Untitled Document
November 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஜப்பானியர்கள் 90 வயதை கடந்து உயிர் வாழ என்ன காரணம் தெரியுமா?
[Monday 2024-03-11 18:00]

நம்மில் பெரும்பாலான இனத்தவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ விரும்பினாலும் தவறான உணவுப்பழக்கம் காரணமாக 60 வயதை எட்டும் போதே இறந்துவிடுகிறார்கள். இது உலக சுகாதார புள்ளியின் விபரப்படி நிரூப்பிக்கப்பட்டதாகும். ஆனால் மத்திய ஜப்பானியர்கள் 90 வயதை தாண்டி 112 மற்றும் 100 வயது வரை வாழ்வதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பாாக்கலாம்.

1.ஹரா ஹட்ச் பன் மி இது ஜப்பானியர்களின் ஒரு பழமொழி வாசகமாம். இந்த வாசகத்தின் அர்த்தம் உணவை சரியான அளவில் உண்ண வேண்டுமாம். வயிறு 80 சதவீதம் நிறம்பும் வரை உணவை சாப்பட்டால் போதும் இதனால் வயிற்றின் சுமை குறைந்து அரோக்கியமாக நீண்ட காலம் வாழலாம் என்பது அவர்களின் நம்பிக்கை. இதனாலயே இவர்கள் அதிக உணவை உட்கொள்ள மாட்டார்களாம்.

2.சுகாதார விஷயத்தில் இவர்கள் மிகவும் அக்கறை கொண்டவர்கள். சிறு குழந்தைகளுக்கு கூட கட்டாய தடுப்பூசியை வைத்துள்ளனர்.

இவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இவர்கள் எல்லா விஷயத்திலும் துய்மையை பின்பற்றுகிறார்கள்.

3. இவர்கள் சாப்பிடுவதற்கு குறித்த ஒரு நேரத்தை வைத்துள்ளனர். இவர்கள் ஒரே தட்டில் சாப்பிடாமல் கிண்ணங்களில் மற்றும் சிறிய தட்டுக்களில் சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். சாப்பிடும் போது டிவி பார்க்க மாட்டார்கள் மற்றும் தொலைபேசி பயன்படுத்த மாட்டார்கள். சாப்பிடும் போது மிகவும் மெதுவாக சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். மற்றும் இவர்கள் தரையில் அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

4.இவர்கள் சமச்சீரான உணவைத்தான் உண்கின்றனராம். இவர்கள் பழங்கள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், அரிசி, முழு தானியங்கள், டோஃபு, சோயா, மிசோ மற்றும் பச்சை காய்கறிகள் அதிகம் உட்கொள்கின்றனர். இந்த உணவுகளில் குறைந்த அளவில் கொழுப்பும் சக்கரையும் உள்ளன. இதனால் நோய்கள் வராது.

5.இவர்கள் தேனீர் குடிப்பதை விரும்புகின்றனர். இது அவர்களின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் இவர்களிடையே மட்சா தேநீர் மிகவும் பிரபலமானது. தேநீர் தயாரிக்கப் பயன்படும் தேயிலை இலைகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. அதனால் அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோயை எதிர்த்து போராடும்.

6.நடைப்பயிற்சி செய்வதை ஜப்பானியர்கள் தவறாமல் பின்பற்றுகிறார்கள். இவர்கள் உட்காந்த வாழ்க்கை முறை வாழ்வது குறைவு. இவர்களில் காணப்படும் DNA 5178 மற்றும் ND2-237Met ஆகிய இரண்டு மரபணுக்கள் அவர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கின்றன. இந்த மரபணுக்கள் வகை 2 நீரிழிவு, பக்கவாதம், மாரடைப்பு, பெருமூளை, இருதய நோய்களைத் தடுக்க உதவுகின்றன.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா