Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மீதமுள்ள சாதத்தில் சுவையான சிக்கன் ப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?
[Wednesday 2025-07-23 17:00]

மதியம் சமைத்த சாதம் அதிகமாகி விட்டது என சிலர் வீடுகளில் கவலையாக இருப்பார்கள். அதனை என்ன செய்யலாம் என்ற பல வழிகளில் சிந்தனை போகும். அப்படி வீடுகளில் மீதமாகி விட்டால் வீட்டில் இருப்பவர்களுக்கு ப்ரைடு ரைஸ் செய்து கொடுக்கலாம். கடையில் சிக்கனை வாங்கி வந்து, அதை 65 போன்று செய்து அதனுடன் சாதம் சேர்த்து கிளறினால் வீட்டிலுள்ள விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில், மீந்து போன சாதம் கொண்டு சிக்கன் ப்ரைடு ரைஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கீழுள்ள பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

சோள மாவு - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

உப்பு - சுவைக்கேற்ப

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பீன்ஸ் - 3 (பொடியாக நறுக்கியது)

கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)

முட்டைக்கோஸ் - சிறிது (பொடியாக நறுக்கியது)

குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு - சுவைக்கேற்ப

மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 சிட்டிகை

முட்டை - 2

மீந்து போன சாதம் - 1 கப்

மிளகுத் தூள் - 1 1/4 டீஸ்பூன்

சோயா சாஸ் - 1 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?

முதலில் எலும்பில்லாத சிக்கனை கழுவி அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சோள மாவு, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகிய பொருட்களை போட்டு, நன்றாக கிளறி விட்டு 30 நிமிடம் ஊற வைக்கவும்.

30 நிமிடத்திற்கு பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு தீயில் வைத்து 10 நிமிடங்கள் நன்கு வேக வைக்கவும்.

அதன் பின்னர், சிக்கன் துண்டுகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்தப்படியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் மற்றும் குடைமிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு காய்கறிகள் வேக விடவும். காய்கறி வதங்கியவுடன் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதங்க விடவும்.

அதற்கு குள் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிது உப்பு தூவி நன்கு நன்கு கிளறவும்.

முட்டை வெந்தவுடன் அதில் மீந்து போன சாதம், ப்ரை செய்து வெட்டி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, அத்துடன் மிளகுத் தூள், சோயா சாஸ் மற்றும் கொத்தமல்லியைத் தூவி 5 நிமிடம் தீயில் வைத்து இறக்கினார் சுவையான சிக்கன் ப்ரைடு ரைஸ் தயார்!

  
  
   Bookmark and Share Seithy.com



தினமும் துளசி கஷாயம் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
[Monday 2026-05-18 18:00]

மருத்துவ குணங்கள் நிறைந்த துளசியை தினமும் கஷாயம் வைத்து குடித்தால் உடலுக்கு என்ன நன்மை என்பதை பார்க்கலாம். துளசியில் வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளன. மேலும், இது வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளது. இதைத் தினமும் உட்கொள்வது, நோய்களை எதிர்த்துப் போராடும் உங்கள் உடலின் திறனை அதிகரித்து, அடிக்கடி நோய் ஏற்படுவதைத் தடுக்கும். துளசி ஒரு சிறந்த அடாப்டோஜென் ஆகும்.



மாலையில் இந்த உணவுகளை கட்டாயம் எடுக்காதீங்க!
[Sunday 2026-05-17 07:00]

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிடுவது கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மாலை நேரங்களில் நாம் சாப்பிடும் உணவில் சற்று கவனம் எடுக்க வேண்டும். குறிப்பாக குளிர்காலம் என்றால் பஜ்ஜி, சமோசா, பீட்சா போன்ற உணவுகளை விரும்புகின்றனர். ஆனால் எண்ணெய்யில் பொரித்த உணவுகள் செரிமானத்தை கடுமையாக பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.



நீரிழிவு நோய்க்கு நடைப்பயிற்சி எப்போது மிகவும் நன்மை தரும்?
[Saturday 2026-05-16 18:00]

நீரிழிவு நோய் இருந்தால் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நடைப்பயிற்ச்சி செய்தால் அது நன்மை தரும் என்பதை பார்க்கலாம். நீரிழிவு நோயாளிகள் தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடக்க வேண்டும். நீங்கள் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்றாலும், இரத்தச் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்க, உணவுக்குப் பிறகு நடப்பது மிகவும் அவசியம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.



பற்களை பாதுகாக்க இயற்கையான வீட்டு வைத்தியம்!
[Friday 2026-05-15 17:00]

பற்களை பாதுகாப்பதற்கு நம்மில் பலருக்கும் தெரியாத சில டிப்ஸ்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பல் பிரச்சனை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கின்றது. முந்தைய காலங்களில் சற்று வயதான பின்பே பல்பிரச்சனை வந்த நிலையில், தற்போது குழந்தையிலேயே பிரச்சனை வந்துவிடுகின்றது.



இந்த உணவுப்பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாதாம்!
[Thursday 2026-05-14 17:00]

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் எந்தெந்த பொருளுக்கு காலாவதி தேதி இல்லை என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு உணவுப்பொருளுக்கும் காலாவதி தேதி கொடுத்திருப்பார்கள். ஆனால் இயற்கையில் சில பொருட்கள் பாக்டீரியா தாக்குதல்களை தாங்கும் திறன் கொண்டுள்ளது. இந்த பொருட்களில் குறைவான ஈரப்பதும், அதிக அமிலத்தன்மை மற்றும் இயற்கையான பாதுகாப்பு பூச்சு இருப்பதால் இவைகள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுகின்றது.



கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?
[Wednesday 2026-05-13 16:00]

வெயில் காலத்தில் கரும்பு ஜுஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வெயில் காலம் வந்துவிட்டாலே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கஷ்டப்படுகின்றனர். உடலில் வெப்பம் அதிகரித்துவிடுவதுடன், நீர்ச்சத்தும் குறைந்து விடுகின்றது. ஆதலால் வெயில் காலங்களில் எலுமிச்சை, தர்பூசணி, கரும்பு இவற்றினை ஜுஸாக எடுத்துக் கொள்ளலாம். இதில் எலுமிச்சை மற்றும் கரும்பு ஜுஸ் விலை மலிவாகவே கிடைக்கின்றது.



ஏழு நாட்களுக்குத் தினமும் பீட்ரூட் சாறு குடித்தால் என்ன பலன்?
[Tuesday 2026-05-12 16:00]

பீட்ரூட் சாறு ஒரு வாரத்திற்கு தொடர்ந்து குடித்தால் உடலுக்கு என்ன நன்மை என்பதை பார்க்கலாம். பீட்ரூட் சாறு (Beetroot Juice) நைட்ரேட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான பானமாகும். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தடகள செயல்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், இது சரும பொலிவு மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.



நெய்யில் வறுத்த பூண்டை தினமும் சாப்பிடுங்க - என்னென்ன நன்மைகள் தெரியுமா?
[Monday 2026-05-11 16:00]

பூண்டில் அதிக மருத்துவ குணங்கள் நிறைய உள்ளது. இதை நெய்யில் வறுத்து சாப்பிட்டால் உடலுக்கு பல நனடமைகள் கிடைக்கும். பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் மற்றும் உடல் எடையைக் குறைத்தல் போன்ற பல மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள அல்லிசின் (Allicin) சத்து கொலஸ்ட்ராலைக் குறைத்து, பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்துப் போராடி, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.



இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க சிறந்த உடற்பயிற்சி எது?
[Sunday 2026-05-10 16:00]

உடலில் ரத்த சக்கரை அளவு குறைய நாம் எந்த உடற்பயிற்ச்சி செய்ய வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம். உடற்பயிற்சி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது மட்டுமல்ல, அது வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தையும் குறைக்கக்கூடும். வழக்கமான உடல் செயல்பாடு, தசைகளை இன்சுலினுக்கு அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றுவதன் மூலம் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் ஆற்றலுக்காக குளுக்கோஸைப் பயன்படுத்தும் உடலின் திறனையும் அதிகரிக்கிறது.



நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் நெல்லிக்காய் தொக்கு!
[Saturday 2026-05-09 15:00]

பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவான விலையில் கிடைக்கூடியது தான் நெல்லிக்காய். இதில் அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளும் மருத்துவ குணங்களும் காணப்படுகின்றது. நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சித்த மருத்துவம்மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் நெல்லிக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது. தினசரி உணவில் நெல்லிக்காய் சேர்த்துக்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பதுடன், கண்பார்வை கூர்மையாகும்.



நொடியில் காலியாகும் காரசாரமான சிக்கன் ஊறுகாய்!
[Friday 2026-05-08 16:00]

பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் சிக்கன் முக்கிய இடம் வகிக்கின்றது. அந்தளவுக்கு சிக்கன் எல்லா உணவு வகைகளுடனும் அசத்தலாக சுவையை கொடுக்கக்கூடியது என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் சிக்கன் பிரியர்கள் ஏராளாம். அப்படி வீட்டில் உள்ள அனைவரையும் குஷியாக்கும் வகையில், காரசாரமான சுவையில் சிக்கன் ஊறுகாய் எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.



மத்தி மீனை உணவில் கட்டாயம் எடுத்துக்கோங்க!
[Thursday 2026-05-07 16:00]

கடல் உணவுகளில் முக்கியமாக இருக்கும் மீன் உணவுகளில் மத்தி மீனின் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மீன்களில் பலவகைகள் உள்ள நிலையில், கடல்வகை உணவுகள் அனைத்தும் உடம்பிற்கு அதிக ஆரோக்கியத்தினை அளிக்கின்றது. அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகம் இருக்கும் மீனை பல வகைகளில் சமைத்து சாப்பிடுகின்றோம். குழம்பு, வறுவல், சைனிஸ் வகைகள் என செய்து சாப்பிடும் நமக்கு எந்தெந்த மீன்களில் எவ்வளவு சத்து உள்ளது என்பது அவ்வளவாக தெரிவதில்லை.



கொளுத்தும் வெயிலுக்கு இதமாக வெண்டைக்காய் தயிர் குழம்பு!
[Wednesday 2026-05-06 16:00]

அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தால் ,கொளுத்தும் வெயிலில் நிறைய பேர் உடல் சூடு பிரச்சனையை சந்திப்பார்கள். மேலும் கோடை காலத்தில் காரசாரமாக சாப்பிடவும் பிடிக்காது. இந்நிலையில் சற்று காரம் குறைவாகவும், அதே சமயம் உடல் சூட்டை தணிக்கும் வகையிலும் ஏதாவது சுசையாக சாப்பிட வேணடும் என்று தான் ஆசையாக இருக்கும். அப்படியான நிலையில், வீட்டில் வெண்டைக்காயும், தயிரும் இருந்தால், போதும் அவற்றைக் கொண்டு அசத்தல் சுவையில் மோர் குழம்பு செய்யலாம்.வெறும் பத்தே நிமிடத்தில் அசத்தலான மோர் குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்தால் உடல் எடை குறையுமா?
[Tuesday 2026-05-05 15:00]

நெல்லிக்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதிக பலன் கிடைக்கும். ஆயுர்வேதத்தின்படி, நெல்லிக்காய் சாறு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பல உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்க நெல்லிக்காய் சாறு அருந்துவது ஆயுள்வேதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி நெல்லிக்காய் சாற்றை சரியான அளவிலும் சரியான முறையிலும் சேர்த்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும்.



கோடை வெயிலிலிருந்து தப்பிக்க வேண்டுமா?
[Monday 2026-05-04 16:00]

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் பாதாம் பிசினின் எண்ணற்ற நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக கோடை காலங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்பதால், உடலை குளிர்ச்சியாக வைப்பது மிகவும் அவசியம் ஆகும். உடலைக் குளிர்விப்பதற்கு மக்கள் பல இயற்கை மற்றும் செயற்றை பானங்களை விரும்புகின்றனர். ஆனால் செயற்கை பானங்கள் எந்தவொரு பயனும் அளிப்பதில்லை. இயற்கை பானங்கள் மட்டுமே மனிதர்களின் உடம்பை நீரோற்றமாக வைத்திருக்கின்றது.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா