Untitled Document
November 27, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
குளிர்காலத்தில் வேர்க்கடலை கட்டாயம்!
[Tuesday 2024-11-26 18:00]

குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலையில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றது. அனைத்து தரப்பினரும் வாங்கி சாப்பிடக்கூடிய பொருளாகவும் வேர்க்கடலை இருக்கின்றது. நம்முடைய உணவு முறை நமது ஆரோக்கியத்தை பாதிக்காமல் இருப்பது அவசியம். வேர்க்கடலையில் சிற்றுண்டி செய்வது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

அதிலும் குளிர்காலங்களில் அடிக்கடி வேர்க்கடலை உண்பதால் குளிரை எதிர்த்து போராடும் ஆற்றல் கிடைக்கின்றது. ஏனெனில் குளிரைத் தாங்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது. குளிர்காலத்தில் வேர்க்கடலை உண்பதால் கிடைக்கும் சில நன்மைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

குளிர்காலத்தில் உடல் ஆற்றலை வேர்க்கடலை அதிகப்படுத்துகின்றது. ஆம் குளிர்காலங்களில் சோர்வாகவும், மந்தமாகவும் இருக்கும். ஆனால் வேர்க்கடலை சாப்பிடுவதால் ஆற்றல் கிடைப்பதுடன், இதில் உள்ள நல்ல கொழுப்பு, புரதம் ஆகியவை குளிரை தாங்கக்கூடியதாக இருக்கின்றது. குளிர்காலத்தில் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக செயல்பட ஒரு கைப்பிடி வேர்க்கடலையை கட்டாயம் எடுத்துக் கொள்ளவும்.

வேர்க்கடலையில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக உள்ள நிலையில், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. வேர்க்கடலையில் காண்ப்படும் ரெஸ்வெராட்ரோல் மாதிரியான ஆக்ஸிஜனேற்றங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன. ஆதலால் குளிர் காலங்களில் கட்டாயம் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் குளிர்காலங்கள் ஆரம்பித்துவிட்டாலே கூடவே சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்பட்டு விடும். வேர்க்கடலையில் உள்ள துத்தநாகம், வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுவதுடன், நோய்தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்கின்றது.

இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவிக்கவும், மலச்சிக்கல் வராமலும் தடுக்கின்றது. குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக பருகுவதால், மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கின்றது. மேலும் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவிற்கு இது உதவியாக இருக்கும்.

வேர்க்கடலையில் உள்ள வைட்டமின்கள் பி, நியாசின், ஃபோலேட் போன்றவை உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. மேலும் இதிலுள்ள மெக்னீசியம் தசை, நரம்பு செயல்பாட்டை மேம்படுத்தி சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றது.

வேர்க்கடலை உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கின்றது. ஏனெனில் குறைவாக சாப்பிட்டாலும், வயிறு நிறைந்த உணர்வை அளிப்பதால், அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்க முடியும்.

வேர்க்கடலை ஆரோக்கியம் நிறைந்ததாக இருந்தாலும், இதில் இருக்கும் அதிக கலோரிகள் உடல் எடையை அதிகரிக்கவும் செய்யும். அவித்த அல்லது வறுத்த கடலையை 50 அல்லும் 100 கிராமிற்குள் எடுத்துக் கொள்ளலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com



அசத்தல் சுவையில் பூண்டு மிளகு சிக்கன் வறுவல்!
[Sunday 2024-11-24 18:00]

பொதுவாகவே அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் சிக்கன் நிச்சயம் முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது. பெரும்பாலானவர்களுக்கு அசைவ உணவுகளை காரசாரமாக சாப்பிடுவது தான் பிடிக்கும். அப்படி பூண்டு மிளகு சேர்த்து அசத்தல் சுவையில் காரசாரமான சிக்கன் வறுவலை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



அரிசி உளுந்து இல்லாமல் பஞ்சு போன்ற இட்லி செய்யலாம் எப்படி தெரியுமா?
[Saturday 2024-11-23 18:00]

இட்லி நமது காலை உணவில் மிகவும் முக்கியமாக இடம்பெறும் ஒரு உணவாகும். இதற்கு கட்டாயமாக அரிசி ஊழுந்து தேவபை்படும். இதை வைத்து தான் பாரம்பரியமாக மக்கள் தொண்டு தொட்ட காலம் இருந்து இட்லி செய்து வருகின்றனர். பொதுவாக இது தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். இந்த இட்லி உணவை சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையான உணவாக இருக்கும்.



ஒட்டகங்களுக்கு ஏன் உயிருள்ள விஷப் பாம்புகள் உணவாக கொடுக்கப்படுகிறது?
[Friday 2024-11-22 18:00]

சில பிரதேசங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய நடைமுறையில் ஒன்றாக திகழும் திகழும் விடயம் தான் ஒட்டகங்களுக்கு உயிருள்ள பாம்புகள் உணவாக கொடுக்கப்படுவது. ஆனால் இந்த அசாதாரண உணவு முறை பாரம்பரிய மருத்துவத்துடன் தொடர்புப்பட்டதாக நம்பப்படுகிறது. காரணம் பாம்புகளை உட்கொள்வது ஒட்டகங்களின் சில நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.



கிராமத்து மண்வாசனையில் கத்தரிக்காய் குழம்பு!
[Wednesday 2024-11-20 18:00]

நாம் வீட்டில் விழாக்களின் போது பல வகையான உணவுகளை செய்து உண்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் சமைப்பதை விட இந்த விழா காலங்களில் மட்டும் நாம் ஒரு விதவிதமாகவும் சுவையாகவும் சமைப்போம். கத்தரிக்காய் நம் அனைவருக்கும் பிடித்த ஒரு காய் கறியாகும். இதில் சாம்பார், கூட்டு, பொரியல், புளிக்குழம்பு, பிரியாணிக்கான தொக்கு என பல வகையாக செய்வார்கள். இதில் மெக்னீசியம், மேங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் காப்பர் சத்துக்கள் நிறைவாக உள்ளன.



தொப்பை பிரச்சினைக்கு முடிவு கட்டும் அற்புத பானம்!
[Tuesday 2024-11-19 18:00]

தற்காலதில் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தப்படி வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதனால் பெரும்பாலானவர்களுக்கு தொப்பை மற்றும் உடல் எடை அதிகரிப்பு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. உடல் எடை அதிகரிப்பு பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணமாக அடைகின்றது. அதனை கட்டுப்படுத்த உடற்பயிற்ச்சி செய்ய வேண்டியது அவசியம். ஆனால் வேலைப்பளு காரணமாக பலருக்கும் முறையாக உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை.



ஹைதராபாத் பாணியில் அசத்தல் சிக்கன் வறுவல்!
[Monday 2024-11-18 18:00]

பொதுவாகவே அசைவ பிரியர்களின் உணவு பட்டியலில் சிக்கன் முக்கிய இடம் வகிக்கின்றது. சிக்கனை எப்படி செய்தாலும் சாதம், இட்லி, தோசை மற்றும் பிரட் என எல்லா உணவுடனும் சூப்பராக ஒத்துபோகும். எப்போதும் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாகவும் கூடுதல் சுவையுடனும் சிக்கன் சமைக்க வேண்டும் என்றால் ஹைதராபாத் பாணியில் ஒரு முறை இப்படி சிக்கன் வறுவல் செய்து பாருங்க.



முடி அடர்த்தியாகவும் நீளமான கருகரு கூந்தல் வேண்டுமா?
[Monday 2024-11-18 06:00]

இந்த கால கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி தலைமுடிப்பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகின்றது. இந்த பிரச்சனையை போக்குவதற்கு பலரும் பலமுறையினை முயற்சி செய்கின்றனர். இப்படி அதிகமாக இருக்கும் பிரச்சனைக்காக பலர் எண்ணெய்களை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது இருக்கும் அவசர கால கட்டத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது.



குளிர்காலத்தில் இதயத்தை பலவீனமாக்கும் உணவுகள்!
[Friday 2024-11-15 17:00]

பொதுவாக காலநிலைகள் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். அந்த சமயங்களில் நாம் நமது உடலை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது அவசியமாகும். கோடைக்காலம் சென்று குளிர்காலம் வரும் பொழுது இதமாக இருந்தாலும் இது ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடும். இதனால் குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தவறும் பட்சத்தில் இருமல், சளி, காய்ச்சல் போன்ற தொற்றுக்கள் இலகுவாக வந்து விடும்.



இட்லி சாப்பிட்டால் உடல்நல கோளாறு ஏற்படுமா?
[Thursday 2024-11-14 18:00]

எளிய உணவாக இருக்கும் இட்லியை சரியான முறையில் சாப்பிட்டால் மட்டுமே அதன் முழு பலனையும் அடைய முடியுமாம். பெரும்பாலான தென்னிந்தியா மக்கள் தங்களது காலை உணவாக இட்லி எடுத்துக் கொள்கின்றனர். சமைப்பதற்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் எளிய உணவாக இருக்கின்றது. அரிசியும், உளுந்தும் சேர்த்து அரைத்து மாவை சற்று புளிக்க வைத்து தயாரிப்பதே இட்லி ஆகும். இதற்கு சட்னி, சாம்பார் என்று சாப்பிடுவது தனி ருசி தான்.



மாதவிடாய் கால பழமையான கட்டுப்பாடுகள்!
[Wednesday 2024-11-13 18:00]

முன்னைய காலங்களில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோவிலுக்கு செல்ல கூடாது, சமையலறையில் எந்த பொருட்களையும் தொடக்கூடாது, தனியறையில் இருக்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவ்வாறான கட்டுப்பாடுகளை பெரும்பாலான பெண்கள் இன்றுவரையில் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளாகவே பார்க்கின்றார்கள்.



தொங்கும் தொப்பையை சட்டுன்னு குறைக்கும் குடைமிளகாய் சட்னி!
[Tuesday 2024-11-12 18:00]

பொதுவாக உடலில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கக்கூடிய காய்கறி வகைகளுள் குடைமிளகாய் முக்கிய இடம் வகிக்கின்றது. குடைமிளகாயில் வைட்டமின் 'சி' சத்து அதிகளவில் இருப்பதால் இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது. மேலும் இதில் அடங்கியுள்ள வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.



கெட்ட கொழுப்பை கரைத்து உடலை சிலிம்மாக மாற்றும் இலவங்கப்பட்டை!
[Monday 2024-11-11 18:00]

மசாலா பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படும் இலவங்கப்பட்டை என்பது சின்னமோமம் எனும் மரங்களின் உட்புற பட்டையிலிருந்து பெறப்படுகிறது. இது இனிப்பு மற்றும் காரமான உணவுகளுக்கு சுவை, மணம் வழங்குவதற்கு பயன்படுத்தும் முக்கிய பொருளாகும். இப்படி சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருளை எப்படி எடை குறைப்பிற்கு பயன்படுத்துவது என்பதனை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள். அப்படியாயின் இலவங்கப்பட்டையை எப்படி பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.



கெட்ட கொழுப்பை கரைக்கும் மா இலை தேநீர்!
[Sunday 2024-11-10 17:00]

இதய நோய் முதல் எடை இழப்பு வரையிலான நோய்களுக்கு மா இலைகள் மருந்தாகின்றது. மா இலைகளில், வைட்டமின்கள் சி, ஏ, பி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மனித உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அவசியமான தாதுக்களும் நிறைந்துள்ளன. அத்துடன் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள், டானின்கள் மற்றும் அந்தோசயினின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கின்றன.



புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
[Saturday 2024-11-09 18:00]

பொதுவாகவே பெண்கள் மற்ற ஆடைகளை விடவும் புடவையில் சற்று கூடுதல் அழகுடன் இருப்பார்கள். அதன் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு சேலை அணிவது பிடிக்கும். இருப்பிணும் சேலை அணிவதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதனால் தினசரி பாவனைக்கு பலரும் சேலையை பயன்படுத்துவது தற்காலத்தில் குறைவு.



ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தலாம்?
[Friday 2024-11-08 18:00]

பாதாம் ஒரு தானிய வகையாகும். இதில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் அதிக உதவியாக இருக்கும். தற்போது இருக்கும் தவறான உணவுப்பழக்கத்தின் காரணத்தினால் உடல் எடை அதிகமாகி கெட்ட கொலஸ்ராலின் அளவை அதிகமாக்கிறது. இதனால் இதய நோய் முதல் பலவிதமான நோய்கள் நம்மை வந்து சேரும். பாதாமில் நிறைய நார்ச்சத்து இருப்பதால் இது கெட்ட கொலஸ்ராலை குறைக்க உதவும். இதை எப்படி சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ராலை குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா