Untitled Document
November 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மழைக்கால நோய்களை அடித்து விரட்டும் முருங்கை இலை சூப்!
[Friday 2024-10-18 18:00]

பொதுவாக மழைக்காலங்களில் நோய்கள் வருவது சாதாரண விஷயம் தான். இதை அதிகரிக்கச்செய்யாமல் ஆரொக்கியமான முறையில் சுகப்படுத்த ஆரோக்கியமான உணவுகள் உதவும். முருங்கை இலைகள் ஊட்டச்சத்து நிறைந்தவை மற்றும் நல்ல ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் நோய்களைத் தடுக்கவும் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஏராளமான நன்மைகள் கொண்டுள்ளன. இந்த இலைகள் அவற்றின் பல்திறன் காரணமாக பல்வேறு வழிகளில் இந்திய உணவு வகைகளில் தங்கள் இடத்தைப் பெற்றுள்ளன. பொதுவாக, முருங்கை இலைகளை வறுத்து, மற்ற காய்கறிகளுடன் கலந்து உணவுகளின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கச் செய்கின்றனர். ஆனால் மழைக்காலங்களில் வரும் நோய்களுக்கு மருந்தாக எப்படி முருங்கை இலை சூப் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முருங்கை இலை - 1 1/2 கப்

அரிசி வேக வைத்த தண்ணீர் - 2 கப்

சாம்பார் வெங்காய்ம் - 5

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 1

தேங்காய் பால் - 1 கப்

சீரகம் - 1 tsp மிளகு - 1/2 tsp

உப்பு - தே.அ

செய்முறை

முதலில் அரிசி வேக வைத்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வையுங்கள். இது நன்கு கொதிக்கும்போது சுத்தம் செய்த முருங்கை இலைகளை சேர்த்து கலந்துவிடவும்.

சிறிதி நேரம் கழித்து பின்னர் வெங்காயம் , தக்காளி , பச்சை மிளகாய் சேர்க்கவும். பின் தட்டுப்போட்டு மூடி சிறு தீயில் முருங்கை இலை வேகும் வரை கொதிக்கவிடவும். பின்னர் முருங்கைக்கீரை வெந்ததும் தேங்காய் பால் கொஞ்சம் இடித்த மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து , தேவையான அளவு உப்பும் சேர்த்துக்கொண்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

பின்னர் தாளிக்க அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து பின் அதில் கொட்டவும். இப்படி செய்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான முருங்கையிலை சூப் தயார். இதை மழைக்காலங்களில் வீட்டில் வைத்து குடித்தால் சளி காய்ச்சல் இருமல் போன்னவற்றை இல்லாமல் செய்வதுடன் பல நன்மைகளை நமக்கு தந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா