Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
​சத்துக்கள் நிறைந்த சணல் விதைகள்!
[Wednesday 2020-04-15 17:00]

சணல் விதைகள் சாடிவா என்ற தாவரத்தில் இருந்து கிடைக்கிறது. இது மரிஜீவானா என்ற இனத்தைச் சேர்ந்தது. ஆனால் இதன் வகை மட்டும் வேறுபட்டு காணப்படுகிறது. இந்த சணல் விதைகளிலும் மரிஜீவானாலில் உள்ளது போன்று டெட்ராஹைட்ரோகன்னாபினோல் என்ற மருந்து பொருள் காணப்படுகிறது. மற்றபடி இதில் காணப்படும் மருந்து தன்மைகள் முற்றிலும் வேறுட்டு காணப்படுகிறது. சணல் விதைகளில் கிட்டத்தட்ட 8 அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் மற்றும் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் என்று மனித உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது. மேலும் இதில் கொழுப்புகள், புரோட்டீன்கள் மற்றும் வேறுபட்ட தாதுக்கள் உள்ளன.

இந்த சணல் தாவரங்கள் சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக இருப்பதோடு நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இதன் நிறைவான ஊட்டச்சத்தால் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பவர்கள் இந்த சணல் விதைகளை உணவில் சேர்த்து வரலாம். எனவே தான் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்க உலகம் முழுவதும் இந்த சணல் விதைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இப்படி இன்னும் என்னென்ன நன்மைகளை இந்த சணல் விதைகள் தருகிறது என்று நாம் பார்க்கலாம்.

​சத்துக்கள் நிறைந்த சணல் விதைகள்

சணல் விதைகள் நீங்க நம்ப முடியாத அளவிற்கு சத்துக்கள் நிறைந்தவை. இது லேசான நட்டி ப்ளேவர்டு கொண்டு காணப்படும். இவை நமது உடலுக்கு மிகவும் முக்கியமான உணவு என்பதால் தான் இதை இதயத்துடன் ஒப்பிடுகிறார்கள். நம் உடல் உறுப்புகள் நல்லா இயங்க இதயம் எப்படி முக்கியமோ அதே மாதிரி எல்லா வகையான சத்துக்களும் கிடைக்க இந்த சணல் விதைகள் அவசியம் தேவைப்படுகிறது.

இதில் 30 சதவீத கொழுப்பு என்ற வடிவில் லினோலிக் அமிலம் (ஒமேகா -6) மற்றும் ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ஒமேகா -3) ஆகிய இரண்டு அத்தியாவசிய அமிலங்கள் உள்ளன. காமா லினோலிக் அமிலமும் உள்ளது. இவைகள் கொழுப்பை குறைக்கவும், நம் இதயத்தை பாதுகாக்கவும், சரும அழகை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் போன்ற பல்வேறு பயன்பாட்டிற்கு உதவுகிறது.

இதர ஊட்டச்சத்துக்கள்

சணல் விதைகளில் 25 % அதிகமான புரதங்கள் உள்ளன. இதன் கலோரிகள் 16 - 18 % புரதமாக உள்ளது. இதில் விட்டமின் ஏ, பாஸ்பரஸ், விட்டமின் ஈ, ஜிங்க் பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், கந்தகம், கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன.

சணல் விதைகளைச் சாப்பிடலாமா என்ற சந்தேகம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும். ஆனால், நம்முடைய முன்னோர்கள் இதை உணவாகவும் மருந்தாகவும் சாப்பிட்டு இருக்கிறார்கள். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

​இதை எப்படி சாப்பிடலாம்

சணல் விதைகளை பச்சையாகவோ, சமைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம். சணல் விதைகளை முளைக்கட்டி சாப்பிடலாம். சணல் பால் எடுத்து சாப்பிடலாம். சாலட் போன்றவற்றில் இந்த விதைகளை சேர்த்து சாப்பிடலாம். ஏன் இதிலிருந்து வெண்ணெய் பிரித்தெடுத்துக் கூட நீங்கள் பயன்படுத்தலாம். இதிலிருந்து தயாரிக்கப்படும் சணல் எண்ணெய் சீனா போன்ற நாடுகளில் 3000 ஆண்களுக்கு முன்பு இருந்து உணவு மற்றும் மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சணல் விதைகளில் உள்ள நார்ச்சத்துகள் நல்ல செரிமானத்தை நமக்கு கொடுக்கிறது. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் சணல் பாலை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்காக கொடுக்கின்றனர்.

​எப்படி இதய நோய்களை தடுப்பது

தற்போதைய சூழ்நிலையில் உலகளவில் மக்களின் மரணத்திற்கு காரணமாக இருப்பது இந்த இதய நோய்கள் தான் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் சணல் விதைகளை நீங்கள் சாப்பிட்டு வந்தால் இதய நோய்களை விரட்டிட முடியுமாம். இந்த விதைகளில் அதிக அளவில் அர்ஜினைன் உள்ளது. இது உங்க உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு என்ற ஒரு வாயு மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. இந்த மூலக்கூறு உங்க இரத்த நாளங்களை ரிலாக்ஸ் ஆக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதய நோய்க்கான ஆபத்தும் குறைவு.

13,000 க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட ஒரு பெரிய ஆய்வில், அர்ஜினைன் உட்கொள்ளல் சி-ரியாக்டிவ் புரதத்தின் அளவை குறைக்கிறது. இந்த புரதம் தான் இதயத்தில் அழற்சி உண்டாக காரணமாகிறது. அதிகமான CRP புரதம் இதய நோய்களை உண்டாக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள் . இதிலுள்ள காமா லினோலிக் அமிலமும் அழற்சியை குறைத்து இதய நோய்களை தடுக்கிறது. மற்றொரு விலங்கு ஆய்வின் படி சணல் விதைகள் அல்லது சணல் விதை எண்ணெய் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், இரத்த உறைவு உருவாகும் அபாயத்தையும் குறைக்கிறது. இதனால் மாரடைப்பிற்குப் பிறகு இதயம் மீண்டும் இயங்க உதவுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

​சரும நோய்களை போக்கும் சணல் எண்ணெய்

நமது நோயெதிப்பு மண்டலம் பலமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒமேகா -6 மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் சமநிலையில் இருக்க வேண்டும். இந்த நிலையை பொருத்த வரை சணல் விதைகளில் பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் மூலமாக விளங்குகிறது . அவை ஒமேகா -6 முதல் ஒமேகா -3 வரை 3: 1 விகிதத்தைக் கொண்டுள்ளன. எனவே இந்த சணல் எண்ணெய் சரும நோய்களை போக்குவதில் சிறந்து விளங்குகிறது. எக்ஸிமா போன்ற சரும தோல் அழற்சியை உடையவர்கள் இந்த சணல் எண்ணெய்களை பயன்படுத்தி பலன் பெறலாம். இந்த எண்ணெய் உங்க வறண்ட சருமத்தை போக்கி சரும அரிப்பு எரிச்சலை குறைக்கும்.

மாதவிடாய் அறிகுறிகளை குறைக்குமா

80 சதவீத பெண்கள் மாதவிடாய் வரும் நாட்களுக்கு முன்பு வரை சில உடல் வலிகளையும் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகளையும் சந்திக்கின்றனர். இது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் புரோலாக்டின் என்ற ஹார்மோன் சுரப்பால் இத்தகைய மாற்றங்கள் நிகழலாம். எனவே சணல் விதைகளை நீங்கள் மாதவிடாய் காலங்களில் எடுத்துக் கொள்ளும் போது அதிலுள்ள காமா லினோலிக் அமிலம் புரோலாக்டின் ஹார்மோனை குறைக்கிறது. எனவே இது குறித்த ஆய்வில் 1 கிராம் அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் 210 கிராம் காமா லினோலிக் அமிலம் எடுத்துக் கொள்வது மாதவிடாய் அறிகுறிகளை குறைக்கிறது.

​சீரண சக்தியை மேம்படுத்துகிறது

சணல் விதைகளில் உள்ள கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துகள் 20 -80 சதவீதம் வரை காணப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த கரையக்கூடிய நார்ச்சத்துகள் குடலில் ஜெல் போன்று மாறி குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாக மாறுகிறது. இரத்த சர்க்கரை அளவை குறைத்தல், கொழுப்பை குறைத்தலுக்கு உதவுகிறது. கரையாத நார்ச்சத்துகள் மலத்துடன் வெளியேறி மலச்சிக்கலை போக்குகிறது. டயாபெட்டீஸ் நோயை கட்டுப்படுத்துகிறது. இருப்பினும் இதன் தோலை நீங்கள் நீக்கி விட்டால் நார்ச்சத்துகள் குறைய வாய்ப்பு உள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா