-19 15:00]

மட்டன் சுக்கா தேங்காய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர். சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.



நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்!
[Saturday 2026-10-17 17:00]

உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாகச் செயல்படுவதற்கு, சத்தான உணவுகளை அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக்கொள்வது முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்கும் இயற்கை உணவுகளில் நெல்லிக்காய்க்கு தனித்துவமான இடம் உண்டு. சிறிய அளவில் காணப்பட்டாலும், நெல்லிக்காயில் வைட்டமின் சி, பாலிஃபீனால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் சேர்மங்கள் நிறைந்துள்ளன.



தொப்பையை கரைக்கும் சௌசௌ காய் குழம்பு!
[Friday 2026-10-16 16:00]

பொதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்கள் பல்வேறு ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. அந்த வகையில், சௌசௌ காயிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்தும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சௌசௌ ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும். மேலும், இதில் உள்ள ஃபோலேட் (வைட்டமின் B9) உள்ளிட்ட சத்துக்கள் புதிய ரத்த அணுக்கள் உருவாகவும் உதவுகின்றன. இத்தனை நன்மைகள் நிறைந்த சௌசௌ காயை வைத்து, சுவையான பொரிச்ச குழம்பை எளிமையாக எப்படிச் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்!



நாவூரும் சுவையில் காரசாரமான பூண்டு ஊறுகாய்!
[Thursday 2026-10-15 16:00]

பொதுவாகவே, நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளுக்கு கூடுதல் சுவையையும், தனித்துவமான மணத்தையும் சேர்ப்பதில் ஊறுகாய்களுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. எலுமிச்சை ஊறுகாய், அன்னாசி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய் எனப் பலவிதமான ஊறுகாய்கள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான சுவையும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.



அவித்த முட்டையில் ஆம்லெட் செய்ய முடியுமா?
[Wednesday 2026-10-14 16:00]

முட்டையை அவித்த பின்பு அதனை ஆம்லேட்டாக செய்வது எவ்வாறு என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். புரதச்சத்து நிறைந்த முட்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் முட்டை என்றால் ஆம்லெட் தான் முதலில் நினைவிற்கு வருகின்றது. வீட்டில் என்னதான் சுவையாக குழம்பு இருந்தாலும் அருகில் ஒரு முட்டையை ஆம்லெட் போட்டு வைத்து சாப்பிட்டால் சாப்பாடு 5 நிமிடத்திற்குள் தட்டில் காலியாகிவிடும்.



வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
[Tuesday 2026-10-13 16:00]

தேங்காய் எண்ணெய் என்பது நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு இயற்கையான பொருள். தலைமுடியைப் பராமரிக்கவும், சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும், சமையலுக்குப் பயன்படுத்தவும் என இது தொன்று தொட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. நம் பாட்டி, அம்மா காலத்திலிருந்தே வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் தற்காலத்தில், கடைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெயின் தரம், தயாரிப்பு முறை ஆகியவற்றில் சற்று ஐயம் இருக்கத்தான் செய்கின்றது. அதிக விலை கொடுத்து வாங்கினாலும், இந்த தேங்காய் எண்ணெய் சுகாதாரமான முறையில் தயாரி்கப்படுகின்றதா என்பதும் கவப்படம் அற்றதா என்பதும் சந்தேகம் தான்.



தலையனைக்கு அடியில் பூண்டை வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மைகள்!
[Monday 2026-10-12 16:00]

இரவில் தூங்கும் போது பூண்டை தலையனைக்கு அடியில் வைத்து தூங்கினால் கிடைக்கும் நன்மையைக் குறித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக சமையலுக்கு பழங்காலம் முதலே பூண்டை பயன்படுத்தி வருகின்றனர். ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியா, எகிப்து, கிரீஸ் போன்ற பழங்கால மக்கள் பூண்டை ஒரு மருந்தாகவே பார்த்தார்கள். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் செரிமானத்தையும் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகின்றனர்.



கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ்!
[Sunday 2026-10-11 16:00]

அசைவ உணவில் அனைவருக்கும் பிடித்த சிக்கனை வைத்து கேரளா ஸ்டைலில் சிக்கன் மப்பாஸ் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று சிக்கன் ஆகும். சிக்கனை கிரேவி, ப்ரை, 65 என பல விதமாக சமைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால் கேரள ஸ்டைலில் சற்று வித்தியாசமான ரெசிபியான மப்பாஸ் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



சிக்கனில் ரசம் வைத்து சாப்பிட்டதுண்டா?
[Saturday 2026-10-10 17:00]

அசைவ பிரியர்கள் விரும்பும் சிக்கனில் ரசம் வைப்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்களுக்கு விருப்பமாக இருக்கும் சிக்கன் குழம்பு மற்றும் கிரேவி செய்வதை நாம் அவதானித்திருப்போம். சிக்கனை வைத்து ரசம் சமைப்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்காது. இந்த பதிவில் சிக்கனில் ரசம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆசையா?
[Friday 2026-10-09 16:00]

காலை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் அன்றாடம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட தடையாக இருக்கலாம். மேலும் காலை வெறும்வயிற்றில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிகவும் முக்கியமானவைகள். நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, நம்மை ஆரோக்கியமாக வைப்பதில் முக்கியமாகும். இதற்கு சரியான உணவாக தெரிவு செய்வது மிகவும் முக்கியமாகும்.



வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடிங்க: உடல் எடை கடகடவென குறையும்!
[Thursday 2026-10-08 16:00]

காலை வெறும்வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மையைக் குறித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக காலை எழுந்ததும் நாம் செய்யும் சில செயல்கள் நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றது. அதிலும் காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் பானங்கள் மிக முக்கியமாக இருக்கின்றது. ஆதலால் ஆரோக்கிய பழக்கங்களை நாம் பின்பற்றுவது அவசியம் ஆகும்.


Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா