Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வெந்நீரின் அற்புத குணங்கள்!..
[Friday 2020-01-10 18:00]

தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதைவிட ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டதுக்கு பிறகு ஒரு தம்ளர் வெந்நீர் குடிப்பது மிக மிக நல்லது என்றும் சொல்கிறார்கள். நாமும் வெந்நீர் குடிக்கிறோம். ஆனால் எப்போதாவது தான். ஆனால் தினமும் வெந்நீர் குடித்தால் பெரும்பாலான நோய்கள் வரவிடாமல் செய்ய முடியும் என்கிறார்கள். இயலாதவர்கள் குறிப்பிட்ட நேரத்திலாவது தவிர்க்காமல் எடுத்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள். அப்படி என்ன செய்துவிடும் வெந்நீர்.. வாங்க தெரிந்துகொள்வோம்.

வெந்நீர்

வளரும் பிள்ளைகளுக்கு எப்போதும் வெந்நீர் தான். காய்ச்சல் நேரங்களில் வெந்நீரை குடிக்கிறோம். பனிக்காலத்தில் வெந்நீர் என்று அதற்கு நேரம் ஒதுக்கியிருக்கிறோம். ஆனால் சிலர் எப்போதும் எல்லா காலங்களிலும் வெந்நீர் குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கோடைக் காலங்களிலும். ஆனால் தினமும் வெந்நீர் குடிப்பதால் உடலில் பல நன்மைகள் உண்டாகும். குறிப்பாக பல நோய்களை தவிர்த்து ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். நமது முன்னோர்கள் வெந்நீரில் சீரகத்தை வறுத்து போட்டு வடிகட்டி குடித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் கேரள மக்கள் பெரும்பான்மையானோர் இதை பின்பற்றிவருகிறார்கள்.

செரிமானக் கோளாறு நீங்கும்

சித்தர்கள் நீர் சுருக்கி என்று சொல்லி யிருக்கிறார்கள் அதாவது நீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்பது இதன் பொருள். ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டதும் ஒரு தம்ளர் வெந்நீர் குடிப்பதால் உண்ணும் உணவு எளிதில் செரிமானம் ஆகும். செரிமானம் சீராக இருந்தால் தான் அடுத்த வேளை பசி எடுக்கும். இந்த ஜீரண உறுப்புகளை தூண்டுவதில் வெந்நீர் மிக முக்கிய பங்குவகிக்கிறது. இவை நம் இரைப்பையில் இருக்கும் பெப்ஸின் மற்றும் ரெனின் என்னும் பழைய என்சைம்களை வெளியேற்றி புது அமிலங்களை உண்டாக்குகிறது.

இவை செரிமான பிரச்சனையால் உண்டாகும் நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம்.,உணவு எதுகளிப்பு போன்ற பிரச்சனைகளை வரவிடாமல் செய்யும். விருந்து உணவு அல்லது அசைவ உணவு சாப்பிடும் போது உடன் ஒரு தம்ளர் வெந்நீர் எடுத்துகொள்வது உணவின் செரிமானத்துக்கு பெரிதும் துணைபுரியும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. செரிமான கோளாறு இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் வரை வெந்நீர் எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மலச்சிக்கல் வராது

உடல் ஆரோக்கியத்துக்கு உணவு எவ்வளவு முக்கியம் அவ்வளவு முக்கியம் உணவிலிருந்து தனியாக பிரித்தெடுக்கும் சக்கையை வெளியெற்றுவது. இவை குடலிலிருந்து மலக்குடலுக்கு அனுப்பப்பட்டு வெளியேற்றப்படுவதும் அவசியம்.மலச்சிக்கல் பிரச்சனையால் அதிகம் பேர் அவதிப்படுகிறார்கள். தினமும் காலை எழுந்ததும் இரண்டு தம்ளர் வெந்நீர் குடித்துவந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நிரந்தரமாக விட்டொழியும். வெந்நீர் வயிற்றை சுத்தம் செய்து கழிவுகளை மலக்குடலுக்கு அனுப்பும். மலக்குடல் மலத்தை இளக்கி சிக்கலில்லாமல் வெளியேற்ற உதவும். அதனால் தான் மருத்துவர்கள் மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களை அதிக அளவு தண்ணீர் குடிக்கவும் வலியுறுத்துகிறார்கள்.

கழிவு வெளியேற்றம்

எந்த பொருளையும் சூடாக எடுக்கும் போது வியர்வை வெளிப்படும் என்பது இயல்பு. அதே போன்று மிதமான சூட்டில் வெந்நீர் குடிக்கும் போது நம் உடல் வியர்வைக்குள்ளாகும். சூடான பொருள் உடல் வெப்பநிலையை அதிகரித்து அதை சமன்படுத்தவே வியர்வையை வெளியேற்றுகிறது. வெந்நீர் குடித்த உடன் வெளியேறும் வியர்வையில் தேவையற்ற நீர், உப்பும் சேர்ந்து வெளியேறுவதால் உடலில் இருக்கும் நச்சுகளும் அகற்றப்படுகிறது. ஆரோக்கியம் தாண்டி சருமத்துக்கு புத்துயிர் தருகிறது. உடலில் இரத்தக்குழாய்களை விரிவுப் படுத்துவதால் உடலுக்கு இரத்த ஓட்டம் தடையின்றி செயல்படுகிறது. இதனால் உறுப்புகளுக்கு வேண்டிய ஆக்ஸிஜன் சீராக கிடைக்கும். இதனால் பெருமளவு நோய்கள் உண்டாவது தவிர்க் கப்படுகிறது.

கண்டிப்பாக குடிக்க வேண்டிய நேரம்

தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இரண்டு தம்ளர் வெந்நீர் குடிப்பது நாள் முழுக்க உங்களை ஆற்றலோடு சுறுசுறுப்பாக வைத்திருக்கும். உணவுக்கு முன் அரை மணி நேரத்தில் ஒரு தம்ளர் நீர், உணவுக்கு பின் ஒரு தம்ளர் நீர் போதும் உங்களை கச்சிதமாக வைத்திருக்கும். எப்போதும் வெந்நீர் என்னும் பழக்கம் வைத்திருந்தால் சருமத்தில் உண்டாகும் குறைபாட்டை விரைவில் சீர் செய்ய உதவும்.இவை தவிர சளி, இருமல், தொண்டைபுண் பிரச்சனைகளை மழைகாலங்களிலும் உண்டாக்காது.

வெந்நீர் கடையில் வாங்கும் பொருளோ நேரம் எடுத்து தயாரிக்க வேண்டிய பொருளோ அல்ல என்பதால் இனி உங்கள் வீட்டில் அனைவரும் வெந்நீருக்கு மாறுங்கள். தொடர்ந்து ஒரு மாதம் குடித்தால் பிறகு நீங்களே குளிர்ந்த நீரா வேண்டாம் வெந்நீர் போதும் என்று சொல்வீர்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா