Untitled Document
October 24, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
[Tuesday 2020-05-12 19:00]

வேர்க்கடலை என்பது பலவிதமான சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான கடலை ஆகும் இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும். இதில் உள்ள ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் இது சற்று அதிகமான கலோரிகளை கொண்டது. இருந்தாலும் உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் வேர்க்கடலையை பயன்படுத்தலாம்.

​பிடித்த நொறுக்குத் தீனி

பச்சையாக உப்பு போட்டு சாப்பிடலாம், வறுத்தும் சாப்பிடலாம், உப்புமா போன்று புதுவிதமான உணவுகளை செய்து சாப்பிடலாம் இன்னும் வேர்க்கடலை வைத்து பலவிதமான உணவு வகைகளும் செய்து சாப்பிடலாம். இது நமது மூளையின் சத்தையும் அதிகரிக்கிறது. ஆனால் நீங்கள் ஊரவைத்த வேர்க்கடலையை சாப்பிட்டு உள்ளீர்களா? அப்படி இல்லை என்றால் நீங்கள் அதை முயற்சி செய்து பார்க்கலாம். ஊறவைத்த வேர்கடலை பாதாம் பருப்புக்கு இணையான நன்மைகள் கொண்டது என்று பலரும் கூறுகின்றனர் அதைப்பற்றிய தற்போது பார்க்கலாம்.

​உடற்பயிற்சி செய்பவர்களுக்கு

உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நினைப்பவர்களும் பாடி பில்டிங்கில் பெரிதும் ஆர்வம் உள்ளவர்களும் ஊறவைத்த வேர்க்கடலையை தினமும் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களின் முயற்சிக்கு பெரும் பலம் கிடைக்கும் என்று கூறுகின்றனர். வேர்க்கடலையில் மிகவும் அதிகமான புரோட்டீன்கள் நிறைந்து காணப்படுகிறது இவை பாடிபில்டிங் செய்பவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது என்று பலரும் கூறுகின்றனர்.

​ஜீரண சக்தியை அதிகரிக்க

மேலும் இதில் உள்ள நார்ச்சத்தானது ஜீரண கோளாறு சரி செய்கிறது என்று நாம் அனைவரும் அறிந்ததே. வேர்க்கடலையில் மிகவும் அதிகமான நார்ச்சத்துக்கள் உள்ளது. இது ஜீரண சக்தியை சரி தெரிகிறது. அஜீரண கோளாறு மற்றும் அசிடிட்டி போன்ற அனைத்து உபாதைகளை சரி செய்கிறது.

​இருதய ஆரோக்கியத்திற்கு

இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இந்த வேர்கடலையானது மிகவும் நன்மை அளிக்கக்கூடியது என்று கூறுகின்றனர். மாரடைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து இது நம்மை காக்கும் என்று கூறுகின்றனர். இதில் அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்திருப்பதால் ரத்த ஓட்டம் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவுகிறது. இதை கொஞ்சம் கொஞ்சமாக பல நாட்கள் உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

​கேன்சர் செல்களை அழிக்க

இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆனது உடலில் வளரும் கேன்சர் செல்களை அழிக்க முயற்சி செய்கிறது. உடலிலுள்ள பல செல்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும். அந்த பாதிப்பு உள்ளான செல்களை வேர்க்கடலையில் உள்ள சத்தானது அழித்து விடுகிறது. வேர்க்கடலையில் மிகவும் அதிகமாக இரும்புச்சத்து,கால்சியம் ,ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை கேன்சர் செல்களை மேலும் வளரவிடாமல் தடுக்கிறது மேலும் ஏற்கனவே இருக்கும் கேன்சர் செல்களை அழிக்க முயற்சி செய்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா