Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
கொரோனா வைரஸ் நுரையீரலை எப்படி பாதிக்கும்!... Top News
[Tuesday 2020-03-17 18:00]

கொரோனா வைரஸ் எப்படி நுரையீரலை அழிக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் பாதிக்கப்பட்ட சீனா தம்பதியின் நுரையீரல் படங்கள் வெளியாகி அதிர வைத்துள்ளது. கொரோனா தோன்றிய சீனாவின் வுஹான் நகரைச் சேர்ந்த 60 வயதுடைய தம்பதிகள், இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நடந்த பரிசோதனையில் 2020 ஜனவரி 29ம் திகதி இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

ஐரோப்பிய நாடுகளில் முதன்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, 67 மற்றும் 65 வயதுடைய கணவன், மனைவி இருவரையும் ரோமில் உள்ள தேசிய தொற்று நோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். கொரோனா அவர்களின் நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தை எவ்வாறு அழித்தன என்பதை எக்ஸ்ரே மற்றும் சி.டி ஸ்கேன் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன. அந்த படங்களை அவர்களின் மகளின் அனுமதியோடு ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். தற்பாது, பாதிக்கப்பட்ட இருவரும் ஐசியூ-வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா