Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சூயிங்கம் சாப்பிடுவதில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கா?
[Tuesday 2024-09-17 18:00]

பொதுவாகவே சூயிங்கம் சாப்பிடுவதை தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். சூயிங்கம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றத்துக்கு தீர்வு கிடைப்பதுடன் புத்துணர்வாக உணர முடிவதன் காரணமாக பலரும் சூயிங்கம் சாப்பிடுவதை அதிகம் விரும்புகின்றார்கள். ஆனால் சூயிங்கம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கும் வாய் சுகாதாரத்துக்கும் பெருமளவாக நன்மைகளை கொடுக்கும் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? ஆம், சூயிங்கம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. இது தொடர்பில் விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.

சூயிங்கம் சாப்பிடும் போது உமிழ் நீர் உற்பத்தி அதிகரிப்பதன் மூலமாகவும், செரிமான அமைப்பு துண்டப்படுகின்றது. இது வயிற்றில் உள்ள அமிலத்தை சமநிலைப்படுத்த உதவுவதன் காரணமாக நெஞ்செரிச்சலை தடுக்க துணைப்புரிகின்றது.

சூயிங்கத்தில் பெரும்பாலும் சர்க்கரை காணப்படுவதால் அதனை அதிகமாக சாப்பிட கூடாது என்பது பொரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கின்து. எனினும் சர்க்கரை இல்லாத சூயிங்கமும் பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதால் இவற்றை சாப்பிடுவது நன்மை பயக்கும்.

சூயிங்கம் போது அதிக அளவிலான உமிழ்நீர் சுரப்பதனால் வாயில் காணப்படும் கெட்ட பாக்டீரியாக்களால் வெளியிடப்படும் ஆபத்தான அமிலங்களை சூயிங்கம் சமநிலையில் வைப்பதற்கு பெரிதும் உதவுகின்றது.

சூயிங்கம் சாப்பிடுவதால் வாயில் உள்ள உணவு துகள்களை நீக்கி வாய் சுகாதாரத்தை பேணவும் பெரிதும் துணைப்புரிகின்றது.

வாயில் உமிழ்நீர் உற்பத்தி அதிகமாக இருப்பது பற்கள் மற்றும் ஈறு தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாப்பு வழங்குகின்றது.

சர்க்கரை இல்லாத சூவிங்கம் சாப்பிடுவதால் வாயில் உள்ள உணவு துகள்கள் அல்லது பாக்டீரியாக்களை அழிப்பதன் காரணமாக வாய்துர்நாற்றம் ஏற்படுவது தடுக்கப்படுவதுடன் சுவாசத்தையும் சீராகவும் புத்துணர்வுடனும் வைத்துக்கொள்ள உதவுகின்றது.

புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கு புகைப்பிடித்தல் உணர்வை குறைப்பதற்கும் சூவிங்கம் சாப்பிடுவது பெரிதும் உதவியாக இருக்கும்.

அதுமட்டுமன்றி பற்கள் மற்றும் ஈறுகளின் மீது படியும் ஒரு ஒட்டும் தன்மை கொண்ட பாக்டீரியாக்களான பிளேக் என்ப்படும் பாக்டீரியா தாக்கத்தில் இருந்து சூவிங்கம் சாப்பிடுவது பாதுகாப்பு கொடுக்கின்றது.

இந்த பாக்டீரியா தாக்கம் குறித்து கவனிக்காமல் விட்டால், பற்சிதைவு மற்றும் ஈறுகள் சம்பந்தமான ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதற்கு ஒரு சிறந்த தீர்வாக சூவிங்கம் காண்ப்படுகின்றது.

சர்க்கரை இல்லாத சூயிங்கத்தில் காணப்படும் சைலிட்டால் என்ற இயற்கை இனிப்பானானது பற்களின் எனாமலை பாதுகாப்பதுடன் பற்சிதைவில் இரு ந்தும் பாதுகாப்பு கொடுக்கின்றது.

நெஞ்செரிச்சல் மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற அறிகுறிகளில் பிரச்சினைகளில் இருந்து பாதுபாப்பு கொடுப்பதுடன் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைப்பதிலும் சூவிங்கம் சாப்பிடுவது பெரும் பங்கு வகிக்கின்றது.

சூயிங்கம் சாப்பிடும் போது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் நரம்பு அமைப்புகள் தூண்டப்படுகிறது. இதனால் புத்துணர்வு மற்றும் ஆற்றல் அதிகரிக்கின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா