Untitled Document
November 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும் பச்சை மிளகாய் தொக்கு!
[Saturday 2024-10-19 17:00]

பொதுவாகவே பச்சை மிளகாய் என்றால் பெரும்பாலானவர்களுக்கு அதன் காரத்தன்மை தான் நினைவிற்கு வரும். அதனால் பலரும் அதன் சத்துக்கள் தெரியாமலேயே அதனை புறக்கணித்து விடுகின்றோம். குழம்பில் சேர்க்கும் பச்சை மிளகாயையும் உணவில் இருந்து ஒதுக்கி வைத்துவிடுட்டு சாப்பிடுபவர்கள் தான் அதிகம். ஆனால் பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இது பெரிதும் துணைப்புரிகின்றது.

பச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி இரும்பு சத்தை கிரகித்துக்கொள்ள உதவுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க பச்சை மிளகாய் உதவுகிறது.

பச்சை மிளகாய் அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால் தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வதை கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.

மேலும் இது ஒரு இயற்கை வலி நிவாரணியான இருகின்றது. அதிக வேலைப்பளுவால் ஏற்படும் உடல் வலியை போக்குவதற்கு தினசரி உணவில் பச்சை மிளகாயை சேர்த்துக்கொண்டாலே போதும்.

இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட பச்சை மிளகாயை கொண்டு வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் எவ்வாறு பச்சை மிளகாய் தொக்கு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சை மிளகாய் - 15

சின்ன வெங்காயம் - 10-12

இஞ்சி - 2 இன்ச் அளவு

புளி - எலுமிச்சை அளவு

மஞ்சள் - ½ தே.கரண்டி

பெருங்காயம் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - தேவையான அளவு

கடுகு - ¼ தே.கரண்டி

வெந்தயம் - ¼ தே.கரண்டி

உளுந்தம் பருப்பு - ¼ தே.கரண்டி

கடலைப்பருப்பு - ¼ தே.கரண்டி

கருவேப்பிலை - சிறிதளவு

வெல்லம் - சிறிதளவு

செய்முறை

முதலில் பச்சை மிளகாயை நன்றாக சுத்தம் செய்து காம்புகளை நீக்கி நன்றாக உலர வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் மிளகாய்களை நீளவாக்கில் நடுவில் மட்டும் கிரீ தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து சின்ன வெங்காயம் மற்றும் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் நன்றாக ஊற வைத்து கரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

அதன் பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம் மற்றும் கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும்.

பின்னர் அதனுடன் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரையில் நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து கீரி வைத்த பச்சை மிளகாயையும் சேர்த்து நிறம் மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் நறுக்கி வைத்த இஞ்சி துண்டுகளையும் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் கருவேப்பிலை சேர்த்து சத்தம் அடங்கும் வரை விடவும். - பின் அதில் பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

அதனையடுத்து நறுக்கி வைத்த சின்ன வெங்காயத்தையும் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரையில் நன்றாக வதக்கி மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் நன்றாக கிளறிவிட வேண்டும்.

பின்னர் புளி கரைசலை சேர்த்து கலந்து விட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

இறுதியில் சிறிதளவு வெல்லம் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, கொஞ்சம் கெட்டிப்பதம் வந்ததும் இறக்கினால் அவ்வளவு தான் அட்டகாசமாக சுவையில் ஆரோக்கியம் நிறைந்த பச்சை மிளகாய் தொக்கு தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com



தொப்பை பிரச்சினைக்கு முடிவு கட்டும் அற்புத பானம்!
[Tuesday 2024-11-19 18:00]

தற்காலதில் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தப்படி வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதனால் பெரும்பாலானவர்களுக்கு தொப்பை மற்றும் உடல் எடை அதிகரிப்பு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. உடல் எடை அதிகரிப்பு பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணமாக அடைகின்றது. அதனை கட்டுப்படுத்த உடற்பயிற்ச்சி செய்ய வேண்டியது அவசியம். ஆனால் வேலைப்பளு காரணமாக பலருக்கும் முறையாக உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை.



ஹைதராபாத் பாணியில் அசத்தல் சிக்கன் வறுவல்!
[Monday 2024-11-18 18:00]

பொதுவாகவே அசைவ பிரியர்களின் உணவு பட்டியலில் சிக்கன் முக்கிய இடம் வகிக்கின்றது. சிக்கனை எப்படி செய்தாலும் சாதம், இட்லி, தோசை மற்றும் பிரட் என எல்லா உணவுடனும் சூப்பராக ஒத்துபோகும். எப்போதும் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாகவும் கூடுதல் சுவையுடனும் சிக்கன் சமைக்க வேண்டும் என்றால் ஹைதராபாத் பாணியில் ஒரு முறை இப்படி சிக்கன் வறுவல் செய்து பாருங்க.



முடி அடர்த்தியாகவும் நீளமான கருகரு கூந்தல் வேண்டுமா?
[Monday 2024-11-18 06:00]

இந்த கால கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி தலைமுடிப்பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகின்றது. இந்த பிரச்சனையை போக்குவதற்கு பலரும் பலமுறையினை முயற்சி செய்கின்றனர். இப்படி அதிகமாக இருக்கும் பிரச்சனைக்காக பலர் எண்ணெய்களை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது இருக்கும் அவசர கால கட்டத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது.



குளிர்காலத்தில் இதயத்தை பலவீனமாக்கும் உணவுகள்!
[Friday 2024-11-15 17:00]

பொதுவாக காலநிலைகள் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். அந்த சமயங்களில் நாம் நமது உடலை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது அவசியமாகும். கோடைக்காலம் சென்று குளிர்காலம் வரும் பொழுது இதமாக இருந்தாலும் இது ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடும். இதனால் குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தவறும் பட்சத்தில் இருமல், சளி, காய்ச்சல் போன்ற தொற்றுக்கள் இலகுவாக வந்து விடும்.



இட்லி சாப்பிட்டால் உடல்நல கோளாறு ஏற்படுமா?
[Thursday 2024-11-14 18:00]

எளிய உணவாக இருக்கும் இட்லியை சரியான முறையில் சாப்பிட்டால் மட்டுமே அதன் முழு பலனையும் அடைய முடியுமாம். பெரும்பாலான தென்னிந்தியா மக்கள் தங்களது காலை உணவாக இட்லி எடுத்துக் கொள்கின்றனர். சமைப்பதற்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் எளிய உணவாக இருக்கின்றது. அரிசியும், உளுந்தும் சேர்த்து அரைத்து மாவை சற்று புளிக்க வைத்து தயாரிப்பதே இட்லி ஆகும். இதற்கு சட்னி, சாம்பார் என்று சாப்பிடுவது தனி ருசி தான்.



மாதவிடாய் கால பழமையான கட்டுப்பாடுகள்!
[Wednesday 2024-11-13 18:00]

முன்னைய காலங்களில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோவிலுக்கு செல்ல கூடாது, சமையலறையில் எந்த பொருட்களையும் தொடக்கூடாது, தனியறையில் இருக்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவ்வாறான கட்டுப்பாடுகளை பெரும்பாலான பெண்கள் இன்றுவரையில் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளாகவே பார்க்கின்றார்கள்.



தொங்கும் தொப்பையை சட்டுன்னு குறைக்கும் குடைமிளகாய் சட்னி!
[Tuesday 2024-11-12 18:00]

பொதுவாக உடலில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கக்கூடிய காய்கறி வகைகளுள் குடைமிளகாய் முக்கிய இடம் வகிக்கின்றது. குடைமிளகாயில் வைட்டமின் 'சி' சத்து அதிகளவில் இருப்பதால் இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது. மேலும் இதில் அடங்கியுள்ள வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.



கெட்ட கொழுப்பை கரைத்து உடலை சிலிம்மாக மாற்றும் இலவங்கப்பட்டை!
[Monday 2024-11-11 18:00]

மசாலா பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படும் இலவங்கப்பட்டை என்பது சின்னமோமம் எனும் மரங்களின் உட்புற பட்டையிலிருந்து பெறப்படுகிறது. இது இனிப்பு மற்றும் காரமான உணவுகளுக்கு சுவை, மணம் வழங்குவதற்கு பயன்படுத்தும் முக்கிய பொருளாகும். இப்படி சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருளை எப்படி எடை குறைப்பிற்கு பயன்படுத்துவது என்பதனை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள். அப்படியாயின் இலவங்கப்பட்டையை எப்படி பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.



கெட்ட கொழுப்பை கரைக்கும் மா இலை தேநீர்!
[Sunday 2024-11-10 17:00]

இதய நோய் முதல் எடை இழப்பு வரையிலான நோய்களுக்கு மா இலைகள் மருந்தாகின்றது. மா இலைகளில், வைட்டமின்கள் சி, ஏ, பி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மனித உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அவசியமான தாதுக்களும் நிறைந்துள்ளன. அத்துடன் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள், டானின்கள் மற்றும் அந்தோசயினின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கின்றன.



புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
[Saturday 2024-11-09 18:00]

பொதுவாகவே பெண்கள் மற்ற ஆடைகளை விடவும் புடவையில் சற்று கூடுதல் அழகுடன் இருப்பார்கள். அதன் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு சேலை அணிவது பிடிக்கும். இருப்பிணும் சேலை அணிவதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதனால் தினசரி பாவனைக்கு பலரும் சேலையை பயன்படுத்துவது தற்காலத்தில் குறைவு.



ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தலாம்?
[Friday 2024-11-08 18:00]

பாதாம் ஒரு தானிய வகையாகும். இதில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் அதிக உதவியாக இருக்கும். தற்போது இருக்கும் தவறான உணவுப்பழக்கத்தின் காரணத்தினால் உடல் எடை அதிகமாகி கெட்ட கொலஸ்ராலின் அளவை அதிகமாக்கிறது. இதனால் இதய நோய் முதல் பலவிதமான நோய்கள் நம்மை வந்து சேரும். பாதாமில் நிறைய நார்ச்சத்து இருப்பதால் இது கெட்ட கொலஸ்ராலை குறைக்க உதவும். இதை எப்படி சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ராலை குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



எண்ணற்ற பலன்களை தரும் ஊற வைத்த அரிசி நீர்!
[Thursday 2024-11-07 18:00]

அரிசி ஊற வைத்த தண்ணீரை வெளியே கொட்டாமல் அதனை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்று பெரும்பாலான வீடுகளில் அரிசி ஊற வைத்த தண்ணீரை கீழே ஊற்றி வீணடித்து விடுவார்கள். ஆனால் இவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லைாயம். ஆம் அரிசி கழுவும் தண்ணீரை வைத்து நாம் பலவிதமான நன்மைகளை பெற முடியும். அது என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



ஆந்திரா பாணியில் காரசாரமான தக்காளி பச்சடி!
[Wednesday 2024-11-06 19:00]

பொதுவாகவே ஆந்திரா பாணியில் செய்யப்படும் அனைத்து உணவுகளும் காரசாரமாகவும் அசத்தல் சுவையிலும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் காரத்திற்கு பெயர் போன இடம் என்றால் அது ஆந்திரா மாநிலம் தான். ஆந்திரா பாணியில் நாவூரும் சுவையில் காரசாரமான தக்காளி பச்சடியை எவ்வாறு செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம். தங்காளியில் அதிகளவில் வைட்டமின் சி காணப்படுவதால் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த பெரிதும் துணைப்புரிகின்றது.



கேரள பெண்களின் கூந்தல் ரகசியம் என்ன தெரியுமா?
[Tuesday 2024-11-05 18:00]

பொதுவாகவே பெண்களுக்கு நீண்ட ஆரோக்கியமான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பெரும்பாலான பெண்கள் தங்களின் நேரத்தையும் பணத்தையும் அதிகம் செலவு செய்கின்றனர். ஆனால் கேரள பெண்களின் கூந்தல் எப்போதும் நீண்டதாகவும் ஆரோக்கியமாகவும் கருமையாகவும் இருப்பதன் ரகசியம் என்ன தெரியுமா? நெல்லிக்காயை வைத்து தயாரிக்கும் சம்மந்தி தான். நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ-யின் சிறந்த மூலமாக இருக்கின்றது. இதில் ஒரு ஆப்பிள் பழத்திற்கு நிகராக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.



முழங்கால் வலியை குணமாக்கும் நடைபயிற்சி!
[Monday 2024-11-04 18:00]

பொதுவாக நாம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நடைபயிற்சி அவசியமாக பார்க்கப்படுகின்றது. நடைபயிற்சி எனக் கூறும் பொழுது பலர் முன்னோக்கி தான் நடப்பார்கள். ஆனால் முன்னோக்கி நடப்பதற்கு பதிலாக பின்னோக்கி நடந்தால் அதில் நன்மைகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. முழங்கால் வலி முதல் உடல் எடையை குறைப்பது வரையிலான பல பலன்கள் பின்னோக்கி நடப்பதால் இலகுவாக கிடைக்கின்றன. சிலர் என்ன செய்தாலும் எடை குறையாமல் இருக்கின்றது என கவலையில் இருப்பார்கள். இப்படியானவர்கள் பின்னோக்கி நடப்பது நல்லது. அப்படியாயின் பின்னோக்கி நடப்பதன் மூலம் எமக்கு கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.


Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா