Untitled Document
November 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அட்டகாசமான சுவையில் வஞ்சர மீன் குழம்பு வேண்டுமா?
[Friday 2024-07-12 19:00]

பொதுவாகவே சைவ உணவுகளை விட அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் தான் அதிகம். அதிலும் கடல் உணவுகளை அதிகமாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேன்படுத்த பெரிதும் துணைப்புரிகின்றது. இறைச்சி வகைகளை விடவும் மீன் வகைகளை அதிகம் சாப்பிடுவதால், உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகவும் காணப்படுகின்றது. காரணம் மீன் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்காது.

அந்தவகையில் மீன் வகைகளில் பிரபல்யமான வஞ்சரம் மீனை வைத்து அட்டகாசமான சுவையில் ஊரே மணக்க மீன் குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மீனை ஊறவைக்க தேவையானவை

வஞ்சரம் மீன் - 1 கிலோ

மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி

உப்பு - 1.1/2 தே.கரண்டி

மிளகாய் தூள் - 3 தே.கரண்டி

வஞ்சரம் மீன் குழம்பு செய்ய தேவையானவை

நல்லெண்ணெய் - 4 தே.கரண்டி

கடுகு - 1 தே.கரண்டி

வெந்தயம் - 1/2 தே.கரண்டி

சின்ன வெங்காயம் - 30 (நறுக்கியது)

முழு சின்ன வெங்காயம் - 15

பூண்டு - 15 பற்கள்

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்து

இஞ்சி பூண்டு விழுது - 3 தே.கரண்டி

தக்காளி - 4 (நறுக்கியது)

கல் உப்பு - 1 தே.கரண்டி

மிளகாய் தூள் - 3 தே.கரண்டி

தனியா தூள் - 3 தே.கரண்டி

கெட்டியான புளி கரைசல் - 1 கப்

தண்ணீர் - 2 கப் கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை

முதலில் மீனை கல் உப்பு சேர்த்து நன்றாக சுத்தவும் செய்துக்கொள்ள வேண்டும் பின்னர், மீனில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு மண் சட்டியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து பொரியவிட வேண்டும்.

பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், முழு சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் ஆகியவற்றையும் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பிறகு அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் கல் உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும் பின்பு கெட்டியான புளி கரைசல் சேர்த்து தேவையானளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வரையில் நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

இறுதியாக ஊறவைத்த மீன் துண்டுகளை சேர்த்து பாத்திரத்தை மூடி 10 நிமிடங்கள் வரையில் மிதமான தீயில் வேகவிட்டு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் அட்டகாசமான சுவையில் மணமணக்கும் வஞ்சரம் மீன் குழம்பு தயார்

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா