Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஆரோக்கியமான கூந்தலை கொடுக்கும் ஷாம்பு கட்டி பற்றி தெரியுமா?
[Friday 2024-09-13 16:00]

பொதுவாகவே அடர்த்தியான, உறுதியான கூந்தலைப் பெறவேண்டும் என்ற ஆசை ஆண், பெண் இருபாலாருக்குமே இருக்ககின்றது. ஆனால் பெரும்பாலாகவர்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சினைகள் இருக்கும். தற்காலத்தில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுடன் சந்தைகளில் அதிகளவில் பெருகிப்போன இரசாயனம் கலந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது போன்ற காரணங்களினால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தல் வலுவிலக்கும் பிரச்சினைகள் அதிகமாகிவிட்டது.

குறிப்பாக தலைக்கு அதிகமாக ஷாம்பு பயன்படுத்துவதால் அதிக முடி உதிர்வு ஆரோக்கியமற்ற கூந்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

அதற்கு என்னதான் தீர்வு என குழம்பிப்போய் இருக்கின்றீர்களா? கூந்தலுக்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஷாம்பு கட்டிகளை பயன்படுத்துவது ஒட்டுமெத்த கூந்தல் பிறச்சினைகளுக்கும் சிறந்த தீர்வை கொடுக்கும்.

தற்போது தாவரங்களின் மூலம் இயற்கையாக தயாரிக்கப்படும் ஷாம்பு கட்டிகள் சந்தைகளில் கிடைக்க கூடியதாக இருக்கின்றது.இது கூந்தல் வறட்சியை இயற்கை முறையில் தடுத்து கூந்தலுக்கு நீரேற்றத்தை கொடுக்கின்றது.

மேலும் கூந்தல் சேதமடையாமல் பாதுகாப்பதற்கும் இதில் உள்ள இயற்கை குணங்கள் பெரிதும் துணைப்புரிகின்றது. எந்தவித இரசாயனமும் கலக்காது இயற்கை ஆரோக்கிய நன்மைகளுடன் தயாரிக்கப்படுவதனால் இதன் விலை சற்று அதிகம் தான் என்றாலும் கூந்தல் உதிர்வு, கூந்தல் வறட்சி ஆரோக்கியமற்ற உடைந்த கூந்தல் போன்றவற்றை விரைவில் சீர்செய்கின்றது.

இனை பயன்படுத்துவதால் கிடைக்ககூடிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

​ஷாம்பு பார்களில் அதிகமாக ரசாயன பொருட்கள் பயன்படுத்தபடாத காரணத்தால் இதனை பயன்படுத்துவது கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் துணைப்புரிவதுடன்,சுற்று சூழலுக்கும் இது பாதுகாப்பானதாக இருக்கின்றது.

சோப்பு வடிவில் கிடைக்கின்றமையால் வழக்கமாக நாம் பயன்படுத்தும் ஷாம்புக்களை விட அதிக நாட்களுக்கு உபயோகிக்க முயுடிம். உச்சந்தலையில் ஏற்படும் பல்வேறு ஒவ்வாமை மற்றும் பொடுகு பிர்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கின்றது.

இவ்வகையாக ஷாம்பூ பார்கள் வாசனை திரவியங்கள் அற்றவை. ​இதில் தேவையற்ற இரசாயனம் அல்லது நறுமணத்தை கூட்டுவதற்காக வாசனை திரவியங்கள் சேர்கப்படுவது கிடையாது.எனவே கூந்தல் பாதுகாப்புக்கு முற்றிலும் உகந்தது.

மிகவும் உணர்திறன் மிக்க சருமத்தை கொண்டவர்களுக்கு ஷாம்பு பார்கள் மிகச்சிறந்த தெரிவாக இருக்கும்.இது தலைமுடியில் உள்ள ஈரப்பதத்தை தக்கவைத்து வறட்சி ஏற்படாமல் தடுப்பதிலும் பெரும் பங்காற்றுகின்றது.

​எந்த வகையான கூந்தல் உடையவர்களும் இந்த ஷாம்பு கட்டிகளை பயன்படுத்த முடியம் என்பது மிகவும் சாதகமான பலனாக பார்க்கப்படுகின்றது.

மேலும் அதன் பி ஹெச் அளவு சமச்சீராக இருப்பன் காரணமாக தினசரி பாவனைக்கு மிகவும் உகந்தது. தினசரி பாவித்தாலும் கூந்தலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா