Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தர்பூசணி விதையில் இருக்கும் மருத்துவ குணங்கள்!
[Wednesday 2020-02-12 18:00]

தர்பூசணி பழத்தின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நாம் பெரும்பாலும் தூக்கிப்போடும் தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளில் ஏகப்பட்ட நன்மைகள் ஒளிந்திருக்கின்றன. அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம். தர்பூசணி பழத்தில் அதிக தண்ணீர் சத்து உள்ளது. வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தால் நீர் சத்து பற்றாக்குறை நம் உடலில் ஏற்படும் பொழுது தர்ப்பூசணி பழங்கள் அதைப் பாதுகாத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. உணவிற்கு பதில் தர்பூசணி பழங்களை உண்டு வருகின்றனர் தர்பூசணி பழத்தில் மிகக் குறைந்த கலோரி இருப்பதால் உடல் எடை குறைக்க உதவுவதாக அவர்கள் நம்புகின்றனர்.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் தர்பூசணி பழத்தின் மகிமை, ஆனால் தர்பூசணி பழங்களை சாப்பிடும் பொழுது நாம் துப்பி விடும் தர்பூசணியின் விதைகளை பற்றி நாம் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். தர்பூசணி பழத்தின் விதை என்பது பல நல்ல மருத்துவ குணநலன்களை கொண்டதாகும். தர்பூசணி பழத்தின் விதையை வறுத்து நொறுக்குத் தீனி போல் உண்ணலாம். மிகவும் ருசியாக இருக்க கூடியது. ஆனால் நாம் பலரும் பழத்தை சாப்பிடும் பொழுது தர் பூசணி விதையை கீழே போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளோம். இனிமேல் தர்பூசணி பழங்களை சாப்பிடும் முன்பு விதைகளை தனியே அதிலிருந்து எடுத்து வைத்துக்கொண்டு அதை உபயோகிக்க வேண்டும். அதனால் ஏற்படும் நன்மைகளை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். தர்பூசணி பழத்தின் விதைகளை பற்றிய நன்மைகளை தற்பொழுது பார்க்கலாம்.

சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கிறது

தர்பூசணியின் விதையானது சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது என்று கண்டு பிடித்து உள்ளனர். மிகவும் அதிகமான நார்ச்சத்துகள் நிறைந்துள்ள கூறுகின்றனர். நார்ச்சத்து சர்க்கரை வியாதியை குறைப்பதற்கும் உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. மேலும் சர்க்கரை வியாதி டைப் 2 உள்ளவர்களுக்கு இது மிகப் பெரும் உறுதுணையாக திகழ்கிறது.இந்த பூசணி பழத்தின் விதையில் அமினோ ஆசிட்டுகள் நிறைந்துள்ளன. ரத்து ஓட்டங்களுக்கு பெரிதளவில் உதவி செய்கின்றது. வீக்கங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவும் உதவி செய்கிறது.

​சோர்வை விரட்டுகிறது

உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கு தர்பூசணி பழத்தின் விதை நல்ல ஆறுதலாக இருக்கிறது. தர்பூசணியில் அதிகமான இரும்புச் சத்துக்கள் இருக்கிறது. மேலும் ஹீமோகுளோபின் எனப்படும் மிகவும் அத்தியாவசியமானது இதில் இருக்கிறது. இவை ஆக்சிஜனை தாங்கி செல்ல உதவுகிறது. இரும்புச்சத்து உடலில் உள்ள சோர்வை நீக்க பெரிதளவு உதவி செய்கிறது.. இரும்புச்சத்து தான் உடலில் இருக்கும் கலோரிகளை சக்தியாக மாற்றக்கூடிய அற்புத நிகழ்வை செய்யக் கூடியது. தர்பூசணி பழத்தின் விதையில் இரும்புச்சத்துக்கள் அதிகமாக இருப்பதினால் உங்கள் கலோரிகளில் உள்ள சக்தி உங்களுக்கு கிடைத்து உங்கள் சோர்வை போக்க எளிதாக இருக்கும்.

​இதயத்திற்கு நல்லது

ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ்வதற்கு பல உணவுப்பொருட்கள் இயற்கையானதாகவே கிடைக்கின்றது. அதில் ஒரு முக்கியமான உணவு பொருள் தர்பூசணி. அதில் இருக்கும் தர்பூசணியின் விதை இதயம் பலமாக உறுதியுடனும் செயல்பட தர்பூசணி பழத்தின் விதையும் உதவுகின்றது என்று குறிப்பிடுகின்றனர். தர்பூசணி பழத்தின் விதையில் மோனோ அன்சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலங்கள் நிறைந்துள்ளன. இது மாரடைப்பு வருவதற்கான காரணங்களை குறைகின்றது. அதாவது ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்பு வருவதற்கான பெரிய காரணங்களாக அமைந்துள்ளது. மேலும் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.

​ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

தர்பூசணி விதைகளில் அதிக அளவு புரோட்டீன்கள் நிறைந்து காணப்படுகின்றன மேலும் பலவகையான அமினோ ஆசிட்டுகள் நிறைந்து இருக்கின்றன. இவை அதிக உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது தினமும் நமது உணவில் சிறிது தர்பூசணி பழத்தின் விதையை கலந்து சாப்பிட வேண்டுமென்று ஒரு சில மருத்துவர்கள் அறிவுரை கூறுகிறார்கள். மேலும் இதில் மெக்னீசியமும் இருக்கின்றது இதுவும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க பெரிதளவு உதவி செய்கின்றது மெக்னீசியம் உடலில் குறைந்தால் பொட்டாசியத்தின் அளவும் குறைந்து விடும் இதனால் அதிகபட்ச ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது இந்த தர்பூசணி பழத்தின் விதையில் மெக்னீசியமும் பொட்டாசியம் இரண்டுமே இருக்கிறது.

தசைகளை ஆரோக்கியமாக வைக்க உதவும்

தர்பூசணி பழத்தின் விதையானது நம் உடலின் தசைகளை ஆரோக்கியமும் சக்தி வாய்ந்ததாகவும் பாதுகாத்திட உதவுகிறது. தர்பூசணி பழத்தின் விதையில் மிகவும் முக்கியமான நியூட்ரிஷன் வகைகள் இருக்கிறது. அது நம் தசையில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்து உடனடியான முன்னேற்றத்தை தசைகளுக்கு கொடுக்கிறது. தசை வலி உடற்பயிற்சி நிலையத்தில் சென்று உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் போன்றவற்றுக்கு தர்பூசணி பழத்தின் விதை ஆனது பெரிதளவில் உதவி செய்கிறது. இதில் உள்ள மெக்னீசியம் தசை வளர்ச்சிக்கு நல்ல உறுதுணையாக இருக்கிறது. இதில் மெட்டபாலிசத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்வர்களுக்கு மெட்டபாலிசம் மிக அதிகமாகவே தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

​கொழுப்பை குறைக்க

தர்பூசணி பழத்தின் விதையில் citrulline எனப்படும் வேதிப்பொருள் இருக்கின்றது. இது உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவை அதிகரிக்கிறது இதில் உள்ள அமினோ ஆசிட் உடலில் தேவையில்லாத இடங்களில் தேங்கி இருக்கும் கொழுப்பு சத்தை கரைக்க உதவுகிறது. இந்த விதைகளில் கலோரியின் அளவு மிகமிகக் குறைவு. எனவே நீங்கள் உங்கள் நொறுக்கு தீனிக்கு பதில் இவ்வகையான விதைகளை சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ஒரு பாத்திரம் நிறைய விதைகளை சாப்பிட்டாலே அதில் வெறும் 150 கலோரிகள் மட்டுமே இருப்பதால் உங்கள் உடல் எடை குறைப்பு முயற்சியில் எந்தவித பிரச்சனைகளும் இருக்காது. 158 கலோரி என்பது கிட்டத்தட்ட 400 விதைகளின் கலோரிகள் ஆகும்.

​மூளை செயல்பாட்டை அதிகரிக்க

தர்பூசணி பழத்தின் விதைகளில் ஃபோலேட் எனப்படும் அமிலம் நிறைந்து இருக்கிறது. இதை போலிக் ஆசிட் அல்லது விட்டமின் b9 என்று கூறுவார்கள். இவ்வகையான விட்டமின் ஆனது மூளை செயல்பாட்டுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.மேலும் கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக உடலில் அதிகளவு விட்டமின் b9 சேர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த தர்பூசணி விதையில் அவை அதிகமாகவே இருக்கின்றது.மேலும் இதில் உள்ள பொட்டாசியம் ஆனது சிந்திக்கும் திறன் ஞாபகசக்தி போன்றவற்றிற்கு பெரிய பங்கு வகிக்கிறது. மேலும் இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன இவை மூளையில் ஏற்படும் தீங்குகளை விரட்டியடித்து மூளையை பாதுகாக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா