Untitled Document
November 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
உலகை உலுக்கும் உணவு விரயம்!
[Tuesday 2023-09-26 07:00]

இன்றைய தொழிநுட்ப உலகில் யாருக்கும் தங்களின் உறவுகளுடன் பேச கூட நேரம் இல்லாமல் போய்விட்டது, அப்படியிருக்கும் போது நம்முடைய தவறுகளை சுய பரிசீலனை செய்யவும் திருத்திக்கொள்ளவும் ஏது நேரம்? அப்படி நாம் செய்யும் சிறிய தவறுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்மயே அழிக்கும் சக்தியாக உருவெடுத்துவிட்டது என்பது நம்மில் பலரும் அறியாத உண்மை.

அப்படி நாம் செய்யும் தவறுகளுள் ஒன்று உணவை விரயமாக்குதல். உணவு விரயமாதல் இன்றைய காலகட்டத்தில் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிக பெரிய பிரச்சினையாகவுள்ளது. ஒவ்வொர் ஆண்டும் சுமார் 130 கோடி டொன் உணவு பொருட்கள் வீணாகின்றன.

உணவை விரயமாக்குதல் உலகம் முழுவதும் நடக்கும் ஒரு சமூக குற்றச் செயலாகும். எத்தனையோ பிரச்சினைகளுக்கு மத்தியில் உணவு பொருட்களை விளைவித்து கொடுக்கும் விவசாயிகளுக்கு நாம் செய்யும் அவமரியாதையே உணவை விரயமாக்குவதாகும்.

எமக்கு உயிர் கொடுக்கும் உணவை நாம் உயிராக மதிக்க வேண்டும் என்பதை நம்மில் பலர் மறந்து விடுகின்றோம்.

உலகில் சுமார் 70 கோடி மக்கள் இரவில் உணவு இன்றி உறங்க செல்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

உணவின் மொத்த உற்பத்தியில் 20 சதவீதமான உணவு விரயமாக்கபடுவதாக ஐ. நா வின் உணவு விரய குறியீடு 2021 இன் ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.

சர்வதேச அளவில் 54 நாடுகளில் 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் 61 சவீதமான உணவு வீடுகளில் இருந்தும், 26 சதவீதம் உணவு விடுதிகளில் இருந்தும்,13 சதவீதம் உணவு சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்தும் விரயமாக்கப்படுகின்றது.

உலகில் உணவை நுகரும் ஒவ்வொரு தனி மனிதனும் 74 கிலோ உணவை வீட்டிலிருந்தும், 47 கிலோ உணவை திருவிழாக்கள், உணவகங்கள், திருமண நிகழ்வுகள் மற்றும் சமூக நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாற்றப்படும் உணவிலிருந்தும் விரயம் செய்வதாக அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.

உணவை விரயம் செய்வதால் ஏற்படும் சமூக மற்றும் சூழல் தாக்கங்கள் குறித்து பெரும்பாலானவர்கள் அக்கறை செலுத்துவதில்லை.

உணவு விரயம் எனும் போது நாம் சமைப்பதை அல்லது வாங்குவதை நாம் விரயம் செய்கின்றோம், அது எங்களின் தனிப்பட்ட பிரச்சினை என்றுதான் அநேகர் நினைக்கின்றனர்.

ஆனால் உணவு விரயம் என்பது நமது தட்டோடும் இலையோடும் முடிந்துவிடும் சிறிய விடயம் அல்ல.

பொருளாதார அறிவியல் உணவை விரயம் செய்வதை மனிதன் செய்யும் மிக பெரிய சமூக குற்றம் என்கிறது. உலகில் எல்லா மதங்களும் கூட உணவு விரயம் செய்வதை பாவ செயலாகவே கருதுகிறது.

காரணம் நிலத்தில் இருந்து உற்பத்தியாக்கப்பட்டு ஒரு எரிபொருள் மூலம் உணவு சமைக்கப்பட்டு தகுந்த பாதுகாப்பு, பகிர்வு என பல கட்டங்களை தாண்டியே நமது தட்டுக்கு வருகின்றது.

அப்படி வரும் உணவை விரயமாக்குவதன் வழியாக உணவு சமைப்பதற்கு ஏற்பட்ட செலவு பல மடங்கு அதிகரிக்கிறது. அது ஒரு நாடின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றது.

மேலும் உணவை விரயமாக்குவது சுற்று சூழலுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. மிச்சமான உணவுகள் மற்றும் பழுதான உணவுகள் என பல வழிகளில் எம்மால் விரயமாக்கப்படும் உணவு மறுபடியும் மண்ணுக்கு தான் செல்கிறது.

அவ்வாறு செல்லும் உணவுகள் மீத்தேன் (methane) CH4 எனும் வாயுவை அபரிமிதமாக சூழலில் வெளிவிடுகிறது. இது ஒரு வெப்ப வாயு ஆகையால் புவிகோலம் வெப்பமடைவதற்கு காரணமாக அமைகிறது. மேலும் பருவநிலை மாற்றங்களுக்கும் இது வழிவகுகிறது. தற்போது பருவங்கள் மாறிவிட்டன என்பது அனைவரும் அறிந்ததே.

மழை காலத்தில் வெயில் கொளுத்துவதற்கும் கோடையில் மழை கொட்டுவதற்கும், புவி வெப்பமடைவதற்கும், ஓசோன் மண்டல சிதைவிற்கும், கடல் மட்டம் உயர்வதற்கும், சிறு தீவுகள் அழிவதற்கும், தீடீரெனப் புதிய தோற்று நோய்கள் உருவாவதற்கும் கூட நாம் விரயமாக்கும் உணவும் காரணமாகின்றது.

சுற்று சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த வேண்டுமானால் உணவு விரயத்தை தடுக்க வேண்டியது அவசியம். பிடித்திருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் வாங்கி எல்லாவற்றிலும் மிச்சம் வைப்பதற்கு பதிலாக தேவைக்கேற்ப வாங்கி உண்பது சிறந்தது.

அப்படியும் மிச்சமாகும் உணவுகள் இருப்பின் குப்பை தொட்டியில் வீசி யாருக்கும் பயனில்லாமல் ஆக்கி சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதை விட உணவின்றி பசியில் இருப்பவர்களுக்கு கொடுப்பது எவ்வளவு மேலான செயல்.

உணவை பசியோடு இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றதும் மனிதர்களுக்கு தான் கொடுக்க வேண்டும் என்றில்லை பறவைகள், விலங்குகள், எறும்புகள் போன்ற பூச்சிகளுக்கு கூட அதை பகிர்ந்து கொடுக்கலாம். உணவை பழுதாக்காமல் எந்த உயிருக்காவது உணவளிப்பது மிகவும் உயர்வானது.

இந்த பரபரப்பான சூழலில் அனைவரும் மிச்சமான உணவை குப்பை தொட்டியில் வீசிவிட்டு வேலையை பார்ப்போம் என்று இருந்துவிடுகின்றோம். இதனால் வரப்போகும் ஆபத்து அனைவருக்கும் தான் என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இன்றைய அறிவியல் தொல்நுட்ப வளர்ச்சியின் மூலம் விரயம் செய்யப்படும் உணவை மண்ணுக்கு போகவிடாமல் தடுத்து அதை சேகரித்து மறுசுழற்சி மூலம் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உதவும் உணவாக மாற்றிவிட முடியும். அல்லது மண்ணுக்கு உதவும் வகையில் இயற்கை உரமாக மாற்றியமைக்கவும் வழிசெய்யலாம்.

சில நாடுகள் விரயமாகும் உணவில் இருந்து சமையல் எரி வாயுவை தயாரிகின்றன. விரயமான உணவை மறுபடியும் உதவும் உணவாக மாற்றியமைக்கும் முயற்சியில் தற்போது பல நாடுகளும் இறங்கியுள்ளது. விரயம் செய்யப்படும் காய்கறி மற்றும் பழங்களில் பிலெக் சொலிடர் பிளை (black solidier fly) எனும் பூச்சி இனம் அபரிமிதமாக வளர்ச்சியடைக்கிறது.

இவை உணவு கழிவுகளில் வினைதிறனாக செயற்பட்டு அவற்றை புரதம் நிறைந்த உணவாக மாற்றியமைகின்றது. அவ்வாறு மாற்றியமக்கப்படும் உணவை கோழி வளர்பிற்கும், மீன் வளர்பிற்கும் தென்னாபிரிக்கா பயன்படுத்துகிறது.

இந்த முறையை உலகின் ஏனைய நாடுகளும் பின்பற்ற வேண்டும் என ஐ. நா வின் உணவு கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச் சூழல் திட்ட தலைவர் மார்ட்டினோ ஆப்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறான முறையை இலங்கையிலும் கையாள தொடங்கினால் இலங்கையிலும் உணவு விரயத்தையும் சூழல் மாசுப்பாட்டையும் இலகுவில் தடுக்க முடியும். இது அரசாங்கத்தால் மட்டும் சாத்தியமான விடயம் அல்ல உணவு விரயத்தை தடுக்க ஒவ்வொரு தனி நபரும் பங்காற்ற வேண்டும். சுமார் 700 கோடி மக்கள் வாழும் இந்த பூமியில் 82 கோடி மக்களுக்கு மேலானோர் போதிய உணவு இல்லாமல் வாழ்த்து வருகின்றனர்.

உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு யாருக்கும் உபயோகப்படாமல் விரயமாக்கபடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உணவு வீணாதல் என்பது உணவு பொருட்கள் வீணாவதை மட்டும் குறிப்பதில்லை உண்மையில் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பணம், நீர், உழைப்பு, நிலம் மற்றும் போக்குவரத்து என அனைத்தும் வீணாவதையே குறிக்கிறது.

எனவே ஒவ்வொருவரும் சமூக பொறுப்புணர்ச்சி உடையவர்களாகவும், சூழலின் மீது அக்கறை கொண்டவர்களாகவும் செயற்பட்டு உணவு விரயத்தை தடுக்க முயற்சிப்போம்.

இது எமது கடமை மட்டுமல்ல தற்காலத்தில் அவசியமான தேவையும் கூட என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இல்லையேல் நம்மை வாழவைக்கும் உணவே நம்மை அழித்துவிடும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா