Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
வல்லாரை கீரையின் மகத்தான குணங்கள்!
[Sunday 2020-03-15 18:00]

நமது ஆயுர்வேதத்தில் ஏராளமான மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். நம் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான மூலிகைகளில் மருத்துவ குணங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அந்த வகையில் பிராமி அதாவது வல்லாரை என்ற கீரை நினைவாற்றல் அதிகரிப்பு, கூந்தல் வளர்ச்சி போன்ற ஏராளமான பயன்பாட்டுக்கு சிறந்து விளங்குகிறது. நமது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், நீண்ட கால மற்றும் குறுகிய கால நினைவாற்றலை மேம்படுத்தவும், நினைவுகளை தக்க வைக்கும் திறனை அதிகரிக்கவும் வல்லாரை சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். வல்லாரையில் இயற்கையாகவே குளிரூட்டும் தன்மை இருப்பதால் மனதை அமைதியாகவும், பதட்டமில்லாமலும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல், அல்சைமர் நோய், அனிஸிட்டி பிரச்சனை, கவனக் குறைவு, அழற்சநயை போக்க என்று இதன் நன்மைகள் ஏராளம். இதன் நன்மைகளை பற்றி இங்கே காணலாம்.

​வல்லாரை கீரை

பிராமி அல்லது வல்லாரை பல கிளைகளைக் கொண்ட தாவரமாகும். இது சதைப்பற்றுடன் காணப்படும். இது வேரூன்றி, கடல் மட்டத்திலிருந்து 4400 அடி உயரத்தில் காணப்படுகிறது. ஈரமான மண், ஆழமற்ற நீர் மற்றும் சதுப்பு நிலங்களில் இயற்கையாக வளரக் கூடியது . இதில் நான்கு அல்லது ஐந்து இதழ்களுக்கு மிகாமல் வெளிர் ஊதா அல்லது வெள்ளை நிறத்தில் சிறிய பூக்கள் காணப்படும். சிறிய நீர்த்தேக்கங்களில், இந்தியா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் வெப்ப மண்டலங்கள் மற்றும் துணை வெப்பமண்டலங்களில் உள்ள சதுப்பு நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் வளர்கிறது. இதன் சிறப்பே முழு தாவரத்தையும் நீங்கள் மருந்தாக பயன்படுத்தலாம். இதன் சுவை கசப்பாக இனிப்பூட்டும் சுவையுடன் இருக்கும். உடம்பிற்கு குளிர்ச்சியை கொடுக்க கூடியது. மூளைக்கு ஊக்கியாக, மன அழுத்தத்தை விரட்டும் டானிக்காக செயல்படுகிறது.

​மன அழுத்த டானிக்

வல்லாரையில் மன அழுத்தத்தை கொடுக்கும் கார்டிசோல் ஹார்மோன் உற்பத்தியை குறைக்கும் ஆற்றல் உள்ளது. எனவே வல்லாரைக் கீரையை மன அழுத்தம் உள்ளவர்கள் உணவில் சேர்த்து வந்தால் மன அழுத்தம் மற்றும் அனிஸிட்டி பிரச்சனைகளை தீர்க்கிறது.

அல்சைமர் நோய்

மூளைக்கு சேதம் விளைவிக்கும் நியூரானில் அமிலாய்டு கலவை இருப்பதால் நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டு அல்சைமர் நோய் உண்டாகிறது. பிராமியின் பாகோசைடுகள் எனப்படும் உயிர் வேதியியல் மூளை செல்களை பாதிக்கும் கலவையை நீக்கி பாதிப்படைந்த மூளை செல்களை சரி செய்கிறது. இதனால் அல்சைமர் அறிகுறிகளை குறைக்க முடியும்.

​நினைவாற்றல் செறிவு

வல்லாரை உங்க நினைவாற்றலை அதிகரிக்கும் அதிசய மூலிகை. நினைவாற்றல் மற்றும் செறிவிற்கு காரணமான மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியில் இது நேர்மறையான விளைவை ஏற்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்கிறது. எனவே மாணவர்கள் இந்த கீரையை அடிக்கடி எடுத்து வந்தால் அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும். இது அவர்களின் தேர்வுக்கு உதவியாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். பிராமி மூலிகையின் தோற்றமே மூளை வடிவத்தில் காணப்படுவது இதன் சிறப்பு. அதனால் நம் மூளையின் செயல்பாட்டிலும் பெரிய பங்காற்றுகிறது.

​நோய்கள் அண்டாமல் இருக்க

வல்லாரையில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது செல்கள் பிறழ்ச்சி அடைந்து புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க ஆன்டி ஆக்ஸிடன்கள் உதவுகின்றன. வல்லாரையை அடிக்கடி சேர்த்து வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகி நோய்கள் நம்மை தாக்காது என்கிறார்கள் மருத்துவர்கள். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் எந்தவித தொற்று நோய்களும் உங்களை நெருங்காமல் இருக்க அடிக்கடி வல்லாரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

​அழற்சி சம்பந்தமான எலும்பு நோய்கள்

வல்லாரையில் ஆர்த்ரிட்ஸ், கெளட் போன்ற முழங்கால் பிரச்சனையை போக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதே மாதிரி வாயு பிரச்சனை, அல்சர், எரிச்சலுடன் மலம் வெளியேறுதல் போன்ற பிரச்சினைகளை களைகிறது.

இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க

இரத்தத்தில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் ஹைப்போகிளைசீமியா போன்ற நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க வல்லாரை உதவுகிறது. எனவே டயாபெட்டீஸ் நோயாளிகள் வல்லாரையை உணவில் சேர்த்து வரலாம். இது உங்களுக்கு ஏராளமான நன்மைகளை தரும்.

​கூந்தல் வளர்ச்சியை தரும் போஷாக்கு

கூந்தல் மற்றும் தலைச் சருமம் வறண்டு போய் காணப்பட்டால் அதற்கு வல்லாரை எண்ணெயைப் பயன்படுத்தி வரலாம். காரணம் வல்லாரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் மயிர்க்கால்களை உயிரூட்டி கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் உடம்பில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி சரும செல்களை புதுப்பிக்கிறது. எனவே தலையில் அரிப்பு, பொடுகு, பிளவுபட்ட கூந்தல் நுனிகள் இருப்பவர்கள் வல்லாரை எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சீக்கிரமாகவே கூந்தல் பிரச்சனையை ஆற்றும்.

​வெட்டுக்கள் மற்றும் சரும காயங்களை ஆற்ற

வல்லாரை வெட்டுக்கள் மற்றும் சரும காயங்கள் ஏற்பட்ட இடத்தில் ஹீமோடைனமிக்ஸை தூண்டி வெட்டுக்கள் மற்றும் காயங்கள் சீக்கிரமே ஆற உதவி செய்கிறது. மேலும் பழைய வடுக்கள் செல்களை புதுப்பித்து வடுக்கள் மறைய உதவுகிறது.

மன அழுத்தத்தை போக்கும் வல்லாரை டீ

வல்லாரை இலைகளை உலர்த்தி காய வைத்து வல்லாரை தேயிலை தயாரிக்கின்றனர். இந்த தேயிலையை போட்டு டீ கொடுக்கும் போது மனதிற்கு அமைதியை தந்து அனெக்ஸிட்டி மற்றும் மன அழுத்தத்தை போக்குகிறது.

​​ஆலோசனை பெறுங்கள்

மருந்து கடைகளில் மாத்திரைகள் அல்லது தூள் வடிவில் வல்லாரை சப்ளிமெண்ட்ஸ் கிடைக்கின்றன. இதை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

வல்லாரை பொடி தயாரிப்பது எப்படி?

இந்த கீரையை நிறைய உலர வைத்து பொடியாக்கி பயன்படுத்தி வரலாம். இது மனநோய், பாலியல் செயல்திறன் அதிகரிக்க, முதுகு வலி, மூட்டுவலிகளுக்கு கூட இதை பயன்படுத்தி வரலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா