Untitled Document
June 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காரமான உணவுகளை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
[Sunday 2024-06-16 08:00]

இன்று பெரும்பாலான மக்கள் காரமான உணவுகளை சாப்பிடும் வழக்கத்தை கொண்டுள்ள நிலையில், இதனை யாரெல்லாம் தடுக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் காரம் அதிகமாகவே இருக்கும். மேலும் இந்திய மசாலாப் பொருட்களுக்கு எப்பொழுதும் தனி இடமும் உண்டு. குறிப்பாக தமிழகம், ஆந்திரா போன்ற பகுதிகளில் காரம் அதிகமாக உணவுகளில் சேர்க்கப்படுகின்றது. காரமான உணவுகள் அதிகம் சாப்பிட்டு வந்தால், பல உடல் நலப்பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

மிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற தனிமம் நமக்கு காரமாக உணர்வை தருகிறது. இந்த தனிமம் மிளகாயில் அதிக அளவு இருப்பதால், மிளகாய் அதிக காரமாக உள்ளது. அதிக அளவு கேப்சைசின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதிக காரமான உணவை சாப்பிட்டால், உடலில் என்ன என்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

காரமான உணவுகளை அதிகமாக சாப்பிட்டு வந்தால், அதிக காய்ச்சல், மயக்கம், மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படுவதுடன், செரிமான அமைப்பும் பாதிக்கப்பட்டு வயிறு எரிச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும்.

இந்த பாதிப்புகள் சில நேரங்களில் விரைவில் சரியாகிவிடும், ஆனால் ஒருசில நேரங்களில் இது கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்தும்.

மேலும் உடம்பில் வேர்வையை அதிகரிக்கச் செய்வதுடன், வாயில் கொப்புளங்களும், வெடிப்புகளும் ஏற்படும். மன அழுத்தமும் அதிகரிக்கும்.

காரமான உணவுகளை வயதானவர்கள், வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், குழந்தைகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

காரமான உணவினை சாப்பிட வேண்டும் என்றால், அதனுடன் கூடுதலாக ஏதேனும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக காரமான உணவுடன் தயிர் அல்லது பால் சேர்த்து சாப்பிடலாம். பால் அல்லது தயிர் உடலில் காரத்தின் விளைவை குறைக்கும்.

சாப்பிட்ட பிறகு வயிற்று பகுதியில் எரியும் உணர்வு இருந்தால் கூலிங்கான நீரை குடியுங்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com



உடலின் சூட்டை வெகு விரைவில் குறைக்கும் பாதாம் பிசின்!
[Tuesday 2024-06-25 18:00]

உடலில் உள்ள சூடு பல நோய்களை உடலின் உள்ளே கொண்டு வரும். எனவே இந்த உடல் சூட்டை எவ்வாறு குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்க முடியும். உடலில் பாதிப்பு இருந்தாலும் இந்த பாதாம் பிசின் அதற்கு சிறந்த நிவாரணம் தரும். கோடை காலத்தில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உடல் சூட்டை தணிப்பதற்கு உதவினாலும் கூடுதலாக ஒரு சில விஷயங்களை நமது அன்றாட உணவில் சேர்ப்பது உடல் சூட்டை தணித்து உடலை குளிர்விக்க உதவும்.



உருளைக்கிழங்கு சாப்பிட்டு எடையை குறைக்கலாமா?
[Sunday 2024-06-23 16:00]

உருளைக்கிழங்கின் கலோரிகள் அதிகரிக்காமல் அதை எப்படி சமைத்து சாப்பிட்டால் உடல் உடையை குறைக்க முடியும் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6, ஆகியவை அதிகமாக நிறைந்து இருக்கின்றன. இந்த உருளைக்கிழங்கை தயிருடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.



புற்றுநோயை தடுக்கும் பச்சை பயறு குழம்பு!
[Saturday 2024-06-22 18:00]

பச்சை பயறில் புரதச்சத்து அதிகமாக காணப்படுகின்றது. ஆரோக்கியத்தை தரக்கூடிய இதில் நார்ச்சத்து மிகுதியாக இருக்கின்றது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதிலும் பச்சை பயறு பெரும் பங்கு வகிக்கின்றது. மேலும் உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க கூடியதும், முடி உதிர்வை தடுக்க கூடியதுமாகும். வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் காணப்படுகின்றது.



மூட்டு வலிக்கு முடிவு கட்டும் மூலிகை டீ!
[Friday 2024-06-21 18:00]

தற்போது வயதானவர்கள் மட்டுமின்றி, இளைஞர்கள் கூட மூட்டு வலி பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை என மருத்துவர்கள் கூறுகின்றனர். மூட்டு வலிக்கு உணவில் போதியளவு கால்சியம் மற்றும் வைட்டமின் கே இல்லாததால் தான் முக்கிய காரணமாக அமைகிறது.



மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்?
[Thursday 2024-06-20 18:00]

பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் .அதன் போது பெண்கள் உடல், உள ரீதியாக பல்வேறு மாற்றங்களை சந்திக்க நேரிடும் என்பது அனைவரும் அறிந்ததே. முன்னைய காலங்களில் மாதவிடாய் நேரத்தில் பெண்கள் வீட்டில் ஒதுக்கி வைக்கப்படுது வழக்கம். மேலும் இந்த நேரங்களில் கோவிலுக்கு செல்வதும் பூஜை பொருட்களை தொடுவதும், சமையல் அறைக்குள் செல்வதும் கூட மறுக்கப்பட்டிருந்தது. இதற்கு காரணம் பெண்களை அடிமைப்படுத்துவதற்காக என பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.



ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும் பேரீட்சை விதை பொடி!
[Wednesday 2024-06-19 18:00]

பொதுவாக விதைகளிலுள்ள குளுக்கோஸ், வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இது சர்க்கரை வியாதியுள்ளவர்கள் சாப்பிட்டால் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில், பேரிச்சம்பழங்கள் ஆற்றலை அதிகரிக்கும் பண்பு கொண்டது. ஆனால் அதிலுள்ள விதைகளை நாம் தூக்கி எறிகிறோம். இதுவும் பேரிச்சம்பழங்களை போல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை என ஆய்வுகள் கூறுகின்றன.



தினசரி தக்காளி ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
[Tuesday 2024-06-18 18:00]

பொதுவாக சமையலுக்காக பயன்படுத்தும் தக்காளி சாறு, சுவை தருவதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவிச் செய்கிறது. இதன்படி, காலையில் ஒரு கிளாஸ் ப்ரெஷ் தக்காளி ஜீஸ் குடித்தால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வழங்குவதாக கூறப்படுகின்றது. இதை அறிந்து பலர் சக்திவாய்ந்த தக்காளி சாற்றை குடித்து வருகிறார்கள். இப்படி தக்காளி ஜூஸ் தினமும் குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.



நுரையீரலை இயற்கையாக சுத்தப்படுத்தும் மூலிகைகள்!
[Saturday 2024-06-15 17:00]

பொதுவாக தற்போது இருக்கும் நவீன மயமாக்கலினால் காற்று மாசுபடுதல் மிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதனால் பூமியில் வாழும் விலங்குகளின் சுவாசம் பாதிக்கப்படுகின்றது. தொடர்ந்து மாசுப்பட்ட காற்றை மனிதர்கள் சுவாசிப்பதன் மூலம் அதிகமான நுரையீரல் கோளாறுகள் வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.



குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கீரை பக்கோடா!
[Friday 2024-06-14 18:00]

பொதுவாகவே கீரை என்றதுமே அனைவரும் முகம் சுழிப்பதற்கு காரணம் அதன் சுவை சற்று கசப்புத்தன்மை கலந்ததாக இருப்பது தான். நாம் தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ரத்தசோகைக்கு சிறந்த தெரிவாக இருக்கும். மூல நோய் உள்ளவர்கள் கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நோய் குணமாகும். மேலும் நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.



கொரியன் பெண்களைப் போன்று கண்ணாடி முகம் வேண்டுமா?
[Thursday 2024-06-13 18:00]

கொரியன் நாட்டு பெண்களைப் போன்று கண்ணாடி முகத்தினை பெறுவதற்கு அரிசி மாவு எவ்வாறு உதவுகின்றது என்பதை தெரிந்து கொள்வோம். அரிசி கழுவிய நீர் சருமத்தை பாதுகாக்கும் என்று கேள்விப்பட்ட நமக்கு, தற்போது அரிசி மாவும் சருமத்தில் அற்புதங்களை செய்யும் என்பது தெரியவந்துள்ளது.



நாள்பட்ட சளிக்கு உடனடி நிவாரணம் தரும் கொய்யா இலை!
[Wednesday 2024-06-12 18:00]

பண்டைய காலம் தொட்டு இருமல் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாக கொய்யா இலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொய்யா பழத்தை விட கொய்யா இலையில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் சளி, இருமலை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது என ஆயுள் வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.



ஓமத்தை வடிக்கட்டி தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
[Tuesday 2024-06-11 18:00]

பொதுவாக சிலருக்கு காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர் குடிப்பது வழக்கம். இந்த பழக்கத்தை மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். ஏனெனின் இரவு முழுவதும் வயிற்றிலுள்ள அனைத்து உணவுகளும் சமிபாடடைந்து வெறும் வயிற்றில் இருக்கும் பொழுது தண்ணீர் குடித்தால் வயிற்றிலுள்ள அனைத்து கழிவுகளும் மலம் வழியாக வெளியேறும். இது மலச்சிக்கல் பிரச்சினையும் தடுக்கின்றது.



உதட்டில் பீட்ரூட் துண்டு தேய்த்தால் கிடைக்கும் நன்மைகள்!
[Monday 2024-06-10 18:00]

சமைத்து சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட்டை நமது சரும அழகிற்கும் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்க முடியும். சிலருக்கு உதடுகள் வறண்டுபோய் காணப்படும். கருமை நிறத்தில் காணப்படும். சில உதடுகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக காணப்படும். இந்த குறைகளை நிவர்த்தி செய்ய தான் வீட்டில் இலகுவாக கிடைக்கக்கூடிய பீட்ரூட் பயன்படுத்தலாம்.



சருமத்தை பளிச்சிடவைக்கும் தக்காளி!
[Sunday 2024-06-09 16:00]

பொதுவாகவே ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தங்களை அழகுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக பெண்கள் முகத்தை எப்போதும் பொலிவாக வைத்துக்கொள்ள வேண்டும் என அதிகமாக நேரத்தையும் பணத்தையும் செலவு செய்கின்றனர். இருப்பினும் சூழல் மாசு மற்றும் அதிக வெயில் போன்ற காரணங்களினால் சருமம் வறண்டு பொலிவிழந்து காணப்படும் நிலை ஏற்படுகின்றது.



அசைவ சுவையில் காளான் குழம்பு வேண்டுமா?
[Saturday 2024-06-08 18:00]

காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன.இது உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த தெரிவாக இருக்கும். காளான்களில் அதிகளவு நார்ச்சத்துக்கள் காணப்படுவதால் இது செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் மலச்சிக்கலையும் தடுக்க உதவுகின்றது. மேலும் புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன.


 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா