Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
எல்லா சமையலிலும் கடுகை பயன்படுத்துவதற்கான முக்கிய காரணம்!..
[Monday 2020-04-27 18:00]

கடுகு இந்திய பாரம்பரிய சமையலில், குறிப்பாக தென்னிந்திய சமையலில் மிக முக்கியத்தை இடத்தைப் பிடித்திருக்கிறது என்றே சொல்லலாம். அது ஏன் மற்ற மசாலாப் பொருள்களுக்கு இல்லாத முக்கியத்துவம் ஏன் கடுகுக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது. அப்படி என்னென்ன பண்புகள், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் இல்லையா?. தென்னிந்திய சமையலில் கடுகை அப்படியே முழுதாகப் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது.

தென்னிந்தியா தவிர மற்ற இந்தியப் பகுதிகளில் கடுகு எண்ணெயையே பிரதானமாக எல்லா சமையலிலும் பயன்படுத்துகிறார்கள். இந்த அதிக அளவிலான பயன்பாடே அதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அப்படி இந்த கடுகை உணவில் நாம் அதிகமாக சேர்த்துக் கொள்வதா நல்லதா, அதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம்.

​​கடுகு எனும் மூலிகை

* விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த கடுகு இந்திய மற்றும் அமெரிக்க உணவு வகைகளில் சேர்க்கப்படும் பிரபலமான உணவுப் பொருளாகும்.

* இந்த சின்னஞ்சிறிய உருளையான கடுகு விதைகள் ஐரோப்பாவின் மித வெப்பமண்டல பகுதிகளில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

* தென்னாப்பிரிக்கா, ஆசிய பகுதிகளில் புகழ்பெறத் தொடங்கியது. இப்போது ஒட்டுமொத்த உலகமும் அதன் நன்மைகளைப் பற்றி விழிப்புணர்வு பெற்றிருக்கிறது.

* வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் கடுகில் அதிக அளவில் ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருப்பதால் பல நூற்றாண்டுகளாக மருத்துவ பயன்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

* குறிப்பாக, கருப்பு நிற கடுகை விடவும் மஞ்சள் நிற கடுகில் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. கடுகை உங்கள் உணவில் ஏன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

​​கேன்சரை தடுக்க

* கடுகு விதைகளில் குளூக்கோஸினோலேட்ஸ் மற்றும் மைரோசினேஸ் ஆகிய கலவைகள் நிறைந்துள்ளன. இது உடலில் கேன்சர் உருவாகக் காரணமான செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

* human and expirimental toxicology என்கிற பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி இந்த சின்னஞ்சிறிய கடுகுக்குள் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் இருக்கிறது.

* அதோடு புற்றுநோய் வருவதற்கான காரணிகள் நம் உடலில் ஏதேனும் தென்பட்டால், அதிலிருந்து விடுவிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.

​​தலைவலியும் செரிமானக் கோளாறும்

* தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியால் அவதிப்படும்போது கடுகு திறம்பட செயல்படுகிறது.

* நரம்பு மண்டலத்திற்கு ஆறுதலளிக்கும் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் வலிகள் மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு நிவாரணம் தரும் மக்னீசியம் கடுகில் நிறைந்துள்ளது.

கடுகு செரிமான மண்டலத்திற்கு அற்புதமான நன்மைகளைச் செய்கிறது.

* செரிமானப் பிரச்சனையால் நீங்கள் பாதிக்கபட்டிருந்தால் அதிலிருந்து விடுபட கடுகு உங்களுக்கு உதவும். இந்த சிறிய விதைகளில் ஏராளமான நார்ச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

* இது உடலில் இருக்கும் கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. மேலும் உடலின் செரிமான சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

​​இதயத்திற்கு

கடுகு எல்லா வீடுகளிலும் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அடிப்படையான மசாலாப் பொருள்.

* இது இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முற்றிலும் நன்மை செய்கிறது.

* இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை நிர்வகிக்க உதவுவதோடு ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.

* இவை இரண்டும் இதய ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானதாகும்.

​​சருமப் பளபளப்பு

* ஒவ்வொரு பருவ நிலையிலும் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

* கடுகு விதைகள் உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பருக்களில் இருந்து பாதுகாக்கிறது.

* கடுகு விதைகளில் அடங்கியுள்ள ஆன்டி - இன்ப்ளாமேட்டரி மூலக்கூறுகள் உடலில் வீக்கத்தை குறைக்கிறது.

* வயதாவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். வயதாவதை உங்களால் தடுக்க முடியாது. ஆனால் உங்கள் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வதன் மூலம் முதுமையைத் தாமதப்படுத்த முடியும்.

* கடுகு விதைகளில் விட்டமின் ஏ, கே மற்றும் சி நிறைந்துள்ளது. இது ஒரு மனிதரின் வயதாகும் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

​இப்படி தான் சாப்பிட வேண்டுமா?

* கடுகு விதைகளை உணவில் எப்படி சேர்த்துக் கொள்வது என்பதில், நிறைய பேருக்கு கடுகு விதைகளை நீங்கள் உணவில் நேரடியாக சேர்த்துக் கொள்ளலாம்.

சமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தலாம்.

* கடுகை உங்கள் உணவுகளை தாளிக்கும் போது கடுகு எண்யெயில் சிறி கடுகை சேர்த்து அலங்கரித்தும் சாப்பிடலாம்.

* ஊறுகாய், துவையல், தொக்கு போன்றவற்றில் கடுகை வறுத்து பொடி செய்து, கடுகு எண்ணையோடு சேர்த்து தாளித்து பயன்படுத்தலாம்.

* கடுகு எண்ணெயில் ஊறுகாய் செய்தால், வருடக் கணக்கில் கூட, கெட்டுப் போகாமல் இருக்கும்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா