Untitled Document
November 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும் பீட்ரூட் ரசம்!
[Saturday 2024-06-01 16:00]

பொதுவாக பீட்ரூட்டை கோடைக்காலங்களில் சாப்பிடுவதை விட குளிர்காலங்களில் சாப்பிடுவது சிறந்தது. சிலருக்கு தவறான வாழ்க்கை முறை காரணமாக அல்சர் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்தில் 3 நாட்கள் பீட்ரூட் ஜூஸில் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் குணமாகும்.

பீட்ரூட்டில் மிக அதிக அளவில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி1 இருப்பதால் ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அந்த வகையில் உடலிலுள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பீட்ரூட்டை வைத்து எப்படி ரசம் செய்வது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 1

தக்காளி - 1

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - 1தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - தேவையான அளவு

ரசம் செய்முறை

ரசத்திற்கு தேவையான பீட்ரூட்களை தோல் நீக்கில் தனியாக நறுக்கி வைக்கவும். பின்னர் தக்காளி, பீட்ரூட் துண்டுகள், சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்றாக போட்டு அரைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான வெப்பநிலையில் அடுப்பை குறைத்து வைத்து அரைத்த கலவையை உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

2 நிமிடங்களுக்கு பின்னர் வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். தாளிப்பு, மல்லி தழை இரண்டையும் ரசத்தில் போட்டு கிளறி இறக்கினால் சுவையான பீட்ரூட் ரசம் தயார்!

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா