Untitled Document
November 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நீரிழிவு நோயாளிகள் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா?
[Wednesday 2023-06-07 18:00]

நாளுக்கு நாள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று பார்த்தால், இரத்தத்தில் உள்ள நீரிழிவு நோயின் அளவு அதிகமாக இருப்பதுதான்.

எதை உண்டாவும் பார்த்து கவனமாக உண்ண வேண்டிய கட்டாயத்திற்கு நீரிழிவு நோயாளிகள் உள்ளாகியுள்ளனர். அவ்வாறு இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கப்பட்டு உயிருக்கு கூட ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருக்கின்றது.

உதாரணத்துக்கு ஊறுகாயை எடுத்துக்கொண்டால், அதில் குறைந்தளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் இருக்கின்றன. அதனால் எப்போதாவது ஒருமுறை ஊறுகாய் சாப்பிடலாம்.

ஒரு ஊறுகாயில் கிட்டத்தட்ட 57 மில்லிகிராம் சோடியம் இருக்கின்றது. இது ரத்த கொதிப்பை அதிகரித்து, பக்கவாதம், இருதய நோய் போன்ற நோய்களை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமில்லாமல் வயிறுப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் வேலைப்பளுவை அதிகப்படுத்துகிறது. சோடியம் அதிகமானால், எலும்புப்புரையை ஏற்படுத்தி, எலும்பின் அடர்ததியை இழக்கச் செய்து எலும்பு முறிவையும் ஏற்படுத்தும்.

என்னதான் ஊறுகாயில் கலோரிகள், கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும் சோடியம் அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. எப்போதாவது ஒருமுறை சேர்த்துக் கொள்ளலாம்.

கருவாடு, அப்பளம், வற்றல், உப்பில் ஊறிய ஊறுகாய் என்பவை கூடாது. வாரத்தில் 100 கிராம் அளவு அசைவம் சாப்பிடுவது நல்லது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா